சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் திரு வடிவேலு அவர்கள் பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிதான முறையில் தூய்மையாக உற்பத்தி செய்து வருகிறார். திரு வடிவேலு அவர்களைப் பற்றியும், அவருடைய பணங்கருப்பட்டி உற்பத்தியை பற்றியும் பின்வருமாறு ஒரு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு வடிவேலு அவர்களின் வாழ்க்கை
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் திரு வடிவேலு அவர்கள் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் இதுவே ஆகும் என கூறுகிறார். இவர் இங்கு பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிய முறையில் தூய்மையாக செய்து வருகிறார்.
இவரின் தந்தை மற்றும் தாயார் இவரின் சிறு வயதில் இருந்தே இந்த பணங்கருப்பட்டி உற்பத்தியை செய்து வந்ததாக கூறுகிறார். மேலும் பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களையும் விற்பனை செய்து வந்ததாகவும் கூறுகிறார்.
இவர் சிறு வயதில் இருந்தே இந்த பணங்கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறையை பார்த்து வளர்ந்ததால், இந்த தொழிலையே இவரும் செய்து வருவதாக கூறுகிறார். இவர் இந்த பணங்கருப்பட்டி உற்பத்தியை மிகவும் எளிய முறையிலும், தரமானதாகவும், தூய்மையாகவும் உற்பத்தி செய்து வருகிறார்.
மேலும் இவர் யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்க கூடாது என்று எண்ணம் கொண்டார் ஆவர்.இதனாலேயே இவர் மிகவும் நேர்மையான முறையில் இந்த பணங்கருப்பட்டி உற்பத்தியை செய்து வருவதாக கூறுகிறார்.இந்த பணங்கருப்பட்டி விற்பனையில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றவர்களை ஏமாற்றி லாபம் பெற கூடாது என்ற எண்ணத்தை கொண்டிருப்பதாக திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
பணங்கருப்பட்டி மற்றும் பனை மரங்களின் நன்மைகள்
பொதுவாக பணங்கருப்பட்டி மற்றும் நுங்கு, பனை மரங்களின் மூலம் கிடைக்கும் உணவு வகைகள் அனைத்தும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று என திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
மேலும் பனை மரங்களும் நமக்கு அதிக அளவு நன்மையே தருகிறது எனவும் கூறுகிறார். பனை மரங்களில் ஊஞ்சல் கட்டி குழந்தைகள் விளையாடுவதற்கு பனை மரங்கள் உதவுவதாக கூறுகிறார். மேலும் வண்டு கடி போன்ற நோய்களுக்கு பனை மரங்களை கல்லால் கொட்டி அதன் நீரை வண்டு கடி மீது வைத்தால் அந்த புண் குணமாகி விடும் என கூறுகிறார்.
இதுபோல் பனை மரங்களில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதாக கூறுகிறார். மேலும் பனை மரங்களில் இருந்து கிடைக்கும் கள்ளு, சுண்ணாம்பு தெளுவு போன்றவைகள் உடலுக்கு குளிர்ச்சி தர கூடிய ஒரு உணவு வகைகள் என திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
மேலும் பனை மரங்களில் உள்ள நுங்கு சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும் எனவும்,நுங்கு நீரை முகத்தில் தேய்த்தால் வெயில் கொப்பலங்கள் சரி ஆகி விடும் எனவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார். மற்றும் இந்த நுங்கு முதிர்ந்து விட்டால் அதனை சுட்டு சாப்பிட்டாலாம் எனவும் திரு வடிவேல் அவர்கள் கூறுகிறார்.
இதுபோல் பனை மரங்கள் ஆனது பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வருவதாக கூறுகிறார். மேலும் இந்தப் பணம் கருப்பட்டியின் மூலம் அதிக அளவிலான நன்மைகள் கிடைப்பதாகவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
மேலும் பழங்காலத்தில் அனைத்து மக்களும் பனைமரம் ஏறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார். இதன் மூலமே அவர்கள் வருமானத்தை பெற்று வந்ததாகவும் கூறுகிறார். மேலும் இன்றளவும் இந்த பனைமரம் ஏறும் தொழில் ஆனது வழக்கத்தில் இருந்து வருவதாக திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
பனைமரம் ஏறும் முறை
திரு வடிவேலு அவர்கள் ஒரு நாளைக்கு 100 பனை மரங்களில் ஏறி தெளுவு எடுப்பதாக கூறுகிறார். இதில் இவர் காலையில் 50 பனை மரங்களிலும், மாலையில் 50 பனை மரங்களும் ஏறி தெளுவினை எடுப்பதாக கூறுகிறார். இவர் வசித்து வரும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பனை மரங்களும் இவரே ஏறுவதாகவும் கூறுகிறார்.
இவர் இவ்வாறு காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் பனை மரம் ஏறுவதற்கு காரணம், காலையில் எறும்போது ஏற்கனவே கட்டி வைத்திருந்த தெளுவு பானைகளை இறக்கி விட்டு பனை பாலைகளில் சுண்ணாம்பை தடவி விட்டு வந்து விடுவதாக கூறுகிறார்.
மீண்டும் மாலையில் சென்று அதே பனை மரத்தில் ஏறி பாலைகளை செதுக்கி விடுவதாக கூறுகிறார். ஏனெனில் இவ்வாறு செதுக்கி விட்டால் தான் பாலைகளில் உள்ள நீர் பானையில் ஊற்றி தெளுவுகளாக கிடைக்கும் என கூறுகிறார். எனவே காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் பனை ஏறுவது மிகவும் முக்கியமான ஒன்று என கூறுகிறார்.
இந்த முறையில் செய்தால் தான் கருப்பட்டிகள் ஆனது மிகவும் சிறப்பான முறையில் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் பனை மரங்கள் ஏறுவது மிகவும் கடினமான ஒரு வேலை எனவும் கூறுகிறார். இவர் பனை மரங்கள் ஏறுவதால் இவரின் இரண்டு கைகளிலும் புண்கள் போன்று ஆகி விட்டதாக கூறுகிறார். இவர் இவ்வாறு கஷ்டப் படுவதற்கு காரணம் இவரிடம் பணங்கருப்பட்டி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மன நிறைவுடன் பெற்று செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவே எனக் கூறுகிறார்.
திரு வடிவேலு அவர்கள் மிகவும் நல்ல எண்ணத்துடன் தூய்மையான மற்றும் தரமான உணவினை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கஷ்டமான பனைமரம் ஏறும் தொழிலை மிகவும் நேர்மையாக செய்து வருகிறார்.
பணங்கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறை
திரு வடிவேலு அவர்கள் இந்த பணங்கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறையினை மிகவும் தரமான மற்றும் தூய்மையான முறையில் உற்பத்தி செய்து வருகிறார்.
பணங்கருப்பட்டி தயார் செய்வதற்கு முதலில் பனை மரங்களில் இருந்து எடுத்து வந்த பதனியை பணங்கருப்பட்டி செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தில் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.இந்த பதனி ஆனது இரண்டரை மணி நேரம் காய வேண்டும் எனக் கூறுகிறார்.
10 லிட்டர் பணபதனியை எடுத்தால் மட்டுமே அதிலிருந்து ஒரு கிலோ கருப்பட்டி கிடைக்கும் என கூறுகிறார். மற்றும் இந்த பதனி ஆனது நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது அதில் ஆமணக்கு விதைகளை போட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு அதில் ஆமணக்கு விதைகளை போட்டால் தான் நமக்கு கருப்பட்டியை தயார் செய்வதற்கு சரியான பதம் கிடைக்கும் என கூறுகிறார். இந்த ஆமணக்கு விதைகளை அதில் போடும் போது அந்தக் கொதி ஆனது குறைந்து விடும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கொதி குறையும்போது அதனை நன்றாக கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். இவ்வாறு கலக்கிக் கொண்டு இருந்தால் கருப்பட்டி தயார் செய்வதற்கு மிக சரியான பதம் கிடைத்து விடும் என கூறுகிறார். மேலும் இந்த ஆமணக்கு விதைகளை அதன் மேல்தொள்ளி உடனேயே போட வேண்டும் எனவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
இந்த கருப்பட்டியை தயார் செய்வதற்கு குறைந்தது இரண்டரை மணியில் இருந்து 3 மணி நேரம் வரை தேவைப்படுவதாக திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த கருப்பட்டியை தயார் செய்வதற்கு 10 லிட்டர் பணபதனி இருந்தால் மட்டுமே ஒரு கிலோ கருப்பட்டி நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.
எனவே கருப்பட்டி தயார் செய்யும் முறையானது மிகவும் கடுமையான ஒரு முறை எனவும் கூறுகிறார்.இந்த கருப்பட்டி விற்பனையில் காலம் காலமாக கருப்பட்டி செய்து வருபவர்களுக்கே அதிக அளவு லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.
முதலில் தொடங்கியதும் இந்த கருப்பட்டி செய்யும் தொழிலில் லாபத்தை பெற முடியாது என திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.இவரும் அதிக அளவு கஷ்டங்களை பெற்று இந்த கருப்பட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த தொழிலை பல வருடங்களாக செய்து வருவதால் இவருக்கு இந்த தொழிலில் லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் கருப்பட்டி தயார் செய்வதற்கு பதம் பார்க்கும் முறையினை இவரே பார்த்து செய்து விடுவதாக கூறுகிறார்.இவர் இந்த கருப்பட்டி செய்யும் முறையினை நன்கு அறிந்து கொண்டுள்ளதாகவும், இவரிடம் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து பணங்கருப்பட்டியை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
பணகருப்பட்டியை அச்சில் ஊற்றும் முறை
பணங்கருப்பட்டி தயார் செய்வதற்கு பதனியை வைத்து காய்ச்சிய பாவினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை ஆற்றிய பிறகு பணங்கருப்பட்டி அச்சில் ஊற்ற வேண்டும் என திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
இந்த பாவினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனை நன்றாக அதன் சூடு ஆறும் வரை ஆற்ற வேண்டும் எனக் கூறுகிறார்.இவ்வாறு பாவினை ஆற்றிய பிறகு அதனை எடுத்து பணங்கருப்பட்டி உருவாக்க பயன்படுத்தி வரும் அச்சில் ஊற்ற வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு அந்த பணங்கருப்பட்டி தயார் செய்ய பயன்படுத்தும் அச்சில் ஊற்றிய பிறகு அது நன்றாக காய்ந்து விடும் என கூறுகிறார்.இவ்வாறு அந்த பாவனது காய்ந்ததற்குப் பிறகு அதனை எடுத்து விட வேண்டும் என திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார். இவ்வாறு எடுத்ததற்கு பிறகு பணங்கருப்பட்டி முழுமையாக நமக்கு கிடைத்துவிடும் என கூறுகிறார்.
மேலும் இந்த பணங்கருப்பட்டி தயார் செய்யும் போது அதில் கடலை மற்றும் நிலக்கடலை ,சுக்கு போன்ற உங்களுக்கு தேவையானவைகளை போட்டு கொள்ளலாம் எனவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.இவர் இந்த பணங்கருப்பட்டி தயாரிப்பை மிகவும் இயற்கையான எந்த பொருளும் சேர்க்காமல் மிக சுவையாக தயாரித்து வருகிறார்.
திரு வடிவேலு அவர்களிடம் பணங்கருப்பட்டி வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.மேலும் அலைபேசியின் மூலம் திரு வடிவேலு அவர்களை தொடர்பு கொண்டு யாராவது பணங்கருப்பட்டி வேண்டும் என்று கூறினால் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.
பணங்கருப்பட்டி முழுமையாக அதன் வடிவத்தை பெறுவதற்கு ஏழிலிருந்து எட்டு மணி நேரம் தேவைப்படும் எனவும் திரு வடிவேலு அவர்கள் கூறுகிறார்.மேலும் திரு வடிவேலு அவர்கள் உள்ள ஊரானது மிகவும் இயற்கையான ஒரு இடமாகும்.இதனால் இவர் இந்த பணங் கருப்பட்டி உற்பத்தியியை மிகவும் இயற்கையான முறையிலேயே உற்பத்தி செய்து வருகிறார்.
மேலும் இவரிடம் உள்ள அனைத்து கருப்பட்டிகளும் மிகவும் தரமானதாகும்.திரு வடிவேலு அவர்கள் இந்த பணங்கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறையினை மிகவும் இயற்கையான முறையில் தரமானதாக உற்பத்தி செய்து வருகிறார்.
மேலும் படிக்க:இயற்கையான வழிமுறையில் வாழைப்பழம் உற்பத்தி.