கொடைக்கானலில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரையும், இவருடைய ஸ்ட்ராபெரி சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
ஸ்ட்ராபெரி சாகுபடியின் தொடக்கம்
கொடைக்கானலில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் கடந்த ஆறு வருடமாக விவசாயம் செய்து வருவதாகவும், ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை ஐந்து வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
ஸ்ட்ராபெர்ரி சாகுபடி உடன் சேர்த்து இவர் கேரட் சாகுபடியையும் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடியையும் செய்து வருவதாகவும், இந்த அனைத்தையும் இவர் இயற்கையான முறையில் சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.
முதலில் இவர் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடியை செய்து வந்ததாகவும் அதன் பிறகு ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்துடன் இவர் ஸ்ட்ராபெரி சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
Excellent strawberry cultivation
ஸ்ட்ராபெரி சாகுபடியை ஒரு சென்ட் நிலத்தில் செய்யும் போது ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் எனவும் ஆனால் அதனை விற்பனை செய்யும் போது அதை விட அதிக அளவு வருமானம் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இவர் ஸ்ட்ராபெரி சாகுபடியை 20 சென்ட் நிலம் வரை சிறப்பாக செய்து வருவதாகவும், இதனை இவர் இயற்கையான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்யும் போது அதற்கு என்று உள்ள பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் எனவும், மற்ற கால நிலையில் ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்வது சற்று கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
இவர் ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்யும் போது அதற்கென்று உள்ள பருவ நிலையில் மட்டுமே செய்வதாகவும், மற்ற எந்த பருவத்திலும் ஸ்ட்ராபெரி சாகுபடியை இவர் செய்வது இல்லை எனவும் கூறுகிறார்.
ஏனெனில் மற்ற பருவநிலையில் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்தால் அது நல்ல முறையில் வளராது எனவும் இதனால் நமக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படும் எனவும் கூறுகிறார்.
நடவு செய்யும் முறை
ஸ்ட்ராபெரி செடிகளை பூனேவில் இருந்து வாங்கி வந்து இவர் வளர்த்து வருவதாகவும், இவருடைய ஊரில் ஸ்ட்ராபெரி செடிகள் இல்லை எனவும் இவர் வாங்கி வரும் செடிகளை தாய் செடிகளாக மாற்றி அதில் இருந்து சில செடிகளை எடுத்து நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் வெளியிலிருந்து ஸ்ட்ராபெரி செடிகளை அதிக அளவில் வாங்கி வளர்த்து வருவதாகவும், இவர் வளர்க்கும் விதை செடிகள் அதிக அளவில் வளர்வதில்லை எனவும் கூறுகிறார்.
மேலும் ஸ்ட்ராபெர்ரி செடிகள் குளிர் பிரதேசங்களில் மட்டுமே சிறப்பாக வளரும் எனவும், சமவெளியில் அதிகமாக இது வளர்வதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
ஏனெனில் ஸ்ட்ராபெர்ரி செடிகள் வளர்வதற்கு 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் மட்டுமே செடிகள் நல்ல முறையில் வளரும் எனவும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் செடிகள் நல்ல முறையில் வளராது எனவும், இந்த நிலையில் இருந்த ஸ்ட்ராபெரி சாகுபடியை செய்ய முடியாது எனவும் கூறுகிறார்.
அரை அடி இடைவெளியில் ஒரு நாற்றினை நட்டு வளர்த்து வருவதாகவும், ஒரு குழியில் ஒரு நாற்றினை மட்டுமே நட முடியும் எனவும் இரண்டு நாற்றுகள் நட்டால் செடியானது சிறப்பாக வளராது எனவும் கூறுகிறார்.
Cultivation method
ஸ்டிராபெரி சாகுபடியை நிலத்தில் செய்வதற்கு முன்பு நிலத்தின் மண்ணினை நன்றாக பதப்படுத்த வேண்டும் எனவும், மண்ணிற்கு தேவையான அடிப்படை நியூட்ரிசன் சத்தினை மண்ணிற்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
ஏனெனில் மண்ணிற்கு தேவையான அடிப்படை நியூட்ரிசன் சத்து மண்ணில் இல்லை எனில் ஸ்ட்ராபெரி செடியானது நல்ல முறையில் வளராது எனவும் கூறுகிறார்.
இவருடைய ஊரில் உள்ள மண்ணில் நியூட்ரிசன் அளவு குறைவாக இருப்பதினால் இவர் மண்ணினை நல்ல முறையில் பதப்படுத்தி மண்ணிற்கு தேவையான சத்துக்களை அளித்ததற்கு பிறகே ஸ்ட்ராபெரி சாகுபடியை தொடங்குவதாக கூறுகிறார்.
மண்ணிற்கு மெக்னீசியம் அளவை அதிகப்படுத்தியும் மற்றும் மண்ணிற்கு தேவையான மைக்ரோ நியூட்ரிசன் ஆகியவற்றை மண்ணிற்கு அளித்த பிறகே இவருடைய நிலத்தில் இவர் ஸ்ட்ராபெரி சாகுபடியை தொடங்குவதாக கூறுகிறார்.
ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யும் போது அவற்றிற்கு மல்சிங் சீட் மிக அவசியமானது எனவும் ஒரு வருடம் வரை இந்த மல்சிங் சீட்டின் மூலமே செடிகளுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மல்சிங் சீட்டின் மூலம் செடிகளுக்கு தேவையான சரியான வெப்பநிலை கிடைக்கும் எனவும், இதன்மூலம் செடிகளுக்கு தேவையான நியூட்ரிசன் அளவு சரியான முறையில் கிடைத்துக் கொண்டே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் மல்சிங் சீட் செடிகளுக்கு அமைக்காமல் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் வைத்து வளர்க்கும் போது செடிகளுக்கு தேவையான நியூட்ரிசன் அளவு சரியான முறையில் கிடைக்காது எனவும் கூறுகிறார்.
மற்றும் ஸ்ட்ராபெரி பழங்கள் மண்ணில் பட்டால் பழமானது கெட்டுப் போவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாகவும்,இந்த மல்சிங் சீட்டினை செடிகளுக்கு போட்டு உள்ளதால் அதன் மீது ஸ்ட்ராபெரி பழங்கள் இருக்கும் எனவும் இதனால் பழங்கள் வீணாவதில்லை எனவும் கூறுகிறார்.
அறுவடை செய்யும் முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை
ஸ்ட்ராபெரி செடியினை நட்ட 65 நாளிலிருந்து 70 நாளுக்குள் செடியில் பூ பூக்க ஆரம்பம் செய்து விடும் எனவும் மற்றும் 80 லிருந்து 90 நாளுக்குள் பூவானது பழமாக மாறி விடும் எனவும் கூறுகிறார்.
90-ம் நாளுக்கு மேல் செடியில் ஸ்ட்ராபெரி பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்யலாம் எனவும் இவ்வாறு ஒரு வருடம் வரை செடியிலிருந்து ஸ்ட்ராபெரி பழங்களை அறுவடை செய்ய முடியும் என கூறுகிறார்.
மேலும் செடிகளுக்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும் இந்த முறையில் செடிகளுக்கு நீரினை அளிப்பது சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
வெப்பநிலை சற்று அதிகமானால் கூட செடிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு விடும் எனவும்,இவ்வாறு ஏற்படும் நோயின் மூலம் செடியின் வேர்கள் இறந்து விடும் எனவும் எனவே செடிகளுக்கு சரியான அளவு வெப்ப நிலையை எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
ஸ்ட்ராபெரி பழங்களை ஊட்டியில் உள்ள சந்தைகளில் அதிகமாக இவர் விற்பனை செய்து வருவதாகவும், விளைச்சல் அதிகமாக இருக்கும் போது சென்னையிலுள்ள கோயம்பேடு சந்தைக்கு இவர் ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
ஸ்ட்ராபெரி சாகுபடி செய்வதற்கு சற்று அதிக பணம் தேவைப்பட்டாலும் அதனுடைய விளைச்சலின் மூலம் அதிகளவு வருமானம் கிடைக்கும் எனவும், இவருடைய 15 சென்ட் நிலத்தில் இருக்கும் ஸ்ட்ராபெரி செடிகளின் மூலம் ஒரு வாரத்திற்கு இவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறையில் இவருக்கு ஸ்ட்ராபெரி சாகுபடியின் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதாகவும் மற்றும் இவர் இந்த ஸ்ட்ராபெரி சாகுபடியை சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:நெல்லின் தோலை உரிக்க பயன்படும் இயந்திரம்.