அசில் கிராஸ் கோழி வளர்ப்பில் நிறைந்த லாபம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் அசில் கிராஸ் கோழி பண்ணை வைத்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரையும் இவருடைய அசில் கிராஸ் கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Start of acil cross poultry farm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் அசில் கிராஸ் கோழி பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும், இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

முதலில் இவர் முட்டை கோழி மற்றும் பிராய்லர் கோழி வகைகளை வளர்த்து வந்ததாகவும், இந்த கோழிகள் நல்ல முறையில் வளரவில்லை எனவும் இதனால் லாபம் குறைந்த அளவே கிடைத்ததாக கூறுகிறார்.

எனவே இவர் அசில் கிராஸ் கோழி வளர்ப்பை தொடங்கியதாகவும் இந்த கோழிகள் நல்ல முறையில் நன்றாக வளர்ந்ததாகவும், இதன்மூலம் நிறைந்த வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் முதலில் குறைந்த அளவில் கோழிகளை வைத்து வளர்த்து வந்ததாகவும், பிறகு இந்த கோழி வளர்ப்பில் அதிக லாபம் கிடைத்து வந்ததால் அதிகளவு கோழிகளை வாங்கி இவர் வளர்த்து இப்பொழுது பெரிய அளவில் சிறப்பாக பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.

கோழிகளை வாங்கும் முறை

அசில் கிராஸ் கோழிகளை இவர் சிறு குஞ்சுகளாக வெளியில் இருந்து வாங்கி வளர்த்து வருவதாகவும் மற்றும் இவருடைய பண்ணையிலும் முட்டைகளை பொரிக்க வைத்து குஞ்சுகளாக மாற்றி அவற்றை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

நாட்டுக்கோழிக்கு இருக்கும் வரவேற்பு அசில் கிராஸ் கோழிக்கும் அதிக அளவில் இருப்பதாகவும், இந்த கோழிகளுக்கு சரியான முறையில் தீவனத்தை அளித்து பராமரித்து வந்தால் அதன் மூலம் நமக்கு நிறைந்த லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் அசில் கிராஸ் கோழிகளை சிறு குஞ்சாக வாங்கி வரும் போது அந்தக் கோழிகள் பிறந்து ஒருநாள் ஆன கோழிகள் ஆகவே இருக்குமெனவும் ஏனெனில் பிறந்து ஒருநாள் ஆன கோழி குஞ்சுகளை வாங்கி வளர்க்கும் போது தான் அது சிறந்த முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

Raising method of chickens

அசில் கிராஸ் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளுக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படும் எனவும் எனவே கோழிப்பண்ணையில் தண்ணீர் அதிகளவில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

கோழிகள் இருப்பதற்கு பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து அந்தக் கொட்டகையில் கோழிகளை வளர்த்து வருவதாகவும், கோழிகள் நீர் மற்றும் தீவனம் அருந்துவதற்கு தேவைப்படும் உபகரணங்கள் அனைத்தையும் கொட்டகையின் உள்ளேயே வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு கோழிகளுக்கு தேவைப்படும் நீர் மற்றும் தீவனங்களை கோழிகளுக்கு வைத்து விடுவதாகவும் கோழிகள் தேவைப்படும் போது அதனை பயன்படுத்திக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்ப்பது இல்லை எனவும் முற்றிலும் பண்ணையின் உள்ளேயே வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த முறையில் வளர்ப்பதால் கோழிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை எனவும் நல்ல முறையில் வளர்ந்து வருவதாகவும் கூறுகிறார்.

கோழிகளின் பராமரிப்பு முறை

அசில் கிராஸ் கோழிகளை இவர் சிறு குஞ்சுகளாக வாங்கி வளர்ப்பதினால் அவை சற்று பெரிதாகும் வரை சிறு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளிக்க வேண்டும் எனவும், இவர் சிறு குஞ்சுகளுக்கு வெப்பத்தை அளித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் ஒரு நாள் ஆன கோழிக்குஞ்சுகள் பண்ணைக்கு வந்தவுடன் அந்த கோழிக்குஞ்சுகளுக்கு சர்க்கரை நீரினை அளிக்க வேண்டும் எனவும், இவ்வாறு சர்க்கரை தண்ணீரை அளிக்கும் போது குஞ்சுகள் சற்று சுறுசுறுப்புடன் இருக்கும் எனவும் கூறுகிறார்.

கோழிக் குஞ்சுகள் வந்த முதல் நாள் மட்டுமே சர்க்கரை நீரை அளிக்கவேண்டும் எனவும் அதன் பிறகு சாதாரண நீரை அளிக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் கோழிகள் இருக்கும் பண்ணையை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

மற்றும் கோழிகளுக்கு அளிக்கும் நீரினை தினமும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

Feed and immunization system For chickens

கோழிகளுக்கு சிறப்பான தீவனத்தை அளித்து நல்ல முறையில் வளர்த்து வருவதாகவும், கம்பெனி தீவனங்கள் மற்றும் கம்பு, மக்காச்சோளம் போன்ற தானிய வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு கீரை வகைகளையும் தீவனமாக அளித்து வருவதாகவும், அகத்திக்கீரை மற்றும் முருங்கை கீரை போன்ற கீரை வகைகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் கோழிகள் கீரை வகைகளை அதிகளவில் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளை நல்ல முறையில் பராமரிக்காமல் இருந்தால் கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே கோழிகளுக்கு நோய்கள் வராமல் கோழிகளை கவனமாக பராமரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே கோழிகளுக்கு தடுப்பூசிகளை போடுவது சிறப்பான ஒன்று எனவும், கோழிகள் அருந்தும் நீரில் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளை கலந்து அளித்தால் கோழிகளுக்கு நோய்கள் வருவது குறையும் எனவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு அவை பிறந்ததிலிருந்து இரண்டு முறை அதன் மூக்கினை வெட்டிவிட வேண்டும் எனவும் இல்லையெனில் ஒரு கோழி மற்றொரு கோழியுடன் சண்டையிட்டு இறந்து விடும் எனவும் கூறுகிறார்.

கோழிகள் இருக்கும் பண்ணையின் தரையில் தேங்காய் நார்களை இவர் போட்டு வைத்துள்ளதாகவும், கோழிகளை வெறும் தரையில் வைத்து வளர்ந்த கூடாது எனவும் கூறுகிறார்.

மேலும் தினமும் கோழிகளுக்கு தீவனம் மற்றும் நீரினை மட்டும் அளித்தால் போதுமானது எனவும், வேறு எந்த பராமரிப்பு முறையும் இந்த கோழி வளர்ப்பில் இருக்காது எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

அசில் கிராஸ் கோழிகளை சிறப்பான முறையில் வளர்த்து அதனை இவர் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய பண்ணைக்கு கோழிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் கோழிகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர் மிக சிறப்பான முறையில் கோழிகளை வளர்த்து வருவதாலும் மற்றும் இவருடைய கோழிகளின் இறைச்சி சுவையாக இருப்பதாலும் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து கோழிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து கோழிகளை வாங்கி செல்வதால் அதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், கோழிகளை இறைச்சிக்காகவும் மற்றும் வளர்ப்பதற்காகவும் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் விவசாயம் செய்து வருவதாகவும், விவசாயம் செய்து கொண்டே கோழிகள் வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் கோழிப் பண்ணையை தொடங்கி வளர்த்து அதில் இப்பொழுது சிறந்த லாபத்தை இவர் பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் ஒரு கோழிக்கு நோய் ஏற்பட்டால் அதனை தனியாக பிரித்து வைத்து விட வேண்டும் எனவும் இல்லையெனில் மற்ற கோழிகளுக்கும் நோய்கள் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.

அசில் கிராஸ் கோழி பண்ணையை இவர் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:காங்கேயம் நாட்டு மாடுகள் வளர்ப்பில் சிறந்த வருமானம்.

Leave a Reply