திரு நவீன் குமார் என்பவரும், திரு பழனிச்சாமி என்பவரும் , திரு சதீஷ் என்பவரும் ஒன்றாக இணைந்து ஒரு மரச்செக்கு எண்ணெய் ஆலையை உருவாக்கி அந்த எண்ணெய் வகைகளை அமேசானில் விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.
அவர்களையும் அவர்களின் மரச்செக்கு எண்ணெய் ஆலையையும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
மரச்செக்கு எண்ணெய் ஆலையின் தொடக்கம்
திரு நவீன் குமார் என்பவரும், திரு பழனிச்சாமி என்பவரும், திரு சதீஷ் என்பவரும் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு மரச்செக்கு எண்ணெய் ஆலையை நடத்தி வருகின்றனர். திரு நவீன் குமார் அவர்களும், திரு பழனிச்சாமி அவர்களும், திரு சதீஷ் அவர்களும் சிறுவயதிலிரந்தே ஒன்றாக வளர்ந்ததாகவும், மூவரின் வீடுகளும் அருகிலேயே இருந்ததாகவும், இந்த மூவரும் ஒன்றாகவே கல்லூரி சென்று ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்து கல்லூரி படிப்பினை முடித்ததாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இவர்களின் சிறுவயதில் இருந்தும்,கல்லூரியில் படிக்கும் போதும் மூவரும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். ஏனென்றால் இவர்கள் மூவரின் தந்தையார்கள் மற்றும் தாயார்கள் கூலி வேலை செய்துவந்த காரணத்தால் இவர்களுக்கு தாங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இவர்கள் மூவரும் இன்ஜினியரிங் பயின்றதாக கூறுகிறார். ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இவர்களுடைய மனதில் இருந்து கொண்டே இருந்ததாகவும் இவர்கள் பேசும்போது கூட அதைப் பற்றியே அதிகம் பேசியதாக கூறுகிறார்.
இவர்கள் மூவரும் ஒன்றாக மூன்று நான்கு வருடம் தனியார் வேலையை செய்து வந்ததாகவும், அந்த வேலையை செய்யும் போதும் இவர்களுக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததால் அந்த தொழிலை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் செய்யலாம் என்ற முடிவை எடுத்ததாக திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
அதன்பிறகு மூவரும் எந்த தொழில் செய்தாலும் அது உணவு சார்ந்த தொழிலாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு இருந்ததாகவும் கூறுகிறார்.
அவ்வாறு இவர்கள் அளிக்கும் பொருட்கள் தரமாகவும், யாரையும் ஏமாற்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். அதன்பிறகுதான் இந்த மரச்செக்கு எண்ணெய் ஆலையை உருவாக்கியதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர்கள் மரச்செக்கு எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் அதனை வாகை மர இயந்திரத்தில் மட்டுமே ஆட்ட வேண்டும் என்ற எண்ணத்தையும் கொண்டிருந்ததாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இவர்கள் முதலில் சிறிய அளவில் மட்டுமே உற்பத்தி செய்து வந்ததாகவும் முதல் இரண்டு அல்லது இரண்டரை வருடத்திற்கு இவர்களுக்கு லாபம் இருந்தது இல்லை எனவும் அதற்கு காரணம் மற்ற விற்பனையாளர்களை விட இவர்களிடம் எண்ணையின் விலை உயர்வாக இருந்தது எனவும் அதற்கு காரணம் இவர்கள் தரமான எண்ணையை உபயோகித்து இருந்தது எனவும் கூறுகிறார்.
குறைந்த வாடிக்கையாளர்களே இவர்களிடம் வந்து எண்ணெய் வகைகளை பெற்றுச் சென்றதாகவும் அதன் பிறகு அந்த வாடிக்கையாளர்களின் மூலம் அனைவருக்கும் தெரிந்து அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து எண்ணெய் வகைகளை பெற்றுச் சென்றதாகவும் மேலும் இவர்களிடம் நல்ல தரமான எண்ணெய் உள்ளது எனவும் அவர்களை பாராட்டி சென்றதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறியதால் இவர்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறுகிறார்.
எண்ணெய்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள்
திரு நவீன் குமார், பழனிச்சாமி, சதீஷ் ஆகியவர்களின் ஆலைகளில் மொத்தமாக மூன்று வகையான எண்ணெய்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அவைகள் கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இவர்களுடைய எண்ணெய்களை ஆட்டுவதற்கு ஆரம்பத்திலிருந்தே வாகை மரத்தால் ஆன இயந்திரத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இவர்கள் வாகை மரத்தை பயன்படுத்துவதற்கு காரணமானது வாகை மரமானது சூட்டை கடத்தி செல்லாது என்பதே ஆகும்.
எள் வகைகளில் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் ஆகிய இரண்டு எள்களையும் பயன்படுத்துவதாக திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார். இந்த எள் வகைகளை வியாபாரிகளிடம் வாங்குவதைவிட நேரடியாக விவசாயிகளிடம் சென்று வாங்கினால் விலை சிறிது குறைவாக கிடைக்கும் எனவும், விற்பனையாளர்களுக்கு எண்ணெய் வகைகளை அளிக்கும்போது அதன் விலையும் சரியாக இருக்கும் எனவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் நிலக்கடலை வகைகளையும் விவசாயிகளிடம் நேரடியாக நேரடியாக சென்று முழு நிலக்கடலை யாக வாங்கி அதனை இவர்களே உடைத்து கொட்டைகளை எடுத்து விடுவதாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகின்றார்.
நம்முடைய நாட்டு நிலக்கடலைகளே அதிக சத்து நிறைந்த உணவுப்பொருள் எனவும் கூறுகிறார். மேலும் தேங்காய் வகைகளையும் இவர்களுடைய ஊரிலுள்ள விவசாயிகளிடமிருந்து வாங்குவதாகவும், முழு தேங்காயாக வாங்கி அதனை இவர்களை உடைத்து காய வைத்து எண்ணெய் ஆட்டுவதாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார். தேங்காய்களை வியாபாரிகளிடம் வாங்காதததற்கு காரணம் அவர்கள் சல்பர் சேர்த்து தேங்காய்களை பாதுகாத்து வைத்திருப்பார்கள் என்றும் அதனால் தேங்காய்களின் சத்து குறைந்து விடும் எனவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த சல்பர் ஆனது தேங்காய்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு பயன்படுத்துவதாகவும் இதனை தமிழ் நாடுகளிலேயே அதிக அளவு பயன்படுத்துவதாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார். கேரளாவில் மட்டுமே சல்பர் இல்லாத தேங்காய்களை பயன்படுத்துவதாக கூறுகிறார். பொதுவாக சல்பர் சேர்த்த தேங்காய் எண்ணெய் பனிக்காலங்களில் உறைவதில்லை எனவும் இவர்களுடைய சல்பர் சேர்க்காத தேங்காய் எண்ணெய் பனிக்காலங்களில் உறைந்து விடும் எனவும் இதன் வகையிலேயே இவை சல்பர் சேர்த்த தேங்காய் எண்ணெய்யா அல்ல சல்பர் சேர்க்காத தேங்காய் எண்ணெய்யா என்பதை கண்டறியலாம் என திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
எண்ணெய்கள் தயாரிக்கும் முறை
எண்ணெய்களை தயாரிக்கும்போது ஒரு மரச்செக்கிற்கு பதினாறு கிலோ எள்களை போடுவதாகவும் அதிலிருந்து அதிகளவு ஆறிலிருந்து ஆறரை லிட்டர் வரையில் நல்லெண்ணை கிடைப்பதாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இதில் இரண்டில் இருந்து இரண்டரை கிலோ எள்களை போட்டு ஆட்டுவதால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைப்பதாக கூறுகிறார். மேலும் எள்களில் இயற்கையாகவே காரத்தன்மை இருப்பதால் அதனுடைய காரத்தன்மையை போக்குவதற்கு நல்லெண்ணை ஆட்டும்போது அதில் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை கலப்பதாகவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
எள்களை மரச்செக்கில் போட்டு ஒரு ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு நமக்கு நல்லெண்ணை கிடைப்பதாக திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார். இதனுடைய புண்ணாக்கில் ஐம்பது சதவீதம் எண்ணெய் உள்ளதாக திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
எண்ணெய்யிணை வடிகட்டும் முறை
திரு நவீன் குமார் அவர்கள் வடிகட்டு முறையே மிக முக்கியமான முறை என்றும் அதனை வடிகட்டும் இயந்திரங்களில் வடிகட்டுகிறோமா அல்லது நேரடியாக சூரிய சக்தியின் மூலம் வடிகட்டுகிறோமா என்பது மிக முக்கியமான முறையாகும் என்கிறார். திரு நவீன் குமார் அவர்கள் இந்த மரச்செக்கு எண்ணெய் ஆலையை தொடங்கியதில் இருந்து எண்ணெய்யினை சூரிய சக்தியின் மூலமே வடிகட்டி வருவதாகவும் இந்த வடிகட்டுதல் முறையை மிக சிறந்த முறை எனவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த வடிகட்டுதல் முறையானது நேரடியாக சூரிய ஒளியில் ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதனை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வைக்க வேண்டும் எனவும் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வகைகளை மட்டும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சூரிய ஒளியில் வைக்க வேண்டும் எனவும் தேங்காய் எண்ணெய் மட்டும் ஒரு நாள் அல்லது ஒன்றரை நாள் சூரிய ஒளியில் வைக்க வேண்டும் எனவும் திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு சூரிய ஒளி மூலம் வடிகட்டினால் எண்ணெய் உடைய உயிர்ச்சத்து அதிகரிக்கும் எனவும் கூறுகிறார். மரச்செக்கில் எண்ணெய் வகைகளை ஆட்டும் பொழுது அதனை ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தாலும் அதில் படிசல் வரும் என திரு நவீன் குமார் அவர்கள் கூறுகிறார். திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் மரச்செக்கு ஆலையில் உள்ள எண்ணெய் வகைகள் மிகவும் தூய்மையாகவும் தரமாகவும் உள்ளது.
எண்ணெய் வகைகளை பேக்கிங் செய்யும் முறை
திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் மரச்செக்கு ஆலையில் உள்ள எண்ணெய் வகைகளை இயந்திர செயல்முறை இல்லாத முறையில் பேக்கிங் செய்கின்றனர். பொதுவாக அனைத்து எண்ணெய் ஆலைகளிலும் பிளாஸ்டிக் மூடி களையே எண்ணெய் பாட்டில்களுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் ஆலையில் எண்ணெய்களின் மூடிகளுக்கு அலுமினியக் காயிலை பயன்படுத்துவதாக கூறுகிறார்.
இது பிளாஸ்டிக்கை விட மிக சிறந்த ஒன்று எனவும் திரு சதீஸ் அவர்கள் கூறுகிறார். மேலும் முடிகளின் மீது ஒரு கவரை பயன்படுத்துவதாகவும் அதை இயந்திரங்களைக் கொண்டு மூலம் எவ்வாறு மூட வேண்டும் என்றும் திரு சதீஸ் அவர்கள் கூறுகிறார்.
எண்ணெய் வகைகளை அமேசானில் அனுப்பும் போது அட்டைகள் உடையாதவாறு நன்கு தரமான அட்டைகளை வைத்து அனுப்புகின்றனர். மேலும் எண்ணெய் பாட்டில்களை வைத்து அனுப்புவதற்கு இரண்டு லிட்டரிலிருந்து நான்கு லிட்டர் மற்றும் ஆறு லிட்டர் மற்றும் எட்டு லிட்டர் மற்றும் பனிரெண்டு, பதினாறு லிட்டர் பாட்டில்களை தனித்தனியாக வைக்கும் அளவிற்கு வெவ்வேறு அட்டைப் பெட்டிகளை வைத்திருப்பதாகவும் திரு சதீஷ் அவர்கள் கூறுகிறார்.
திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் மரச்செக்கு எண்ணெய் ஆலையில் அரை லிட்டர் இருந்து ஒரு லிட்டர் மற்றும் ஐந்து லிட்டர் மற்றும் பதினாறு லிட்டர் அளவுகளில் எண்ணைகளை விற்பனை செய்வதாக கூறுகிறார்.
திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் தரமான மரச்செக்கு எண்ணெய் ஆலை
திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் ஆலையில் எண்ணெய்களுடன் சேர்த்து நாட்டுச் சர்க்கரை, நெய், தேன் மற்றும் கடலை மிட்டாய் வகைகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு நவீன் குமார் மற்றும் அவருடைய நண்பர்களின் மரச்செக்கு எண்ணெய் ஆலையில் உற்பத்தியாகும் எண்ணெய் வகைகள் மிகவும் தூய்மையாகவும் மிக தரமான எண்ணெய் வகையாகவும் உள்ளது.
மேலும் படிக்க:மிக எளிதான பராமரிப்பில் முயல் பண்ணை.