ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை மெழுகு தயாரிப்பை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மெழுகு தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
இயற்கை மெழுகு தயாரிப்பின் தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் இயற்கை மெழுகு தயாரிப்பை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இந்த இயற்கை மெழுகு தயாரிப்பை இவர் கடந்த பத்து வருடங்களாக செய்து வருவதாகவும், இவருடைய திருமணத்திற்கு பின்பு வீட்டில் எந்த வேலையும் இன்றி இருப்பதால் இயற்கை மெழுகு உற்பத்தியை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இவர் இயற்கை மெழுகு உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய சிறு வயதில் இவருடைய தந்தை வீட்டில் இருக்கும்போது இவருடைய தந்தை இயற்கை மெழுகு தயாரிப்பை செய்து வந்ததாகவும் அதை பார்த்து வளர்ந்த இவருக்கும் மெழுகு தயாரிப்பு முறையை பற்றி நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருக்கு இயற்கை மெழுகு தயாரிப்பதில் ஆர்வம் மிக அதிகமாக இருந்த காரணத்தினாலும் இவர் இந்த இயற்கை மெழுகு தயாரிப்பை தொடங்கி இப்பொழுது சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் தேன் வளர்ப்பினை செய்து தேனீக்களையும், தேனையும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Benefits of natural wax
இயற்கை மெழுகில் அதிக அளவு பயன்கள் மற்றும் மருத்துவ குணம் இருப்பதாகவும், பழங்காலத்தில் இந்த இயற்கை மெழுகையே மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்ததாகவும் கூறுகிறார்.
இயற்கை மெழுகின் மூலம் இயற்கையான மெழுகுவர்த்தி, அகல் விளக்கு மற்றும் சுவாமி சிலைகள் ஆகியவற்றை இவர் தயாரித்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
உலகிலேயே மிக விலை உயர்ந்த மெழுகு என்றால் அது இந்த தேன் மெழுகு எனவும், ஏனெனில் இன்றுள்ள காலத்தில் கெமிக்கல் மெழுகு வருவதற்கு முன்பே இயற்கை மெழுகு உருவானதே காரணம் எனவும் கூறுகிறார்.
இந்த இயற்கை மெழுகை பழங்கால மக்கள் அறுவை சிகிச்சைக்காகவும் மற்றும் மருத்துவத்திலும், எரிபொருட்களாகவும் பயன்படுத்தி வந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த இயற்கை மெழுகு உலகிலேயே மிக விலை உயர்ந்த மெழுகு எனக் கூறுகிறார்.
எலும்பு அறுவை சிகிச்சை செய்துள்ள நபருக்கு இந்த இயற்கை மெழுகை கையில் தடவி வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும் எனவும் கூறுகிறார்.
இன்றுள்ள காலத்திலும் சில மக்கள் இயற்கை மெழுகினால் உருவான கண் மை, சோப்பு, லிப்ஸ்டிக் மற்றும் தேவாலயங்களில் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
கெமிக்கல் மெழுகை விட 10 மடங்கு அதிக அளவு விலை மதிப்பில் இந்த இயற்கை மெழுகு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.
இதுபோல் பல வித பயன்கள் இந்த இயற்கை மெழுகு தயாரிப்பில் இருப்பதாகவும் கூறுகிறார்.
இயற்கை மெழுகு தயாரிப்பு முறை
இயற்கை மெழுகு தயாரிப்பு மிகவும் சுலபமான முறை எனவும், இந்த இயற்கை மெழுகை இவர் தேன் அடையில் இருந்து உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.
தேன் கூட்டில் தேன் கூட்டின் ஓரத்தில் சிறிது சிறிதாக தேனீக்கள் அடை கட்டி இருக்கும் எனவும் மற்றும் கூட்டின் மேலே தேனை பாதுகாப்பதற்கு ஒரு பாதுகாப்பு வலையை அமைத்து இருக்கும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு தேனை பாதுகாக்க கூட்டில் அமைந்து இருக்கும் அடை மெழுகு போல இருக்கும் எனவும் அதனை தேன் கூட்டை அளிக்கும் போது தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மற்றும் கூட்டை சுற்றி இருக்கும் அடையையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இதனைக் கொண்டே இவர் இயற்கையான மெழுகு தயாரிப்பை செய்து வருவதாகவும், இந்த மெழுகு தயாரிப்பின் மூலம் இவருக்கு நிறைந்த வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
முதலில் இவர் இந்த தேன் அடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி அதில் இந்த தேன் அடைகளை போட்டு மெழுகாக உருவாக்கி வந்ததாக கூறுகிறார்.
வெறும் மெழுகாக மட்டும் இதனை உருவாக்குவதன் மூலம் சிறந்த லாபம் கிடைக்காது என்பதால், இயற்கை மெழுகை கொண்டு பலவித பொருட்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்திற்கு சென்று இயற்கை மெழுகை கொண்டு பொருட்கள் உருவாக்கும் முறையை இவர் கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.
அக்ரிகல்ச்சர் கல்லூரி கோயம்புத்தூருக்கு சென்று இவர் இந்த இயற்கை மெழுகை கொண்டு பொருட்கள் தயாரிக்கும் முறையை கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.
அகல் விளக்கு மற்றும் சுவாமி சிலைகள் இவற்றுடன் மெழுகுவர்த்தி ஆகியவற்றை உருவாக்கும் முறைகளைப் பற்றி இவர் நன்கு அறிந்து கொண்டதாகவும், இப்பொழுது இதனை இவர் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீரை ஊற்றி அதில் தேன் அடைகளை எடுத்துப் போட வேண்டும் எனவும், இவ்வாறு அடையை போட்ட பிறகு ஒரு குச்சியின் மூலம் அடைகளை நன்றாக கிளறி விட வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு கிளறிக்கொண்டே இருந்தால் அடையானது உருகி விடும் எனவும், அடை உறுவிய பிறகு நன்றாக கொதிக்கும் வரை அதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் என கூறுகிறார்.
தேன் அடை கொதித்த அரை மணி நேரத்திற்கு பிறகு அதனை எடுத்து சணல் சாக்கில் ஊற்றி வடிகட்ட வேண்டுமெனவும், வடிகட்டிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடையானது மெழுகாக மாறி விடும் என கூறுகிறார்.
தேன் அடையை வடிகட்டும் போது பிளாஸ்டிக் டப்பாவில் வடிகட்ட வேண்டும் எனவும், சில்வர் பாத்திரத்தில் இதனை வடிகட்ட கூடாது எனவும் கூறுகிறார்.
இவ்வாறு வடிகட்டிய தேன் அடை மெழுகாக மாறிய பிறகு அதனை எடுத்து பலவித பொருட்களாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
Specialty of natural wax
செயற்கை மெழுகை விட இயற்கை மெழுகில் பலவித சிறப்புக்கள் இருப்பதாகவும், தேன் அடையை மெழுகாக மாற்றிய பிறகு அந்த மெழுகானது எப்பொழுதும் கெட்டுப் போகாது என கூறுகிறார்.
செயற்கை மெழுகுவர்த்தியை பற்ற வைக்கும் போது அதில் புகை வரும் எனவும் ஆனால் இயற்கை மெழுகுவர்த்தியை பற்ற வைக்கும்போது அதில் புகை வராது எனவும் கூறுகிறார்.
இதுபோல் பல வித சிறப்புக்கள் இந்த இயற்கை மெழுகில் இருப்பதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
இயற்கை மெழுகில் இவர் பலவித பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய இடத்திற்கே வந்து வாடிக்கையாளர்கள் மெழுகை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
செயற்கை மெழுகை விட இயற்கை மெழுகு பத்து மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும், இதன் மூலம் இவர் இந்த மெழுகு தயாரிப்பில் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய இயற்கையான மெழுகு தயாரிப்பை மிகச் சிறப்பான முறையில் எந்த வித கலப்படமும் இன்றி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:பீட்ரூட் சாகுபடியில் சிறந்த லாபம்.