கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபம் பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மக்காச்சோளம் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of maize cultivation
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும் இவர் விவசாயத்தை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
இவருடைய தாத்தா காலத்திலிருந்தே இவருடைய ஊரில் மக்காச்சோளம் சாகுபடியை அனைவரும் அதிக அளவில் செய்து வருவதாகவும், மக்காச்சோளம் சாகுபடிக்கு இவருடைய ஊர் பிரபலமானது எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவரும் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருவதாகவும், இப்பொழுது இவர் இவருடைய மக்காச்சோளம் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மக்காச்சோளம் சாகுபடி செய்யும் முறை
மக்காச்சோளம் சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், காலம் காலமாக மக்காச்சோளம் சாகுபடியை இவருடைய குடும்பம் செய்து வருவதால் மக்காச்சோளம் சாகுபடி பற்றி இவருக்கு நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.
மழை அதிகமாக இருக்கும் காலங்களில் இந்த மக்காச்சோளம் சாகுபடியை அனைவரும் செய்வார்கள் எனவும் மற்றும் வாய்க்கால் நீர் வரும் போது இந்த மக்காச்சோளம் சாகுபடியை பல இடங்களில் செய்வார்கள் எனக் கூறுகிறார்.
மக்காச் சோளத்தில் பல வகைகள் இருப்பதாகவும், நமக்கு தேவையான வகையில் நாம் தேர்ந்தெடுத்து மக்காச்சோளம் சாகுபடியை செய்யலாம் எனவும் கூறுகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு 8 கிலோ அளவில் மக்காச் சோளம் விதை தேவைப்படும் எனவும், விதைகளை நிலத்தில் நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது இயற்கை உரத்தினை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தினை தயார் செய்த பிறகு நிலத்தில் மக்காச்சோள விதைகளை நட வேண்டும் எனவும், ஒவ்வொரு மக்காச்சோள விதைகளுக்கு இடையிலும் ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், ஒவ்வொரு பார்களுக்கு இடையில் ஒன்றரை அடி இடைவெளி விட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு மக்காச்சோள விதைகளை நிலத்தில் நட்ட பிறகு விதைகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், மக்காச்சோள விதைகளை விதைத்த ஐந்தாவது நாளில் செடிகள் முளைத்து விடும் என கூறுகிறார்.
இந்த முறையில் விதைகளை நட்டு இவர் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மக்காச்சோளம் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் அதிக அளவு மக்கள் இந்த மக்காச்சோளத்தை விரும்பி வாங்குவதாகவும், மக்காச்சோளத்தில் சில நன்மைகள் இருப்பதாகவும் இவர் கூறுகிறார்.
மேலும் மக்காச்சோளத்தின் இலை மற்றும் தண்டுகள் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது எனவும், மக்காச்சோளத்தினை அரைத்து மாடுகளுக்கு தீவனமாக அளிப்பார்கள் எனவும் கூறுகிறார்.
Fertilizer and maintenance method
விதை நட்ட பிறகு செடிகளுக்கு உரத்தினை இவர் அளிப்பதாகவும், உரத்தினை அளிக்காமல் செடிகளை வளர்த்தால் செடிகள் விரைவாக வளராது எனவும் கூறுகிறார்.
செடிகளுக்கு இவர் இயற்கை உரத்தினை அதிக அளவில் அளிப்பதாகவும் செயற்கை உரத்தினை குறைந்த அளவில் அளித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகள் ஆகியவற்றை அளித்து வருவதாகவும், இந்த உரங்கள் அனைத்தும் இவருடைய கால்நடை பண்ணையில் இருந்தே கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் விதைகள் விதைத்த ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் ஒரு முறை செடிகளுக்கு உரத்தினை அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் பூச்சித்தக்குதல் செடிகளில் ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.
மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதல் ஏற்படும் எனவும் அதனை தடுப்பதற்கு இவர் செயற்கை மருந்துகளை அளித்து வருவதாகவும், மக்காச்சோளத்தில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அதிக விலைக்கு விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.
எனவே மக்காச்சோளத்தில் பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும், செடிகளுக்கு தேவையான நீரினை சரியான முறையில் அளித்து செடிகளை பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் மக்காச் சோள காட்டில் முளைக்கும் களைச் செடிகளை அகற்றி விட வேண்டும் எனவும், களைச் செடிகளை அகற்றாமல் வைத்திருந்தால் மக்காச்சோள செடிகளின் சத்தினை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.
களைச்செடிகள் வராமல் இருப்பதற்கு இவர் களைக் கொல்லி மருந்தினை பயன்படுத்தி வருவதாகவும், குறைந்த அளவில் களைச்செடிகள் இருந்தால் அவற்றினை இவரே அகற்றி விடுவதாக கூறுகிறார்.
எனவே தோட்டத்தில் களைச்செடிகள் இல்லாமல் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும், களைச் செடிகள் வந்தவுடன் அவற்றை நீக்கிவிட வேண்டும் எனவும் நீண்ட நாட்கள் களைச் செடிகளை தோட்டத்தில் வைத்திருக்கக் கூடாது எனவும் கூறுகிறார்.
மக்காச்சோளம் சாகுபடியில் முக்கியமாக பூச்சி தாக்குதல் ஏற்பட கூடாது எனவும் அவ்வாறு ஏற்பட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே மருந்துகளை அளித்து சரி செய்துவிட வேண்டும் என கூறுகிறார்.
அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை
மக்காச்சோளம் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவை இருக்காது எனவும், மக்காச்சோள விதைகளை நடும்போது ஒருமுறை நீரினை அளிக்க வேண்டும் எனவும் மற்றும் மக்காச்சோளம் முளைத்து சிறிதளவு பெரியதாக வளரும் வரை நீரினை அதிகமாக அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
அதன் பிறகு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் மக்காச்சோள தோட்டத்திற்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
மக்காச்சோள தோட்டத்திற்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தினால் நீர் சேதாரம் அதிக அளவில் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
சொட்டு நீர் பாசனத்தில் நீரினை செடிகளுக்கு அளிப்பதால் குறைந்த அளவில் மட்டுமே நீர் செலவாகும் எனவும் இதன் காரணமாகவே இவர் சொட்டு நீர் பாசனத்தினை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
விதைகளை விதைத்த 60 லிருந்து 70 நாட்களுக்குள் கதிர்கள் சீராக வளரும் எனவும், 100வது நாளில் கதிரை உரித்துப் பார்த்தால் வரிசையாக இருக்கும் எனவும், 110வது நாளில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும் கூறுகிறார்.
அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே கதிர்களுக்கு நீரினை அளிப்பதை நிறுத்திவிட வேண்டும் என கூறுகிறார்.
Sales method and profit
மக்காச் சோளத்தை அறுவடை செய்து இவருடைய ஊரிலுள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய தோட்டத்திற்கு வந்து அதிக அளவில் வாடிக்கையாளர்கள் மக்கா சோளத்தை வாங்கி செல்வார்கள் எனவும் கூறுகிறார்.
மக்காச் சோளம் மிகவும் சுவையாக இருக்கும் என்பதாலும், விலை சரியான அளவில் இருப்பதாலும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இந்த மக்காச் சோளத்தை வாங்குவதாகவும், இதன் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த மக்காச்சோளம் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:கிராம்பு சாகுபடியில் சிறந்த வருமானம்.