ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் பண்ணை வைத்து நடத்தி வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் கான்கிரீஜ் நாட்டு மாடு பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய கான்கிரீஜ் நாட்டு மாடு வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
கான்கிரீஜ் நாட்டு மாடு பண்ணையின் தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் பண்ணை வைத்து நடத்தி வரும் ஒரு பண்ணையாளர் கான்கிரீஜ் நாட்டு மாடு பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.
இவர் இவருடைய பண்ணையில் பல வகை மாடுகளை வளர்த்து வருவதாகவும் அதில் இவர் அதிகமாக கான்கிரீஜ் என அழைக்கப்படும் நாட்டு மாடுகளை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த கான்கிரீஜ் நாட்டு மாடுகள் அதிக அளவில் பாலை அளிக்கும் எனவும் இதனால் அதிக அளவில் லாபத்தை நாம் பெற முடியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய தந்தை பண்ணை வைத்து நடத்தி வந்ததாகவும் இவருக்கும் பண்ணை வளர்ப்பின் மீது ஆர்வம் வந்து பண்ணை வளர்ப்பு தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
ஆரம்பத்தில் இவர் பண்ணயை தொடங்கும் போது வெறும் மூன்று மாடுகள் மட்டுமே இருந்ததாகவும் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து இவர் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
Types of cattle on the farm
இவருடைய பண்ணையில் மொத்தமாக நான்கு வகை மாடுகளை வைத்து வளர்த்து வருவதாகவும் அவைகள் கான்கிரீஜ் நாட்டு மாடுகள், கிர் நாட்டு மாடுகள் மற்றும் அலிகர், எருமைகள் ஆகியவற்றை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இதில் 40க்கும் மேற்பட்ட கான்கிரீஜ் நாட்டு மாடுகளை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த கான்கிரிஜ் நாட்டு மாடுகளின் பூர்வீகம் குஜராத்தில் உள்ள பூஜ் பகுதி என கூறுகிறார்.
ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் இன்றைய நிலையில் அதிக அளவு கான்கிரீஜ் நாட்டு மாடுகள் இருப்பதாகவும், ஒரு காலத்தில் இந்த வகைமாடுகள் தமிழ் நாடுகளில் அதிகளவில் காணப்பட்டதாகவும் ஆனால் நாளடைவில் அவைகள் அழிந்து விட்டதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கான்கிரீஜ் நாட்டு மாடுகளை இவருடைய பண்ணையில் ஐந்து வருடங்களாக வைத்து வளர்த்து வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள இவரது பண்ணையில் இவைகள் வளர்ந்து வருவதால் இதுவரையில் எந்தவித பாதிப்பும் மாடுகளுக்குக் ஏற்பட்டதில்லை என கூறுகிறார்.
கான்கிரீஜ் நாட்டு மாடுகளின் பயன்கள்
கான்கிரீஜ் நாட்டு மாடுகளை இவர் வளர்ப்பதால் இந்த மாடுகளினால் எந்த பாதிப்பும் இவருக்கு ஏற்படுவதில்லை எனவும் நல்ல முறையில் இந்த மாடுகள் வளர்ந்து அதிக அளவில் பாலை தருவதாகவும் கூறுகிறார்.
இந்த மாடுகள் தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்புடையதாக இருப்பதாகவும், சினை பிடிப்பதில் எந்த பிரச்சனைகளும் ஏற்படுவதில்லை எனவும் மற்றும் தீவனம் குறைவாக எடுத்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.
மேலும் தரமான பாலினை இந்த கான்கிரீஜ் நாட்டு மாடுகள் அளித்து வருவதாகவும் மற்றும் மற்ற நாட்டு மாடுகளை விட இந்த மாடுகள் மிகவும் சிறப்பானது எனவும் கூறுகிறார்.
எனவே புதியதாக பண்ணை தொடங்குபவர்கள் இந்த கான்கிரீஜ் வகை நாட்டு மாடுகளை வாங்கி மிக சிறப்பான முறையில் வளர்க்க முடியும் எனவும், எந்த பாதிப்பும் இன்றி இந்த மாடுகள் நல்ல முறையில் வளர்ந்து தரமான பாலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
Breeding method of cows
கான்கிரீஜ் நாட்டு மாடுகளை இவர் குஜராத்தில் இருந்து வாங்கி வந்து வளர்த்து வருவதாகவும், மாடுகள் இருப்பதற்கு இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து அந்தக் கொட்டகையில் மாடுகளை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஒரு லாரியில் ஆறிலிருந்து எட்டு மாடுகளை மட்டுமே ஏற்றி இவருடைய பண்ணைக்கு எடுத்து வருவதாகவும் இவ்வாறு வரும் ஒவ்வொரு மாட்டிற்கும் 30 ஆயிரம் வரை செலவாகும் எனவும் கூறுகிறார்.
குஜராத்தில் இருந்து மாடுகளை எடுத்து வரும்போது லாரியில் ஒன்றரை அடிவரை மணலை கொட்டி அதன்மீது மாடுகளை நிற்க வைத்து எடுத்து வருவதாகவும் இவ்வாறு லாரியில் கொட்டுவதன் மூலம் மாடுகள் கீழே விழாது எனவும் கூறுகிறார்.
மேலும் மாடுகள் குஜராத்தில் இருந்து இவருடைய பண்ணைக்கு வரும் வரை மாடுகளுக்கு தேவையான தீவனங்களை மாடுகளுக்கு சரியான முறையில் அளித்து வருவதாகவும், மாடுகளை கவனித்துக் கொள்வதற்கு ஒரு லாரிக்கு இரண்டு நபர்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
மாடுகளுக்கு அளிக்கும் தீவனங்கள்
கான்கிரீஜ் நாட்டு மாடுகளின் மொத்த ஆயுட்காலம் 20 வருடம் எனவும், இதனுடைய ஆயுட்காலம் முழுவதும் இவை மிகவும் தரமான பாலினை மட்டுமே அளித்து வரும் எனவும் கூறுகிறார்.
இவருடைய பண்ணையில் உள்ள மாடுகளுக்கு பசுந்தீவனங்களையும், மக்காச்சோள தீவனம் மற்றும் மக்காச் சோளத் தட்டு, வைகோல், சோளத் தட்டு மற்றும் இவற்றுடன் தவிடு மற்றும் புண்ணாக்கு வகைகளை தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய மாடுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதால் இதுவரையில் இந்த மாடுகளுக்கு எந்த வித நோய்களும் ஏற்பட்டதில்லை எனவும், இயற்கையிலேயே இந்த மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
கான்கிரீஜ் மாடுகளின் கன்றுகளை விற்பனை செய்யும் போது ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதம் ஆன கன்றுகளை விற்பனை செய்யக் கூடாது எனவும், தாய் மாட்டின் பால் வற்றிய பிறகே கன்றுகளை விற்பனை செய்யவேண்டும் எனவும் கூறுகிறார்.
ஒரு வருடம் ஆன கன்றுகளை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த மாடுகள் பிறந்த 4வது வருடத்திலிருந்து கன்று போட தொடங்கி விடும் என கூறுகிறார்.
முதலில் இவர் ஒரு கான்கிரீஜ் நாட்டு மாட்டினை 80,000 லிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்து கொண்டிருந்ததாகவும் இப்பொழுது இவர் ஒரு மாட்டினை 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த கான்கிரீஜ் நாட்டு மாடுகள் இதனுடைய வாழ்நாளில் மொத்தமாக பத்திலிருந்து 12 கன்றுகளை ஈன்றும் எனவும், மேலும் இது ஒரு நாளைக்கு 6 லிருந்து 8 லிட்டர் வரை பாலினை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
கான்கிரீஜ் நாட்டு மாடுகள் வளர்ப்பில் இவர் அதிக அளவில் வருமானத்தை பெற்று வருவதாகவும், மாடுகளில் இருந்து கறக்கும் பாலினை விற்பனை செய்வதில் இவருக்கு லாபம் கிடைத்து வருவதாகவும் மற்றும் அந்தப் பாலை தயிராக மாற்றி விற்பனை செய்வதிலும் இவருக்கு லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
மேலும் வெண்ணைய், நெய், பால் கோவா, பன்னீர் மற்றும் ரசகுல்லா ஆகிய வகைகளை பாலிலிருந்து உருவாக்கி விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலமும் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
மாட்டு சாணத்தையும், மாட்டின் சிறுநீரகத்தையும் விற்பனை செய்து வருவதாகவும், இந்த முறையில் இவர் மாடுகளின் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று மாடுகளை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருமானத்தைப் பெற்று வருவதாகக் கூறுகிறார்.
மேலும் படிக்க:மஞ்சள் சாகுபடியில் அசத்தும் இளைஞர்.