திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆட்டுப் பண்ணையில் கன்னி ஆடு வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆடு வளர்ப்பு முறையை பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
ஆட்டுப் பண்ணையின் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆட்டுப் பண்ணையில் கன்னி ஆடுகள் வளர்ப்பை மிக சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் அதிக லாபத்தை இந்த ஆட்டு பண்ணையாளர் பெற்று வருகிறார்.
இந்த ஆட்டு பண்ணையாளர் முதலில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்ததாகவும் அதன் பிறகு இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்து கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.
இந்த நிலையில் இவருடைய தந்தை விவசாயம் செய்பவர் என்பதால் இவருக்கும் விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பின மீது ஆர்வம் ஏற்பட்டு இவர் இந்த கன்னி ஆடுகள் வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கன்னி ஆடுகள் வளர்ப்பை சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் இவைகளுக்கு தேவையான உணவுகளை இவர் நல்ல முறையில் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
Breeding method
கன்னி ஆடுகள் வளர்ப்பு முறையை இவர் பரண் மேல் வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த முறையில் வளர்ப்பது இவருக்கு மிகவும் நன்மையை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் பரணின் கீழ் இவர் சிறுவிடை கோழிகளை வளர்த்து வருவதாகவும் இந்த கோழிகளுக்குத் தேவையான உணவுகள் பரணின் மேல் உள்ள ஆடுகளின் உணவி இருந்தே கிடைப்பதாகவும் கூறுகிறார்.
ஆடுகள் தீவனத்தை உண்பது போக மீதியுள்ள தீவனங்கள் அனைத்தும் பரணின் கீழ் விழுவதாகவும் இவ்வாறு விழும் தீவனத்தை கீழே உள்ள கோழிகள் உணவாக எடுத்து உண்பதாகவும் இதனால் இவர் கோழிகளுக்கு என்று எந்தவிதமான செலவும் செய்வதில்லை என கூறுகிறார்.
மேலும் பரண் மேல் ஆடு வளர்க்கும் போது ஒரு மூன்று வருடம் வரை காத்திருந்து பண்ணையை நடத்த வேண்டும் எனவும் இந்த முறையில் நடத்தினால் மட்டுமே 3 வருடத்திற்கு பிறகு லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.
ஆடுகளின் வகைகள்
இந்த ஆட்டு பண்ணையாளர் இவரது ஆடுகளை பரணின் மீது வளர்த்து வருவதாகவும் இவர் இந்த பரணின் மீது கன்னி ஆடுகளையும் மற்றும் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
பொதுவாக பரண்மேல் ஆடுகளை வளர்க்கும் பண்ணையாளர்கள் தலைச்சேரி மற்றும் பேயர் ஆடு வகைகளை வளர்ப்பார்கள் ஆனால் இவர் பரணின் மீது கன்னி ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இவர் இவ்வாறு தலைச்சேரி மற்றும் பேயர் ஆடுகளைக் வளர்க்காமல் கன்னி ஆடுகளை அதிக அளவில் வளர்ப்பதற்கு காரணம் இந்த கன்னி ஆடுகளின் இறைச்சி உண்பதற்கு மிக சுவையாக இருக்கும் எனவும் ஆனால் தலைச்சேரி மற்றும் போயர் ஆடுகளின் இறைச்சி கன்னி ஆடுகளின் இறைச்சியை விட சுவையாக இருக்காது என்பதால் என கூறுகிறார்.
ஆடு வகைகளிலேயே இந்த கன்னி ஆடுகளின் வகைகள் மிக சிறப்பானது எனவும் இதனுடைய இறைச்சியும் மிக சுவையாக இருக்கும் எனவும் 25 கிலோ எடையை ஆடுகள் அடைந்ததும் அதனை விற்பனை செய்து விடுவதாகவும் கூறுகிறார்.
மேலும் கன்னி ஆடுகள் அதிக அளவில் நோய் தாக்குதலால் பாதிப்படையாது என்ற காரணத்திற்காகவும் இவர் இந்த கன்னி ஆடுகள் வளர்ப்பு தொடங்கியதாக கூறுகிறார்.
பேயர் ஆடு வகைகளில் ஒரு ஆட்டினை வாங்கும் பணத்தில் 20 கன்னி ஆடுகளை வாங்கி ஒரு பண்ணையையே தொடங்க முடியும் என கூறுகிறார்.
Specialty of the meat of virgin goats
தலைச்சேரி ஆடு, பேயர் ஆடுகளின் இறைச்சியின் சுவையை விட கன்னி ஆடுகளின் இறைச்சியில் அதிக அளவில் சுவை இருக்கும் எனவும் இந்த கன்னி ஆடுகள் இறைச்சியை மக்கள் அதிக அளவில் விரும்பி வாங்குவதாகவும் கூறுகிறார்.
மேலும் தலைச்சேரி மற்றும் பேயர் ஆடுகளின் இறைச்சியில் அதிக அளவில் கொழுப்புகள் இருக்கும் எனவும் ஆனால் இந்த கன்னி ஆடுகள் இறைச்சியில் கொழுப்புகள் குறைந்த அளவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
எனவே கன்னி ஆடுகளின் இறைச்சி உண்ணும் போது நமது உடல் எடை அதிக அளவில் அதிகரிக்காது எனவும் ஆனால் தலைச்சேரி மற்றும் பேயர் ஆடுகளின் இறைச்சியை உண்ணும் போது உடல் எடை அதிக அளவில் அதிகரித்து விடும் என கூறுகிறார்.
தலைச்சேரி மற்றும் பேயர் ஆடுகளில் ஆறிலிருந்து ஏழு கிலோ வரை கொழுப்புகள் இருக்கும் எனவும் ஆனால் கன்னி ஆடுகளில் ஒன்றிலிருந்து ஒன்றரை கிலோ வரை மட்டுமே கொழுப்புகள் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இதனால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் கன்னி ஆடுகளின் இறைச்சியை விரும்பி உண்பதாகவும் இதனால் இவர் அதிக லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
கன்னி ஆடுகளின் பிறப்பிடம் திருநெல்வேலி எனவும், மேலும் இது தூத்துக்குடி மற்றும் எட்டையபுரம் ஆகிய இடங்களில் அதிகளவில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இனப்பெருக்க முறை
கன்னி ஆடுகளின் ஆயுட்காலம் 12 வருடத்தில் இருந்து 13 வருடங்கள் எனவும், குட்டியிடும் தாய் ஆடுகளிடம் இருந்து ஒன்பது வருடங்கள் வரை நமக்கு நல்ல ஆரோக்கியமான குட்டிகள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
தாய் ஆடு குட்டி போட்டு ஒரு மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும் எனவும் ஆனால் இந்த முறையில் ஆடுகளை இனப்பெருக்கம் செய்யும் போது குட்டிகள் நல்ல முறையில் வளராது எனவும், எனவே தாய் ஆடுகள் குட்டி போட்டதில் இருந்தே இரண்டு மாதத்திற்கு பிறகு இனப்பெருக்கம் செய்யத் தொடங்கினால் குட்டிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என கூறுகிறார்.
மேலும் குட்டிகள் 60 நாட்கள் வரை தாய்ப் பால் குடிக்க வேண்டும் எனவும் 60 நாட்கள் வரை இவை தாய்ப்பாலை குடித்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியத்துடன் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கன்னி ஆடுகள் இரண்டு குட்டிகள் வரை போடும் எனவும் ஆனால் ஒரு சில ஆடுகள் நான்கு குட்டிகள் வரை போடும் எனவும், இரண்டு குட்டிகள் வரை போடுவது மிகவும் சிறப்பானது எனவும் நான்கு குட்டிகள் வரை போட்டால் பால் அதிகளவு குட்டிகளுக்கு கிடைக்காது என கூறுகிறார்.
Maintenance method and feed
தாய் ஆடுகள் கர்ப்பமாக இருக்கும் போது அந்த ஆடுகளை கீழே உள்ள கொட்டகையில் தனியாக வைத்து வளர்த்து வருவதாகவும் இந்த முறையில் வளர்ப்பதால் தாய் ஆடுகள் பாதுகாப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
ஆடுகளுக்கு காலை நேரங்களில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் இவற்றுடன் பீர் மால்ட்டை சேர்த்து அளித்து வருவதாகவும், மேலும் ஒன்பது மணிக்கு மேல் இவர் புல் மற்றும் சூப்பர் நேப்பியர் ஆகியவற்றை அளிப்பதாக கூறுகிறார்.
மேலும் 12 மணியிலிருந்து ஒரு மணிக்குள் அகத்தி கீரை வகைகளை இவர் ஆடுகளுக்குத் தீவனமாக அளிப்பதாகவும் மற்றும் 5 மணிக்கு மேல் கடலைக் கொடியை தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார்.
இவர் ஆடுகளுக்கு அளிக்கும் அனைத்து தீவனங்களையும் அரைத்து அளித்து வருவதாகவும், இதற்கு என்று இவர் இயந்திரத்தை வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த கன்னி ஆடுகள் பண்ணையை நடத்துபவர் மிக சிறப்பான முறையில் பண்ணையை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான கைராலி கோழி பண்ணை.