புகையிலை விவசாயத்தில் லட்சங்களில் வருமானம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் புகையிலை விவசாயத்தை செய்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய புகையிலை சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

விவசாயி அவர்களின் வாழ்க்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் புகையிலை விவசாயத்தை செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

புகையிலை விவசாயத்தை இவர் சிறு வயதிலிருந்தே செய்து வருவதாகவும்,கடந்த 40 வருடங்களாக இவர் புகையிலை விவசாயத்தை மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகக் கூறுகிறார்.

புகையிலை விவசாயம் செய்ய தடை இருப்பதாக சிலர் கூறியுள்ளதாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை எனவும், இவர் இந்த புகையிலை விவசாயத்தை அரசாங்கத்தின் அனுமதியுடன் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவர் சிறுவயதாக இருக்கும் போது இவருடைய ஊரில் புகையிலை விவசாயத்தை ஒருவர் செய்து வந்ததாகவும் அவரைப் பார்த்து இவருக்கும் புகையிலை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு இவரும் புகையிலை விவசாயத்தை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

Tabacco farming system

புகையிலை விவசாயத்தை தற்போது இவர் 3 ஏக்கர் நிலத்தில் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்த புகையிலையை விற்பனை செய்து அதில் லட்சக்கணக்கில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

வேடசந்தூரில் புகையிலை விதைகளை நாற்றுகளாக வளர்த்து அதனை விற்பனை செய்வார்கள் எனவும், அந்த ஊருக்கு சென்று இவர் நாற்றுகளை வாங்கி வந்து நட்டு புகையிலை விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் வேடசந்தூரில் புகையிலை நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிறுவனம் அரசாங்க நிறுவனம் எனவும், அரசாங்கத்தின் அனுமதியுடன் இவர் புகையிலை விவசாயத்தை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் புகையிலை நாற்றுகளை நடுவதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும், ஆனால் இதனுடைய விளைச்சலின் மூலம் நல்ல வருமானம் நமக்கு கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் புகையிலை விவசாயத்தை செய்வதற்கு அதிக அளவில் வெப்பம் இருக்க கூடாது எனவும் இவருடைய பகுதியில் குறைந்த அளவு வெப்பம் இருப்பதினால் புகையிலை சிறப்பாக வளர்ந்து விளைச்சலை தருவதாக கூறுகிறார்.

புகையிலை நாற்றினை மண்ணில் நடுவதற்கு முன்பு மண்ணினை நன்றாக உழுது விட்டு அதில் மாட்டு சாணம் போட்டு மீண்டும் உழுக வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு மண்ணை பதப்படுத்தி வைத்த பிறகு பாத்தி கட்டி நிலத்திற்கு நீரினை அளித்த பிறகு புகையிலை நாற்றுகளை நட வேண்டும் எனவும், புகையிலை நாற்று நட்ட 25 நாளுக்குப் பிறகு ஒவ்வொரு செடிகளுக்கும் யூரியாவை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் 40 நாட்களுக்கு பிறகு செடிகளுக்கு உரத்திணை அளித்து செடியை நல்ல முறையில் பராமரித்து கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் புகையிலை நாற்றினை நடும் போது இரண்டு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் இந்த முறையில் செடிகளை நட்டு வளர்ப்பது சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

நோய் தடுப்பு முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை

புகையிலைச் செடிகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படும் எனவும் அதனை தடுப்பதற்கு செடிகளுக்கு மருந்தினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

புகையிலை செடிகளுக்கு அதிகமாக புழுக்களின் தாக்குதல் இருப்பதாகவும், இதனை தடுப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்தினை இவர் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் மழை பெய்து மோடமாக இருக்கும் சமயங்களில் உரத்தினை அதிக அளவு செடிகளுக்கு அளித்தால் வெண்புள்ளி என்னும் நோய் ஏற்பட்டு விடும் எனவும், எனவே உரத்தினை சரியான அளவில் செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

புழுக்களின் தாக்குதலில் இருந்து செடியினை பாதுகாத்து வளர்த்தால் மட்டும் போதுமானது எனவும் செடி நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.

மற்றும் புகையிலைச் செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை நீரினை அளித்து வருவதாகவும் இந்த புகையிலை செடிகளுக்கு நீரின் தேவை அதிக அளவில் இருக்காது எனவும், எனவே நீர் அதிக அளவில் வீணாகாது எனவும் கூறுகிறார்.

Harvesting method

புகையிலை செடியை இவர் மிகுந்த பராமரிப்புடன் வளர்த்து அவைகளுக்கு தேவையான உரத்தினை அளித்து வருவதால் செடிகள் நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை தருவதாக கூறுகிறார்.

புகையிலை நாற்று நட்ட 90 வது நாளில் செடிகள் நல்ல முறையில் வளர்ந்து விடும் எனவும் 90 நாட்களுக்கு மேல் புகையிலை செடிகளை நாம் அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

செடிகள் நட்ட 60வது நாளில் புகையிலைச் செடியில் கிளைகள் வளராமல் இருப்பதற்கு மருந்து இருப்பதாகவும் அந்த மருந்தினை பயன்படுத்தி கிளைகள் வளராமல் செடிகளை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் புகையிலைச் செடியை பொறுத்த வரையில் செடியில் கிளைகள் முளைக்கக் கூடாது எனவும் இவ்வாறு செடியில் கிளைகள் முறைத்தால் புகையிலையின் நீளமானது குறைந்து விடும் எனவும் கூறுகிறார்.

புகையிலையின் நீளம் எந்த அளவிற்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதிக அளவில் விற்பனையாகும் எனவும், எனவே புகையிலைச் செடியின் கிளைகள் வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

செடியில் கிளைகள் முளைக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்து இரண்டரை லிட்டரை 2000 புகையிலை செடிகளுக்கு பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் புகையிலை செடியில் பூ பூத்துவிட்டால் அதனுடைய வளர்ச்சி நின்று விட்டது என்று அர்த்தம் எனவும், இவ்வாறு செடியில் பூ பூத்ததற்குப் பிறகு இலைகளை மட்டும் நாம் வளர செய்து அதன் பிறகு அறுவடை செய்து விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

புகையிலை விவசாயத்தை சிறப்பான முறையில் செய்து அதனை அறுவடை செய்து பச்சை புகையிலையாக விற்பனை செய்வதாகவும் மற்றும் காய்ந்த புகையிலையாக விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.

பச்சை புகையிலையாக புகையிலையை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அவர்களே வந்து புகையிலையை அறுவடை செய்து வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மற்றும் காய்ந்த புகையிலையை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் புகையிலையை அறுவடை செய்து அதனை காயவைத்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

அறுவடை செய்த 4 நாள் புகையிலையை அப்படியே காய வைத்து விட வேண்டும் எனவும், நான்கு நாட்களுக்கு பிறகு காய்ந்த புகையிலையை எடுத்து நாரில் கோர்த்து காய வைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

20 நாட்கள் தொடர்ந்து புகையிலையை காய வைக்க வேண்டும் எனவும், புகையிலை நன்றாக காய்ந்த பிறகு அதனை எடுத்து இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் புகையிலை விவசாயத்தை சிறப்பான முறையில் மிகுந்த பராமரிப்புடன் செய்வதால் இவரிடம் அதிக அளவு வாடிக்கையாளர்கள் வந்து புகையிலையை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இந்த புகையிலை விவசாயத்தின் மூலம் இவர் லட்சக்கணக்கில் வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

ஓசூரில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் புகையிலை விவசாயத்தை செய்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:பரண் மேல் ஆடு வளர்ப்பில் அதிக வருமானம்.

Leave a Reply