பிராய்லர் கோழி வளர்ப்பில் மாதம் 60 ஆயிரம் வருமானம்.

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக் குளம் என்னும் ஊரில் வசித்து வரும் திரு சத்தியமூர்த்தி என்னும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பிராய்லர் கோழி பண்ணை வைத்து அதன் மூலம் மாதம் 60 ஆயிரம் வருமானம் பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பிராய்லர் கோழி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.




Start of broiler chicken farm

தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக் குளம் என்னும் ஊரில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பிராய்லர் கோழி பண்ணை வைத்து அதன் மூலம் மாதம் 60,000 வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும் இவருடைய சிறு வயதிலிருந்து இவர் விவசாயத்தை பார்த்து வளர்ந்து வந்ததாக கூறுகிறார்.

அனைத்து வகை விவசாய முறையைப் பற்றி இவருக்கு நன்கு தெரியும் எனவும், விவசாயத்தை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவர் விவசாயத்தை செய்து வந்த நிலையில் கோழி பண்ணை வளர்ப்பின் மீது இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் பிராய்லர் கோழி வளர்த்தால் நிறைந்த லாபம் கிடைக்கும் என்ற காரணத்தினால் பிராய்லர் கோழி பண்ணையை தொடங்கி இப்பொழுது மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.




மேலும் படிக்கவும் – 😇👉🏻என்னை தொடு👈🏻😇

பிராய்லர் கோழி வளர்ப்பு முறை

திரு சத்தியமூர்த்தி அவர்கள் மற்ற கோழி வளர்ப்பு முறையை விட இந்த பிராய்லர் கோழி வளர்ப்பு முறையில் நிறைந்த லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

இவர் கோழி பண்ணையை தொடங்கும் போது ஒரு கம்பெனியின் மூலம் கோழிகளையும் கோழிகளுக்கு அளிக்கும் தீவனம் மற்றும் தடுப்பூசிகளையும் பயன்படுத்தி வந்ததாக கூறுகிறார்.

இவ்வாறு கம்பெனியிடமிருந்து கிடைக்கும் தடுப்பூசி மற்றும் தீவனங்கள் அதிக அளவில் செலவை ஏற்படுத்துவதாக இருந்ததாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் கம்பெனியிடமிருந்து கிடைக்கும் கோழி குஞ்சு மற்றும் தீவனம் அவற்றிற்கு அளிக்கும் தடுப்பூசிகளை தடுத்து விட்டு இவரே சொந்தமாக பண்ணையை நடத்த தொடங்கியதாக கூறுகிறார்.

இவரே கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து அதற்கு இயற்கையான மூலிகை தீவனங்களை அளித்து வளர்த்து வந்ததாகவும், இவ்வாறு இயற்கை தீவனங்களை அளிப்பதால் கோழிகளின் இறைச்சி சுவையாக இருப்பதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் சொந்தமாக பண்ணையை நடத்துவதால் இதிலிருந்து இவருக்கு சிறந்த லாபம் கிடைப்பதாகவும் மற்றும் கோழியின் இறைச்சி நல்ல தரமானதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

வாரத்திற்கு 200-ல் இருந்து 300 கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருவதாகவும், மொத்தமாக இப்பொழுது இவர் 12,000 கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.




Method of setting up a farm

கோழி பண்ணையை தொடங்குவதற்கு முன்பு அதனை வளர்ப்பதற்கு சரியான பண்ணையை அமைப்பது மிகவும் முக்கியமான ஒன்று என திரு சத்தியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

கோழி பண்ணையை அமைப்பதற்கு முன்பு பண்ணையை அமைக்கும் இடம் கோழிகளை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கு சரியான போக்குவரத்து சாலை இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும் என கூறுகிறார்.

மேலும் தண்ணீர் குறைவாக இருக்கும் இடத்தில் அமைக்க கூடாது எனவும் ஏனெனில் தண்ணீர் தேவை அதிகமாக கோழி பண்ணைக்கு தேவைப்படும் என கூறுகிறார்.

பண்ணையை அமைக்கும் போது மேட்டுப்பகுதியில் பண்ணையை அமைத்தால் மிகவும் நல்லது எனவும், பள்ளமாக இருக்கும் இடத்தில் பண்ணையை அமைக்க கூடாது என கூறுகிறார்.

இவருடைய பண்ணையை இவர் 300 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டு அமைத்து இருப்பதாகவும் மற்றும் மற்றொரு பண்ணையை 300 அடி நீளமும் 22 அடி அகலத்திலும் அமைத்து இருப்பதாக கூறுகிறார்.

பண்ணையின் கொட்டகையின் மேற்புறத்தை தகரத்தால் அமைத்து இருப்பதாகவும் தகரத்திலிருந்து வெப்பம் அதிகரிக்காமல் இருப்பதற்கு கீத்துகளை அடியில் பொருத்தி இருப்பதாக கூறுகிறார்.

இந்த முறையில் பண்ணை கொட்டகையை அமைத்து கோழிகளை வளர்த்தால் மிகவும் சிறப்பாக கோழி வளரும் என கூறுகிறார்.

தீவனம் மற்றும் நீரினை அளிக்கும் முறை

இவருடைய பண்ணையில் உள்ள கோழிகளுக்கு இவர் செயற்கை தீவனம் மற்றும் மருந்துகளை தவிர்த்து விட்டு இயற்கை தீவனங்களை அளித்து வளர்த்து வருவதாக வருகிறார்.

கோழிகளுக்கு அளிக்கும் கம்பெனி தீவனங்களில் இவர் சோற்றுக்கற்றாழையை அரைத்து அதனுடன் சேர்த்து அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் கோழிகளுக்கு முளை கட்டின கொண்டைக்கடலை, சுண்டல் மற்றும் இவற்றுடன் பச்சைப்பயிறு ஆகியவற்றை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் கோழிகளுக்கு கடலை புண்ணாக்கை தீவனமாக அளிப்பதாகவும் இதனை கோழிகள் விரும்பி உண்பதாக கூறுகிறார்.

இந்த இயற்கையான உணவு வகைகளை கோழிகளுக்கு தீவனமாக அளிப்பதால் அதற்கு எந்தவித நோய்களும் அதிகமாக ஏற்படாது எனவும், கோழிகள் நல்ல சத்துடன் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு அளிக்கும் நீரும் நல்ல சுத்தமான நீராக இருக்க வேண்டும் எனவும் அதில் அசத்தும் எதுவும் கலந்து இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

கோழிகளுக்கு நீரினை அளிப்பது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கோழிகளுக்கு வேண்டும் நேரத்தில் நீரினை கோழிகள் எடுத்துக் கொள்வதற்கு பிளாஸ்டிக்கால் ஆன டப்பாவை எப்பொழுதும் ஒவ்வொரு கோழிகளின் அருகிலும் வைத்து விடுவதாக கூறுகிறார்.

கோழிகள் அருந்தும் நீரில் பஞ்சகாவியாவை கலந்து கோழிகளுக்கு அளித்து வருவதாகவும் இதனால் கோழிகள் நோய் தாக்குதல் எதுவும் இல்லாமல் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.




Method of keeping chickens

கோழி பண்ணை வளர்ப்பு முறையில் கோழிகளுக்கு நோய் வராமல் பாதுகாப்பது ஒரு முக்கியமான முறை என திரு சத்தியமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

கோழி பண்ணையை தினமும் சுத்தம் செய்து விட வேண்டும் எனவும் ஏனெனில் கோழிப்பண்ணையில் இருக்கும் கழிவுகளை கோழிகள் மிதித்துக் கொண்டே இருந்தால் அதிலிருந்து கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

கோழிகளுக்கு சளி பிரச்சனை ஏற்பட்டால் அவைகளுக்கு பூண்டு கசாயம் போன்றவற்றை அளித்து வருவதாகவும் இதனை கோழிகளுக்கு அளித்தால் சளி விரைவில் சரியாகிவிடும் என கூறுகிறார்.

முருங்கைக்கீரை கசாயம், அகத்திக்கீரை கசாயம் மற்றும் கீழாநெல்லி கசாயம் ஆகியவற்றை கோழிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

செயற்கை மருந்துகள் எதையும் கோழிகளுக்கு அளிக்காமல் இயற்கை மருந்துகளை வைத்து கோழிகளுக்கு வரும் நோய்களை சரி செய்வதற்கு இவர் மூலிகை தோட்டத்தை அமைத்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு சத்தியமூர்த்தி அவர்கள் பிராய்லர் கோழிகளை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வளர்த்து அதிலிருந்து மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

கோழிகளை இவர் நேரடி விற்பனை முறையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவர் இறைச்சி கடை வைத்து இறைச்சியாகவும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

பிராய்லர் கோழிகளை இயற்கை வழிமுறையை பின்பற்றி வளர்த்து அதனை விற்பனை செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர்களும் மற்றும் இவருடைய ஊரில் உள்ள மக்களும் இவரிடம் வந்து கோழிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய பிராய்லர் கோழி பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் பல தகவல்கள்:பிளம்ஸ் பழம் சாகுபடி மூலம் மாதம் 40000 லாபம்.




 

(8)

Leave a Reply