திரு பாலா அவர்கள் நாமக்கல் மாவட்டம் ,காளப்பளையான் பட்டி என்னும் ஊரில் ஒரு மாட்டுப் பண்ணையை வைத்து, இந்த மாடுகளிலிருந்து கிடைக்கும் பால்களை தொழில்நுட்ப முறையில் விற்பனை செய்யும் ஒரு புதிய சாதனை முயற்சியை செய்துள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய பால் விற்பனை செய்யும் முறைகளைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Mr.Bala their life
திரு பாலா அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளப்பளையான் பட்டி என்னும் ஊரில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு ஒரு மாட்டுப் பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும், இந்த மாட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் பால்களை தொழில்நுட்ப முறையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
திரு பாலா அவர்கள் இயந்திர பொறியியல் பட்டப் படிப்பினை பயின்று உள்ளதாகவும், இவர் இந்த பொறியியல் பட்டப் படிப்பினை பயின்ற உள்ளதால் பண்ணையிலுள்ள பால்களை தொழில்நுட்ப முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இதை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவருக்கு சிறுவயதில் இருந்தே கால்நடை வளர்ப்பின் மீது ஆர்வம் இருந்ததாகவும், இதன் காரணமாக இவர் பட்டப்படிப்பை முடித்து விட்டு இந்த கால்நடைப் பண்ணை தொடங்கியதாக கூறுகிறார்.
திரு பாலா அவர்களின் பால் விற்பனை செய்யும் இயந்திரம்
திரு பாலா அவர்கள் சிறு வயதிலிருந்தே மிகவும் திறமையான ஒருவராக வளர்ந்து வந்துள்ளதாகவும், இவருக்கு சிறுவயதில் இருந்தே பண்ணை வைத்துள்ள பண்ணையாளர்களுக்கு தொழில்நுட்ப இயந்திரங்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக கூறுகிறார்.
இந்த முறையை இவர் மனதில் வைத்து வளர்ந்ததால் இந்த பாலினை விற்பனை செய்ய இந்த இயந்திர முறையை கண்டு பிடித்ததாகவும், அதனை அனைத்து பண்ணையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியதாகவும் திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
திரு பாலா அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள மாடுகளிலிருந்து கிடைக்கும் பால்களை விற்பனை செய்யும் முறையானது ஒரு இயந்திரத்தில் பாலினை வைத்து விட்டால் அந்த இயந்திரத்தில் பால் வாங்க வருபவர்கள் எவ்வளவு பணத்தை அனுப்புகிறாறோ அந்த பணத்திற்கு ஏற்ப பாலானது தானாகவே வரும் அளவிற்கு ஒரு இயந்திரத்தை அமைத்து உள்ளதாக கூறுகிறார்.
இந்த முறையில் இயந்திரத்தை அமைத்து உள்ளதால் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகவும் சுலபமான முறையில் பாலினை பெற்று செல்வதாகவும்,இந்த முறையினால் இவர் அருகிலிருந்தே பால் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.
The working mode of the machine
திரு பாலா அவர்கள் இந்த பால் அளிக்கும் இயந்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் உருவாகியுள்ளதாகவும், இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதால் இவருக்கு அதிக அளவு நன்மைகள் கிடைப்பதாகவும் கூறுகிறார்.
இந்த இயந்திரம் செயல்படும் முறையானது இயந்திரத்தின் பின்புறத்தில் பாலினை கொண்டு போய் வைத்தால் மட்டும் போதுமானது எனவும், பாலினை எந்த அமைப்புகளிலும் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.
இவ்வாறு பாலினை இயந்திரத்தின் பின் கொண்டு வைத்த பிறகு , இந்தப் பால் உள்ள பாத்திரத்தில் ஒரு சிறிய குழாயை எடுத்து போட்டால் மட்டும் போதுமானது எனவும், இவ்வாறு பாலினை வைத்தபிறகு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பதை ஒருமுறை பார்த்துக் கொண்டால் மட்டும் போதுமானது என கூறுகிறார்.
இவ்வாறு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா என்பதை அறிந்த பிறகு பால் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் சுலபமான முறையில் பாலினை பெற்றுக் கொண்டு செல்லலாம் என திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
மேலும் திரு பாலா அவர்கள் இந்த இயந்திரத்தினை மிகவும் எளிய முறையிலேயே உருவாகியுள்ளதாகவும், இதனை அனைவராலும் உருவாக்க முடியும் எனவும் கூறுகிறார்.
பாலினை பெறும் முறை
திரு பாலா அவர்களின் பண்ணையில் உள்ள பாலை பெரும் இயந்திரத்தில் மூன்று வகைகளில் பாலினை பெற்றுக் கொள்ளலாம் எனவும், முதலில் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனவும், கார்டு பயன்படுத்தி பாலினை பெற்றுக்கொள்ளலாம் எனவும், இறுதியாக சிறப்பான ஒரு கார்டு கொண்டு பாலை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் வயதானவர்கள் பாலினை பெறுவதற்கு சிறிது சிரமப் படுகிறார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் சுலபமாக பாலினை இயந்திரத்திலிருந்து பெற்று செல்வதற்கு சுலபமான முறையையும் அமைத்து உள்ளதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் உள்ள இயந்திரத்தில் பால் வாங்க வரும் வாடிக்கையாளர்களில் சிலர் இந்த இயந்திரம் மிகவும் சிறப்பான முறையில் இருப்பதாகவும், இதன் மூலம் அவர்கள் சுலபமான முறையில் பாலினை பெற்று செல்வதாகவும் கூறியதாக கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தில் ஐந்து ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை பணத்தை செலுத்தி பாலினை பெற்றுக் கொள்ள முடியும் என திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
Money withdrawal method
திரு பாலா அவர்கள் இந்த இயந்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் அமைத்து உள்ளதாகவும், இந்த இயந்திரத்தில் பணத்தை செலுத்தி வாடிக்கையாளர்கள் பாலினை பெற்றுச் செல்லும் போது, அவர்கள் அனுப்பும் பணம் ஆனது மிகவும் மோசமான நிலையில் மற்றும் கள்ள நோட்டாக இருந்தால் இயந்திரமானது அந்த பணத்தை ஏற்றுக்கொள்ளாது என கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரத்தில் பாலினை பெற்றுச் செல்லும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்தை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எடுப்பதாகவும்,அதுவரை இந்த பணமானது இயந்திரத்திலேயே இருக்கும் என கூறுகிறார்.
இந்த இயந்திரத்தில் உள்ள பணத்தினை சேமித்து வைக்கும் பெட்டியில் 350 நோட்டுக்கள் வரை சேமித்து வைக்கும் அளவிற்கு இடம் உள்ளதாகவும் மற்றும் 1500 நோட்டுக்கள் வரை இடம் உள்ள ஒரு பெட்டியை அமைத்துள்ளதாகவும் திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது மின்சார தடை ஏற்பட்டால் கூட இருபத்தி நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் செயல்படும் வகையில் இயந்திரத்தை அமைத்து உள்ளதாக திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
இயந்திரத்தை பராமரிக்கும் முறை மற்றும் பயன்
திரு பாலா அவர்கள் இந்த இயந்திரத்தை பராமரிக்கும் முறை மிகவும் சுலபமான ஒரு வழி முறை எனவும்,பால் வரும் குழாயை மட்டும் தண்ணீரை வைத்து சுத்தம் செய்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
இந்த பால் வரும் குழாயை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீருக்குள் போட்ட பிறகு பாலினை பெரும் முறையைப் போன்று தண்ணீரை அந்த குழியில் விட்டு சுத்தம் செய்ய வேண்டும் எனவும்,இந்த முறையை செய்த பிறகு ஒரு முறை மட்டும் சூடான நீரை வைத்து சுத்தம் செய்தால் மட்டும் போதுமானது எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த முறையை காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் செய்ய வேண்டும் எனவும்,இந்த இயந்திரத்தில் பாலினை மட்டும் பயன்படுத்தாமல் எண்ணெய் வகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என திரு பாலா அவர்கள் கூறுகிறார்.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதால் வேலையாட்களின் செலவு குறையும் எனவும், இவர்களுடைய நேரமும் இந்த இயந்திரத்தின் மூலம் சேமிப்பு அடையும் எனவும், இந்த இயந்திரத்தை பள்ளிகள்,கல்லூரிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.
திரு பாலா அவர்கள் இந்த இயந்திரத்தை மிகவும் சிறப்பான முறையில் தயாரித்து அதன் மூலம் பாலினை சிறப்பாக விற்பனை செய்து வருகிறார்.
மேலும் படிக்க:காய்கறி தோட்ட வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.