திரு பிரபு அவர்கள் அசோலா மற்றும் மண்புழு உரங்களை மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார். மேலும் இந்த உரங்கள் வைப்பதற்கு தேவையான படுக்கை அமைப்புகளையும் குறைந்த விலையில் வைத்துள்ளார். அவரையும் அவருடைய உரங்களை பற்றியும் , படுக்கை அமைப்புகளை எவ்வாறு சரியாக வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பின்வருமாறு ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு பிரபு அவர்களின் கரிம வேளாண்மை எண்ணம்
திரு பிரபு அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாகவும் கூறுகிறார்.
திரு பிரபு அவர்கள் அசோலா மற்றும் மண்புழு உரம் போன்றவற்றை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வருகிறார். மேலும் இந்த உரங்களை வைப்பதற்கு சரியான படுக்கை அமைப்பு ஒன்றையும் மிக குறைந்த விலையில் வைத்துள்ளார்.
திரு பிரபு அவர்கள் அதிக இடங்களில் வேலை தேடி சென்றதாகவும், வேலை கிடைக்காத காரணத்தால் குறைந்த அளவு அசோலாவை வாங்கி தார்ப்பாய்யில் போட்டு உற்பத்தி செய்து வந்து கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.
அதன் பிறகு அசோலா படுக்கை நிறுவனத்திலிருந்து இந்த படுக்கை வாய்ப்புகள் கிடைத்ததால் அவற்றை வாங்கி அதிக அளவு உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்று வருவதாக கூறுகிறார். இவர் உற்பத்தி செய்யும் அசோலாவை இவருடைய கோழிகள் மற்றும் ஆடுகளுக்கு அளிப்பதாகவும் கூறுகிறார். இந்த உரங்களை விற்பதற்கு முன் அவற்றை செயல்படுத்தி பார்த்த பிறகே விற்பனை செய்வதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
பொதுவாக தொட்டிகளில் உரங்கள் தயாரிப்பதை விட இந்த படுக்கை அமைப்புகளில் உரங்களை தயாரிப்பது மிக சிறப்பான ஒன்று எனவும் ,ஏனெனில் இந்த படுக்கை அமைப்பை தேவையின் போது பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் இதன் மூலம் செலவு குறையும் எனவும் கூறுகிறார். ஆனால் தொட்டிகளில் உரங்கள் தயாரித்தால் அதிக செலவை தரும் எனவும் கூறுகிறார். தொட்டிகளை விட இந்த படுக்கை அமைப்பினால் அதிக நன்மை உள்ளது எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
மண்புழு உரங்கள் தயாரிக்கும் முறை
பொதுவாக உரங்கள் தயாரிப்பது என்றால் ஒரு குழியை தோண்டி அதனுள் குப்பைகளை போட்டு மக்க செய்வார்கள். அந்த உரங்கள் தயாராக ஐந்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும் எனவும் கூறுகிறார்.
அதே முறையில் சாணங்களை இந்த படுக்கைகளில் அமைப்புகளில் போட்டு அதில் மண்புழுக்களை விட்டுவிட வேண்டும் எனவும் அதன் மீது தினமும் நீரினை தெளித்து வரவண்டும் எனவும் கூறுகிறார். இந்த முறையும் செய்தால் உரமானது நாற்பத்து ஐந்து நாளில் இருந்து ஐம்பது நாளுக்குள் உரமாகி விடும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
இந்த முறையில் உரங்களை தயாரித்தால் அதன் மூலம் நன்மையும், அந்த மண்புழுக்களால் அதிக சத்தும் செடிகளுக்கு கிடைக்கும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
முதலில் அந்தப் படுக்கையில் ஒரு அடுக்கு தேங்காய் மட்டைகளை திருப்பி வைத்து அடுக்கி கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார். இந்த தேங்காய் மட்டைகளை வைப்பதற்கு காரணம் தேங்காய் மட்டைகள் ஆனது நீரினை தக்கவைத்து கொள்ளும் தன்மையுடையது எனவும், உரங்களுக்கு நாம் நீர் அளிக்காத போது இந்த தேங்காய் மட்டையில் உள்ள நீரானது உரங்களுக்கு பயன்படும் எனவும் கூறுகிறார்.
அதன் பிறகு தட்டு மற்றும் வைக்கோல் போன்ற தீவனங்களை ஒரு அடுக்கு போட வேண்டும் எனவும் கூறுகிறார். அதன் பிறகு அதன்மேல் பசுவின் சாணங்களையும் நாட்டுச் சர்க்கரையும் தெளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். முடிந்த அளவு மோரினை கூட பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் அதற்கு மேல் ஒரு அடுக்கு சாணத்தைப் போட வேண்டும் எனவும், இதில் பசும் சாணத்தை போடக் கூடாது எனவும் ஒரு பத்திலிருந்து பதினைந்து நாட்கள் ஆன சாணத்தை மட்டுமே போட வேண்டும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
அதன் பிறகு ஒரு ஐந்து நாட்களுக்கு நீரினை மட்டுமே தெளித்து வரவண்டும் எனவும் அதன் பிறகு மண்புழுக்களை ஒரு அடுக்கு அந்த படுக்கையில் கொட்டினால் உரமானது மக்க ஆரம்பித்து விடும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இந்த படுக்கை அமைப்பில் உள்ள நன்மை இதில் ஊற்றும் நீரிலிரந்து மண்புழு சலவையை பாதி எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
இந்த படுக்கை அமைப்புகளை கட்டாயமாக நிழலில் மட்டுமே வைக்க வேண்டும் ஏனெனில் இவற்றை வெயிலில் வைத்தால் மண்புழுக்கள் ஆனது இறந்து விடும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இந்த படுக்கை அமைப்புகளை முடிந்த அளவு மரங்களுக்கு அடியில் வைப்பது மிக சிறப்பான ஒன்று எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
மேலும் இதன் மீது சணல் சாக்கினை போடுவது மிகுந்த நல்லது எனவும் இந்த சணல் சாக்கினையும் மண்புழுக்கள் ஆனது ஒரு மாதத்தில் உரமாகி விடும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இது மழையில் நனைந்தால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் கூறுகிறார்.
இதில் மழைக் காலங்களின் போது நீரினை ஊற்றுவது முக்கியமானது இல்லை எனவும் ஆனால் வெயில் காலங்களில் இரண்டு முறை நீரினை ஊற்ற வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த உரங்களின் மீது ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். அதிலும் நீரிணை ஊற்றக் கூடாது அவைகளின் மீது தெளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்தப் மண்புழுக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் இந்த உரங்கள் எவ்வாறு தயார் செய்யவேண்டும் என அறிந்துகொள்ள வருபவர்களுக்கும் கற்றுத் தருவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இவற்றை இரண்டு மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் திரு பிரபு அவர்கள் இந்த படுக்கை அமைப்பினை மிக எளிதான முறையில் எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் அதனுடைய பயன்களையும் நன்மைகளையும் மிக சிறப்பான வகையில் விளக்கினார்.
அசோலா வளர்ப்பின் உற்பத்தியை பெருக்க பயன்படும் முறை
பொதுவாக அசோலா படுக்கை முறையினை மரங்களுக்கு அடியில் வைக்கும் போது மரங்களின் இலை மற்றும் குப்பைகள் இந்த படுக்கையில் விழுந்து உரங்களை பாதிக்கின்றன. இதனை சரி செய்வதற்கு திரு பிரபு அவர்கள் ஒரு வழிமுறையினை செய்துள்ளார்.
திரு பிரபு அவர்கள் டெல்லியில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு சென்றபோது அங்கு குட்டைகளின் மேல் கூடாரம் போன்ற அமைப்பு இருந்ததாகவும் அதனை பார்த்த பிறகு அசோலா படுக்கை அமைப்புக்கும் இதுபோன்று அமைக்கலாம் என்ற எண்ணம் திரு பிரபு அவர்களுக்கு வந்ததாக கூறுகிறார்.
அதன் பிறகே இந்த அசோலா படுக்கை மீது பைப்புகளை வைத்து கூடாரம் போன்ற அமைப்பை உருவாக்கி மிக சிறப்பாக நடத்தி வருவதாக திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
இந்த முறையினால் இலைகள் மற்றும் குப்பைகள் அசோலா படுக்கை அமைப்பில் விழுந்து அசுத்தம் செய்யாது எனவும் கூறுகிறார்.இம்முறை மிகப் பாதுகாப்பான ஒரு முறை எனவும் கூறுகிறார். இந்த கூடாரம் அமைப்பு தேவை இல்லாத போது அதனை எடுத்து விடலாம் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கூடாரம் போன்ற அமைப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் எனவும் திரு பிரபு அவர்கள் செய்து காண்பித்துள்ளார்.
அசோலா படுக்கை அமைப்பு
அசோலா படுக்கை அமைக்கும்போது தரையானது சமமாக இருக்க வேண்டும் எனவும், படுக்கையை அமைக்கும் போது அவை மரத்திற்கு அடியில் இருக்கும் படி அமைத்தால் மிகவும் சிறப்பானது எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
தரையினை சமப்படுத்தி அதற்கு பிறகு அசோலா படுக்கையினை பொருத்த வேண்டும் எனவும் அந்த படுக்கையிணை தரையில் வைத்ததற்கு பிறகு நான்கு புறங்களிலும் அளவு எடுத்து வைத்துள்ள பைப்புகளில் இந்தப் படுக்கையை பொருத்த வேண்டும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார்.
படுக்கையை பொருத்திய அவற்றின் ஒரு ஓரத்தில் ஒரு குழாயினை பொருத்த வேண்டும் எனவும் இந்த குழாயானது உரங்களில் உள்ள அதிக நீரினை வெளியில் எடுப்பதற்கு உதவும் எனவும் கூறுகிறார்.
அதன் பிறகு அந்த படுக்கையில் செம்மண்ணை கற்கள் இல்லாமல் கொட்ட வேண்டும் எனவும் அதன் பிறகு இதற்கு சாணத்தை 2-லிருந்து 3 லிட்டர் வரை கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும் எனவும், காலையில் அசோலா படுக்கை அமைக்கிறோம் என்றால் இரவே இந்த சாணத்தை கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும் எனவும் திரு பிரபு அவர்கள் கூறுகிறார். இந்தக் கரைசல் திரவம் போன்ற நிலையில் இருக்க வேண்டுமெனவும் கூறுகிறார்.
அதன் பிறகு செம்மண்ணின் மீது நீரினை விட்டு அதன்மீது இந்த சாணத்தின் கரைசலை ஊற்ற வேண்டும் எனவும் கூறுகிறார். இதனை செய்த பிறகு அதன் மீது போர் மண்ணை கொட்டிவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.
இதனை எல்லாம் செய்து முடித்த பிறகு அசோலாவை எடுத்து அந்த படுக்கையின் மேல் தூவி விடவேண்டும் எனவும் கூறுகிறார். இது ஒரு வாரத்தில் பரவி விடும் எனவும் கூறுகிறார். அதன் பிறகு இந்தப் படுக்கை அமைப்பு எந்தவித அசுத்தம் ஏற்படாமல் இருக்க அதற்கு கூடாரம் போன்ற அமைப்பை பொருத்து விடுவதாக கூறுகிறார்.
இப்பொழுது ஒரு படுக்கை அமைப்பினை உருவாக்கினால் அதில் உள்ள நீரை 20 நாட்களுக்கு சிறிது சிறிதாக வெளியேற்றி புதிய நீரை ஊற்றி அதனுள் சிறிதளவு மோர் மண்ணை போட வேண்டும் எனவும் கூறுகிறார்.
வெர்னி படுக்கை அமைப்பு
இந்த படுக்கை அமைப்பில் பைப்பினை நிலத்தில் பொருத்தி அதன்மீது படுக்கையை நன்றாக இருக்கும் அளவு பொருத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த படுக்கையில் தேங்காய் மட்டையை போட்டுவிட வேண்டும் எனவும் அதன் மீது மாட்டுச் சாணத்தை போட வேண்டும் எனவும் கூறுகிறார்.
அதன் பிறகு அதில் வைக்கோல் தட்டு போன்ற வகைகளை போட்டுவிட்டு அதன்மீது சாணத்தைப் போட்டு , ஐந்து நாட்களுக்கு பிறகு மண்புழுவை போட்டு அதன்மீது சணல் சாக்கை போட்டு மூடி விட வேண்டும் என்றும் கூறுகிறார்.
மேலும் இதில் கூடாரம் போன்ற அமைப்பையும் பொருத்தியுள்ளார். திரு பிரபு அவர்கள் இந்தப் படுக்கை அமைப்பை மிக சிறப்பான வகையில் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:ஒரே மோட்டாரில் தீவனங்கள் வெட்ட மற்றும் அரைக்க பயன்படும் இயந்திரம்.