மதுரை மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சிபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் டிராகன் ப்ரூட் சாகுபடி செய்து வருகிறார். இவரையும் இவரது டிராகன் ப்ரூட் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
டிராகன் ப்ரூட் சாகுபடியின் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் டிராகன் ப்ரூட் சாகுபடியை செய்து அதன் மூலம் சிறப்பான வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் மாம்பழம், கொய்யா மற்றும் சீதா பழம் ஆகிய பழ வகைகளை சாகுபடி செய்து வந்து கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு டிராகன் ப்ரூட் சாகுபடியை அதிகளவில் யாரும் செய்யாமல் இருப்பதனால் இதனை சாகுபடி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக இவர் டிராகன் ப்ரூட் சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவற்றுடன் இவர் பேரீச்சை மற்றும் அத்தி ஆகியவற்றை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த முறையில் இவர் இவருடைய விவசாய நிலத்தில் பலவித பழங்களை சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார்.
Excellent dragon fruit
டிராகன் ப்ரூட் என அழைக்கப்படும் இந்த பழ வகையை அதிக அளவில் யாரும் சாகுபடி செய்வதில்லை ஆனால் இவர் இந்த டிரேகன் ப்ரூட் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
மேலும் தமிழ் நாடுகளில் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் யாரும் இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியை செய்வது இல்லை எனவும், விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியை செய்து வருகின்றனர் எனவும் கூறுகிறார்.
2018ஆம் ஆண்டு இவருக்கு டிரேகன் ப்ரூட் சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் குஜராத்தில் இருந்து எடுத்து வந்து இந்த டிராகன் ப்ரூடை அதிக அளவில் செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த டிராகன் ப்ரூட் பழத்தின் பூர்வீகம் மெக்ஸிகோ எனவும் அந்தப் பகுதிகளிலேயே இந்த டிராகன் பழம் அதிக அளவில் பிரபலமாக இருந்து வந்ததாக கூறுகிறார்.
இந்த டிராகன் ப்ரூட் சாகுபடி இந்தியாவில் பத்து வருடங்களுக்கு முன்பே வந்து விட்டதாகவும், மகாராஷ்டிராவில் அதிக அளவில் இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
டிராகன் ப்ரூட் பழத்தின் வகைகள்
டிராகன் ப்ரூட் பழம் மூன்று வகைகளில் இருப்பதாகவும், அதில் ஒரு வகை பழம் வெளியே சிகப்பாகவும், உள்ளே வெள்ளையாகவும் இருக்கும் எனவும், மற்றொரு வகை பழம் வெளியே சிகப்பாகவும் மற்றும் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் மற்றொரு வகை பழமானது வெளியே மஞ்சள் நிறத்திலும் மற்றும் உள்ளே வெள்ளை நிறத்திலும் இருக்கும் எனவும், இந்த வகைகளிலேயே இந்த டிராகன் ப்ரூட் பழங்கள் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இந்த மூன்று வகை பழங்களில் இவர் வெளியில் சிவப்பு நிறத்திலும் மற்றும் உள்ளே இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும் பழத்தினை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த வகை பழத்தினை இவர் குஜராத்தில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த வகை டிராகன் ப்ரூட் பழத்தினை இவர் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்து வருவதற்கு காரணம் இந்த வகை பழம் நல்ல விலைக்கு விற்பனையாகி அதிகளவு வருமானத்தைத் தரும் என்பதற்காக எனக் கூறுகிறார்.
மேலும் இந்த வகை பழத்தினை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பல இடங்களில் சென்று பழத்தின் சுவையை அறிந்து கொண்ட பிறகும் மற்றும் இவரின் ஊரின் வெப்ப நிலைக்கு ஏற்ப இந்த செடியானது வளருமா என்பதை பற்றி அறிந்து கொண்ட பிறகும் இந்த வகை பழத்தினை இவர் தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.
Medicinal properties of dragon fruit
தமிழ்நாட்டில் அதிக அளவில் இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியை செய்யாமல் இருப்பதற்கு காரணம் இதனை சாகுபடி செய்யும்போது அதிக அளவில் பணம் செலவாகும் என்பதால் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த டிராகன் ப்ரூட் பழம் அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் இதனை விளைச்சல் செய்யும் பணம் அதிக அளவில் இருப்பதனால் என கூறுகிறார்.
மேலும் இந்த பழத்தில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் இதனை நாம் உண்பதன் மூலம் நமது உடலுக்கு மிகவும் நன்மை இது அளிக்கும் எனவும் கூறுகிறார்.
புற்று நோய்களுக்கு இந்த டிராகன் ப்ரூட் பழத்தை தினமும் உண்டு வந்தால் நோய் குணமாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் இந்த பழத்தில் இனிப்புக் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை உண்ணலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பழம் மலச்சிக்கலை குணமாக்க அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
சாகுபடி செய்யும் முறை
இந்த ட்ராகன் ப்ரூட் பழமானது அனைத்து வகை மண்களிலும் சிறப்பாக வளரும் எனவும், ஆனால் இது வளரும் மண்ணில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருக்கக்கூடாது என கூறுகிறார்.
மேலும் மண்ணில் PH அளவு குறைவாகவும் மற்றும் அதிகமாகவும் இருந்தால் இது நல்ல முறையில் வளராது எனவும், மற்றபடி அனைத்து மண்ணிலும் இது சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இதனை விதை மற்றும் தண்டுகளின் மூலம் வளர்க்க முடியும் எனவும், தண்டுகளின் மூலம் வளர்ப்பது மிக சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
எட்டில் இருந்து 12 அடி இடைவெளியில் இந்த செடியை நட்டு வளர்த்து வருவதாகவும், இந்த செடி நன்றாக வளர்வதற்கு சிமெண்ட்டில் ஆன ஒரு தூணை மண்ணில் நட்டு அதன் மேல் செடியினை ஏற்றி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
செடிகளை நட்ட 18வது மாதத்தில் விளைச்சல் எடுக்க தொடங்கிவிடலாம் எனவும், ஒரு முறை இந்த சாகுபடி செய்து விட்டால் அதன் பிறகு இதனுடைய பராமரிப்பு முறை மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மூன்று நாட்களில் இருந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த செடிகளுக்கு இவர் நீரினை அளித்து வருவதாக கூறுகிறார்.
Sales method and profit
டிராகன் ப்ரூட் பழத்தினை இவருடைய தோட்டத்தில் வந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் இந்த பழத்தினை சென்னை வரையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
சென்னையில் உள்ள சந்தைகளில் இந்த பழம் ஒரு கிலோ 300 ரூபாய் வரையில் விற்பனை ஆகி வருவதாகவும் இவரிடம் வந்து வாங்கும் போது இவர் ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் எனவும், ஆனால் இதனை நல்ல முறையில் வளர்த்து விற்பனை செய்தால் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவரின் ஊரில் உள்ள அதிக அளவு நபர்கள் இவரிடம் வந்து இந்த பழத்தினை வாங்கி செல்வதாகவும், இவர் இந்த டிராகன் ப்ரூட் சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:பெருவிடை கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம்.