வெள்ளக்கோயில் அருகிலுள்ள காட்டுப்புதூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் வாத்து பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய வாத்து வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
வாத்து வளர்ப்பின் தொடக்கம்
வெள்ளக்கோயில் அருகிலுள்ள காட்டுப்புதூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் வாத்து பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும் இந்த வாத்து பண்ணையில் இவருக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையில் வளர்க்கும் வாத்துக்கள் நாட்டு வாத்துக்கள் எனவும், ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்வு முறையைப் பற்றி நன்கு அறிந்து கொண்டால் அதனை வளர்ப்பது மிகவும் எளிது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையில் காடைகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருவதால் இதனுடைய கழிவுகளை வாத்துகள் உண்ணும் என்பதால் இவர் வாத்து வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.
Country duck special
பொதுவாக நாட்டு வாத்துக்கள் என்றாலே அதிகளவு வாடிக்கையாளர்கள் இந்த வாத்துகளை வாங்கி செல்வார்கள் என கூறுகிறார்.
இந்த நாட்டு வாத்துகளின் சிறப்பானது இதனுடைய இறைச்சி சுவையாக இருக்கும் எனவும் இதனுடைய முட்டையும் சுவையாக இருக்கும் என கூறுகிறார்.
மேலும் வெள்ளை நிற வாத்துக்களை விட நாட்டு வாத்துக்களையே அதிக அளவு மக்கள் விரும்பி உண்பதாகவும், வெள்ளை நிற வாத்துக்கள் பிராய்லர் வகையை சேர்ந்தது என்பதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் அதை விரும்பவில்லை எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் வெள்ளை நிற வாத்துக்களை வளர்ப்பதை விட நாட்டு வாத்துக்களை வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நாட்டு வாத்துக்களை வளர்ப்பதாக கூறுகிறார்.
பண்ணையின் அமைப்பு
வாத்துக்களை இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து அவைகளுக்கு சரியான அளவுகளில் தீவனத்தை அளித்து வருவதாகக் கூறுகிறார்.
இவர் இவருடைய வாத்து பண்ணையை வெறும் 12 சென்ட் பரப்பளவில் மட்டுமே அமைத்து வாத்துக்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் வெறும் 12 சென்ட் பரப்பளவில் மட்டும் பண்ணை அமைத்து உள்ளதால் இவர் நாட்டு வாத்துக்களை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஏனெனில் நாட்டு வாத்துகளை 12 சென்ட் பரப்பளவில் வளர்ப்பது மிகவும் எளிமையானது எனவும், இதுவே மனிலா வகை வாத்துக்களை 12 சென்ட் பரப்பளவில் வளர்த்த முடியாது எனவும், ஏனெனில் இந்த வாத்துக்கள் பறக்கும் தன்மை உடையது எனக் கூறுகிறார்.
Medicinal properties and feed of ducks
நாட்டு வாத்துக்கள் என்றால் அவை இயற்கையாகவே கோழிகள் மற்றும் காடைகளின் கழிவுகளை உண்ணும் தன்மையுடையது எனவும்,இவருடைய பண்ணையிலுள்ள வாத்துக்களும் கோழி மற்றும் காடைகளின் கழிவுகளை உண்பதாக கூறுகிறார்.
மேலும் இவர் வாத்துக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை மீன்களை உணவாக அளித்து வருவதாகவும் மற்றும் கரையான்களை உற்பத்தி செய்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவற்றுடன் கீரை வகைகளையும் உற்பத்தி செய்து அளித்து வருவதாகவும் கீரை வகைகளை இந்த வாத்துக்கள் அதிக அளவில் விரும்பி உண்பதாக கூறுகிறார்.
மேலும் இது வரையில் இவர் வாத்துக்களுக்கு என்று எந்தவித தீவன செலவு செய்ததில்லை எனவும் மற்றும் எந்தவித மருத்துவ செலவையும் இந்த வாத்துக்களுக்கு இதுவரையில் செய்ததில்லை எனவும் கூறுகிறார்.
நாட்டு வாத்துகளின் இறைச்சியிலும் மற்றும் அவற்றின் முட்டை களிலும் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், முட்டைகளில் ஒமேகா 3 இருப்பதாகவும் இதனை குழந்தைகள் உண்ணும் போது மூளை வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் முகம் பளபளப்பாக இருப்பதற்கு இந்த முட்டையை உண்ணலாம் எனவும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு இது அதிக அளவில் பயன்படுவதாகவும் கூறுகிறார்.
நரம்புத்தளர்ச்சி மற்றும் சளி ஆகிய நோய்களுக்கு இந்த நாட்டு வாத்துகளின் இறைச்சி மற்றும் முட்டை அதிக அளவில் பயன் படும் எனவும் கூறுகிறார்.
வாத்துகளின் வளர்ப்பு முறை
வாத்துக்களை வளர்ப்பதற்கு இவர் மிகவும் குறைந்த அளவு இடத்தையே பயன்படுத்தி வருவதாகவும், இந்த குறைந்த அளவு இடத்திலேயே வாத்துக்கள் மிகவும் சிறப்பான முறையில் வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்வியல் தன்மையைப் பற்றி அறிந்து கொண்டால் அதனை வளர்ப்பது மிகவும் சுலபம் எனவும், வாத்துக்களுக்கு முக்கியமாக தேவைப்படும் குளம் மற்றும் உணவினை சரியான முறையில் அளித்தால் நல்ல முறையில் வளரும் என கூறுகிறார்.
மேலும் இந்த வாத்துகளுக்கு இறைச்சி வகைகளை அதிக அளவில் அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கோழிப்பண்ணையில் மீதமான தீவனங்களை அளித்து வளர்த்தால் மட்டும் போதுமானது எனவும் கூறுகிறார்.
மேலும் வாத்துகளுக்கு அளிக்கும் நீரினை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், இவ்வாறு மூன்று நாளைக்கு ஒருமுறை நீரினை மாற்றினால் வாத்துக்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மற்றும் வாத்துக்களுக்கு நிச்சயமாக ஒரு குளத்தினை அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வாத்துகள் வெயிலின் தாக்கத்தை தாங்கிக் கொள்ளாமல் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.
வாத்துக்களுக்கு தீவனத்தை அளிக்கும் போது சரியான நேரத்தில் தீவனத்தை அளிக்கவேண்டும் எனவும், ஏனெனில் வாத்துக்களுக்கு அதிகமாக பசி எடுக்கும் எனவும் அதேபோல் நீரினையும் சரியான அளவில் வாத்துகளுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் வாத்துக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இருக்கும் நிலையில் அவை நீருக்குள் சென்று விடும் எனவும், வெயிலின் தாக்கம் குறைந்து பிறகு அவை நீரை விட்டு வெளியில் வந்து இருக்கும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
வாத்துக்களை இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், சிறிய வாத்துக்களை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாகவும் பெரிய வாத்துக்களை இவர் விற்பனை செய்வதில்லை எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள நிலையில் இவர் ஒரு மாத வாத்து குஞ்சுகளை ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் ஒரு மாதமான வாத்து குஞ்சுகளை 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், மேலும் நாட்டு வாத்துக்களின் ஒரு கிலோ இறைச்சியை 300 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் ஒரு ஆண் வாத்து மற்றும் மூன்று பெண் வாத்துகளை மட்டுமே வைத்து வளர்த்து வருவதாகவும் இந்த வாத்துக்கள் இடமிருந்து இவருக்கு ஒரு மாதத்திற்கு 80 முட்டைகள் கிடைப்பதாகக் கூறுகிறார்.
இவ்வாறு கிடைக்கும் முட்டைகள் பொரித்த பிறகு அதனை விற்பனை செய்து இவர் லாபத்தை பெற்று வருவதாகவும், ஒரு மாதத்திற்கு இவருக்கு எட்டாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
வாத்துகளின் முட்டைகளை இவர் 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய பண்ணைக்கு வந்து அதிக அளவு வாடிக்கையாளர்கள் இறைச்சி மற்றும் முட்டைகளை பெற்றுச் செல்வதாக கூறுகிறார்.
வெள்ளக்கோயில் அருகில் உள்ள காட்டுப் புதூர் என்னும் கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் வாத்துக்களை வளர்த்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான கான்கிரீஜ் நாட்டு மாடு வளர்ப்பு.