திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு மலையில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் சௌ சௌ சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய சௌ சௌ சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
The beginning of Chow Chow cultivation
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் சௌ சௌ சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
2014 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்ததாகவும், அதன்பிறகு இவர் விவசாயத்திற்குள் வந்துவிட்டதாக கூறுகிறார்.
சிறு வயதிலிருந்தே இவருடைய தாத்தா மற்றும் தந்தை விவசாயம் செய்து வந்ததாகவும் அதனை பார்த்து இவர் வளர்ந்ததால் தாமும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் இவர் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய தாத்தா காலத்திலிருந்தே இவருடைய தோட்டத்தில் சௌ சௌ சாகுபடியை சிறப்பான முறையில் செய்து வந்து கொண்டிருந்ததாகவும், அதே போல் நாமும் இந்த சௌ சௌ சாகுபடியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சௌ சௌ சாகுபடியை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் சௌ சௌ சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் அதனை பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
சௌ சௌ சாகுபடி செய்யும் முறை
சௌசௌ சாகுபடியை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் முன்பு நாட்டு வகை சௌசௌ காய் களை விளைச்சல் செய்து வந்ததாகவும் இப்பொழுது தொழில்நுட்பம் வளர வளர நாட்டு காய்கள் அனைத்தும் ஒட்டுரக காய்களாக மாறி விட்டதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இவருடைய தோட்டத்தில் ஒட்டுரக காய்கறி விளைச்சல் செய்து வருவதாகவும் ஆனால் அதற்கு எந்தவித மருந்துகளையும் அளிக்காமல் இயற்கையான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் நாட்டு ரக காய்கறி விளைவதற்கு அதிக அளவு நாட்களை எடுத்துக் கொள்ளும் எனவும் ஆனால் இந்த ஒட்டுரக சௌ சௌ காய்கள் விளைவதற்கு 90 நாட்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
3 அடி குழி தோண்டி அதில் மாட்டு சாணம் மற்றும் இயற்கை உரங்களைப் போட்டு மண்ணினை மூடிவிட்டு அதன் பிறகு அதன் மீது சௌசௌ காயை நடுவதாக கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு செடிகளுக்கு இடையில் 10 அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் அந்த முறையில் நட்டால் மட்டுமே சிறப்பாக செடிகள் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய தோட்டத்தில் விளைந்த சௌசௌ காய்களில் இருந்து விதைகளை உருவாக்கி அதனை எடுத்து நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவ்வாறு செடிகளை நட்ட பிறகு செடிகளுக்கு இயற்கை உரங்களை மாட்டு சாணம் மற்றும் கோழி கழிவுகள், ஆட்டுப் புழுக்கைகள் ஆகியவற்றை உரமாக அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு செடிகளுக்கு உரத்தை அளித்த பிறகு செடிகள் கொடியானது படர்வதற்கு செடியின் அருகில் ஒரு குச்சியை நட வேண்டும் எனவும் அந்த குச்சியை நட்டு பிறகு செடி சிறிது வளர்ந்த உடன் அந்த குச்சியில் கொடியினை ஏற்றி விட வேண்டும் என கூறுகிறார்.
இந்த சௌசௌ காய்கள் வளர்வதற்கு மிதமான தட்பவெப்பநிலை தேவை எனவும் மற்றும் குளிர்ச்சியும் தேவை எனவும் கூறுகிறார்.
Harvesting method and watering method
சௌ சௌ காய்கள் வளர்ந்து அறுவடை தருவதற்கு 90 நாட்கள் ஆகும் எனவும், அறுவடை தொடங்கியதிலிருந்து 8 மாதம் வரை இந்த செடியிலிருந்து விளைச்சலை நாம் எடுக்க முடியும் என கூறுகிறார்.
மேலும் இந்த சௌ சௌ காய்கள் மலைப்பிரதேசங்களில் மட்டுமே அதிகமாக விளையும் எனவும் சமவெளிப் பகுதிகளில் இது அதிக அளவில் விளையாது எனவும் கூறுகிறார்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த சௌசௌ செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், இவ்வாறு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீரினை அளிக்காமல் இருந்தால் செடிகள் நல்ல முறையில் வளராது எனவும் கூறுகிறார்.
மேலும் மழைக்காலங்களில் இந்தச் செடிகளுக்கு அதிக அளவில் நீரை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஆனால் மழை இல்லாத சமயங்களில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீரினை செடிகளுக்கு அளிப்பது அவசியம் எனவும் கூறுகிறார்.
நோய் தடுப்பு முறை மற்றும் பாதுகாப்பு முறை
சௌசௌ செடிகளுக்கு புழு பூச்சிகள் தாக்கும் எனவும் மற்றும் பிற நோய்கள் ஏற்படும் எனவும் கூறுகிறார்.
இந்த நோய்களை தடுப்பதற்கு இவர் இயற்கை மருந்துகளை அதாவது பஞ்சகாவியா மற்றும் ஜீவாமிர்தம், மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் தோட்டத்திலுள்ள களைச் செடிகளை சுத்தம் செய்து விட வேண்டும் எனவும் சுத்தம் செய்யாமல் இருந்தால் களைச்செடிகள் சௌசௌ செடிகளின் சத்துக்களையும் எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு களைச்செடிகள் சௌசௌ செடிகளின் சத்துக்களை எடுத்துக் கொண்டால் செடிகள் நல்ல முறையில் வளராது எனவும் இதனால் விளைச்சல் குறைந்த அளவே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் இருப்பதாகவும்,அந்தக் காட்டுப் பன்றிகள் இவருடைய தோட்டத்திற்குள் வந்து சௌசௌ காய்களை உண்பதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு காட்டுப்பன்றிகள் தோட்டத்திற்குள் வருவதினால் அதனை தடுப்பதற்கு இவர் முள் கம்பி வேலியை அமைத்து இருப்பதாகவும் இதனை தாண்டி காட்டு பன்றிகள் வருவதில்லை எனவும் கூறுகிறார்.
எனவே இவ்வாறு மிகுந்த பாதுகாப்பு முறையுடன் தோட்டத்தை பராமரித்து வளர்த்தால் மட்டுமே நமக்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.
Sales method and profit
இவருடைய தோட்டத்தில் விளைந்த சௌ சௌ காய்கள் அனைத்தையும் இவர் இவருடைய ஊரின் அருகில் உள்ள சந்தையில் கொண்டு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய தோட்டத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு 2500 கிலோ சௌசௌ காய்கறி விளைச்சல் ஆவதாகவும் கூறுகிறார்.
மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து செடிகளை வளர்த்து வருவதால் இவருக்கு அதிக அளவில் விளைச்சல் கிடைப்பதாகவும் இதனால் இவர் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
சௌசௌ காய்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விலையில் விற்பனையாகும் எனவும் ஆனால் இந்த சௌ சௌ காய்கறி சாகுபடியில் நிறைந்த லாபம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
சந்தைகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய எடுத்துச் செல்லும்போது காய்கறிகளை லாரியின் மூலம் எடுத்துச் செல்வதாகவும் கூறுகிறார்.
ஒரு ஏக்கர் பயிரிடுவதற்கு 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் ஆனால் அதனை விட அதிக அளவு லாபம் இந்த சௌசௌ சாகுபடியில் கிடைக்கும் என கூறுகிறார்.
சிறுமலை கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் எந்த செயற்கை உரங்களையும் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி சௌசௌ காய்கறி உற்பத்தி செய்து விற்பனை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் சிறந்த வருமானம்.