மண்ணில்லாமல் மாடித்தோட்டம்.

திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் மண்ணில்லாமல் மாடி தோட்டத்தை அமைத்து அதனை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மண்ணில்லாமல் வளரும் மாடி தோட்டத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திருமதி அனிதா அருண் குமார் அவர்களின் வாழ்க்கை

திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் சென்னையில் வசித்து வருவதாக கூறுகிறார். இவர் இவருடைய வீட்டின் மாடியில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மாடித் தோட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார்.

மேலும் மண்ணில்லாமல் செடியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் மாடி தோட்டத்தை அமைத்து கொள்ளலாம் என கூறுகிறார். மண்ணில்லாமல் வெறும் நீரை மட்டும் வைத்து இந்த வகை மாடி தோட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்த முடியும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தில் அதிக அளவில் நன்மைகள் இருப்பதாகவும் திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் இவர்கள் பொதுவாகவே விவசாயத்தை பின்பற்றி வந்தவர்கள் என கூறுகிறார்.

மற்றும் இவர்கள் வீட்டுத் தேவைக்காக சந்தைகளில் கீரை வாங்கி வரும் போது இவருடைய கணவர் கீரைகளில் மருந்துகள் கலந்து இருப்பார்கள் என கூறுவதாகக் கூறுகிறார். இவ்வாறு இவர் கூறுவதனால் இதற்கு என்ன முடிவு என பார்க்கும் போது தான் இவருக்கு இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை அமைக்கலாம் என்ற எண்ணம் வந்ததாக திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்களுடைய கிராமத்தில் ஒவ்வொரு முறையும் சென்று கீரை பறித்து வர முடியாது என்ற காரணத்திற்காக இவர்கள் இவர்கள் வீட்டிலேயே ஒரு தோட்டத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தை அடிப்படையாக வைத்து இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை அமைத்து உள்ளதாக திருமதி அனிதா அருண்குமார் கூறுகிறார்.

மேலும் திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் இந்த மாடித் தோட்டத்தில் மூலம் நல்ல பலனை பெற்று வருவதாகவும், மேலும் இந்த மாடித் தோட்டம் அமைப்பது மிக சுலபமான ஒரு வழி முறை எனவும் திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

Hydroponics terrace garden

திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் முறையிலான செடிகள் வளர்ப்பு முறை மிகவும் சிறப்பான மற்றும் சுலபமான ஒரு வழி முறைகள் என கூறுகிறார்.

மேலும் இவர் இந்த மாடித் தோட்டத்தை முதலில் சிறிய அளவில் தொடங்கியதாக கூறுகிறார். மற்றும் இது நல்ல வளர்ச்சியை பெற்றதும் அதிக அளவில் வளர்த்தியதாக திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தின மூலம் இவர் மிகவும் சுலபமான முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்து அதனை பறித்து உணவுகள் செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவரே காய்கறிகளை உற்பத்தி செய்வதால் அதை உண்ணும் போது எந்தவித நோய்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என கூறுகிறார்.

ஏனெனில் சந்தைகளில் வாங்கும் காய்கறிகளில் மருந்துகள் அடித்து வளர்த்துவார்கள் எனக் கூறுகிறார். ஆனால் இவருடைய காய்கறிகளில் எந்தவித மருந்துகளும் கலக்காமல் மிகவும் இயற்கையான முறையில் இயற்கை சூழலில் வளர்வதாக திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் மாடி தோட்டத்தில் மண்ணை வைத்து மாடி தோட்டம் அமைக்கலாம் எனவும், மற்றும் நகரும் மாடித்தோட்டம் அமைக்கலாம் எனவும், மேலும் தொட்டிகளை வைத்து மாடித்தோட்டம் அமைக்கலாம் எனவும் கூறுகிறார். ஆனால் இவர் இந்த மூன்று வகைகளையும் செய்யாமல் ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.

இவர் இவ்வாறு இந்த மூன்று வகையிலான மாடி தோட்டங்களையும் அமைக்காமல், ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை அமைத்ததற்கு காரணம் மண்ணில் தோட்டம் அமைக்க முடியாத காரணமே என கூறுகிறார்.

ஏனெனில் இவர் மாடி தோட்டம் அமைக்கும் போது ஆரம்பத்தில் மண்ணிலேயே அமைத்ததாக கூறுகிறார். மண்ணில் தோட்டத்தை பராமரிக்க முடியாத காரணத்தால் தான் இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடித் தோட்டத்தை அமைத்ததாக திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் திருமதி அனிதா அருண்குமார் அவர்களுடைய மகள் சமூக வலைதளங்களில் ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை பற்றி அறிந்து கொண்டு அவற்றை இவரிடம் கூறிய பிறகு தான் இவருக்கு இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை பற்றி தெரியும் எனவும் கூறுகிறார்.

இந்த முறையிலேயே இவர் ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை பற்றி அறிந்து கொண்டு அவற்றை அமைத்து இப்பொழுது சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மாடி தோட்டத்தின் அமைப்பு

திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் இவருடைய ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் அமைத்து உள்ளார்.

இந்த ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தில் பிளாஸ்டிக்கால் ஆன ஒரு பொருளை 5 அடுக்குகளாக உருவாக்கி அதில் ஒவ்வொரு துளையிலும் ஒவ்வொரு செடியையும் கோகோ காயர் பெட்டால் பொருத்தி வைத்து இந்த அமைப்புக்கு அடியில் ஒரு பெரிய பானையில் நீரை வைத்து அதில் உள்ள நீர் அனைத்தும் செடிகளுக்கு வரும் அளவிற்கு அமைத்து உள்ளார்.

மற்றும் இவருடைய மாடி தோட்டத்தில் உள்ள இந்த பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் உள்ள முதல் அடுக்கில் அரைக் கீரை வகைகளையும், இரண்டாவது அடுக்கில் சிறு கீரை வகைகளையும், மூன்றாவது அடுக்கில் வெந்தயக் கீரை வகைகளையும், நான்காவது அடுக்கு பச்சை தண்டுக் கீரைகளையும், ஐந்தாவது அடுக்கில் சிவப்பு தண்டுக் கீரைகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இதே போன்று பிளாஸ்டிக்கால் ஆன ஒரு அமைப்பை இரண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அதில் இரண்டாவதாக இருக்கும் பிளாஸ்டிக் போன்ற அமைப்பில் முதல் அடுக்கில் வெந்தயக் கீரை வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த வெந்தயக் கீரை வகைகள் மற்ற கீரைகளை விட மிகவும் வேகமாக வளர்ந்து விடுவதாக கூறுகிறார்.

மற்றும் இரண்டாவது அடுக்கில் பாலக் கீரை வகைகளையும், மூன்றாவது அடுக்கில் சிவப்பு தண்டு கீரை வகைகளையும் வளர்த்து வருவதாக திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.மேலும் இவர் கீரை வகைகளை மட்டும் வளர்த்துவதற்கு காரணம் இவர் NFT முறையில் அதாவது பூஞ்சை இல்லாத டோக்கன் முறையில் மாடித் தோட்டத்தை வளர்த்து வருவதே காரணம் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த NFT முறையில் கீரை வகைகளை மட்டுமே வளர்த்த முடியும் என திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் இவர் காய்கறிகளை ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வளர்த்துவதற்கு வாளி அமைப்பை தற்போது தொடங்கி உள்ளதாக கூறுகிறார்.

Working method and maintenance method

இந்த NFT முறை செயல்படும் முறையானது இவற்றிற்கு அடியில் ஒரு பெரிய பானையில் தண்ணீரை வைத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு மோட்டார் மூலம் NFT பைப்பில் நீரை விட்டு அதனை செடிகளுக்கு அளிப்பதாக கூறுகிறார். மேலும் மீதமுள்ள நீரானது இந்த பானைக்கு திரும்பி வந்து விடுவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த மண்ணில்லாமல் விவசாயம் செய்யும் முறையில் இடமானது மீதமிருக்கும் எனவும், மேலும் கீரைகளை அதிகளவில் விளைச்சல் செய்ய முடியும் எனவும், மற்றும் மண்ணில் விவசாயம் செய்வதை விட இந்த முறையில் விவசாயம் செய்தால் விரைவில் விளைச்சல் கிடைத்து விடும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த முறையில் செடியை வளர்த்து வந்தால் அதிக அளவில் களைகள் ஏற்படாது எனவும், குறைந்த அளவு மட்டுமே நீர் தேவைப்படும் எனவும் கூறுகிறார். மேலும் இவற்றை பராமரிப்பதற்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் மட்டுமே போதும் எனவும் திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

ஆனால் சாதாரண மாடி தோட்டத்தில் ஒரு மணி நேரம் பராமரிப்பு முறைக்கு செலவிட வேண்டும் என திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த கீரைகள் மிகவும் இயற்கையான முறையில் இயற்கை சூழலில் வளர்வதால் இதனுடைய சுவையும் மிகவும் நன்றாக இருக்கும் எனவும் திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் கூறுகிறார்.

திருமதி அனிதா அருண்குமார் அவர்கள் இவருடைய ஹைட்ரோபோனிக்ஸ் மாடி தோட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை சூழலில் வளர்த்து அதன் மூலம் அதிக அளவு பலனை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க;வெள்ளரி உற்பத்தியில் அசத்தும் பெண்மணி.

Leave a Reply