பிளம்ஸ் பழம் சாகுபடி மூலம் மாதம் 40000 லாபம்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் திரு கார்த்தி என்னும் பட்டதாரி இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் பிளம்ஸ் பழம் சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் 40 ஆயிரம் வரை லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பிளம்ஸ் பழம் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பிளம்ஸ் பழம் சாகுபடியின் தொடக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் திரு கார்த்தி என்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பிளம்ஸ் பழம் சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் 40,000 வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது பட்டப்படிப்பினை முடித்துவிட்டு ஒரு தனியா நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், தனியார் நிறுவனத்தின் வேலை இவருக்கு சிரமமாக இருந்ததாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு சிறு வயதிலிருந்து விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்த காரணத்தினாலும், தனியார் நிறுவனத்தின் வேலை இவருக்கு பிடிக்காத காரணத்தினாலும் இவர் விவசாயம் செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் இவருடைய ஊரில் சிறப்பாக விளைச்சல் ஆகும் என்ற காரணத்தினால் இவர் பிளம்ஸ் பழம் சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

Cultivation method of plums

திரு கார்த்தி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி இந்த பிளம்ஸ் பலம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் சாகுபடி செய்வதற்கு முன்பு இவர் நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை இயற்கை உரங்களை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொண்டால் விளைச்சல் சிறப்பாக கிடைக்கும் என கூறுகிறார்.

இந்த பிளம்ஸ் சாகுபடியை குச்சிகளின் மூலம் சாகுபடி செய்ய முடியும் எனவும் அல்லது ஒட்டு முறையின் மூலம் சாகுபடி செய்யலாம் என கூறுகிறார்.

பிளம்ஸ் செடியின் குச்சிகளை உடைத்து அதனை நிலத்தில் நட்டு சாகுபடி செய்யலாம் எனவும் அல்லது ஒட்டு முறையை பயன்படுத்தி சாகுபடி செய்யலாம் என கூறுகிறார்.

நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு குச்சிகளை மூன்று அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், நாற்றுகளாக செடிகளை நடுவதை விட குச்சிகளாக நட்டு வளர்த்தால் விரைவில் விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்

பிளம்ஸ் பழத்தில் பலவித நன்மைகள் இருப்பதாகவும், இதனை நாம் எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.

இந்த பிளம்ஸ் பழம் திராட்சை குடும்பத்தை சார்ந்தது எனவும், திராட்சை பழத்தைப் போன்று புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவையுடன் இது இருக்கும் என கூறுகிறார்.

மேலும் உடலில் உள்ள சூட்டினை தணிப்பதற்கு இந்த பிளம்ஸ் பழத்தை உண்ணலாம் என திரு கார்த்தி அவர்கள் கூறுகிறார்.

பிளம்ஸ் பழத்தினை உண்பதால் நமது உடல் எடையை பராமரிக்க முடியும் எனவும், நீரிழிவு மற்றும் இதய நோயினை இந்த பிளம்ஸ் பழத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் கொழுப்பை குறைக்கிறது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஓட்டத்தை மேம்படுத்துகிறது எனவும் கூறுகிறார்.

மேலும் பிளம்ஸ் பழம் பார்வை திறனை மேம்படுத்தவும் மற்றும் சரியான செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது என கூறுகிறார்.

பிளம்ஸ் பழத்தில் மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்வதன் மூலம் சிறந்த லாபம் கிடைக்கும் எனவும், இந்த பழத்தில் ஜாம் தயார் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் என கூறுகிறார்.

இதுபோல் பலவித நன்மைகள் இந்த பிளம்ஸ் பழத்தில் இருப்பதாக திரு கார்த்தி அவர்கள் கூறுகிறார்.

Fertilizer and maintenance method

பிளம்ஸ் பழம் சாகுபடியில் இவர் உரங்கள் எதையும் அதிகமாக பயன்படுத்துவதில்லை எனவும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்திற்கு இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப் புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை போட்டு பராமரித்து வருவதாக கூறுகிறார்.

செயற்கை உரங்கள் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை எனவும் செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

மேலும் செடிகளை சுற்றி அதிகமாக களைச்செடிகள் இருந்தால் அதனை அகற்றி விட வேண்டும் எனவும் திரு கார்த்தி அவர்கள் கூறுகிறார்.

காட்டு ஓரமாக இவருடைய தோட்டம் இருப்பதால் காட்டு விலங்குகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும் எனவும், காட்டு விலங்குகளிடமிருந்து செடிகளை பாதுகாப்பதற்கு இவர் முள் கம்பி வேலியை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இயற்கையாக உருவாகும் உரங்களை இந்த பிளம்ஸ் சாகுபடியில் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பான முறையில் செடி வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனக் கூறுகிறார்.

அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை

பிளம்ஸ் சாகுபடியை சரியான முறையில் செய்து பராமரித்து வந்தால் ஒரு வருடத்தில் நல்ல விளைச்சல் நமக்கு கிடைக்கும் என திரு கார்த்தி அவர்கள் கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் குச்சியினை நட்டு சரியான முறையில் பராமரித்து வந்தால் ஒரு வருடத்தில் நாம் அறுவடை எடுக்க தயாராகி விடும் என கூறுகிறார்.

அதிகமாக இந்த பழம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக விளைச்சலை அளிக்கும் எனவும், வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்து விளைச்சல் எடுக்க தயாராகிவிடும் என கூறுகிறார்.

இந்த பிளம்ஸ் பழம் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவை இருக்காது எனவும் குறைந்த அளவில் மட்டுமே நீர் தேவை இருக்கும் எனவும் கூறுகிறார்.

வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செடிகளுக்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும், செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தினால் செடிகளுக்கு நீர் சரியான முறையில் செல்லும் எனவும், நீர் அதிகமாக வீணாகாது எனவும் கூறுகிறார்.

மேலும் மழைக்காலங்களில் இந்த பிளம்ஸ் பழ செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் கூறுகிறார்.

Sales method and profit

திரு கார்த்தி அவர்கள் பிளம்ஸ் பழம் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதிலிருந்து மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

பிளம்ஸ் பழம் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், வாடிக்கையாளர்கள் இவருடைய தோட்டத்திற்கே வந்து பழங்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இயற்கை வழிமுறைகளை பின்பற்றி இவர் பிளம்ஸ் பழம் சாகுபடி செய்வதால் அதிக அளவில் பிளம்ஸ் பழம் விற்பனையாகி வருவதாகவும், இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் பழங்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் திரு கார்த்தி அவர்கள் இவருடைய பிளம்ஸ் பழம் சாகுபடியை மிகவும் சிறப்பாக இயற்கையான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பல தகவல்கள்:அண்ணாச்சி பழம் சாகுபடியில் மூன்று லட்சம் வரை வருமானம்.

Leave a Reply