திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் குறிஞ்சி மலர் சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய குறிஞ்சி மலர் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
விவசாயின் வாழ்க்கை முறை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் 12 வருடத்திற்கு பிறகு பூக்கும் குறிஞ்சி மலர் சாகுபடியை செய்து வருவதாகக் கூறுகிறார்.
இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு விவசாயத்தை செய்து வந்ததாக கூறுகிறார்.
மேலும் இவ்வாறு இவர் இவருடைய தோட்டத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வந்து கொண்டிருந்த நிலையில் குறிஞ்சி மலர் வளர்ப்பின் மீது ஆசை ஏற்பட்டு குறிஞ்சி மலர் சாகுபடியை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் குறிஞ்சி மலர் என்றால் 12 வருடத்திற்குப் பிறகு பூக்கும் என அனைவரும் நம்பிக் கொண்டு இருப்பதாகவும் ஆனால் நாம் அதை சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்தால் அனைத்து வருடங்களும் குறுஞ்சி மலரை பூக்க வைக்க முடியும் எனக் கூறுகிறார்.
இந்த முறையைப் பின்பற்றியே இவர் குறிஞ்சி மலர் சாகுபடியை சிறப்பான முறையில் தற்போது செய்து வருவதாக கூறுகிறார்.
Specialties of kurinji flower
குறிஞ்சி மலர் என்றாலே அது ஒரு தனித்துவமான மலர் என்றும் அதில் அதிக அளவு மருத்துவ குணம் மற்றும் குறிஞ்சி தேனில் அதிக மகத்துவம் இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்றும் உலகிலேயே குறிஞ்சி மலரில் மட்டுமே அதிக அளவு தேன் கிடைப்பதாகவும், இது குறிஞ்சி மலருக்கே உள்ள ஒரு தனிச் சிறப்பு எனவும் கூறுகிறார்.
ஒரு குறுஞ்சி செடியில் 1,500 பூக்களில் இருந்து 1700 பூக்கள் வரை பூக்கும் எனவும், இந்த குறிஞ்சி மலர் நம்முடைய மண்ணிற்கே உள்ள ஒரு தனித்துவமான செடி எனவும் கூறுகிறார்.
இவ்வாறு குறிஞ்சி செடியில் 1700 பூக்கள் பூக்கும் போது அந்த பூக்களில் இருந்து நமக்கு 7000 மில்லி தேன் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் கைகளின் மூட்டுகளில் உள்ள வலியை குணப்படுத்துவதற்கு ஆங்கில மருத்துவத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்னும் சிகிச்சையை செய்வார்கள் எனவும், ஆனால் அந்த சிகிச்சையை செய்யாமலேயே இயற்கையான முறையில் குறிஞ்சி மலரின் சாறை எடுத்து கை மூட்டின் மீது தேய்த்தால் அந்த நோய் குணமாகி விடும் எனக் கூறுகிறார்.
மேலும் 12 வருடம் வரை இந்த குறிஞ்சி மலரை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பதப்படுத்தி வைத்து பயன்படுத்தி வந்தால் தசை பிடிப்பு, எலும்பு முறிவு போன்ற எலும்பு நோய்களை குணப்படுத்தி விடும் எனவும் கூறுகிறார்.
குறிஞ்சி தேனில் உள்ள மருத்துவ குணங்கள்
குறிஞ்சி மலரில் மட்டும் மருத்துவ குணம் இல்லாமல் குறிஞ்சி தேனிலும் மருத்துவ குணம் இருப்பதாகவும், இது நமக்கு மிகவும் பயனுள்ள முறையில் பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.
குறிஞ்சித் தேனை நாம் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் ஆஸ்துமா நோயை எந்த ஆங்கில மருந்தும் இல்லாமல் சுலபமாக குணப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இப்பொழுது அதிகமாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இருப்பதாகவும் அவர்கள் எல்லாம் உடற்பயிற்சி மற்றும் பிற ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்கின்றார்கள் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கடினமான உடற்பயிற்சி மற்றும் ஆங்கில மருந்தை எடுத்துக் கொள்ளாமல் இயற்கையாக விளைந்த குறிஞ்சி மலரின் தேனை உண்டு வந்தால் உடல் பருமன் விரைவில் குறைந்து விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் குறிஞ்சித் தேன் கொலஸ்ட்ரால் நோயையும் குணப்படுத்தும் எனவும், குறிஞ்சித் தேன் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு கண்ணாடி பாத்திரத்தில் தேனை போட்டு சிறிதளவு காற்றும் போகும்படி வைத்துவிட வேண்டும் எனவும், இவ்வாறு வைத்திருந்தால் குறிஞ்சித் தேன் கெட்டுப் போகாமல் இருக்கும் எனவும் கூறுகிறார்.
Kurinji flower cultivation method
குறிஞ்சி மலரில் பல வகைகள் இருப்பதாகவும் அதில் இவர் கருங்குறிஞ்சி என்னும் குறிஞ்சி மலரை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த குறிஞ்சி 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த குறிஞ்சியை விட்டு பிற வகைகளை வைத்து இவர் வருட வருடம் பூ பூக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து கொண்டு வருவதாகவும், அதிக அளவில் இல்லை என்றாலும் குறைந்த அளவில் பிற வகை குறிஞ்சிப் பூக்கள் மலர்களை தருவதாக கூறுகிறார்.
கருங் குறிஞ்சியின் இலை கரும்பச்சை நிறமாக இருக்கும் எனவும், தண்டுப்பகுதி கருப்பு நிறமாக இருக்கும் எனவும் மற்றும் வேர் பகுதியும் கருப்பு நிறமாக தான் இருக்கும் எனவும், பூவின் நிறம் கத்தரிப்புளு நிறத்தில் இருக்கும் எனவும் இவ்வாறு இருக்கும் குறிஞ்சி செடியே கருங்குறிஞ்சி என கூறுகிறார்.
மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாக குறிஞ்சி மலர் சாகுபடியை செய்து வருவதால் இவருடைய தோட்டத்தில் குறிஞ்சி மலர் செடி அப்படியே இருக்கும் எனவும், ஒரு செடி இறக்கும் முன்பு அதிலிருந்து பல வகை செடிகள் முளைத்து விடும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு முளைக்கும் செடிகளை வைத்து இவர் குறிஞ்சி மலர் சாகுபடியை செய்து அதன் மூலம் போதுமான அளவு லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.
12 வருடங்களுக்கு பிறகு பூக்கும் குறிஞ்சி மலர் செடியானது ஒவ்வொரு வருடமும் நல்ல வளர்ச்சியை பெற்று அதிக கிளைகளை பெற்றிருக்கும் எனவும், இவ்வாறு அதிகளவு கிளைகளை இவை பெற்றுள்ளதால் அதன் மூலம் நிறைந்த பூக்கள் பூக்கும் எனவும் கூறுகிறார்.
அனைத்து வருடமும் குறிஞ்சி மலரை இவர் பூக்கச் செய்யும் முறையானது இவர் வளர்க்கும் ஒவ்வொரு குறிஞ்சி செடியும் ஒவ்வொரு வருடம் பூக்கும் தன்மையைப் பெற்றிருக்கும் எனவும் இந்த முறையிலேயே இவர் குறிஞ்சி மலரை அனைத்து வருடங்களிலும் பூக்க வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
குறிஞ்சி செடியில் பூ பூக்கும் சமயத்தில் தண்டுகளில் ஒரு பிசின் போன்ற திரவம் உருவாகும் எனவும், இவ்வாறு உருவாகும் போது கால்நடைகள் குறிஞ்சி செடியை உண்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
குறிஞ்சி மலர் சாகுபடியை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் மற்றும் குறிஞ்சி மலர் மற்றும் தேன் வேண்டும் என்று இவருடைய தோட்டத்திற்கு கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவருடைய வீட்டிற்கே வந்து வாங்கி செல்வதால் இவர் இதனை வெளியில் எங்கும் விற்பனை செய்வதில்லை எனவும் கூறுகிறார்.
மேலும் குறிஞ்சி மலர் மற்றும் தேனின் மூலம் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து குறிஞ்சி பூ மற்றும் தேனை வாங்கி செல்வதாகவும், இதனால் இவருக்கு இதன் மூலம் சிறந்த வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
மேலும் குறிஞ்சி விதைகளை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் விதைகளை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் இவர் இந்த குறிஞ்சி மலர் சாகுபடியை இயற்கையான முறையில் சிறப்பாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:மா இஞ்சி சாகுபடியில் சிறந்த லாபம்.