திரு கோவிந்தராஜ் அவர்கள் ஒரு தர்பூசணி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இந்த தர்பூசணி விற்பனையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தர்பூசணி பண்ணையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு கோவிந்தராஜ் அவர்களின் வாழ்க்கை
திரு கோவிந்தராஜ் அவர்கள் இந்த தர்பூசணி பண்ணையை வைப்பதற்கு முன்பு பாரம்பரியமாக செய்து வரும் நெல், மக்காச்சோளம், கரும்பு போன்ற விவசாயத்தையே செய்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு பாரம்பரிய விவசாய முறையை செய்து வந்துகொண்டிருந்த திரு கோவிந்தராஜ் அவர்கள் அவரின் நண்பரின் தூண்டுதலின் மூலம் இந்த தர்பூசணி பண்ணையை வைத்ததாக கூறுகிறார். மேலும் திரு கோவிந்தராஜ் அவர்கள் மொத்தமாக ஏழு ஏக்கர் நிலத்தில் இந்த தர்பூசணி பழத்தை வளர்த்து வருகிறார்.
மற்றும் திரு கோவிந்தராஜ் அவர்கள் இந்த தர்பூசணி பண்ணையினை மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான சூழலில் வளர்த்து வருகிறார். இவரின் தர்பூசணி பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார். மேலும் இந்த தர்பூசணி பழ விற்பனையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
தர்பூசணி பழம்
பொதுவாக தர்பூசணி பழம் என்று எடுத்துக் கொண்டாலே அதைப் பற்றி அதிக அளவு யாருக்கும் தெரிவதில்லை எனக் கூறுகிறார். திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு இதைப்பற்றி தெரியாமலேயே இருந்ததாகவும் அவரின் நண்பரின் அறிவுரையின் மூலம் அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.
மேலும் இன்றுள்ள விவசாயிகள் அனைவரும் பாரம்பரியமாக செய்துவரும் நெல் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர் வகைகளையே விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் திரு கோவிந்தராஜ் அவர்கள் இந்த தர்பூசணி பழ பண்ணையை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.
இந்த தர்பூசணி பழ விவசாயத்தை பாதி பேர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார். தர்பூசணி பழத்தை தண்ணீர் காய் எனவும் அழைக்கப் படுவதாக திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் விருதுநகர் பகுதிகளில் அதிக அளவு மக்காச்சோளத்தையே விளைவிக்கின்றன எனவும் கூறுகிறார். இவ்வாறு இவர்கள் மாற்று பயிர்களை விளைவிக்காமல் பாரம்பரிய பயிர்களையே விளைவிப்பதற்கு காரணம் புதிய பயிர்களை விளைவித்து அதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என பயம் கொண்டிருப்பது காரணம் என கூறுகிறார்.
எனவே இவ்வாறு பயம் கொள்ளாமல் இந்த புதிய பயிர்களையும் விளைச்சல் செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெறலாம் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
Income of watermelon fruit
இந்த தர்பூசணி பழ விற்பனையில் அதிக அளவு வருமானம் கிடைக்கும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.இந்த தர்பூசணி பழம் ஆனது ஒரு கிலோ 6 ரூபாய் என்று விற்பனை செய்தாலும் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.
இந்த தர்பூசணி பழ வளர்ப்பில் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் இதன் மூலம் அதிக அளவு வருமானமே கிடைக்கும் எனவும் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார். மேலும் திரு கோவிந்தராஜ் அவர்களின் நண்பர் இந்த தர்பூசணி பழ விளைச்சலில் ஒரு ஏக்கருக்கு 30 டன் தர்பூசணிகளை அறுவடை செய்து உள்ளதாக கூறுகிறார்.
இவரது நண்பர் தர்பூசணி பழங்களை விற்கும் சமயங்களில் ஒரு டன் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனதாக கூறுகிறார். மேலும் தர்பூசணி பழ விற்பனையில் ஒரு ஏக்கர் தர்பூசணி பழம் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் என கூறுகிறார்.
இதில் செலவு என்று பார்த்தால் அறுபதாயிரம் ரூபாய் வரை செலவாகும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார். இந்த தர்பூசணி பழம் 60 நாட்களில் விளைச்சலை அளித்து விடும் என கூறுகிறார். எனவே இந்த தர்பூசணி பழத்தில் அதிக அளவு வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.
தர்பூசணியை விளைச்சல் செய்ய சரியான இடங்கள்
திரு கோவிந்தராஜ் அவர்கள் இந்த தர்பூசணி பழ வளர்ப்பை அனைத்து மாவட்டங்களிலும் செய்யலாம் என கூறுகிறார். அனைத்து இடங்களுக்கும் இந்த தர்பூசணி பழம் ஆனது நன்கு வளரும் என கூறுகிறார். ஆனால் இந்த தர்பூசணி பழத்திற்கு நீரானது சரியான அளவில் அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
இந்த தர்பூசணி பழத்தை வறட்சியான மாவட்டங்களில் வளர்த்தால் கூட குறைந்த அளவு நீரை வைத்து இந்த தர்பூசணி பழ வளர்ப்பை நல்ல முறையில் செய்ய முடியும் என கூறுகிறார். இதற்காக அதிக அளவு நீர் தேவைப்படாது என கூறுகிறார்.
மேலும் இதில் மல்சிங் சீட் போட்டு அதன் மூலம் நீரை அளிக்கலாம் என கூறுகிறார். ஒரு ஏக்கருக்கு ஒரு நாளில் 15 நிமிடம் மட்டும் நீரை அளித்தால் போதுமானது என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
எனவே இந்த தர்பூசணி பழத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் வளர்த்த முடியும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
Method of sale and Maintenance of watermelon
பொதுவாக இந்த தர்பூசணி பழ விற்பனையில் வெயில் காலங்களில் அதிக அளவில் தர்பூசணி பழங்கள் விற்பனையாகும் என கூறுகிறார். இதேபோல் மழைக் காலங்களிலும் அதிக அளவு விற்பனையாகும் என கூறுகிறார்.
ஏனெனில் இந்த தர்பூசணி பழங்கள் ஆனது வருடம் முழுவதும் வெளிநாடுகளில் ஏற்றுமதி ஆகி வருவதாக கூறுகிறார். இதனால் இந்த தர்பூசணி பழங்களுக்கு வருடம் முழுவதும் நல்ல கோரிக்கைகள் இருக்கும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த தர்பூசணிகள் ஆனது விளைந்ததற்கு பிறகு வியாபாரிகளுக்கு தகவல் அளித்தால் மட்டும் போதுமானது எனக் கூறுகிறார். வியாபாரிகளே வந்து இந்த தர்பூசணி பழங்களை பறித்து அதனை எடைபோட்டு பணத்தை அளித்து விட்டு சென்று விடுவார்கள் என கூறுகிறார்.
இதனால் விற்பனை முறை மிக எளிதாக இருக்கும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார். மற்றும் இந்த தர்பூசணி பழங்களை மயில் மற்றும் காகங்கள் போன்ற பறவைகள் சேதபடுத்துவதற்கு அதிக அளவு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
மல்சிங் சீட் மீது மட்டும் வந்து பறவைகள் அமர்வதால் அவை சேதம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகிறார். எனவே கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார். மேலும் இந்த தர்பூசணிகளுக்கு மருந்துகள் அடிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை எனக் கூறுகிறார்.
உரம் மட்டும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை அளிக்க வேண்டும் என கூறுகிறார். மேலும் இவற்றிற்கு வேலையாட்கள் அதிகளவில் தேவை இல்லை என கூறுகிறார். மேலும் இவர் மெலோடி என்ற தர்பூசணி வகையை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த வகை தர்பூசணிகள் ஆனது வருடம் முழுவதும் விளைச்சலை தந்துகொண்டே இருக்கும் எனக் கூறுகிறார்.
புதியதாக தர்பூசணி வளர்ப்பை தொடங்குபவர் செய்ய வேண்டியவை
புதிதாக தர்பூசணி பண்ணையை தொடங்குபவர் அவர்களின் ஊரில் உள்ள நர்சரியை தொடர்பு கொண்டாலே அவர்களே பண்ணை அமைத்து 15 நாட்களில் செடியினை நட்டு அளித்து விடுவார்கள் என கூறுகிறார்.
இதனால் நமக்கு விற்பனையிலும், செடியை நடுவதிலும் எந்தவித கஷ்டமும் இருக்காது என கூறுகிறார். மேலும் மல்சிங் சீட்டையும் நர்சரியில் உள்ளவர்களே போட்டு தந்து விடுவதாகவும் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் புதியதாக தர்பூசணி வளர்ப்பை செய்பவர்கள் முதலில் அதிக அளவில் செடிகளை வளர்த்த கூடாது என கூறுகிறார். ஏனெனில் அதிக செடிகளை விளைவித்து அதன் மூலம் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.இதனால் முதலில் குறைந்த அளவு செடிகளை விளைவித்து பார்த்துவிட்டு அதன் மூலம் அதிக அளவு விளைச்சல் வருகிறதா என்பதை பார்த்ததற்கு பிறகு அதிக அளவு செடிகளை விளைவிக்கலாம் என கூறுகிறார்.
மேலும் இந்த தர்பூசணி பழ செடிகள் ஆனது அனைத்து வகை தண்ணீரிலும் நன்றாக வளரும் என திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறுகிறார்.மேலும் தர்ப்பூசணி பழங்களானது நல்ல சுவையான பழங்கள் ஆகவும் இருக்கும் என கூறுகிறார்.
திரு கோவிந்தராஜ் அவர்கள் இந்த தர்பூசணி பழ வளர்ப்பில் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:பட்டதாரியின் சிறப்பான வெற்றிலை விவசாயம்.