சிறப்பான வடமாநில நாட்டு மாடுகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வட மாநில நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வடமாநில நாட்டு மாடுகள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

இளைஞரின் வாழ்க்கை முறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வடமாநில நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய மாமா இவர் சிறு வயதில் இருக்கும் போது இருந்தே மாடுகளை வளர்த்து விற்பனை செய்து வருவதாகவும் இவருடைய குடும்பம் கால்நடை விற்பனையை ஐம்பத்தி இரண்டு வருடங்களாக செய்து வருவதாகக் கூறுகிறார்.

இவ்வாறு இவருடைய மாமா மாடுகள் வளர்ப்பை செய்து வந்ததன் காரணமாக இருக்கும் மாடுகள் வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு மாடு வளர்ப்பை தொடங்கியதாகவும், இப்பொழுது இவருடைய மாட்டுப் பண்ணையை மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

Specialties of northern state country cows

தமிழ்நாட்டில் உள்ள நாட்டு மாடுகளை இவர் வாங்கி வளர்த்து விற்பனை செய்யாமல் வடமாநில நாட்டு மாடுகளை வாங்கி அதனை சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள நாட்டு மாடுகள் குறைந்த அளவு பால் கொடுக்கும் எனவும் ஆனால் வடமாநில நாட்டு மாடுகள் அதிக அளவில் பால் கொடுக்கும் எனவும், இதன் மூலம் நல்ல லாபம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் அதிக அளவில் வடமாநில நாட்டு மாடுகளை பண்ணையாளர்கள் வளர்த்து வருவதாகவும் ஏனெனில் இந்த மாடுகளில்  அதிக அளவு பால் உற்பத்தி திறன் இருக்கும் என கூறுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள நாட்டு மாடுகள் காலையில் 4 லிட்டர் பாலையும் மற்றும் மாலையில் நான்கு லிட்டர் பாலையும் கறக்கும் எனவும் ஆனால் வடமாநில நாட்டு மாடுகள் காலையில் 7 லிட்டர் பாலையும் மற்றும் மாலையில் 7 பாலையும் அளிக்கும் என கூறுகிறார்.

வடமாநில நாட்டு மாடுகளின் தன்மைகள்

வடமாநில நாட்டு மாடுகள் தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு விரைவில் வாழ பழகி கொள்ளும் எனவும் ஏனெனில் தமிழ்நாட்டில் சரியான அளவில் தட்பவெப்ப நிலை உள்ளதாக கூறுகிறார்.

வெளிமாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலை இருக்காது எனவும், வெளிமாநிலங்களில் அதிக அளவில் வெயில் மற்றும் பனி இருக்கும் எனவும் ஆனால் தமிழ்நாட்டில் வெயிலும் பனியும் சரியான அளவில் இருக்கும் என கூறுகிறார்.

எனவே அதிகளவு வெயில் மற்றும் பனி இருந்த இடத்தில் இருந்து வந்த மாடுகள் சரியான அளவில் வெயிலும் பனியும் இருக்கும் இடத்திற்கு வரும் போது சுலபமாக அந்த இடத்தில் வாழ பழகிக் கொள்ளும் என கூறுகிறார்.

இந்தியாவிலுள்ள எந்த பகுதியில் இருந்து மாடுகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து வளர்த்தாலும் அந்த மாடுகள் விரைவில் அந்த இடத்தில் வாழ பழகிக் கொள்ளும் எனவும் ஆனால் பிற மாநிலங்களில் வளர்க்கப்படும் மாடுகள் அந்த இடத்தில் விரைவில் வாழ பழகிக் கொள்ளாது எனவும் கூறுகிறார்.

Breeding method of cows

வடமாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்து அதனை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், மாடுகளை வளர்ப்பதற்கு இவர் பெரிய அளவில் ஒரு கொட்டகை அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் வடமாநிலத்தில் இருந்து தார்பார்க்கர்,சாகிவால், காங்கிரேஜ், ராத்தி மற்றும் சிவப்பு சிந்து மாடுகள் ஆகிய மாடு வகைகளை வாங்கி வந்து வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும் சில சமயங்களில் உள்ளேயே மாடுகளை கட்டி வைத்து தீவனத்தை அளித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் வட மாநிலத்திலிருந்து மாடுகளை வாங்கும் போது நம்முடைய வீட்டில் சுலபமாக பழகும் முறையில் இருக்கும் மாடுகளையே இவர் வாங்குவதாகவும், கிடை மாடுகளை இவர் வாங்குவதில்லை எனவும் கூறுகிறார்.

ஒரு மாட்டிற்கு இரண்டு பற்கள் இருந்தால் அதற்கு மூன்றிலிருந்து மூன்றரை வயது இருக்கும் எனவும் இதுவே அந்த மாட்டிற்கு மூன்று பற்கள் இருந்தால் அதற்கு நான்கு வயது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் மாடுகளுக்கு இயற்கை தீவனங்களையும், தட்டு, மக்காச் சோளத் தட்டு மற்றும் கம்பு, புண்ணாக்கு வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும் இந்த மாடுகள் அதிக அளவில் பசுந் தீவனங்களை விரும்பி உண்ணும் எனவும் கூறுகிறார்.

மேலும் மாடுகளுக்கு நீரினை அதிக அளவில் அளிக்க வேண்டும் எனவும் மாடுகள் அதிக அளவில் நீர் அருந்தும் எனவும், தீவனத்தையும் நீரினையும் சரியான முறையில் மாடுகளுக்கு அளித்து பராமரித்து வந்தால் மாடுகள் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.

மாடுகளை வாங்கி வரும் முறை

வடமாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வரும் போது அதனை மிகுந்த பாதுகாப்புடன் வாங்கி வருவதாகவும், அதிக மாடுகளை ஒரு வண்டியில் ஏற்றி வந்தால் சில மாடுகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.

மாடுகளை வாங்கும்போது மாடுகளுக்கு இருக்கும் ராஜ சுழி சரியாக இருக்க வேண்டும் எனவும், இவர் மாடுகளை வாங்கும் போது மாட்டிற்கு ராஜ சுழி இருக்கிறதா என்பதை பார்த்து வாங்கி வருவதாக கூறுகிறார்.

ராஜ சுழி என்பது மாட்டின் நடு நெற்றியில் ஒரு சுழி இருக்குமெனவும் மற்றும் முதுகில் உள்ள திமிலுக்கு பின்னே தொப்புளுக்கு நேராக ஒரு சுழி இருக்கும் எனவும் இந்த சுழி இருக்கும் மாடுகளையே தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என கூறுகிறார்.

மேலும் வடமாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வரும் போது வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாடுகள் செல்வதற்கு ஒரு கால்நடை மருத்துவரிடம் அனுமதி சீட்டினை வாங்க வேண்டும் எனவும் மற்றும் அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவரின் சம்மந்தமும் உள்ள ஒரு கடிதம் வேண்டும் எனவும் கூறுகிறார்.

இந்த இரண்டும் இருந்தால் தான் வடமாநிலத்தில் இருந்து மாடுகளை தமிழகத்திற்கு கொண்டு வர முடியும் எனவும் இல்லையெனில் இந்த மாடுகளை தமிழகத்திற்கு வாங்கி வர முடியாது எனக் கூறுகிறார்.

இதனையெல்லாம் சரியான முறையில் இவர் வாங்கி மாடுகளை அழைத்து வந்து வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

Method of selling Cows and profit

மாடுகளை இவர் சிறப்பான முறையில் வளர்த்து அதனை நேரடியாக வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் மாடுகளின் விற்பனையை சமூக வலைதளங்களின் மூலமும் செய்து வருவதாக கூறுகிறார்.

மாடுகளை இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாலும் இவருடைய மாடுகள் அதிகளவில் பாலைத் தருவதாலும் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து மாடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் மற்றும் வடமாநில நாட்டு மாடுகளை இவர் மிகுந்த பராமரிப்பு முறையுடன் பராமரித்து வளர்த்து வருவதாக  கூறுகிறார்.

மேலும் படிக்க:காக்கட்டான் பூ சாகுபடியில் சிறந்த லாபம்.

Leave a Reply