கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் டச்சு ரோஸ் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய டச்சு ரோஸ் சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of Dutch Rose cultivation
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் டச்சு ரோஸ் சாகுபடி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
டச்சு ரோஸ் சாகுபடி செய்வதற்கு முன்பு இவர் வீட்டில் எந்த வேலையும் இன்றி இருந்ததாகவும், இவருக்கு விவசாயத்தை பற்றி நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.
திருமணத்திற்கு முன்பு இவருடைய தந்தை வீட்டில் இருக்கும்போது இவருக்கு விவசாயத்தைப் பற்றி நன்றாக தெரியும் எனவும் இவருடைய தந்தையின் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் எந்த வேலையும் இன்றி இருப்பதற்கு நம்முடைய நிலத்தில் டச்சு ரோஸ் சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்தில் இவர் டச்சு ரோஸ் சாகுபடி செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இந்த டச்சு ரோஸ் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
டச்சு ரோஸ் சாகுபடி செய்யும் முறை
டச்சு ரோஸ் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தைப் பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் பசுமை குடில் அமைத்து அதில் டச்சு வகை ரோஜா பூக்களை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த டச்சு ரோஸ் சாகுபடியை இவர் 5 ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாக கூறுகிறார்.
பசுமை குடிலின் உள்ளே மட்டுமே இந்த டச்சு ரோஸ் வகைகள் வளரும் எனவும், ஐரோப்பா கண்டங்களில் இந்த ரோஜா பூக்களை அதிக அளவில்ளவில் சாகுபடி செய்வார்கள் என கூறுகிறார்.
இந்த டச்சு ரோஜாப்பூக்களை சாகுபடி செய்வது சுலபமான முறை எனவும், ரோஜா பூக்கள் மலரும் வரை செடிகளை நன்றாக பராமரித்தால் மட்டுமே மலர்கள் நன்றாக வளரும் என கூறுகிறார்.
ரோஜா செடிகளை நிலத்தில் நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை நன்றாக தயார்படுத்தி வைத்த பிறகு பசுமைகுடிலை நிலத்தை சுற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
அதன் பிறகு ரோஜா நாற்றுக்களை அரை அடியிலிருந்து ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் இந்த முறையில் இடைவெளி விட்டு நட்டால் பூக்களை பறிப்பதற்கு சுலபமாக இருக்கும் என வருகிறார்.
இந்த முறையில் ரோஜா நாற்றுகளை நட்டு சாகுபடி செய்து வந்தால் மிகவும் சிறப்பான முறையில் ரோஜா பூக்கள் மலர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.
Uses and colors of dutch rose
டச்சு ரோஸ் பூக்களில் பலவித பயன்கள் இருப்பதாகவும் இந்த பூக்கள் அதிகமாக பெண்கள் தலையில் சூடுவதற்கு பயன் பட்டு வருவதாகவும், 90 சதவீத பெண்கள் மலர்களை தலையில் விரும்பிச் சூடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதாக கூறுகிறார்.
மேலும் இந்த வகை ரோஜா பூக்கள் கல்யாண நிகழ்ச்சிகளில் மண்டபத்தை அலங்கரிக்க பயன்பட்டு வருவதாகவும் மற்றும் மலர் கொத்து தயாரிப்பதற்கும் இந்த ரோஜாப்பூக்கள் அதிகமாக பயன்படுத்துவதாக கூறுகிறார்.
மற்றும் கல்யாண மாலைகளை அலங்கரிப்பதற்கு இந்த வகை ரோஜா பூக்கள் அதிகமாக பயன்படும் எனவும் மற்றும் காதலர் தினத்தன்று ஆண்கள் அதிகமாக இந்த வகை ரோஜா பூக்களையே பயன்படுத்துவார்கள் என கூறுகிறார்.
டச்சு ரோஸ் வகைகளில் மொத்தமாக 60 வகை நிறங்கள் இருப்பதாகவும், அதில் இவர் பத்து நிறங்கள் கொண்ட ரோஜா பூக்களை மட்டுமே சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார்.
அவை சிவப்பு நிறம், இளஞ்சிவப்பு நிறம், வெள்ளை நிறம், ஆரஞ்சு நிறம், மஞ்சள் நிறம் மற்றும் இரட்டை நிறங்களைக் கொண்ட சில ரோஜா பூக்களை இவர் சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார்.
மேலும் இந்த ரோஜா பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகான தோற்றத்தில் இருக்கும் எனவும், இதனால் அதிக மக்கள் இதனை விரும்பி வாங்கி வருவதாக கூறுகிறார்.
உரம் மற்றும் பராமரிப்பு முறை
இந்த ரோஜா சாகுபடியில் அதிகளவில் உரம் தேவையில்லை எனவும் இயற்கை உரங்களை மட்டுமே செடிகள் நன்றாக வளர்வதற்கு முன்பு அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.
செடிகளுக்கு நோய் தாக்குதல் அதிகமாக ஏற்படாது எனவும் நோய்கள் ஏற்பட்டாலும் அதனை சரி செய்வதற்கு மட்டும் இவர் செயற்கை மருந்துகளை பயன்படுத்தி வருவதாகக் கூறுகிறார்.
மேலும் இந்த டச்சு ரோஸ் சாகுபடியில் பராமரிப்பு சற்று அதிகமாக தேவை எனவும், பராமரிப்பு இல்லை என்றால் பூக்கள் அழுகி வீணாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்.
மற்றும் ரோஜா செடிகளுக்கு இடையில் முளைக்கும் களைச் செடிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்துவிட வேண்டும் எனவும், இல்லையெனில் ரோஜா பூக்களின் சத்துக்களை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.
Harvesting and watering system
டச்சு ரோஸ் நாற்றுகளை நட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பூக்கள் மலர்ந்து அறுவடைக்கு தயாராகும் எனவும், இவ்வாறு அறுவடைக்கு தயாரான பிறகு பூக்களை பறிக்க தொடங்கிவிட வேண்டும் எனக் கூறுகிறார்.
பூக்கள் செடிகளில் மலரும் வரை செடிகளை மிகவும் பராமரிப்புடன் பராமரித்து வளர்க்க வேண்டும் எனவும் செடிகளுக்கு தேவையான உரம் மற்றும் நீரினை சரியான முறையில் அளித்து வரவேண்டும் எனக் கூறுகிறார்.
பொதுவாகவே இந்த டச்சு ரோஸ் செடிகள் அதிகளவு நீரினை எடுத்துக்கொள்ளும் தாவரம் எனவும் எனவே இந்த ரோஜாபூ சாகுபடியில் அதிகளவில் நீர் தேவை இருக்கும் என கூறுகிறார்.
செடி சிறியதாக இருக்கும்போது கால் லிட்டர் நீர் ஒரு செடிக்கு அளித்தால் போதுமானது எனவும் ஆனால் செடி நன்றாக வளர்ந்த பிறகு ஒவ்வொரு செடிக்கும் ஒரு லிட்டர் அளவு நீரினை அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
இந்த முறையில் நீரினை அளித்தால் செடி சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
டச்சு ரோஸ் பூக்களை இவருடைய தோட்டத்திற்கு வந்து வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாகவும் மற்றும் இவர் இந்த ரோஜா பூக்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
சிறிய பூ வியாபாரிகளும் இவரிடம் வந்து பூக்களை வாங்கி செல்வதாகவும், இவருடைய ரோஜா பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதால் அதிகளவில் இந்த பூக்கள் விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் மற்றும் இவர் இவருடைய ரோஜாப்பூ சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:குடை மிளகாய் சாகுபடியில் லட்சங்களில் வருமானம்.