சிறப்பான புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்ப்பு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார். இவரையும், இவருடைய புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்க்கும் முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்ப்பின் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தற்போது வெகுவாக அழிந்து வரும் புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவர் இளங்கலை பட்டப் படிப்பினை முடித்து உள்ளதாகவும், மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டப் படிப்பினை பயின்று முடித்து இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இவர் படிப்பை முடித்துவிட்டு பல நிறுவனங்களுக்கு வேலை தேடி சென்றதாகவும், இவ்வாறு வேலை தேடி செல்லும் போது இவருக்கு வெளியிடங்களில் வேலை கிடைத்ததாக கூறுகிறார்.

வெளியூரில் தங்கி வேலை செய்வதினால் இவரால் நல்ல வருமானத்தை பெற முடியவில்லை என்பதால், நம்முடைய ஊரிலேயே அழிந்துவரும் நிலையில் இருக்கும் புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம் என்ற எண்ணத்துடன் இவர் இந்த புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

Excellent pulikkulam country cattle breeding

புலிக்குளம் நாட்டு மாடுகளை அழிய விடக்கூடாது என்ற காரணத்திற்காகவே இவர் புலிக்குளம் நாட்டு மாடுகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த புலிக்குளம் நாட்டு மாடுகளை இவருடைய தாத்தா காலங்களில் இருந்தே இவருடைய குடும்பம் வளர்த்து வருவதாகவும் இதன் காரணமாகவும் இவருக்கு புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மூன்று தலைமுறையாக இவருடைய குடும்பத்தில் இந்த புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்த்து வருவதாகவும், முழுவதுமே இந்த நாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டு வருவதாக கூறுகிறார்.

ஏழு புலிக்குளம் மாடுகள் வளர்ப்பில் தொடங்கி இப்பொழுது இவரிடம் 450 புலிக்குளம் மாடுகள் இருப்பதாகவும், இந்த அனைத்து மாடுகளையும் இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மாடுகள் வளர்ப்பு முறை

தற்பொழுது இவரிடம் பால் கறக்கும் மாடுகள் ஏழு மாடுகள் இருப்பதாகவும், மீதமுள்ள மாடுகளின் கன்றுகள் பெரியதாக வளர்ந்து விட்டதால் பால் கறக்கும் திறன் குறைந்து இருப்பதாக கூறுகிறார்.

இந்த மாடுகளை இவர் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும், இவ்வாறு மேய்ச்சல் முறையில் வளர்க்கும்போது மாடுகள் தொலைந்து போகாமல் இருப்பதற்கு எப்பொழுதும் மாடுகளை கண்காணித்துக் கொண்டே இருப்பதாக கூறுகிறார்.

ஒரு மாட்டில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பாலினை மட்டுமே இவர் கறப்பதாகவும் அதைவிட அதிகமாக இந்த மாடுகள் பாலினை அளிக்காது எனவும் கூறுகிறார்.

இந்த புளிக்குலம் நாட்டு மாடுகளில் அதிக அளவில் லாபம் இருக்காது எனவும், இந்த மாடுகளை இவர் வளர்ப்பதற்கு காரணம் இந்த நாட்டு மாடுகள் அழியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக எனக் கூறுகிறார்.

மேலும் இந்த மாடுகளை மேய்ச்சல் முறையில் இவர் வளர்ப்பதால் அவைகளுக்கு அதிக அளவில் எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும், கால்நடைகளை மேய்ச்சல் முறையில் வளர்த்தால் கால்நடைகள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

Pulikkulam country cattle specialty

புலிக்குளம் நாட்டு மாடுகள் அதிகமாக ஜல்லிக்கட்டுக்கு பயன்பட்டு வருவதாகவும், நம் முன்னோர்கள் அதிகமாக மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி வந்ததாகவும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மாடுகளின் சாணத்தை வைத்து உரமாக பயன்படுத்தி வருவதாகவும், மற்றும் கேரளாவிலிருந்து அதிகமாக இவரிடம் மாட்டு சாணத்தை வாங்குகிறார்கள் எனவும் கூறுகிறார்.

மாட்டு சாணத்தை விற்பனை செய்வதன் மூலமும் மற்றும் மாடுகளை ஜல்லிக்கட்டிற்கு விற்பனை செய்வதன் மூலமும் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மாட்டு சாணத்தை கேரளாவிலிருந்து வாங்க வரும் வாடிக்கையாளர்கள் சாணத்தை வாங்குவதற்கு முன்பு சாணத்தைப் ஒன்றாக எடுத்து பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதாக கூறுகிறார்.

இவ்வாறு சேமித்து வைத்த மாட்டு சாணத்தை கேரளாவில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாகவும், மாட்டு சாணத்தை நிலத்திற்கு உரமாக பயன்படுத்துவதனால் செடிகள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் மாட்டு சாணத்தை மூட்டைகளில் போட்டு விற்பனை செய்து வருவதாகவும், கேரளாவில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மாட்டு சாணத்தை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மாடுகளின் விற்பனை முறை

புலிக்குளம் நாட்டு மாடுகளை விருப்பப்பட்டு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இவர் மாடுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

அதைத் தவிர இவரே மாடுகளை எடுத்துக் கொண்டு சந்தையில் சென்று விற்பனை செய்வதில்லை எனவும், ஏனெனில் இந்த புதுக்குளம் மாடுகளை இவர் அதிக அளவில் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறுகிறார்.

அதிகமாக இவரிடம் மாடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மாடுகளை ஜல்லிக்கட்டுக்கு வாங்கி செல்வதாகவும், இவ்வாறு கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் மாடுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் பெண் புலிக்குளம் நாட்டு மாடுகளை யாருக்கும் விற்பனை செய்வது இல்லை எனவும் ஏனெனில் பெண் புலிக்குளம் நாட்டு மாடுகளை இனப்பெருக்கத்திற்காக வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த 450 புலிக்குளம் நாட்டு மாடுகளை மேய்ப்பதற்கு வேலையால் ஒருவரை வைத்திருப்பதாகவும் அவருடன் சேர்ந்து இவரும் இந்த நாட்டு மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

அந்த வேலையால் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போது இவரும் மாடுகளை மேய்ப்பதற்கு அவருடன் சென்று மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த மாடுகள் மற்ற நாட்டு மாடுகளை விட மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் எனவும், ஜல்லிக்கட்டுக்கு இந்த மாடுகள் போவதினால் அங்கு சென்றால் மிகுந்த சுறுசுறுப்புடன் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் எனவும் கூறுகிறார்.

Immunization method and maintenance

மாடுகளை மிகவும் பராமரிப்புடன் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் இல்லை எனில் மாடுகளுக்கு நோய்கள் ஏற்படும் என கூறுகிறார்.

மாடுகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாடுகள் இருக்கும் கொட்டகையை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.

மாடுகளுக்கு அம்மை என்னும் நோய் ஏற்படும் எனவும் இதனை சரி செய்வதற்கு இவர் மருந்துகளை மாடுகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் மற்றும் நோய்கள் வருவதற்கு முன்பு மாடுகளுக்கு தடுப்பூசி அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த புலிக்குளம் நாட்டு மாடுகளின் ஆயுட்காலம் ஒன்பது வருடம் எனவும் இந்த ஒன்பது வருடத்தில் அவை ஏழு முறை கன்றுகளை போட்டு விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் பிறந்த கன்று ஒரு வருடம் ஆன பிறகு குட்டி போடும் எனவும் ஒரு வருடத்திற்கு பிறகே மாடுகளை இனப்பெருக்கம் செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் அழிவின் விளிம்பிலிருக்கும் புலிக்குளம் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க:சௌ சௌ சாகுபடியில் சிறந்த லாபம்.

Leave a Reply