பிரண்டை சாகுபடி மூலம் மாதம் 45000 லாபம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வரும் விவசாயி திரு செல்வன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பிரண்டை சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் 45 ஆயிரம் லாபம் பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பிரண்டை சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

பிரண்டை சாகுபடியின் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் வசித்து வரும் விவசாயி திரு செல்வன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பிரண்டை சாகுபடி செய்து அதன் மூலம் மாதம் 45000 லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும், காலம் காலமாக இவருடைய குடும்பம் விவசாயத்தைையே செய்து வந்ததாக கூறுகிறார்.

சிறு வயதிலிருந்து இவர் விவசாயத்தைப் பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததாகவும், இதன் காரணமாக இவரும் விவசாயத்தை தொடங்கியதாக வருகிறார்.

இவர் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளதாகவும், விவசாயத்தின் மீது இருந்த காரணத்தினால் இவர் விவசாயத்தை தொடங்கி இப்பொழுது பிரண்டை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருக்கு அனைத்து விவசாய முறைகளைப் பற்றி நன்கு தெரியும் எனவும், இதன் அடிப்படையிலேயே இவர் விவசாயத்தை சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.

Pirandai cultivation method

திரு செல்வன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் பிரண்டை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த பிரண்டை சாகுபடி மிகவும் சுலபமான ஒரு சாகுபடி முறை எனவும் கூறுகிறார்.

பிரண்டை சாகுபடியை யாரும் அதிக அளவு செய்வதில்லை எனவும், பிரண்டை சாகுபடி செய்தால் அதிலிருந்து நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இவர் பிரண்டை சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.

பிரண்டை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு  பிரண்டை தண்டுகளை நிலத்தில் ஊண்ற தொடங்கி விட வேண்டும் எனவும் கூறுகிறார்.

பிரண்டை தண்டுகளாக வாங்கி வந்து இவர் சாகுபடி செய்து வருவதாகவும், விதைகளின் மூலம் சாகுபடி செய்வதை விட இந்த முறையில் சாகுபடி செய்தால் விரைவில் விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

பிரண்டை தண்டின் இரண்டு கணுக்கள் நிலத்தில் புதையும்படி நட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் பிரண்டை நன்கு வளர்ந்து படர்வதற்கு பந்தல் அமைக்க வேண்டும் எனவும், ஏனெனில் பந்தல் இருந்தால் தான் பிரண்டை நன்றாக படர்ந்து வளரும் என கூறுகிறார்.

பிரண்டையின் வகைகள் மற்றும் பயன்கள்

பிரண்டையில் மொத்தம் மூன்று வகைகள் இருப்பதாகவும், அவை சதுர வடிவில் இருப்பதாகவும் மற்றும் வட்ட வடிவிலும், பட்டை வடிவிலும் என்று மூன்று வகைகள் இருப்பதாக கூறுகிறார்.

இந்த மூன்று வகை பிரண்டையையும் இவருடைய தோட்டத்தில் சாகுபடி செய்து வருவதாகவும், மற்ற இரண்டு பிரண்டை வகைகளை விட சதுர வடிவ பிரண்டை விரைவில் வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த பிரண்டை வெயில் காலங்களில் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கக்கூடிய ஒரு தாவரம் என கூறுகிறார்.

மேலும் இந்த பிரண்டையில் அதிக பயன்கள் இருப்பதாகவும், பிரண்டைத் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க செய்யும் என கூறுகிறார்.

பிரண்டை ஞாபக சக்தியை பெருக்கும் எனவும் மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது, எலும்புகளுக்கு சக்திகளை அளிக்கக்கூடியது எனவும் கூறுகிறார்.

பிரண்டையை நாம் உணவாக எடுத்துக் கொண்டால் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை நிறுத்துவதுடன் வாய்வு பிடிப்பை போக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த பிரண்டையை நாம் வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் என கூறுகிறார்.

இதுபோல் இந்த பிரண்டையில் பலவித சத்துக்கள் நிறைந்து இருப்பதாக திரு செல்வன் அவர்கள் கூறுகிறார்.

Fertilizer and maintenance method

பிரண்டை சாகுபடியை பொருத்தவரையில் இதில் எந்தவித பராமரிப்பும் அதிகளவில் இருக்காது எனவும், இயற்கையிலேயே இது சிறப்பாக வளரும் தன்மையை கொண்டு இருப்பதாக கூறுகிறார்.

இயற்கையிலேயே இது சிறப்பாக வளரும் தன்மையை கொண்டிருப்பதால் இதற்கு நோய் தாக்குதல் எதுவும் அதிகமாக ஏற்படாது என கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் இந்த பிரண்டை சாகுபடியில் உரம் மற்றும் மருந்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுக்புழுக்கை ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

தோட்டத்தில் உள்ள கலைச் செடிகளை மட்டும் அகற்றி பராமரித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

பிரண்டை தொக்கு தயாரிப்பு முறை

பிரண்டை சாகுபடி செய்து அதனை அப்படியே விற்பனை செய்வதோடு நிறுத்தாமல் இவர் பிரண்டை தொக்கு தயாரித்து அதனையும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

பிரண்டை தொக்கு தயாரிப்பதற்கு முதலில் பிரண்டைகளை அறுவடை செய்து அதனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு பிரண்டையை சிறிய துண்டுகளாக நறுக்கிய பின் அதனை எண்ணெயில் போட்டு நன்கு வறுக்க வேண்டும் என கூறுகிறார்.

நன்கு வருத்த பின்பு அதனை அரைத்து எண்ணெயில் கடுகு, மஞ்சள் தூள்,பெருங்காயம்,மிளகாய் தூள் ஆகியவற்றுடன் போட்டு நன்றாக வறுக்க வேண்டும் என கூறுகிறார்.

பின்பு எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை இதனை வேக வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும், எண்ணெய் தனியாக பிரிந்து வந்ததும் பிரண்டை தொக்கு தயாராகிவிடும் என கூறுகிறார்.

Harvesting and water supply system

பிரண்டையை நடவு செய்த பிறகு அந்த பிரண்டை நன்றாக வளர்ந்து ஒரு அடி நீளத்திற்கு வந்துவிட்டால் அதனை அறுவடை செய்து கொள்ளலாம் என கூறுகிறார்.

இவ்வாறு ஒரு அடி வளர்ந்த பிரண்டையை அறுவடை செய்து தொக்கு செய்யும்போது தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் என கூறுகிறார்.

இயற்கை சூழ்நிலைகளிலேயே இந்த பிரண்டை சிறப்பாக வளரும் என்பதால் இதற்கு நீர் தேவை அதிகமாக இருக்காது என கூறுகிறார்.

இவற்றிற்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு நீரினை அளிக்கலாம் என கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பிரண்டை சாகுபடி செய்து அதனை இவர் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் பிரண்டை தொக்குகளாக தயாரித்தும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

சந்தைகளில் இவர் பிரண்டை மற்றும் பிரண்டை தொக்குகளை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் வந்து பிரண்டை தொக்கை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இயற்கையான முறையில் இவர் பிரண்டை தொக்கு தயாரித்து விற்பனை செய்து வருவதால் அதிகளவில்  விற்பனையாகி வருவதாகவும் இதன் மூலம் இவர் மாதம் 45 ஆயிரம் ரூபாய் லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் திரு செல்வன் அவர்கள் இவருடைய பிரண்டை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பல தகவல்கள்:கார்நேசன் மலர் சாகுபடியில் 20 லட்சம் வரை லாபம்.

Leave a Reply