சத்திய மங்கலத்தைச் சேர்ந்த திரு திரு மூர்த்தி அவர்கள் இயற்கையான முறையில் மூலிகை பொருட்களை வைத்து மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மூலிகை குளியல் கட்டிகள் தயார் முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Mr.Thirumurthy their life
திரு திரு மூர்த்தி அவர்கள் சத்தியமங்கலத்தில் வசித்து வருகிறார். இவர் இங்கு ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை வைத்து அந்த பண்ணையில் உள்ள பொருட்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இவருடைய பண்ணையில் விளையும் பொருட்களை வைத்து மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.
இவர் இவருடைய பண்ணையில் உள்ள தேங்காய் மற்றும் மஞ்சள் ஆகியவைகளை வைத்து சிறப்பான முறையில் மூலிகை குளியல் கட்டிகளை தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும், இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு இந்த மூலிகை குளியல் கட்டிகள் அனைத்தும் அதிகளவு மக்களிடையே வரவேற்பு பெற்று வருவதால் இவர் இந்த மூலிகை குளியல் கட்டிகளை அதிக அளவு தயார் செய்து விற்பனை செய்து வருவதாகவும், அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மூலிகை குளியல் கட்டிகள்
திரு திரு மூர்த்தி அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் இந்த மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து அவற்றை விற்பனை செய்து வருவதாகவும், இது இயற்கையான முறையில் மூலிகையினால் உருவாக்கப்பட்டதால் இவைகள் மிகவும் உடலுக்கு நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இப்பொழுது அதிக அளவில் ரசாயனம் கலந்த குளியல் கட்டிகள் சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்து விட்டதாகவும், அந்த ரசாயனம் கலந்த குளியல் கட்டிகளையே மக்கள் அனைவரும் வாங்கி உபயோகித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த முறையில் ரசாயனம் கலந்த குளியல் கட்டிகளை வைத்து நாம் குளித்தால் நமக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதாவது தோல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
இதனால் மக்கள் அனைவரும் இவ்வாறு ரசாயனம் கலந்த குளியல் கட்டிகளை வைத்து குளிக்காமல் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட மூலிகை குளியல் கட்டிகளை வாங்கி உபயோகித்தால் மிகவும் உடலுக்கு நன்மை கிடைக்கும் என கூறுகிறார்.
எனவே திரு திருமூர்த்தி அவர்கள் இந்த இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் மூலிகைக் குளியல் கட்டிகளை தயார் செய்து அவற்றை விற்பனை செய்து வருவதாகவும், இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
Types of herbal bath soap’s
திரு திரு மூர்த்தி அவர்கள் இவருடைய பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், அதில் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும், மேலும் இவர் இந்த முறையில் பண்ணையில் விளையும் பொருட்களை வைத்து மூலிகை குளியல் கட்டிகளையும் தயார் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த குளியல் கட்டிகள் அனைத்தையும் இவருடைய பண்ணையில் விளையும் தேங்காய்கள் மற்றும் துளசி, மஞ்சள் ஆகியவைகளை வைத்து தயாரித்து வருவதாகவும் இந்த முறையில் இயற்கை பொருட்களை வைத்து தயாரிப்பதால் குளியல் கட்டிகள் நல்ல முறையில் இருப்பதாகவும் கூறுகிறார்.
மஞ்சள் குளியல் கட்டி, தேங்காய் குளியல் கட்டி, துளசி குளியல் கட்டி போன்ற குளியல் கட்டி வகைகளில் ஒரு ஆறிலிருந்து ஏழு வகை குளியல் கட்டிகளை தயார் செய்து அவற்றை விற்பனை செய்து வருவதாக திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் உள்ள அனைத்து பொருட்களும் இவருடைய தோட்டத்தில் இருந்து விளைவிக்கப்பட்டது எனவும், எந்த பொருளையும் வெளியிலிருந்து வாங்கவில்லை எனவும் கூறுகிறார்.
மூலிகை குளியல் கட்டிகளை தயாரிக்கும் முறை
இப்பொழுது அதிக அளவில் இரசாயனம் கலந்த குளியல் கட்டிகளையே மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவற்றை குறைப்பதற்கு நம்மால் முடிந்த ஒரு உதவியைச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் இவர் இந்த மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த மூலிகை குளியல் கட்டிகளை தயாரிக்கும் முறையை ஒரு வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாகவும், அரப்பு மற்றும் சீவக்காய் வகைகளை வைத்து ஒரு குளியல் கட்டியை தயாரித்து கொண்டிருப்பதாகவும் இது தலையில் உள்ள பொடுகுகளை நீக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் குளியல் கட்டியை தயாரிக்கும் போது முதலில் நான்கு லிட்டர் தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அதில் 300 ml தண்ணீரை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவற்றுடன் சோடியம் ஹைட்ராக்சைடு போட வேண்டும் எனவும், இந்த சோடியம் ஹைட்ராக்சைடு போட்டால் மட்டுமே குளியல் கட்டி ஆனது கெட்டியாக மாறும் எனவும் திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த மூன்றையும் ஒன்றாகப் போட்டு கலக்கிய பிறகு அவற்றை ஒரு ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஆறவைக்க வேண்டும் எனவும், இவ்வாறு ஒன்றரை மணி நேரம் இவற்றை கலக்கிக் கொண்டே இருந்தால் தான் இந்த கலவை ஆனது கெட்டியாகி சோப்பு தயாரிப்பதற்கு சரியான முறையில் இருக்கும் என கூறுகிறார்.
மேலும் இந்த கலவையை தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருந்தால் சோடியத்தின் வீரியம் சிறிதளவு குறையும் எனவும், இவ்வாறு இவை ஆறிய பிறகு மீண்டும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு கலக்கிக் கொண்டே இருக்கும் போது இந்த கலவையானது கெட்டியாக மாறி விடும் எனவும், இவ்வாறு கெட்டியான சோப்பு கலவையை எடுத்து குளியல் கட்டி தயாரிக்கும் அச்சுக்களில் ஊற்றி குளியல் கட்டிகளை தயாரித்து அவற்றை விற்பனை செய்து வருவதாக திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.
Profit and sales method of herbal bath tumors
திரு திரு மூர்த்தி அவர்கள் இந்த மூலிகை கட்டிகளை மிகவும் சிறப்பான முறையில் தரமாக இயற்கைப் பொருட்களை வைத்து தயாரித்து வருவதாகவும், அவற்றை சிறப்பான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
கோயம்புத்தூர், சரவணபட்டி, திருப்பூர் மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்கு இவருடைய மூலிகைக் குளியல் கட்டிகளை விற்பனை செய்து வருவதாகவும், மூலிகை குளியல் கட்டிகள் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் ஆகியவைகளையும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் விளையும் பொருட்களை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையிலுள்ள வேலைகளிலும் மற்றும் இந்த குளியல் கட்டிகள் தயாரிக்கும் முறைகளிலும் திரு திரு மூர்த்தி அவர்களின் மனைவி இவருக்கு உதவியாக இருப்பதாக கூறுகிறார்.
திரு திருமூர்த்தி அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான இடங்களில் இயற்கையான முறையில் விளையும் பொருட்களை வைத்து மிகவும் தரமான முறையில் மூலிகை குளியல் கட்டிகளை தயாரித்து வருகிறார்.
மேலும் படிக்க:மரங்களை உரமாக்க பயன்படும் இயந்திரம்.