தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் செம்மறி ஆடுகள் வளர்ப்பினை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய செம்மறி ஆடு வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
செம்மறி ஆடுகள் வளர்ப்பின் தொடக்கம்
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் செம்மறி ஆடுகள் வளர்ப்பினை செய்து வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய கணவர் கூலி வேலை செய்து வருவதாகவும் அந்த வேலையின் மூலம் வருமானம் அதிகளவில் கிடைக்கவில்லை என்பதால் இவர் ஆட்டுப் பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
வெள்ளாடு வளர்ப்பை விட செம்மறி ஆடுகள் விரைவில் வளர்ந்து அதிக அளவில் வருமானத்தை அளிக்கும் என்பதாலும், ஆடு வளர்ப்பில் இவருக்கு அதிக அளவில் ஆர்வம் இருந்த காரணத்தினாலும் இவர் செம்மறி ஆடு வளர்ப்பினை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் செம்மறி ஆடு வளர்ப்பை மிக சிறப்பான முறையில் வளர்த்து அதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
Sheep rearing system
செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறையை இவர் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் ஆடுகளுக்குத் தேவையான தீவன வகைகளை இவர் சரியான முறையில் அளித்து பராமரித்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளை இவர் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும் மற்றும் ஓரிரு சமயங்களில் கொட்டகையின் உள்ளேயே ஆடுகளை வைத்து தீவனத்தை அளித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் செம்மறி ஆடுகளுடன் சேர்த்து கோழிகளையும் வளர்த்து வருவதாகவும், நாட்டுக்கோழி மற்றும் பிற கோழி வகைகளை இவர் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகள் மற்றும் கோழிகளை நல்ல முறையில் வளர்ப்பதற்கு இவர் பெரிய அளவில் ஒரு கொட்டகை அமைத்து உள்ளதாகவும், அந்தக் கொட்டகையில் ஆடுகளையும் மற்றும் கோழிகளையும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஆரம்பத்தில் இவரிடம் இரண்டிலிருந்து மூன்று ஆடுகள் வரை மட்டுமே இருந்ததாகவும் இப்போது 60 லிருந்து 100 செம்மறி ஆடுகள் வரை இருப்பதாகவும் கூறுகிறார்.
தீவனம் அளிக்கும் முறை மற்றும் நோய் தடுப்பு முறை
செம்மறி ஆடுகளுக்கு இவர் அதிக அளவில் பசுந்தவனங்களை அளித்து வருவதாகவும், பசுந்தீவனங்களை செம்மறி ஆடுகள் அதிகளவில் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.
மற்றும் ஆடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும், மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்து செல்ல முடியாத சமயங்களில் இவர் பசுந்தீவனங்களை ஆடுகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை இவருடைய தோட்டத்திலேயே விளைவித்து அதனை ஆடுகளுக்கு அளித்து வருவதாகவும், மற்றும் பசுந்தீவனங்கள் உடன் சேர்த்து இவர் உலர் தீவனத்தையும் ஆடுகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஆடுகளை வெளியில் இருந்து வாங்கி வரும் போது அதனை நன்றாக சுத்தம் செய்து பூச்சி மருந்தினை ஆடுகளின் மீது தெளிக்க வேண்டும் எனவும், இதனை செய்த பிறகு PPR என்ற தடுப்பூசியை ஆடுகளுக்கு அளித்தால் நோய்கள் அதிக அளவில் தாக்காது என கூறுகிறார்.
இவ்வாறு ஆடுகளை வாங்கி வந்த பிறகு அதனை சுத்தம் செய்யாமல் வளர்த்தால் ஆடுகளுக்கு நோய்கள் ஏற்பட்டு ஆடுகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் ஆடுகள் அதிக அளவு தீவனத்தை எடுத்துக் கொண்டு வயிறு உப்பிசம் ஏற்பட்டு விட்டால் அந்த ஆட்டை தனியாக ஒரு கொட்டகையில் வைத்து அதற்கு உப்பு மற்றும் சோடாப்பு ஆகியவற்றை நீரில் கலந்து அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு ஆடுகளுக்கு வயிறு உப்பிசம் ஏற்பட்டால் நீரினை ஆடுகளுக்கு அளிக்க கூடாது எனவும், நீரினை ஆடுகள் குடித்துவிட்டால் ஆடுகள் இறந்து விடும் எனக் கூறுகிறார்.
எனவே ஆடுகள் அதிக அளவில் தீவனத்தை எடுத்துக் கொண்டு வயிறு உப்பிசம் ஏற்பட்ட நிலையில் இருந்தால் அதற்கு நீரினை அளிக்காமல் உப்பு மற்றும் சோடாப்பு ஆகியவற்றை நீரில் கலந்து அளித்தால் வயிறு உப்பிசம் 3 நாட்களில் சரியாகி விடும் என கூறினார்.
மேலும் ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு தடுப்பூசி அளித்து வருவதாகவும் மற்றும் மருந்துகளையும் ஆடுகளுக்கு அளித்து சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
Maintenance method
செம்மறி ஆடுகள் சிறப்பான முறையில் வளர்வதற்கு சிறந்த கொட்டகை அமைத்து ஆடுகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஆடுகளின் உள்ள கொட்டகையை வாரத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்து ஆடுகளை வளர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் ஆடுகளுக்கு நோய்கள் அதிக அளவில் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.
மேலும் செம்மறி ஆடுகள் என்றாலே அதிகளவில் அழுக்குடன் இருக்கும் எனவும் இவ்வாறு அழுக்குடன் செம்மறி ஆடுகள் இருப்பதால் அவற்றை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு ஆடுகளும் கொட்டகையும் சுத்தமாக இருந்தால் தான் ஆடுகளுக்கு நல்ல முறையில் எந்த நோய்களும் தாக்காமல் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் கொட்டகையில் ஆடுகளில் சிறுநீர் தேங்காமல் இருக்க வேண்டும் எனவும், ஆடுகளின் சிறுநீர் தேங்கும் அளவிற்கு கொட்டகை இருந்தால் அதன் மூலம் ஆடுகளுக்கு பல வித நோய்கள் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.
எனவே ஆடுகள் உள்ள கொட்டகையை தூய்மையான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மற்றும் ஆடுகளையும் தூய்மையான முறையில் வைத்துக் கொண்டால் ஆடுகள் விரைவில் வளர்ந்து நல்ல வருமானத்தை அளிக்கும் என கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
செம்மறி ஆடுகளை இவர் சந்தைகளில் அதிக அளவில் விற்பனை செய்வதில்லை எனவும் ஆடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் இவருடைய பண்ணைக்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
திருமண நிகழ்ச்சிக்கும் மற்றும் இறைச்சி கடைகளுக்கும் அதிக அளவு ஆடுகள் விற்பனை ஆகும் எனவும் மற்றும் பக்ரீத் பண்டிகை காலங்களில் செம்மறி ஆடுகள் மற்ற பண்டிகை காலத்தை விட அதிக அளவில் விற்பனையாகும் என கூறுகிறார்.
மேலும் அனைத்து பண்டிகை காலங்களிலும் செம்மறி ஆடுகள் விற்பனை ஆகும் எனவும் ஆனால் பக்ரீத் பண்டிகை காலத்தில் அதிக அளவு செம்மறி ஆடுகள் விற்பனையாவதாகவும் கூறுகிறார்.
மற்றும் முன்பு ஆடுகளுக்கு கொம்பு இல்லை என்றால் அந்த ஆடுகளை யாரும் வாங்க மாட்டார்கள் எனவும் ஆனால் இப்பொழுது அனைத்து ஆடுகளையும் அனைவரும் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
செம்மறி ஆடுகள் வளர்ப்பில் இவர் அதிக வருமானத்தை பெற்று வருவதாகவும் ஒரு செம்மறி குட்டியிலிருந்து ஒரு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை இவர் பெற்று வருவதாக கூறுகிறார்.
ஒரு வருடம் ஆன செம்மறி குட்டிகளையே இவர் அதிக அளவில் வளர்த்து வருவதாகவும், மேலும் இவர் இந்த செம்மறி ஆடுகள் வளர்ப்பினை மிக சிறப்பான முறையில் வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:தக்காளி விவசாயத்தில் நிறைந்த வருமானம்.