ஆசியாவின் மிகப்பெரிய அளவில் சுத்தமான பால் வளாகம்.ஹேப்பி டேல்ஸ் பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர் கிராமத்தில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
சுத்தமான நிறுவனம்
அரும்பாவூர் கிராமத்தில் மலையடிவாரத்தில் பசுமையாக 100 ஏக்கர் பரப்பளவில் 500 மாடுகள் வைத்து தூய்மையான முறையில் தென் இந்தியாவில் முதலிடம் பெற்ற ஹேப்பி டேல்ஸ்.
நிறுவன உரிமையாளர்
ஹேப்பி டேல்ஸ் உரிமையாளர் திரு.விஜய குமார் ஆவார்.இவர் ஆரம்பத்தில் சிறிய அளவில் பால் வளாகம் தொடங்கி இப்போது பெரிய அளவில் சுத்தமான பால் வளாகம் தொடங்கி தென் இந்தியாவில் முதலிடம் பெற்றிருக்கிறார்.
தரமான உற்பத்தியும் சுத்தமும்
2015_2016 ல் எப்எசிசி எடுத்த பால் கணக்கெடுப்பின்படி 60%சதவீதமான பாலானது தரமற்ற பாலாக தான் இருந்தது.குழந்தைகளுக்கு தர இயலாத அளவிற்கு பல்வேறு புரதங்கள் இல்லாத பாலாக தான் இருந்தது.இதை பற்றி பல்வேறு பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வந்துள்ளது.அப்போது குழந்தைகள் குடிக்க தகுதியான பல்வேறு புரதங்கள் கொண்ட தரமான நெகிழி காகிதம் பயன்படுத்தாமல் சுத்தமான பால் தயாரிப்பபை தொடங்கினார்.
ஹேப்பி டேல்ஸ் 2015 ல் பால் வளாகம் தொடங்கினார்.ஆனால் அவர்கள் தரத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.மேலும் பல்வேறு முயற்சிகள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டு இருந்து பல தீவனங்களை வர வைத்து அவற்றை மாடுகளுக்கு தீவனங்களில் கலந்து கொடுத்தனர்.
அதனால் பாலின் தரமும் வளாகத்தின் தரமும் உயர்ந்து.ஆரம்ப கால கட்டத்தில் 10 மாடுகள் வைத்து தொடங்கிய ஹேப்பி டேல்ஸ் இப்போது 500 மாடுகள் வைத்து தென் இந்தியாவில் முதலிடம் பெற்று வருகிறது.
தீவனம் தயாரிப்பு
பாலின் தரமும் உற்பத்தியும் அதிகரிக்க பயன் படுவது அவை உண்ணும் தீவனமே ஆகும். அதனால் மாடுகளின் உற்பத்தியும் மாடுகள் உண்ணும் தீவனங்களை தானே உற்பத்தி செய்கின்றனர்.வெளியே பல்வேறு இடங்களில் இருந்து தானியங்களை வரவைத்து அவற்றை அரைத்து மாடுகள் உண்ணும் உணவிலும் மற்றும் குடிக்கும் தண்ணீரில் கலந்து கொள்கிறார்கள்.
இப்படி செய்வதால் பாலின் தரமும் உற்பத்தியும் அதிகரிக்க பயன்படும். ஆனால் மாடுகள் உண்ணும் தீவனங்களை வெளியே வாங்க மாட்டார்கள்.ஏனென்றால் வெளியே வாங்கும் தீவனங்களில் யூரியா போன்ற பல்வேறு உப்புகள் கலந்து உள்ளதால் அது மாடுகள் உண்ணும் தீவனங்களின் சுவையையும் மாடுகள் உடலையும் பாதிக்கின்றன.அதனால் அவர்களின் 100 ஏக்கர் சொந்த நிலத்தில் யூரியா போன்ற கெமிக்கல்ஸ் சேர்க்காத கோதுமை கம்பு சோளம் கேழ்வரகு சோளம் போன்ற பல்வேறு வகையான தானிய பயிர்களை சாகுபடி செய்து அவற்றைைஅறுத்து அரைத்து அவற்றை நேரடியாக தீவனமாக மாடுகளுக்கு தருகிறார்.
இதனால் மாடுகளுக்கு பாலின் உற்பத்தியும் தரமும் இயற்கையான முறையில் கிடைக்கும்.இதனால் அப்லோட் ஆக்சிசன் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கான்சிட் உணவுகளை சாப்பிடும் போது பாலின் அளவு ஒரே மாதிரியாக இருக்கும்.
பால் உற்பத்தி செய்யும் முறை
பால் கறப்பதற்கு முன்பு மாடுகளின் காம்புகளை முதலில் நன்கு கழுவி பிறகு அவற்றை ஒரு பேப்பரை கொண்டு நன்கு துடைத்து விட்டு பின்பு அவற்றை மீண்டும் ஒருமுறை நன்கு கழுவிவிட்டு பால் கறக்கும் இயந்திரத்தின் துளைகளை மாடுகளின் காம்புகளில் நன்றாக பொருத்தி அவற்றை சரியாக அமைந்துள்ளதாக இன்று ஒரு முறை சரி செய்து கொள்கிறார்கள்.
இதுபோன்று செய்வதால் பாலில் பாக்டீரியாவின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் பாலின் தரமும் அளவும் அதிகரிக்கின்றது. கறக்கும் பால் உடனடியாக குளிர்விக்கப்பட்ட 15 நிமிடத்தில் 4 டிகிரி செல்சியஸ் பதத்திற்கு மாற்றப்படுகிறது. இதனால் பாலின் தரம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் சேமிக்கப்படுகின்றன.
வாரம் ஒரு முறை மாடுகளைப் பராமரிக்கும் போது மடி நோய் மற்றும் மேலும் வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வாரம் ஒருமுறை மாடுகளுக்கு சி எம் டி டெஸ்ட் மற்றும் கலிஃபோர்னியா மேட் டெஸ்ட் போன்ற டெஸ்ட் களை செய்து மாடுகளை பராமரிப்போம்.
அப்பொழுதே நேரடியாக பாலை கரந்து உடனடியாக டெஸ்ட் செய்யும் பொழுது பால் நீல நிறமாக மாறினால் அதற்கு மடி நோய் உள்ளதாக உறுதி செய்து கொள்வோம். அதன் பின்பு மடி நோய் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டால் அந்த மாட்டின் பாலை கறக்க மாட்டார்கள். பின் அந்த மாட்டிற்கு போதுமான சிகிச்சை அளித்து அதை சரியான பின்பு மீண்டும் மடி நோய் உள்ளதா என்று உறுதி செய்த பின்பு பால் கறக்க ஆரம்பிப்பார்கள். பால் கறக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதால் மாடுகளுக்கு பிரச்சனைகள் ஏதும் இருக்காது.
இதுபோன்ற இயந்திரங்களைப் பயன்படுத்தி பால் கரைப்பதால் மாடுகளுக்கு மடி காம்புகளில் மசாஜ் செய்வது போன்று இருக்கும்.
இதனால் மாடுகளின் காம்புகளுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாட்டின் பாலையும் தனித்தனியாக தனித்தனியாக கரந்து பின்பு அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு பெரிய தேக்கியின் உள்ளே சேகரித்து பின்பு அவற்றை 4 டிகிரி செல்சியசில் குளிர்விக்க செய்கின்றனர். இதனால் பாலின் தரம் அதே நிலையில் இருக்கவும்.
பின்பு பால் கறந்த பின்னர் மாடுகளின் காம்புகள் மூடாத நிலையில் இருக்கும் இதன் மூலம் பாக்டீரியாக்கள் உள்ளே செல்லும்.
இதற்கு ஒரு விதமான மருந்தை பயன்படுத்தி அந்த பாக்டீரியாக்களை கொள்கின்றனர். இதனால் அந்த மடி காம்புகளில் உள்ள பாக்டீரியாக்கள் அளிக்கின்றன. இதனால் பால் சுத்தமாக இருக்கின்றது.
பால் பொதி செய்தல்
சேகரிக்கப்பட்ட பாலை மீண்டும் ஒருமுறை 78 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தி அதில் உள்ள தீய பாக்டீரியாக்களை அழிக்கின்றனர். அதன்பின்பு அந்தப் பாலினை ஒரு இயந்திரத்துக்குள் கொண்டுவரப்பட்டு அதிலுள்ள மைக்ரோ பார்ட்டிஸ்களை யூனிபார்மாக ஓமேர்னஸ் செய்யப்பட்டு பால் பொதிதலுக்கு அனுப்பப்படும்.
ஒரு வித காகிதம் தயாரிக்கப்பட்டு நெகிழி தால் அல்லாத காகிதமாக இயந்திரத்திற்குள் அனுப்பப்படும் போது அது பால் பொதி பொட்டியாக இரண்டு நாசிள்களின் வழியாக 50 சதவீதம் மற்றும் மேல் ஒரு நாசிள்யின் வழியாக 50% என இரண்டு நாசிள்களின் வழியாக அதன்பின் அதிலுள்ள நுறைகளை எடுத்து அதன்பின் அதை அடைக்கப்பட்டு அதன் சோதனை கோட்டை அது வெளியே அனுப்பப்படும்.
இது 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பாலாகும். இது 100% உடைந்து போவதற்கும் மேலும் கிழிந்து போவதற்கும் வாய்ப்பு இல்லாத அளவிற்கு பொதி செய்யப்படுகிறது.
விற்பனை மாவட்டங்கள்
இப்பொழுது ஹேப்பி டேல்ஸ் பால் உற்பத்தி ஆனது அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்காவிட்டாலும் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அவை பெங்களூர் மற்றும் சென்னை என இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த இரண்டு மாவட்டங்களிலும் அனைத்து கிராமங்களிலும் எளிதாகவும் கிடைக்கின்றன.
இவ்வாறான தூய்மையான பால் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்க ஹேப்பி டேல்ஸ் அரசாங்கத்திடம் உத்தரவுக்காக காத்திருக்கிறது. இவ்வாறான தூய்மையான பாலினை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பல்வேறு புரதங்களும் பல்வேறுவதமான புரதச் சத்துக்களும் கிடைக்கின்றது.
இந்த பாலினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம். ஹேப்பி டேல்ஸ் வருங்காலத்தில் அதிகமான பொருட்களையும் உதாரணமாக நெய் தயிர் மற்றும் பால் உபகரணங்கள் போன்றவற்றை தயாரிக்க இருக்கின்றன. இது அரசாங்கத்தின் அனுமதி பெற்றபின் ஹேப்பி டேல்ஸ் என்ற முத்திரையுடன் வெளியிடப்படும். ஹேப்பி டேல்ஸ் பாலானது பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கிடைக்கும் ஆனால் ஹேப்பி டேல்ஸ் பால் தயிர் மோர் வெண்ணை ஆகியவற்றை நீங்கள் இணையதளத்தில் ஆர்டர்
செய்து பெற்றுக்கொள்ளலாம். ஹேப்பி டேல்ஸ் வெண்ணை தயிர் மோர் ஆகியவற்றை நேரடியாகவும் இணையதளத்திலும் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய ஹேப்பி டேல்ஸ் பண்ணையை நேரடியாக பார்ப்பதற்கு அவர்களுக்கு முன்பாகவே அழைத்து பேசி அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
பின்பு அவர்களின் நேரம் காலம் தகுந்ததற்கு போல் அவர்களிடம் பேசி அங்கு சென்று அவர்களின் ஹேப்பி டேல்ஸ் பண்ணையை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு அவரிடமிருந்து தேவையான பொருட்கள் நெய் வெண்ணை பால் மற்றும் தயிர் ஆகியவற்றை நேரடியாக அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தொழில்நுட்ப வளாகம்
100% கைபடாத சுத்தமான பால் என்பதற்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப இயந்திரங்களைக் கொண்டு அவற்றை தூய்மையான முறையிலும் புரதங்கள் நிறைந்த பாலாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பாலாகும் ஹேப்பி டேல்ஸ் தயாரிக்கின்றன.
மாடுகளின் உணவுகள் மற்றும் அவை பருகும் தண்ணீர் வரை அனைத்தையும் மிகவும் அன்பும் அரவணைப்பும் கொண்டு அவற்றை பராமரித்து வருகின்றனர். இவ்வாறு நேரடியாக மாடுகளை பராமரிப்பதால் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை நேரடியாக கண்டு பராமரித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அனைவரும் பால் வாங்க வேண்டும் என்றால் ஹேப்பி டேல்ஸ் அவர்களுடைய இந்த இணையதளத்தின் மூலம் வாங்கலாம். இது 100% சுத்தமான பாலாகும்.
- இயற்கையான முறையில் நமக்கு கிடைக்கும். அவர்களுக்கு நீங்கள் நேரடியாகவும் அழைக்கலாம் மற்றும் அவர்களுடைய வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு இணையதளங்களில் அழைக்கலாம். நீங்கள் பருகும் பாலின் சுத்தத்தையும் அவற்றைத் தயாரிக்கும் முறையையும் பார்ப்பதற்கு அவர்களின் பண்ணையை ஞாயிறு மற்றும் வெள்ளி அவர்களுடன் அனுமதி பெற்று பார்க்கலாம்.
மேலும் படிக்கபடிக்க
இது சுத்தமான பாலா?
ஆம்! இது கைபடாத நூறு சதவீதமான சுத்தமான பால் ஆகும். இதில் பல்வேறு புரதங்களும் மற்றும் கலோரிகளும் கிடைக்கும்.
ஹேப்பி டேல்ஸ் பால் வளாகத்தின் நிறைகள்:
ஹேப்பி டேல்ஸ் பால் வளாகம் ஆனது அரசால் அங்கீகரிக்கப்பட்ட 100% கைபடாத சுத்தமான ஊட்டச்சத்து மிக்க பாலாகும்.
இவை பெங்களூரு மற்றும் சென்னை என்ற இரண்டு மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கக் கூடிய தாகும்.
இவ்வளாகத்தில் இருந்து பால் மட்டுமல்லாமல் தயிர், மோர், வெண்ணை ,நெய் போன்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல் மாடுகளின் வளர்ப்பு மற்றும் மாடுகள் வளர்ப்பதற்கு தேவையான உதவியையும் அந்நிறுவனம் செய்கிறது.
ஹேப்பி டேல்ஸ் 2015 இல் தொடங்கி ஆறு வருடம் தொடர்ச்சியாக வெற்றிகரமாக எந்தக் குறையும் இன்றி இயங்கி வருகிறது . இதற்காக அந்நிறுவனம் அவர்களுக்கு 100% கைபடாத சுத்தமான பால் தயாரிப் பதற்கு தகுந்த நிறுவனம் என தரச் சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்நிறுவனத்தை சுற்றிபார்க்க அங்குள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் நேரடியாகவோ அல்லது முன்பு அலைபேசி மூலமாகவோ அழைத்து அவர்களிடம் அனுமதி பெற்று அங்கு சென்று சுற்றிப் பார்க்கலாம்.
அங்கு சென்றபின் போதுமான அனுமதியின்றி தேவையில்லாத இடங்களில் நுழைவது தவறானது.
மேலும் ஹேப்பி டேல்ஸ் என்ற பால் வளாகத்தின் விவரங்களை அறிய அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தை அணுகலாம்.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் நீங்கள் நவீன உழவன் என்ற இணையத்தில் கேட்கலாம்.
மேலும் படிக்க:ஒரே மோட்டாரில் தீவனங்கள் வெட்ட மற்றும் அரைக்க பயன்படும் இயந்திரம்.