புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா,கோட்டையூர் என்னும் கிராமத்தில் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் ஒரு மீன் பண்ணை வைத்து அந்த மீன்களுக்கு இயற்கை முறையில் தீவனங்களை உற்பத்தி செய்து அளித்து வருகிறார்.
இவரைப் பற்றியும், இவருடைய பண்ணையையும் மற்றும் தீவன முறைகளைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு பாலசுப்பிரமணியன் அவர்களின் வாழ்க்கை
திரு பாலசுப்ரமணியன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூக்காவில் உள்ள கோட்டையூர் என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு ஒரு மீன் பண்ணை வைத்து அந்த மீன்களுக்கு இயற்கையான முறையில் தீவனத்தை தயாரித்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும் மற்றும் இவர் மீன் வளர்ப்பு மற்றும் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை 10 ஏக்கர் நிலத்தில் நடத்தி வருவதாகவும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையை மிகவும் இயற்கையான முறையில் மிகுந்த பாதுகாப்பான வகையில் நடத்தி வருவதாகவும், இந்த முறை இவருக்கு அதிக அளவு நன்மை தருவதாகவும் கூறுகிறார்.
The structure of the farm
திரு சுப்பிரமணியன் அவர்களிடம் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும் இந்த பத்து ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தில் கொய்யா தோப்பையும், இரண்டு ஏக்கர் நிலத்தில் மாமரத் தோப்பையும், ஒரு ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை மர தோப்பையும், வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இரண்டு ஏக்கர் நிலத்தில் தானிய வகைகளை விதைத்து உள்ளதாகவும், மேலும் 2 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயத்தையும் மற்றும் மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் மழை பெய்யும் போது மழை நீரை சேமிப்பதற்கு ஒரு பண்ணை குட்டை அமைத்து பண்ணைக்குட்டையின் நடுவில் ஒரு கிணற்றை அமைத்து உள்ளதாகவும், இந்த கிணற்றில் உள்ள நீரினை எடுத்து பண்ணை குட்டையை முழுவதுமாக நிரப்பி விடுவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு பண்ணை குட்டையில் நிரப்பிய நீரில் மாட்டு சாணம் போன்றவற்றை கலந்து இயற்கையான மட்கிய உரமாக தோட்டங்களுக்கு நீரினை பாய்ச்சி வருவதாகவும், இந்த முறையில் நீரினை செடிகளுக்கு அளிப்பதால் அவைகள் நல்ல வளர்ச்சியை பெறும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பண்ணைக்குட்டைகுள் 3000 எண்ணிக்கையில் விரால், கெண்டை மீன்களை வளர்த்து வருவதாகவும், மேலும் இவர் இவருடைய பண்ணையை நவீன முறையில் அமைத்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
பண்ணை குட்டையின் தொடக்கம்
திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் இவருடைய பண்ணை குட்டையை மிகவும் சிறப்பான முறையில் அமைத்து உள்ளதாகவும், இந்த பண்ணை குட்டையை இவர் இவரின் நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
இவருடைய 10 ஏக்கர் நிலத்தின் வரைபடத்தில் எந்த இடத்தில் தாழ்வான பகுதி உள்ளதோ அந்த இடத்தை அறிந்து அதில் பண்ணை குட்டையை அமைத்ததாகவும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
இவர் இந்த பண்ணை குட்டையை தாழ்வான பகுதியில் அமைத்ததற்கு காரணம் அனைத்து நீரும் மழை பெய்யும்போது தாழ்வான பகுதிகளில் செல்லும் எனவும் இதன் காரணமாகவே இவர் தாழ்வான பகுதியில் பண்ணைக்குட்டையை அமைத்ததாகவும், அந்த பண்ணை குட்டையில் உள்ள நீரினை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக இவற்றை அமைத்ததாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த பண்ணை குட்டை 150 அடி நீளமும், 150 அடி அகலம் கொண்டுள்ளதாகவும், 15 அடி ஆழத்தை கொண்டுள்ளதாகவும், மழை நீர் அனைத்தும் பண்ணைக்குட்டைக்கு வரும் அளவிற்கு ஒரு குழாயை கொண்டு நீர் வரும் அளவிற்கு அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
Chicken waste is fish feed
திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் இவருடைய பண்ணையில் வளரும் கோழிகள் அனைத்தையும் தரையில் கொட்டகை அமைத்து வளர்த்தாமல் இந்த பண்ணை குட்டையில் மேல் ஒரு கொட்டகை அமைத்து அந்த கொட்டகைக்குள் வளர்த்து வருகிறார்.
இவர் இவ்வாறு கோழிகளை தரையில் கொட்டகை அமைத்து வளர்க்காமல் பண்ணைக்குட்டைக்கு மேல் கொட்டகை வைத்து வளர்த்து வருவதற்கு காரணம் கோழிகளின் கழிவுகள் அனைத்தும் பண்ணைக்குள் விழுந்தால் பண்ணை குட்டைகள் உள்ள மீன்களுக்கு உணவாக இருக்கும் என்ற காரணத்திற்காகவே என கூறுகிறார்.
இவ்வாறு கோழிகளின் கழிவுகள் அனைத்தும் நீரில் விழுந்தால் அவைகள் பச்சையமாக மாறி மீன்களுக்கு நல்ல சத்து நிறைந்த உணவாக கிடைக்கும் என்பதற்காக இவர் இந்த முறையில் கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் கோழிகளை தரையில் வளர்க்கும் போது அவைகளுடைய கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் எனவும், ஆனால் இந்த முறையில் பண்ணைக்குட்டைக்கு மேல் கோழிகளை வளர்ப்பதால் அவற்றின் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
கோழிகளின் கொட்டகை அமைப்பு
திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் இவருடைய பண்ணையில் பண்ணைக் குட்டையின் மேல் உள்ள கொட்டகையில் அனைத்து வகை நாட்டுக்கோழிகளை வளர்த்து வருவதாகவும், மேலும் இந்த கோழிகளுடன் இவர் முயல் வகைகளையும் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் தற்போது இந்த கோழி கொட்டகையின் அடியில் காடைகளை வளர்க்கும் எண்ணம் உள்ளதாகவும், அதனை கூடிய விரைவில் தொடங்க உள்ளதாகவும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் அனைத்து கோழிகளையும் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும், இந்த பண்ணை குட்டையில் உள்ள இயற்கையான முறையில் உள்ள நீரையே விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும், செயற்கை மருந்துகள் எதையும் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.
இந்த முறையில் இவர் கொட்டகை அமைத்து கோழிகளை வளர்த்து வருவது இவருக்கு மிகவும் சுலபமான முறையில் இருப்பதாகவும், மிகவும் பயனுள்ள வகையில் உள்ளதாகவும் திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் கூறுகிறார்.
The specialty And profit of the farm pond
திரு பாலசுப்பிரமணியன் அவர்கள் இவருடைய பண்ணையில் பண்ணைக்குட்டை அமைத்ததற்கு முக்கிய காரணம் மழைநீரை சேமிக்க வேண்டும் என்பதற்காகவும், நீர் பற்றாக்குறை இந்த மழைநீர் சேமிப்பு முறையில் இருக்காது எனவும் கூறுகிறார்.
தோட்டத்தில் இருக்கும் அனைத்து மழைநீரும் பண்ணை குட்டைகள் வரும்படி ஒரு பெரிய குழாய் அமைத்து உள்ளதாகவும், அந்தக் குழாயின் வழியில் மழை நீர் அனைத்தும் பண்ணை குட்டைகுள் வந்து விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் பண்ணை குட்டைக்கு மேல் கோழிக் கொட்டகையை அமைத்து உள்ளதால் அந்த கோழிகளின் கழிவுகள் மற்றும் கோழிகள் உண்ணும் உணவுகள் அனைத்தும் மீனுக்கு உணவாக கிடைத்து விடுவதால் மீன்களுக்கு என்று இவர் தனியாக தீவனம் அளிப்பது இல்லை என கூறுகிறார்.
இந்த முறையில் இவர் தீவன செலவை குறைப்பதாகவும், மேலும் பண்ணை குட்டையில் உள்ள மீன்களை விற்பனை செய்வதில் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் பண்ணைக்குட்டைக்கு மேல் கோழி கொட்டகை அமைத்து வளர்த்து வரும் முறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும், இந்த முறையை அமைத்து விட்டால் அது வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல லாபத்தை அளிக்கும் எனவும் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுகிறார்.
திரு பால சுப்பிரமணியன் அவர்கள் இவருடைய பண்ணையை மிகவும் சிறப்பான முறையில், இயற்கையான அமைப்பில் நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:பண்ணை கழிவுகளில் இருந்து இலவச மின்சாரம்.