வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபம்.

திரு கார்த்திக் அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் என்னும் நகரில் வண்ண மீன்கள் வளர்ப்பில் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய வண்ண மீன்கள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு கார்த்திக் அவர்களின் வாழ்க்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் என்னும் நகரில் திரு கார்த்திக் அவர்கள் வசித்து வருவதாகவும், இவர் இங்கு வண்ண மீன்களை வளர்த்து அதன் மூலம் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் BE,ME பட்டப் படிப்பினை முடித்து விட்டு,ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும்,மேலும் இவருக்கு இந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதில் விருப்பம் இல்லாத காரணத்தால் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பை ஒன்றரை மாதத்திற்கு முன்பு தொடங்கியதாகவும், இந்த வண்ண மீன்கள் வளர்ப்பின் மூலம் இவருக்கு அதிகளவு நேரங்கள் கிடைப்பதாகவும்,இதனால் இவர் அதிக நேரம் இவருடைய குடும்பத்துடன் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இதனால் இவருக்கு மனநிறைவு கிடைப்பதாகவும், மேலும் இவருக்கு இந்த வண்ண மீன்கள் வளர்ப்பின் மூலம் அதிக அளவில் லாபம் கிடைத்து வருவதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

Breeding of colored fish

திரு கார்த்திக் அவர்கள் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த வண்ண மீன்கள் வளர்ப்பின் மூலம் இவருக்கு அதிக அளவில் நேரங்கள் கிடைப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு அதிக அளவு நேரங்கள் இந்த வண்ண மீன்கள் வளர்ப்பின் மூலம் கிடைப்பதால் இவர் மற்ற வேலைகளையும் செய்வதற்கு நேரங்கள் இருப்பதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் சிறு வயதிலிருந்தே மீன்களை வளர்த்து வந்ததாகவும், அவ்வாறு சிறுவயதில் மீன்களை வளர்க்கும் போது அவற்றை அவர்களின் ஊரிலேயே விற்பனை செய்து வந்ததாகவும், இப்பொழுது பெரிய அளவில் வண்ண மீன்களை வளர்த்து வருவதால் அவைகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவரிடம் உள்ள  குறைந்த அளவு மீனை வைத்தே இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும்,மேலும் இவர் அனைத்து மீன்களையும் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மீன்களின் வகைகள்

திரு கார்த்திக் அவர்கள் மொத்தமாக மூன்று மீன் வகைகளை வளர்த்து வருவதாகவும், அதில் முதல் வகை ஃப்ளவர்ஹார்ன் வகை எனவும், இரண்டாவது வகை இம்போர்ட்டடு கப்பீஸ் எனவும், மேலும் இவர் வளர்க்கக் கூடிய இந்த இம்போர்ட்டடு கப்பீஸ் வகைகள் அதிக அளவில் விலைபோகும் எனவும் கூறுகிறார்.

ஆனால் இந்த மீன் வகைகள் இவ்வாறு அதிக அளவில் விலை போகும் என்பது, அதிகளவில் யாருக்கும் தெரிவதில்லை எனவும், இந்த மீன் வகைகளை எல்லாம் வளர்ப்பதற்கு குறைந்த அளவு இடமே போதுமானது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் மூன்றாவது வகையாக இம்போர்ட்டடு பீட்டா மீன் வகைகளை வளர்த்து வருவதாகவும், இந்த இம்போர்ட்டடு பீட்டா மீன் வகைகளை சண்டையிட கூடிய மீன்கள் எனவும், இந்த மீன்களை வைத்து சண்டை போட்டிகள் நடத்தி வருவதாகவும், இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இம்போர்ட்டடு கப்பீஸ் மீன் வகைகளை இவர் தாய்லாந்தில் இருந்து வாங்குவதாகவும், இந்த மீன் வகைகள் மிகவும் இயற்கையான முறையில் மிக அழகாக இருக்கும் எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் திரு கார்த்திக் அவர்கள் இந்த மூன்று வகை மீன்களை மட்டும் வளர்ப்பதற்கு காரணம், இந்த மூன்று வகை மீன்களுக்கும் கோரிக்கைகள் அதிக அளவில் இருப்பதே காரணம் என கூறுகிறார்.

Sales and maintenance method

இந்த இம்போர்ட்டடு கப்பீஸ் மீன் வகைகளில் சாதா கப்பீஸ் மீன் வகைகள் குறைந்த அளவு விலையில் மட்டுமே விற்பனை ஆகும் எனவும், அதாவது பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் ஆகிய அளவுகளில் மட்டுமே விற்பனை ஆகும் எனவும் கூறுகிறார்.

ஆனால் இவர் வளர்க்க கூடிய மீன் வகைகள் சாதா கப்பீஸ் மீன் வகைகள் இல்லை எனவும், இம்போர்ட்டடு கப்பீஸ் மீன் வகைகள் எனவும், இந்த மீன் வகைகளை இவர் வளர்த்து விற்பனை செய்து வருவதால் இவருக்கு இதன் மூலம் அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த மீன் வகைகளில் ஒரு ஜோடி மீனை 200 ரூபாய் வரை விற்பனை செய்யலாம் எனவும், இந்த மீன்கள் மாதத்திற்கு 30 குட்டிகள் வரை போடும் எனவும், இந்த மீன் வகைகளை வளர்ப்பதற்கு குறைந்த அளவு இடமே போதுமானது எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த மீன் வளர்ப்பு முறை மிக எளிதானது எனவும், மீன் வளர்ப்பு முறைகளைப் பற்றி தெரியாதவர்கள் கூட இந்த மீன் வளர்ப்பை மிக சுலபமான முறையில் செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெறலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இம்போர்ட்டடு மீன் வகைகளை வளர்த்தால் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும், மற்றும் இந்த மீன் வகைகள் சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மீன்களை வளர்க்க கூடிய தொட்டிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளலாம் எனவும்,இவ்வாறு சுத்தம் செய்வது மீன்களுக்கு நல்லது எனவும் கூறுகிறார்.

மீன்களுக்கு அளிக்கக் கூடிய உணவுகள்

திரு கார்த்திக் அவர்கள் வளர்க்கக் கூடிய மீன் வகைகளின் ஆயுட்காலம் ஆனது இரண்டு வருடத்தில் இருந்து 3 வருடம் வரை எனவும், மீன்களுக்கு இவரே உலர்ந்த தீவனங்களை வைத்து உணவை தயாரித்து அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் உலர்ந்த தீவனங்களை இந்த மீன் வகைகளுக்கு அளித்து வந்தால் அவைகள் நீண்ட காலம் வரை உயிர் வாழும் எனவும்,மீன்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

மேலும் மீன் தொட்டிகளில் நைட்ரஜன் வரும் எனவும் இதனால் மீன்களுக்கு நோய்கள் ஏற்படும் எனவும்,மீன்களுக்கு நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கு தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் தரமான தீவனங்களை உற்பத்தி செய்து மீன்களுக்கு அளித்து,அதன் மூலம் மீன்களுக்கு எந்தவித நோய்களும் ஏற்படாமல் தடுத்து வருகிறார்.

Profit from colored fish farming

இந்த வண்ண மீன்கள் மாதத்திற்கு 500 முட்டைகளிலிருந்து ஆயிரம் முட்டைகள் வரை போடும் எனவும்,ஒரு குட்டியை 30 நாட்கள் வரை வளர்த்து இருபதிலிருந்து முப்பது ரூபாய் வரை விற்பனை செய்தால் கூட ஆயிரம் மீன் குட்டிகளை விற்பனை செய்தால் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மீன் வளர்ப்பின் மூலம் நமக்கு லாபம் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும் எனவும்,இதனால் நமக்கு நஷ்டங்கள் ஏற்படாது எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய வண்ணமீன் வளர்ப்பு முறையை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:கோதுமை புல் பொடி உற்பத்தியில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

Leave a Reply