வாழை சாகுபடியில் நிறைந்த வருமானம்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு சிறிய மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வாழை சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரையும், இவருடைய வாழை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Beginning of Banana cultivation

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு சிறிய மலை கிராமத்தில் வசித்து விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வாழை சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இந்த வாழை சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து விற்பனை செய்து வருவதாகவும், சிறந்த முறையில் இவர் விவசாயம் செய்வதாலும் மற்றும் இவருடைய வாழைப்பழம் சுவையில் சிறந்ததாக இருப்பதாலும் அதிக அளவில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.

இவரது ஊரில் இந்த வாழை விவசாயத்தை ஆண்டாண்டு காலமாக செய்து வருவதாகவும், இதன் காரணமாகவே இவருடைய குடும்பமும் இந்த வாழை சாகுபடியை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த வாழை சாகுபடியை கடந்த பத்திலிருந்து பதினைந்து வருடங்களாக செய்து வருவதாகவும் இந்த வாழையின் பெயர் மலை வாழை என கூறுகிறார்.

வாழையின் சிறப்புகள்

மலை வாழை என்னும் வாழை சாகுபடியை சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

பொதுவாக பஞ்சாமிருதம் செய்ய தேவைப்படுவது வாழைப்பழம் எனவும் அவ்வாறு வாழைப்பழத்தை கொண்டு செய்யப்படும் பஞ்சாமிருதம் நல்ல சுவையுடன் இருக்க வேண்டுமென்றால் வாழைப்பழம் சுவையுடன் இருக்க வேண்டும் என கூறுகிறார்.

அவ்வாறு சுவையான வாழைப்பழம் இவருடைய தோட்டத்தில் விளைவாகவும் இவருடைய தோட்டத்தில் இருந்து பழனியில் பஞ்சாமிருதம் செய்யும் கடைகளுக்கு வாழைப்பழம் செல்வதாகவும் கூறுகிறார்.

எங்கு பஞ்சாமிருதம் உற்பத்தி செய்தாலும் அது பழனி பஞ்சாமிர்தத்தில் சுவையைப் போல் இருக்காது எனவும், அப்படிப்பட்ட அந்த பழனி பஞ்சாமிர்தம் செய்யும் இடத்திற்கே இவரிடம் இருந்து தான் வாழைப்பழம் செல்வதாக கூறுகிறார்.

இவ்வாறு சிறந்த வாழைப்பழத்தை இவர் உற்பத்தி செய்வதால் இவருக்கு இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் மலை வாழைப்பழத்தில் பஞ்சாமிர்தம் செய்தால் அது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் நல்ல முறையில் இருக்கும் எனவும் ஆனால் மற்ற வாழை பழத்தில் பஞ்சாமிர்தம் செய்தால் அது விரைவில் கெட்டுப் போய் விடும் எனவும் கூறுகிறார்.

Banana cultivation method

மலை வாழை எனப்படும் இந்த வாழை மரமானது மலையில் மட்டுமே விளைச்சல் ஆகும் எனவும் சமவெளிப் பகுதியில் இது விளைச்சல் ஆகாது எனவும் கூறுகிறார்.

சமவெளிப் பகுதியில் 2 கன்றுகளை வைத்து வளர்த்து பார்த்ததாகவும் ஆனால் சமவெளிப் பகுதியில் வாழை கன்றுகளை வைத்து வளர்த்ததில் வாழை மரத்தின் காய்கள் காய்க்கவில்லை எனக் கூறுகிறார்.

மலையில் உள்ள தட்பவெப்ப நிலைக்கும் மட்டுமே இந்த மலைவாழை வளரும் எனவும் சமவெளிப் பகுதியில் இது வளர்வது சற்று கடினம் எனவும் அப்படி வளர்ந்தாலும் அதில் பழங்கள் வராது என கூறுகிறார்.

பெரிய வாழை மரத்தில் வரும் சிறு செடிகளை எடுத்து வாழை கன்றுகளை நட்டு வளர்த்து வருவதாகவும், ஒவ்வொரு வாழை மரத்திற்கு இடையில் இரண்டிலிருந்து மூன்று அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

ஒன்றரை அடி ஆழத்திற்கு குழிதோண்டி அதில் வாழை கன்றுகளை நட்டு இயற்கை உரங்கள் போட்டு வளர்த்து வருவதாகவும், எந்த செயற்கை உரங்களையும் இவர் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.

மாட்டு சாணம் மற்றும் ஆட்டு சாணம், கோழி கழிவுகள் ஆகியவற்றை உரமாக இவர் அளித்து வருவதாகவும் இவ்வாறு இயற்கை உரங்களை இவர் மரங்களுக்கு அளித்து வருவதால் மரங்கள் நல்ல முறையில் வளர்ந்து விளைச்சலை தருவதாக கூறுகிறார்.

இயற்கை உரங்களை அளிப்பதற்கு காரணம் இயற்கை உரங்களை அளித்தால் மட்டுமே பழங்கள் நல்ல சத்து நிறைந்த பழங்கள் கிடைக்கும் எனவும், செயற்கை உரங்களை அளித்தால் அவ்வாறு சத்து நிறைந்த பழங்கள் கிடைக்காது எனவும் கூறுகிறார்.

மக்களுக்கு நல்ல தரமான சத்து நிறைந்த வாழைப்பழங்களை அளிக்க வேண்டும் என்பதற்காக இவர் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வாழை சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் நோய் தடுப்பு முறை

வாழைக் கன்றை நட்ட ஒரு வருடத்திற்கு பின்பு விளைச்சல் கிடைக்கும் எனவும் இவ்வாறு விளைச்சல் கிடைக்கும் வாழைப் பழங்களை எடுத்து இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் மலைப் பகுதியில் இவர்கள் விவசாயம் செய்வதால் நீரினை அளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும்,இதனால் மழை பெய்யும் போது மட்டும் வாழை மரங்களுக்கு நீர் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றபடி இவர்கள் வெயில் அதிகமான நாட்களில் மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை வாழை தோப்பிற்கு நீரினை அளித்து வருவதாகவும்,மழைநீரின் மூலமே இவைகள் சிறந்த முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலைத் அளித்து வருவதாகக் கூறுகிறார்.

ஒரு வாழைத்தார் 15 கிலோ வரை வரும் எனவும் ஒரு தாரில் ஏழிலிருந்து எட்டு சீப்புகள் இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் வாழை மரங்களுக்கு நோய்கள் ஏற்படும் எனவும் இவ்வாறு நோய்கள் ஏற்படும் மரத்தினை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தி விடுவதாக கூறுகிறார்.

ஏனெனில் நோய் வந்த மரத்தை அப்படியே வைத்திருந்தால் அது மற்ற மரத்திற்கு பரவி அனைத்து மரங்களும் அழிவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் இதன் காரணமாக ஒரு மரத்திற்கு நோய் வந்தவுடன் அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி வைத்து விடுவதாக கூறுகிறார்.

மேலும் இந்த வாழை மரங்கள் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலை அளித்து வருவதாகவும்,இதனால் இவர் மிகுந்த பயன் அடைந்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த மழை வாழைப்பழங்கள் பழுத்து விட்டால் அதனை 20 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் வைத்து பயன்படுத்த முடியும் எனவும்,மற்ற வாழைப்பழங்கள் இவ்வாறு 20 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்காது எனவும் கூறுகிறார்.

Sales method and profit

வாழைப்பழத்தை சிறந்த முறையில் உற்பத்தி செய்து அதனை பழனியில் உள்ள பஞ்சாமிர்த கடைகளுக்கும் மற்றும் பிற வாழைப்பழ கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஆனால் அதிகமாக இவர் பழனியில் உள்ள பஞ்சாமிர்தம் கடைகளுக்கு மட்டுமே வாழைப்பழத்தை விற்பனை செய்து வருவதாகவும்,அங்கு உள்ள வாடிக்கையாளர்களும் இவரிடம் மட்டுமே வாழைப்பழத்தை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

ஒரு கிலோ வாழைப்பழத்தை 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும்,இவருடைய வாழைப்பழங்கள் நல்ல தரமானதாகவும் மற்றும் சுவையானதாகவும் இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து வாழைப்பழத்தை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதனால் இவர் சிறந்த லாபத்தை இதன் மூலம் பெற்று வருவதாகவும், மேலும் மற்ற வாழைப்பழங்கள் அறுவடை செய்த ஐந்து நாளைக்குப் பிறகு புழு வைத்து விடும் எனவும், ஆனால் இந்த வாழைப்பழத்தில் அவ்வாறு எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு சிறிய மலை கிராமத்தில் இருந்து கொண்டு சிறப்பான முறையில் மலைவாழை சாகுபடியை செய்து அதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:திலேபியா மீன் வளர்ப்பில் சிறந்த லாபம்.

Leave a Reply