திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் மஞ்சள் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய மஞ்சள் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
The beginning of the cultivation of turmeric
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் மஞ்சள் சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப்படிப்பினை முடித்து விட்டு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதன் காரணமாக விவசாயம் செய்ததாகவும், அதில் இப்பொழுது இவர் மஞ்சள் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் கரும்பு மற்றும் கருப்பு கவுனி நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருவதாகவும், இவருடைய விவசாய முறைகளை இவர் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மஞ்சளில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதால் இதனை அதிக அளவில் உபயோகித்து வருகிறார்கள் எனவும் இதன் காரணமாக இவர் மஞ்சள் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.
மஞ்சளின் மருத்துவ குணம் மற்றும் இயற்கை விவசாயத்தின் சிறப்பு
பொதுவாக மஞ்சளில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதாகவும் இதனை நாம் எடுத்துக் கொண்டால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் இது நமக்கு எதிர்ப்பு சக்தியை அதிகளவில் கொடுக்கும் எனவும் இதனை நாம் உணவில் தினமும் எடுத்து கொள்வதால் மட்டுமே நமக்கு எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்.
மேலும் இவர் மஞ்சள் சாகுபடியை முற்றிலும் இயற்கை விவசாய முறையில் செய்து வருவதாகவும் இயற்கை விவசாய முறையில் செய்வது மட்டுமே நன்மையை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
செயற்கை முறையில் விவசாயம் செய்யாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது நமது உடலுக்கு மிகவும் அதிக அளவு நன்மையை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
Turmeric cultivation method
மஞ்சள் வகைகளில் பல வகை மஞ்சள்கள் இருப்பதாகவும் அதில் இவர் Bts 10 என்ற வகை மஞ்சளையும் மற்றும் ராஜமுந்திரி ஆகிய வகை மஞ்சளை இவர் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த மஞ்சளை விதைப்பதற்கு விதைகளை இவருடைய உறவினரிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதனை விதைத்து வருவதாகவும் கூறுகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் மஞ்சளை விதைப்பதற்கு 800ரில் இருந்து 1,000 கிலோ மஞ்சள் தேவைப்படும் எனவும், சிறிய அளவில் மஞ்சள் இருந்தால் 800 கிலோ மஞ்சள் போதுமானது எனவும் இதுவே பெரிய அளவில் மஞ்சள் இருந்தால் ஆயிரம் கிலோ வரை தேவைப்படும் என கூறுகிறார்.
ஒவ்வொரு செடிக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி விட்டு விதையை நட வேண்டும் எனவும், விதை நட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு நீரினை விதைகளுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
ஒரு அடி இடைவெளிவிட்டு விதையை நடுவதன் மூலம் செடிகள் நல்ல தரமானதாக வளரும் எனவும் மற்றும் எந்தவித நோய் தாக்குதலும் அதிக அளவில் செடிகளுக்கு ஏற்படாது எனவும் கூறுகிறார்.
விதையை நட்டு 25 ஆவது நாளில் செடியானது வளர்ந்து விடும் எனவும், மஞ்சள் சாகுபடி செய்யும் போது அதனுடைய பருவத்தில் சரியாக சாகுபடி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.
பராமரிப்பு முறை
மஞ்சள் சாகுபடி செய்யும் தோட்டத்தில் உள்ள களைச் செடிகளை இவர் எடுப்பது இல்லை எனவும், மஞ்சள் செடியை விட களைச்செடி வளராமல் பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமானது என கூறுகிறார்.
மேலும் களைச் செடிகள் இருந்தால் மஞ்சளை காயாமல் பார்த்துக் கொள்ளும் எனவும் இதுவே களைச்செடிகள் இல்லை எனில் வெப்பமானது நேரடியாக மஞ்சள் செடியை தாக்கும் என கூறுகிறார்.
எந்த அளவிற்கு சூரிய ஒளி செடியில் நேரடியாக படுவதை படிக்கிறோமோ அந்த அளவிற்கு சிறப்பாக செடியானது வளரும் எனவும் மற்றும் இந்த மஞ்சளை ஊடு பயிராக வளர்க்க முடியும் எனவும் கூறுகிறார்.
எனவே களைச் செடிகளை நிலத்தில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் அதிக அளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.
Water supply system and immunization system
மஞ்சள் செடிக்கு நீரினை அளிக்கும் போது மஞ்சள் வெளியே தெரிந்தால் குறைந்த அளவு நீரினை அளித்தால் மட்டும் போதுமானது எனவும், இதுவே மஞ்சள் நிலத்தினுள் இருந்தால் அதிகமாக நீரினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவர் ஐந்திலிருந்து ஆறு நாட்களுக்கு ஒருமுறை நீரினை அளித்து வருவதாகவும் மற்றும் வெயில் காலங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீரினை அளித்து வருவதாகவும், தொடர்ந்து 2 மணி நேரம் நீரினை அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
நோய் தாக்குதலை சரி செய்வதற்கு இவர் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி வருவதாகவும், பஞ்சகாவியா போன்ற இயற்கை மருந்துகளை மட்டுமே இவர் செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மண்ணின் தரமானது நல்ல வளமாக இருந்தால் எந்தவித நோய்களும் தாக்காது எனவும், இதுவரையில் இவரது மஞ்சள் செடிகளுக்கு எந்தவித நோய்களும் அதிக அளவில் தாக்கியதில்லை எனவும் கூறுகிறார்.
அறுவடை செய்யும் முறை
மஞ்சளை விதைக்கு இருபத்தி ஆறாவது நாளில் செடியானது முளைத்து விடும் எனவும் இவ்வாறு முளைத்த செடியானது ஒன்பதிலிருந்து பத்து மாதங்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராகி விடும் என கூறுகிறார்.
செடிகள் நல்ல முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளித்தால் 20 டன் வரை மஞ்சளை அறுவடை செய்ய முடியும் எனவும் இதனை அவிக்கும் போது மூன்றிலிருந்து நான்கு டன் வரை மஞ்சள் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் மஞ்சளை அவிக்கும் போது அது ஒரு வருடம் வரை பாதிப்படையாமல் இருக்கும் எனவும் இதன் காரணமாகவே இவர் மஞ்சளை அவிப்பதாக கூறுகிறார்.
Sales method and profit
மஞ்சள் சாகுபடியை செய்து அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது அதிகளவில் லாபம் கிடைக்கும் எனவும், இவர் மஞ்சளை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதாகவும் இதில் இவருக்கு நிறைந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மஞ்சளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் மஞ்சளாகவும் மற்றும் மஞ்சள் தூளாகவும் விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய தோட்டத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இவர் மஞ்சளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மஞ்சளை தூளாக செய்து விற்பனை விற்பனை செய்யும் போது அதன் மூலம் அதிக அளவில் லாபம் கிடைக்கும் எனவும், மஞ்சள் சாகுபடியில் லாபம் கிடைப்பதற்கு 10 மாதங்கள் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவரிடம் விதை மஞ்சளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விதை மஞ்சளையும் விற்பனை செய்து வருவதாகவும், இந்த மஞ்சள் சாகுபடியில் இவர் அதிகளவில் லாபம் பெற்று வருவதாக கூறுகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான மற்றும் இயற்கையான வழிமுறையில் மஞ்சள் சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:தேனீ வளர்ப்பில் நிறைந்த வருமானம்.