மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் வெற்றிலை சாகுபடியை செய்து வருகிறார். இவரையும் இவருடைய வெற்றிலை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
விவசாயியின் வாழ்க்கை முறை
மதுரை மாவட்டத்தில் உள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் வெற்றிலை விவசாயத்தை செய்து வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இந்த வெற்றிலை சாகுபடியை இவருடைய குடும்பம் மூன்று தலைமுறையாக செய்து வருவதாகவும், இவர் இந்த வெற்றிலை சாகுபடியை 12 வயதில் இருந்து சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.
இப்பொழுது இவருக்கு வயது 61 ஆகிறது எனவும் இது வரையில் இவர் வெற்றிலை விவசாயத்தை மட்டுமே செய்து வருவதாகவும், இந்த வெற்றிலை விவசாயத்தில் இவருக்கு அனைத்தும் நன்றாக தெரியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த வெற்றிலை விவசாயத்தை எந்த பாதிப்பும் இன்றி சிறப்பாக செய்தால் மிகச் சிறந்த முறையில் விளைந்து அதிக அளவு வருமானத்தை அளிக்கும் எனவும், இவர் இவருடைய வெற்றிலை சாகுபடியை சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
Benefits of betel
வெற்றிலையில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதாகவும், இந்த வெற்றிலையை நாம் உண்ணும் போது நமக்கு ஜீரண சக்தி அதிக அளவில் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
அந்தக் காலங்களில் அதிகமாக ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் நபர்களும் வெற்றிலையை உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் எனவும், குழந்தைகள் மட்டும் வெற்றிலையை உண்ண மாட்டார்கள் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த வெற்றிலையில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதாகவும், உடலுக்கு அதிக அளவு நன்மையை அளிக்க கூடியது எனவும் கூறுகிறார்.
ஆனால் இன்றுள்ள காலத்தில் அதிக அளவு மக்கள் யாரும் இந்த வெற்றிலையை உண்பதில்லை எனவும், அந்தக் காலங்களில் வெற்றிலையை உண்ணாத நபர்கள் யாருமே இல்லை எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள காலத்தில் வாழும் மக்கள் அனைவரும் வெற்றிலையை பயன்படுத்தாமல் வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவதாகவும், வீட்டு விசேஷத்திற்கு மட்டுமே இந்த வெற்றிலையைப் பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் கூறுகிறார்.
இவருடைய மகளின் குழந்தைக்கு இந்த வெற்றிலையை நசுக்கி அதனுடைய சாறினை அளித்து வருவதாகவும் இதனை அளிப்பதனல் அந்த குழந்தையின் ஜீரண சக்தி அதிகரித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த வெற்றிலையை சில நோய்களுக்கு மருந்துகள் ஆக அந்த காலங்களில் பயன்படுத்தி வந்ததாகவும், இப்பொழுது உள்ள காலத்தில் ஆங்கில மருத்துவம் வந்ததால் இந்த இயற்கை மருத்துவத்தை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவது இல்லை எனவும் கூறுகிறார்.
வெற்றிலையின் வளர்ப்பு முறை
வெற்றிலை சாகுபடியை இவர் மூன்று ஏக்கர் நிலத்தில் சிறப்பாக செய்து வருவதாகவும், இந்த வெற்றிலை உள்ள நிலத்தில் வேறு சில பயிர்களையும் இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
வெற்றிலை கொடியினை நடுவதற்கு முன்பு நன்றாக நிலத்தினை உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நிலத்தினை நன்றாக உழுது சில மாதங்களுக்குப் பிறகு வெற்றிலை கொடியினை நடுவதாக கூறுகிறார்.
இவ்வாறு வெற்றிலைக் கொடியினை நட்ட பிறகு செடிகளுக்கு நீரினை அளிப்பதாகவும், நீரினை அளித்த பிறகு செடிகளை நட்ட பாத்திகளை மீண்டும் நன்றாக களைகள் இல்லாமல் சுத்தம் செய்து அதன் பிறகு அவற்றின் விதைகளை விதைப்பதாக கூறுகிறார்.
அகத்தி விதையை விதைத்ததற்குப் பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் நீரினை அளிப்பதாகவும், இவ்வாறு 15 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.
கொடியை நட்ட 45வது நாளில் வெற்றிலைக் கொடியில் உள்ள வெற்றிலைகளை பறித்து விட்டு அதன் கொடியினை எடுத்து அகத்தியின் மேலே ஏற்றி விடுவதாக கூறுகிறார்.
இவ்வாறு ஏறிய வெற்றிலை கொடி நன்றாக வளர்ந்த பிறகே அதில் விளைச்சல் ஆன வெற்றிலைகளை பறிக்க வேண்டும் எனவும், இவ்வாறு வெற்றிலைகள் நன்றாக வளர்ந்து விளைச்சலைப் பெறுவதற்கு 4 ல் இருந்து 5 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
அனைத்து பருவங்களிலும் வெற்றிலை சாகுபடி செய்யலாம் எனவும், ஆனால் ஆடி மாதத்தில் சாகுபடி செய்தால் மிகச் சிறப்பான முறையில் விளைச்சல் ஆகும் எனவும் கூறுகிறார்.
Benefits of Agathi
வெற்றிலையை சாகுபடி செய்யும் போது அது நன்றாக ஒரு செடியின் மீது ஏறி வளர்வதற்கு இவர் அகத்தியை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதாகவும், இவ்வாறு இவர் அகத்தியை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதற்கு காரணம் அகத்திக் செடியானது நன்றாக குளிர்ச்சியை அளிக்கும் என கூறுகிறார்.
இவ்வாறு குளிர்ச்சியாக இருப்பதினால் வெற்றிலை நல்லமுறையில் வளரும் எனவும் மற்றும் வெற்றிலையின் மீது வெயில் படாதவாறு இந்த அகத்தி வெற்றிலையை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும் எனவும், வெற்றிலையின் மீது வெயில் பட்டால் செடியானது இறப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் அகத்தியை விதைத்த பிறகு அது வளர்ந்ததும் தேவையான அகத்தி செடியை மட்டும் வைத்துக் கொண்டு மீறி செடிகளை வெட்டி எடுத்து விடுவதாகவும், மற்றும் அகத்தி செடியில் உள்ள இலைகளை அகற்றி விடுவதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு அகத்தி செடியில் உள்ள இலைகளை அகற்றி விடுவதற்குக் காரணம் வெற்றிலையில் பாதி அளவு வெயில் பட வேண்டும் என்ற காரணத்திற்காக எனவும், ஏனெனில் குறைந்த அளவு வெயில் வெற்றிலையில் பட வேண்டும் என கூறுகிறார்.
இந்த அகத்திக் கீரைகளை இவருடைய வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் ஆடு மாடுகளுக்கு தீவனமாகவும் அகத்திக்கீரைகளை அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் வெற்றிலை வளர்வதற்கு இந்த அகத்திக் கீரையை உரமாக அளித்து வருவதாகவும், செயற்கை உரத்தை விட இந்த அகத்திக்கீரை மிக சிறப்பான உரமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கீரையை நாம் உண்ணும் போது நமக்கு சத்துக்கள் கிடைக்கும் எனவும் மற்றும் கால்நடைகளும் இந்த கீரை வகைகளை உண்ணும்போது அவைகளுக்கும் அதிக அளவு சத்துக்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
நீரினை அளிக்கும் முறை மற்றும் விற்பனை முறை
வெற்றிலைக் கொடிக்குக் நீரினை அளிக்கும் போது வாழை மற்றும் கரும்பு ஆகிய தோட்டங்களுக்கு நீரினை அளிக்கும் முறையில் அளிக்கக்கூடாது எனவும், நீரினை செடிகளின் மீது தெளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
ஏனெனில் பாத்தி முறையில் நீரினை வெற்றிலை கொடிகளுக்கு அளித்தால் வெற்றிலை கொடிகளின் வேரானது அழுகி போவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.
இந்த முறையில் இவர் சாகுபடி செய்யும் அனைத்து வெற்றிகளையும் இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவரிடம் வெற்றிலை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் வெற்றிலையை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் வெற்றிலையின் அடியில் வெள்ளை நிறத்தில் உள்ள ஒரு கொசு வந்து வெற்றிலையில் உள்ள சாறினை உறிஞ்சி வெற்றிலை கொடியை பாதிப்படைய செய்வதாகவும் இதனை தடுப்பதற்கு மருந்துகளை செடிகளுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
30 நாட்களுக்கு ஒருமுறை வெற்றிலைகளை அறுவடை செய்ய வேண்டும் எனவும், மற்றும் இவர் இந்த வெற்றிலை சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான மேச்சேரி ஆடு வளர்ப்பு.