கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் குடை மிளகாய் சாகுபடி செய்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய குடை மிளகாய் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
குடை மிளகாய் சாகுபடியின் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் குடை மிளகாய் சாகுபடி செய்து அதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும்,இந்த தனியார் நிறுவன வேலையில் இவருக்கு அதிகமாக ஆர்வம் இல்லை எனவும் கூறுகிறார்.
இவருடைய சிறுவயதிலிருந்து இவர் விவசாயத்தை பார்த்து வளர்ந்ததாகவும் இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும் கூறுகிறார்.
இதனால் இவருக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக இவர் தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு விவசாயம் செய்வதற்கு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக கூறுகிறார்.
இவர் சொந்த ஊருக்கு வந்த பிறகு இவர் இவருடைய நிலத்தில் குடைமிளகாய் சாகுபடி செய்ய தொடங்கியதாகவும், இந்த குடை மிளகாய் சாகுபடியை இவர் கடந்த நான்கு வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இந்த குடைமிளகாய் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இதன் மூலம் இவர் லட்சங்களில் வருமானத்தைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
Method of cultivation of capsicum
குடைமிளகாய் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த குடைமிளகாய் சாகுபடியின் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
குடைமிளகாய் சாகுபடி செய்யும் முறை மிகவும் சுலபமான முறை எனவும் இவர் இந்த குடைமிளகாய் சாகுபடியை பசுமை குடில் முறையில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த பசுமைகுடில் சாகுபடி முறைக்கு அரசாங்கத்திலிருந்து இவர் அனுமதி பெற்று அரசாங்கத்தில் இருந்து சில சலுகைகளை பெற்று இந்த பசுமை குடிலை நடத்தி வருவதாக கூறுகிறார்.
மஞ்சள் குடைமிளகாய் மற்றும் சிவப்பு குடைமிளகாய் வகைகளை பசுமைக்குடில் உள்ளே மட்டுமே சாகுபடி செய்ய முடியும் எனவும், பச்சை குடைமிளகாயை வெளியே சாகுபடி செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
அரசாங்கத்தில் இருந்து அனுமதி பெற்று அவர்கள் கொடுக்கும் சலுகைகளை பெற்றுக்கொண்டு இந்த குடைமிளகாய் சாகுபடியை செய்தால் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து சிறந்த லாபத்தைப் பெற முடியும் எனக் கூறுகிறார்.
குடைமிளகாய் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் போன்ற உரங்களை அளித்து நிலத்தை நன்றாக தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
நிலத்தை தயார் செய்த பிறகு நாற்பத்தி ஐந்து நாளான குடை மிளகாய் நாற்றுகளை வாங்கி நட்டு வளர்த்து வருவதாகவும், ஒவ்வொரு நாற்றுகளுக்கு இடையிலும் அரை அடியிலிருந்து ஒரு அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறையில் நாற்றுகளை நட்டால் அறுவடை செய்யும் போது சுலபமான முறையில் அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
குடை மிளகாயின் வகைகள் மற்றும் பயன்கள்
குடைமிளகாயில் மொத்தம் மூன்று வகைகள் இருப்பதாகவும் அவை மஞ்சள் நிற குடைமிளகாய் மற்றும் சிவப்பு நிற குடைமிளகாய் இவற்றுடன் பச்சை நிற குடைமிளகாய் எனக் கூறுகிறார்.
இதில் இவர் மஞ்சள் நிற குடை மிளகாயையும் மற்றும் பச்சை நிற குடை மிளகாயையும் பசுமைக்குடிலின் உள்ளே வைத்து சாகுபடி செய்து வருவதாகவும், இந்த இரண்டு குடைமிளகாய் வகைகளையும் பசுமை குடிலில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும் என கூறுகிறார்.
ஆனால் பச்சை நிற குடைமிளகாய் வெளியில் வைத்து சாகுபடி செய்ய முடியும் எனவும், இந்த வகை குடைமிளகாயை இவர் வெளியில் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த குடை மிளகாயில் அதிகளவு பயன்கள் இருப்பதாகவும், இந்த குடைமிளகாயில் அதிகளவு புரோட்டின் இருப்பதாக கூறுகிறார்.
பெரிய பெரிய உணவகங்களில் இந்த குடைமிளகாயை அதிகமாக விற்பனை செய்வார்கள் எனவும் அதிக மக்கள் இந்த குடைமிளகாயை உணவாக உண்டு வருவதாக கூறுகிறார்.
சிவப்புநிற குடைமிளகாயை சாஸ் தயாரிக்க அதிகமாக பயன்படுத்துவார்கள் எனவும் மற்ற வகை குடைமிளகாயை உண்பதற்காக அதிகமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த குடைமிளகாய் சுவை மிகவும் அருமையாக இருக்கும் எனவும் இதன் காரணமாக மக்கள் அதிகளவில் இதனை விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.
Fertilizer and maintenance method
குடைமிளகாய் சாகுபடி செய்வதற்கு அதிகளவு பராமரிப்பு தேவையில்லை எனவும் உரங்களை சரியான முறையில் அளித்து செடிகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் வராமல் பராமரித்தால மட்டும் போதுமானது எனக் கூறுகிறார்.
செடிகளுக்கு இடையில் வளரும் களைச் செடிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகிறார்.
மேலும் இவர் செடிகளுக்கு அதிகமாக இயற்கை உரங்களை அளித்து வளர்த்து வருவதாகவும் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை அளித்து வருவதாக கூறுகிறார்.
இந்த உரங்கள் அனைத்தையும் அளிப்பதால் செடிகள் நன்றாக வளர்ந்து வருவதாகவும் மற்றும் செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் போது மட்டுமே இவர் செயற்கை மருந்துகளை செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை
நாற்றுகளை நட்ட 20வது நாளில் செடியில் குடைமிளகாய் அறுவடை செய்வதற்கு தயாராகி விடும் எனவும், பச்சை நிறத்தில் குடைமிளகாய் வேண்டும் என்றால் எழுபதாவது நாளில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனக் கூறுகிறார்.
குடைமிளகாய் பச்சை நிறத்திலிருந்து சிறிது சிவப்பு நிறமாக வேண்டுமென்றால் எண்பத்தி ஐந்தாவது நாளில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனக் கூறுகிறார்.
நாற்றுகளை நட்ட முதல் மூன்று நாட்களுக்கு நீரினை செடிகளுக்கு ஒரு மணி நேரம் விட வேண்டுமெனவும்,அதன் பிறகு செடிகளுக்கு அதிகமாக நீரினை அளிக்கக்கூடாது என கூறுகிறார்.
செடி நன்றாக வளர்ந்த பிறகு செடிகளுக்கு நீரினை அளிக்கும்போது பத்து நிமிடம் மட்டுமே நீரினை செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் அதற்குமேல் செடிகளுக்கு நீரினை அளிக்கக்கூடாது என கூறுகிறார்.
Sales method and profit
குடைமிளகாய் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை இவருடைய தோட்டத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய இடத்திற்கே வந்து வாடிக்கையாளர்கள் இவருடைய குடைமிளகாயை வாங்கி செல்வதாகவும் ஒவ்வொரு நிற குடைமிளகாயையும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
குடைமிளகாய் சாகுபடியை இவர் மிகவும் தரமான முறையில் சாகுபடி செய்து வருவதால் அதிகமாக குடைமிளகாய் விற்பனையாகி வருவதாகவும் இதன் மூலம் இவர் லட்சங்களில் வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய குடைமிளகாய் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரம்.