திரு வின்ஸ்டன் அவர்கள் கோயமுத்தூரில் பண்ணையில் உள்ள கால்நடையின் கழிவுகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், மின்சாரம் தயாரிக்கும் முறைகளைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Mr.Winston is their biogas company
திரு வின்ஸ்டன் அவர்கள் கோயம்புத்தூரில் கால்நடை பண்ணையில் இருந்து கிடைக்கும் கழிவுகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், இவருடைய நிறுவனத்தின் பெயர் பிரிட் என்விரோடெச் எனவும் கூறுகிறார்.
இவர் இந்த நிறுவனத்தை இவருடைய நண்பர் முருகானந்தன் அவர்களுடன் சேர்ந்து நடத்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தை இவர்கள் இணைந்து ஏழு வருடங்களாக நடத்தி வருவதாகவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்த பயோ கேஸ் முறையினை பெரிய பண்ணைகளுக்கு மட்டும் தயார் செய்து தராமல் சிறிய அளவில் உள்ள பணியாளர்களுக்கும் உருவாக்கி தருவதாகவும் கூறுகிறார்.
திரு வின்ஸ்டன் அவர்கள் மிகவும் திறமையுடன் கால்நடைகளின் கழிவுகளை வெறும் கழிவுகளாக மட்டும் பயன்படுத்தாமல் அந்த கழிவுகளை வைத்து மின்சாரம் மற்றும் பயோ கேஸ் போன்ற தொழில்நுட்பம் தொடர்பானவைகளை உருவாக்கி வருகிறார்.
இவர்கள் இதுவரையில் தமிழ்நாடு முழுவதும் ஆறுநூறு பண்ணைகளில் இந்த பயோகேஸ் முறையினை உருவாக்கி தந்துள்ளதாக திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
உயிர் வாயு
எந்த ஒரு பொருள் அழுகும் போது ஒரு விதமான வாசனை அடிக்கிறதோ அந்தப் பொருளே பயோகேஸ் எனவும், இந்த பயோகேஸை எந்த முறையில் எடுக்கிறோமோ அதன் பெயர்தான் தொழில்நுட்பம் என திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பயோ கேஸ் மற்றும் மின்சாரம் அமைக்கும் முறையை பண்ணைகளில் அமைக்கும் போது ஒவ்வொரு பண்ணை அமைந்துள்ள இடங்களுக்கும் ஒவ்வொரு வகையில் இதனை அமைக்க முடியும் என கூறுகிறார்.
இப்பொழுது நாம் ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் செல்லும் போது ஒரு வாசனை அடிக்கிறது என்றால் அது கண்டிப்பாக பயோ கேஸ் தான் எனவும், இவ்வாறு வெளிவரும் வாசனைகள் அனைத்தையும் ஒரு கொள்கலனில் வைத்து அதனை சரியான முறையில் பயன்படுத்துவது தான் பயோ கேஸ் என கூறுகிறார்.
மேலும் இந்த பண்ணைக் கழிவுகளில் இருந்து பயோ கேஸ் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டையும் எடுத்துக் கொள்ள முடியும் எனவும், இதனை பயன்படுத்தி ஜெனரேட்டரை செயல்படுத்த முடியும் எனவும் மற்றும் சமையல் செய்ய பயன்படுத்த முடியும் எனவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பண்ணைகளில் இருந்து கிடைக்கும் கழிவுகளை வைத்து மின்சாரம் மற்றும் பயோ கேஸ் போன்றவற்றை உருவாக்கும் போது நமக்கு செலவுகள் அதிக அளவில் இருக்காது எனவும், இதனால் நமக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும் எனவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
Bio gas Running Method
திரு வின்ஸ்டன் அவர்கள் இவர் பயோகேஸ் முறையை உருவாக்கி கொடுத்துள்ள ஒரு பண்ணையில் பன்றிகளை வளர்த்து வருவதாகவும், அந்த பன்றிகளின் கழிவுகளை வைத்தே இவர் இந்தப் பண்ணைக்கு பயோகேஸ் முறையை உருவாக்கி தந்ததாகவும் கூறுகிறார்.
இந்த வெண்பன்றி கழிவுகளை ஒரு வாய்க்காலை அமைத்து அந்த வாய்க்காலின் மூலம் ஒரு தொட்டிக்கு அனுப்புவதாகவும், இந்த முறையில் வாய்க் காலில் கழிவுகளை அனுப்பும் போது மிகவும் சுலபமான வகையில் இருக்கும் எனவும், அதிகளவு வேலைகள் இந்த முறையில் இருக்காது எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த முறையை பின்பற்றுவதால் வேலை செய்யும் நேரம் ஆனது குறையும் எனவும், இதனால் வேலையாட்களின் செலவுகள் குறையும் எனவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு வாய்க்காலின் மூலம் வரும் கழிவுகள் அனைத்தும் தொட்டிக்குள் சென்றவுடன் அந்த கழிவுகளை தொட்டியில் இருக்கும் அஜிடேட்டர் முழுவதுமாக கலக்கி விடும் எனவும், இது இவர் அமைத்துள்ள இந்த முறையில் மிகவும் ஒரு சிறப்பான முறை எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த முறையை பெரிய பண்ணைகளில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், சிறிய பண்ணைகளில் கைகளால் சுற்றும் முறையையே பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு இந்த கழிவுகளை 10 நிமிடம் வரை கலக்கும் போது அவற்றில் உள்ள குப்பைகள் அனைத்தும் சுத்தமாகி விடும் எனவும், இதனால் குப்பை இல்லாத தூய்மையான சாணம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கரைத்த சாணத்தை மற்றொரு தொட்டியில் விடுவதாகவும், இவ்வாறு அந்த தொட்டியில் இருந்து ஒரு பெரிய பயோகேஸ் தயாரிக்கும் தொட்டிக்கு இந்த கரைத்த சாணம் செல்வதாகவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
உயிர்வாயு உருவாகும் முறை
உயிர்வாயு உருவாகும் தொட்டியில் ஒரு சிறப்பான கட்டுமானத்தை திரு வின்ஸ்டன் அவர்கள் உருவாகியுள்ளதாகவும், அவை இந்த தொட்டியில் ஏதாவது குப்பைகள் இருந்தால் அதனை சுத்தம் செய்வதற்கு சாணம் வரும் குழாயை கொண்டு சுத்தம் செய்து கொள்ளும் முறையை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.
மேலும் இந்த சாணத்தில் இருந்து பயோ கேஸ் எடுத்ததற்குப் பிறகு அந்த சாணத்தை காடுகளுக்கு உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் இரண்டு சிறிய தொட்டிகளில் இருந்து கிடைக்கும் சாணங்கள் அனைத்தும் இந்த பெரிய தொட்டிக்குள் செல்லும்போது இந்த தொட்டியானது மிதக்கும் எனவும், பயன்படுத்த பயன்படுத்த தொட்டியானது கீழே இறங்கி விடும் எனவும் கூறுகிறார்.
இந்த முறையிலேயே இவர் பயோ கேஸை உருவாக்குவதாகவும்,இந்த பயோ கேஸ் தயாரிக்கும் தொட்டியானது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மிகவும் உறுதியான முறையில் இருக்குமெனவும்,இதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.
Specialization And maintenance of biogas
பொதுவாக மின்சாரம் இல்லாத இடங்களில் அதிக அளவில் டீசலை வைத்து மின்சாரம் பயன்படுத்தி வருவதாகவும், இவ்வாறு உள்ள இடங்களில் இந்த பயோகேஸ் முறையை பயன்படுத்தினால் டீசலின் செலவு குறையும் எனவும் திரு வின்ஸ்டன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் மின்சாரம் இல்லாத வீடுகள் மற்றும் தோட்டங்கள் மற்றும் பண்ணைகள் ஆகிய இடங்களுக்கு இந்த பயோ கேஸ் வைத்து மின்சாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் எனவும்,இதனால் 100% எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மற்றும் டீசல்,வாயு ஆகிய முறைகளில் புகைகள் அதிகமாக இருக்கும் எனவும் இந்த பயோகேஸ் முறையை பயன்படுத்தும் போது அந்த அளவிற்கு எந்தவித புகையும் வராது எனவும் இதனை பயன்படுத்தும் போது பயோகேஸ் பயன்படுத்துகிறோமா என்பதே தெரியாது எனவும் கூறுகிறார்.
மழை பெய்யும்போது இந்த பயோகேஸ் தயாரிக்கும் தொட்டியானது நனையக் கூடாது எனவும்,இவ்வாறு தொட்டி நனையாமல் இருப்பதற்கு தொட்டியை சுற்றி ஒரு வாய்க்கால் போன்ற அமைப்பை அமைத்து உள்ளதாகவும், அந்த அமைப்பில் மழைநீர் அனைத்தும் சென்று விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஊடகத்தையும், ரசாயனம் கலந்த தொட்டியையும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தூய்மை செய்ய வேண்டும் எனவும், இந்த பயோகேஸை பண்ணையில் உருவாக்குவதற்கு 2 லட்சம் வரை செலவாகும் எனவும்,அனைத்து பண்ணையாளர்களுக்கும் இவர் இதனை உருவாக்கி தருவதாகவும் கூறுகிறார்.
திரு வின்ஸ்டன் அவர்கள் பண்ணைக் கழிவுகளை வைத்து மின்சாரம் மற்றும் பயோகேஸ் தயாரிக்கும் முறையை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.
மேலும் படிக்க:மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி.
Good job brother!