மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பீட்ரூட் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பீட்ரூட் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
பீட்ரூட் சாகுபடியின் தொடக்கம்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பீட்ரூட் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், சிறுவயதில் இருந்தே இவர் விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்ததால் இவருக்கு விவசாயத்தைப் பற்றி நன்கு தெரியும் என கூறுகிறார்.
அனைத்து வகை காய்கறி மற்றும் தானிய வகைகளை இவர் விவசாயம் செய்து வருவதாகவும், இவருடைய வீட்டுத் தேவைக்காக பீட்ரூட் சாகுபடி சிறிதளவு ஒருமுறை செய்ததாகவும், பீட்ரூட் அதிக விலைக்கு விற்பனையாவதன் காரணமாக இவர் பீட்ரூட் சாகுபடியை அதிக அளவில் செய்யலாம் என்ற எண்ணத்தில் இப்பொழுது பீட்ரூட் சாகுபடியை அதிகமாக செய்து வருவதாக கூறினார்.
இவருடைய தோட்டத்தை இவருடைய குடும்பத்தில் உள்ள நபர்களும் பராமரித்து கொள்வார்கள் எனவும், இதனால் இவருக்கு வேலை சுமை குறைவாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய பீட்ரூட் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Medicinal properties of beetroot
பீட்ரூட்டில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், இதனை நாம் உணவில் எடுத்துக் கொண்டால் நமக்கு பலவித சத்துக்கள் இந்த பீட்ரூட்டில் இருந்து கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
பீட்ரூட்டை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது நமது உடலில் இரத்தம் அதிக அளவில் உண்டாகும் எனவும் மற்றும் இது உடலுக்கு மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.
மேலும் பீட்ரூட் சாறு உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு நல்ல குளிர்ச்சியை அளிக்கும் எனவும், இதனால் எந்தவித நோய்களும் நமக்கு அதிக அளவில் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் பீட்ரூட் சாறு செரிமான கோளாறை குணப்படுத்தும் எனவும், மற்றும் பீட்ரூட் சாறினை நாம் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் பார்வைத்திறன் குறைபாடு குணமாகி நல்ல பார்வைத் திறனை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை பீட்ரூட் சாறு அதிகரிக்கும் எனவும், இதுபோல் பல வித மருத்துவ குணம் பீட்ரூட்டில் இருப்பதாகக் கூறுகிறார்.
பீட்ரூட் சாகுபடி செய்யும் முறை
பீட்ரூட் சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் அதிக அளவில் அளிக்காமல் இயற்கை உரங்களை மட்டும் அதிகமாக அளித்து சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
பீட்ரூட் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது உரத்தினை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு நிலத்தினை தயார் செய்து முடித்த பிறகு பீட்ரூட் சாகுபடி செய்ய தொடங்கலாம் எனவும் கூறுகிறார்.
பீட்ரூட் விதைகளை இவர் வெளியில் இருந்து வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாகவும், ஒரு ஏக்கர் நிலத்தில் பீட்ரூட் சாகுபடி செய்வதற்கு 7ல் இருந்து 8 சிறிய டப்பா பீட்ரூட் விதைகள் தேவைப்படும் என கூறுகிறார்.
விதைகளை வாங்கி வந்த பிறகு இவர் அதனை நிலத்தில் நட்ட தொடங்கி விடுவதாகவும், ஒவ்வொரு விதைகளுக்கு இடையிலும் அரை அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் கூறுகிறார்.
விதைகளை நிலத்தில் நடும் போது ஒவ்வொரு இலைகளாக மட்டுமே நட வேண்டும் எனவும், 2 மற்றும் 3 விதைகளை சேர்த்து நட்டால் செடி நன்றாக வளராது எனவும் கூறுகிறார்.
விதைகளை நிலத்தில் நட்ட பிறகு விதைகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், நீரினை அளிக்காமல் இருந்தால் விதைகளை எறும்புகள் உண்டு விடும் எனக் கூறுகிறார்.
எனவே விதைகளை நட்ட ஒரு நாளுக்குள் விதைகளுக்கு நீரை அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
இந்த முறையில் விதைகளை நட்டு சாகுபடி செய்தால் சிறப்பான முறையில் செடிகள் வளர்ந்து அதிகளவு விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
மேலும் பீட்ரூட்டில் பலவகை உணவு வகைகளை நாம் சமைக்க முடியும் எனவும், இது உடலுக்கு மிகவும் நன்மையை அளிக்கும் எனவும் இதனுடைய சுவை மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
Fertilizer and maintenance method
பீட்ரூட் சாகுபடி செய்வதற்கு இவர் அதிக அளவில் செயற்கை உரங்கள் எதையும் அளிப்பதில்லை எனவும் இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டு புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகள் ஆகியவற்றை உரமாக செடிகளுக்கு அளித்து வருவதாகவும், இதனை செடிகளுக்கு உரமாக அளித்தால் செடிகள் விரைவில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
மேலும் செடிகளில் புழு தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கு இவர் செயற்கை மருந்துகளை பயன்படுத்துவதாகவும், புழு தாக்குதல் செடிகளில் ஏற்பட்டு விட்டால் குறைவான விலைக்கு விற்பனையாகும் என கூறுகிறார்.
மேலும் பீட்ரூட் காட்டில் உள்ள களைச் செடிகளை அகற்றி விட வேண்டும் எனவும், களைச் செடிகளை அகற்றாமல் இருந்தால் பீட்ரூட் செடியில் உள்ள சத்தினை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் எனக கூறுகிறார்.
எனவே களைச்செடிகளை அகற்றுவதற்கு இவர் களைக் கொல்லி மருந்தினை பயன்படுத்தி வருவதாகவும், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் களைக் கொல்லி மருந்தினை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறுகிறார்.
ஏனெனில் வெயில் அதிகமாக இருக்கும் போது களைக்கொல்லி மருந்தை பயன்படுத்தினால் செடிகள் இறந்து விடும் என கூறுகிறார்.
அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை
பீட்ரூட் சாகுபடி செய்வதற்கு நீர் தேவை சற்று அதிகமாக தேவைப்படும் எனவும், நிலத்தில் எப்போதும் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
பீட்ரூட் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தில் அதிகளவு நீர் செலவாகாது என்பதால் இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.
பீட்ரூட் விதைகளை விதைத்த மூன்றறை மாதத்திற்குள் அறுவடைக்கு பீட்ரூட் தயாராகி விடும் எனவும், விதைகளை விதைத்த மூன்றறை மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும் கூறுகிறார்.
அறுவடை செய்வதற்கு வேலையாட்கள் வருவார்கள் எனவும் மற்றும் இவரும் இவருடைய குடும்பமும் பீட்ரூட்டை அறுவடை செய்வார்கள் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
பீட்ரூட்டை சாகுபடி செய்து இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய தோட்டத்திற்கு வந்து வாடிக்கையாளர்கள் பீட்ரூட்டை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
பீட்ரூட்டில் அதிகளவில் மருத்துவ குணம் இருப்பதாலும், இதனை உண்பதால் பல வித நோய்கள் குணமாவதாலும் அதிக அளவில் பீட்ரூட் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், மற்றும் இவருடைய பீட்ரூட் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான மக்காச்சோளம் சாகுபடி.