அசில் முட்டைக்கோழி பண்ணை.

கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் திரு கண்ணன் அவர்கள் ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய அசில் முட்டை கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

அசில் முட்டைக்கோழி பண்ணையின் தொடக்கம்

திரு கண்ணன் அவர்கள் கரூர் அருகில் உள்ள கே பரம்பதி என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இங்கு ஒரு அசில் முட்டை கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.

இவர் கோழிகளை கட்டுத்தரை பண்ணை முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார். தமிழ்நாட்டிலேயே இவருடைய கட்டுத்தரை பண்ணையே மிகவும் பெரிய கட்டுத்தரை பண்ணை என கூறுகிறார்.

இப்பொழுது பண்ணை வைத்துள்ள யாரிடமும் அதிக அளவில் அசில் கட்டுத்தரை முட்டைக்கோழிகள் இல்லை என கூறுகிறார். இதன் காரணமாகவே இவர் இந்த அசில் முட்டைக் கோழி பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

இந்த அசில் முட்டைக் கோழிகளை விட மற்ற கோழிகளிலேயே அதிக அளவு லாபம் கிடைக்கும் என கூறுகிறார். காரணம் மற்ற கோழிகள் வருடத்திற்கு அதிகளவு முட்டைகளை இடும் எனக் கூறுகிறார். ஆனால் இந்த அசில் கோழி முட்டைகள் வருடத்திற்கு 50 முட்டைகளை மட்டுமே இடும் எனக் கூறுகிறார்.

இதன் காரணமாகவே அசில் கோழிகள் அதிக விலையில் விற்பனை ஆவதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார். இதன் காரணமாகவே இவர் இந்த அசில் முட்டை கோழி பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

Raising method of Achilles Hens

திரு கண்ணன் அவர்களின் பண்ணையில் மொத்தமாக 1200 தாய் கோழிகள் இருப்பதாக கூறுகிறார். மேலும் இவர் ஆயிரம் கோழி குஞ்சுகளை தயார் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த அனைத்து கோழிகளையும் கூண்டில் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார். இவரின் பண்ணையின் அளவு மொத்தமாக இரண்டு ஏக்கர் என கூறுகிறார். இந்த 2 ஏக்கர் நிலத்தில் 1200 கோழிகளை வளர்ப்பது மிக கடினம் எனக் கூறுகிறார்.

இதனாலேயே இவர் கூண்டு அமைத்ததாகவும், கோழிகள் முட்டையிடும் போது மட்டுமே கூண்டில் வைப்பதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார். முட்டையிடும் போது மட்டும் கோழிகளை கூண்டில் வைத்து விட்டு மற்ற சமயங்களில் எல்லாம் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

இவர் கோழிகளை முட்டையிடும் சமயங்களில் மட்டும் கூண்டில் வைப்பதற்கு காரணம் முட்டைகளை எடுப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பதற்காகவே எனக் கூறுகிறார். அனைத்து கோழிகளையும் மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது மற்ற கோழிகள் ஆனது முட்டையிட்ட கோழிகளின் முட்டைகளை உடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

இதனாலே இவர் முட்டையிடும் கோழிகளை தவிர மற்ற கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார். மேலும் முட்டை இடும் கோழிகளை 15 நாட்களுக்கு மட்டுமே கூண்டில் வைப்பதாக கூறுகிறார்.

அதன் பிறகு அவைகளை மேய்ச்சல் முறையில் விட்டு விடுவதாக கூறுகிறார். திரு கண்ணன் அவர்கள் கட்டுத்தரை சேவல்களில் 200 சேவல்களையும், முட்டைக் கோழிகள் ஒரு 1200 கோழிகளையும், கோழிக்குஞ்சுகளில் ஒரு ஆயிரம் கோழி குஞ்சுகளையும் வைத்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் இவர் விற்று வந்த அனைத்து கோழி மற்றும் சேவல்களைப் பற்றி இதுவரையில் எந்த குறையும் வந்ததில்லை என கூறுகிறார். மேலும் திரு கண்ணன் அவர்கள் இவரின் கோழி பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார்.

கோழிகளுக்கு அளிக்கும் தீவனங்கள்

திரு கண்ணன் அவர்கள் சிறு கோழி குஞ்சுகளுக்கு முதல் 2 மாதங்களுக்கு ஸ்டாட்டரை அளிப்பதாக கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப் பின் மக்காச்சோளத்தை அரைத்தும், கம்பினை முளை கட்டியும் தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார். இந்த முறையில் தீவனங்களை கோழிக்குஞ்சுகளுக்கு அளித்தால் அவைகள் நல்ல வளர்ச்சியை பெறும் எனவும் கூறுகிறார்.

இதுவே தாய்க்கோழி மற்றும் பெட்டைக் கோழிகளுக்கு லேயர் பிரீடர் மற்றும் லேயர் தெர்மல் போன்ற வகைகளை அளித்து வருவதாக கூறுகிறார். இதில் ஏதாவது ஒரு வகையை தொடர்ச்சியாக அளித்து வரவேண்டும் என திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் தாய்க்கோழி மற்றும் சிறு கோழி குஞ்சுகளுக்கு அசோலாவை அளித்து வருவதாக கூறுகிறார். இரண்டு மாதத்திற்கு மேலான கோழி குஞ்சுகளுக்கு மட்டுமே அசோலாவை அளிப்பதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் புழுக்களை உற்பத்தி செய்து அதனையும் உணவுகளாக அளித்து வருவதாக கூறுகிறார். மேலும் பருத்திக்கொட்டை புண்ணாக்கை ஊறவைத்த அளித்து வருவதாக கூறுகிறார். இவற்றை கோழிக்குஞ்சுகளுக்கும், பெரிய கோழிகளுக்கும் வாரத்திற்கு ஒரு முறை தீவனமாக அளித்து வருவதாக திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இது போக அனைத்துக் கோழிகளும் அதிக அளவில் மேய்ச்சல் முறையிலேயே வளர்ந்து வருவதாக கூறுகிறார். இதனால் இவருக்கு தீவனத்தின் செலவு குறையும் எனவும் கூறுகிறார். மற்றும் கோழிகள் மேய்ச்சல் முறையில் வளர்வதால் மிகவும் இயற்கையான முறையில் நல்ல உடல் வளர்ச்சியுடனும் இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் அளித்துவரும் அனைத்து தீவனங்களிலும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதாக கூறுகிறார்.

The cost of fodder

திரு கண்ணன் அவர்கள் தாய் கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 150 கிராம் தீவனத்தை செலவு செய்வதாக கூறுகிறார். இவர் முதலில் 80 கிராம் மற்றும் 120 கிராம் தீவனத்தை கோழிகளுக்கு அளித்து வந்ததாக கூறுகிறார்.

ஆனால் இந்த கோழிகளுக்கு இந்த அளவில் தீவனத்தை அழிப்பதால் அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதில்லை என கூறுகிறார். தீவனத்தை கோழிகள் ஆனது விரைவாக உண்டு விடுகின்றன என கூறுகிறார். எனவே 150 கிராம் தீவனத்தை கோழிகளுக்கு அளித்தால் மட்டுமே அவைகளுக்கு அது சரியாக இருக்கும் என கூறுகிறார்.

கோழிகளை மேய்ச்சல் முறையில் வளர்த்தாலும், கூண்டில் வைத்து வளர்த்தாலும் ஒரு நாளைக்கு 150 கிராம் தீவனத்தை கோழிகளுக்கும் அளித்தே ஆகவேண்டும் என கூறுகிறார். இந்த அசில் முட்டை கோழிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் தீவனத்தை சாதாரணமாக உண்ணும் என திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

திரு கண்ணன் அவர்களின் பண்ணையிலுள்ள அனைத்து கோழிகளின் தீவன செலவு ஆனது ஒரு நாளைக்கு 6000 ரூபாய் செலவாகும் எனக் கூறுகிறார்.

கோழிகளின் நோய்த் தடுப்பு முறை

திரு கண்ணன் அவர்கள் கோழிகளுக்கு நோய் ஏற்படும் முன்பே அதனை சரி செய்து விடுவதாக கூறுகிறார். இப்பொழுது இவர் கோழிக்குஞ்சுகளை இவரே வளர்த்து வதால் சிறுவயதிலேயே அவைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் கோழிகள் வளர்ந்த பிறகு அவைகளுக்கு வெள்ளைக்கழிச்சல் என்ற நோய் மட்டுமே ஏற்படுவதாக கூறுகிறார். இதனால் இவர் வருடத்திற்கு இரண்டு முறை கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு விடுவதாக கூறுகிறார். இதனால் கோழிகளுக்கு ஆறு மாதத்திற்கு எந்தவித நோயும் ஏற்படுவதில்லை என கூறுகிறார்.

மற்றும் கோழிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை குடல் புழுக்களை நீக்கி விடுவதாக கூறுகிறார். மேலும் கோழிகள் அருந்தும் நீரில் அல்போமர் என்னும் மருந்தை கலந்து விடுவதாக கூறுகிறார். இதனால் கோழிகளுக்கு எந்த வித நோயும் ஏற்படாது எனவும் திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார். இந்த முறையிலேயே இவர் கோழிகளின் நோய்களை சரி செய்து மற்றும் தடுத்து வருவதாக கூறுகிறார்.

Eggs and sale method of Achilles hens

இந்த அசில் முட்டைக் கோழிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே முட்டைகள் இடும் என கூறுகிறார். இதில் ஒவ்வொரு முறையும் கோழிகள் 12 மற்றும் எட்டு முட்டைகளை வைக்கும் என கூறுகிறார்.இவைகள் வருடத்திற்கு 50 முட்டைகளை மட்டுமே இடும் என திரு கண்ணன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் கோழிகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். மற்றும் இவர் கோழி முட்டைகள் மற்றும் கோழி குஞ்சுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் இவர் கோழிகளை அருகில் உள்ளவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு கண்ணன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை சூழலில் இந்த அசில் முட்டைக் கோழி பண்ணையை நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான நெல் விவசாயம்.

Leave a Reply