மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் கரடிக்கல் என்னும் கிராமத்தில் திரு மச்சக்காளை அவர்கள் மாதுளை விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய மாதுளை சாகுபடியை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு மச்சக்காளை அவர்களின் வாழ்க்கை
திரு மச்சக்காளை அவர்கள் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள கரடிக்கல் என்னும் கிராமத்தில் மாதுளை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிகளவு வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த மாதுளை சாகுபடியை கடந்த மூன்று வருடங்களாக செய்து வருவதாகவும், இதனை இவர் முற்றிலும் இயற்கையான முறையிலேயே விவசாயம் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இவரது மற்றொரு விவசாய நிலத்தில் திராட்சை சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வந்து கொண்டிருப்பதாகவும், அங்கு திராட்சை சாகுபடி மட்டுமே இவர் அதிக அளவு செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Pomegranate cultivation
திரு மச்சக்காளை அவர்கள் மாதுளை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் இந்த மாதுளை சாகுபடியில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைத்து வருவதாகவும், இதன் மூலம் இவர் அதிக நன்மையை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இவர் இந்த மாதுளை சாகுபடியை மூன்று ஏக்கர் நிலத்தில் செய்து வருவதாகவும், அதில் ஒரு ஏக்கர் நிலத்தில் 800 பெரிய மாதுளை செடிகளை வளர்த்து வருவதாகவும், மீதியுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறிய அளவில் உள்ள மாதுளை செடிகளை நட்டு வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
ஆரம்பத்தில் இவர் மாதுளை கன்றுகளை மகாராஷ்டிராவில் இருந்து வாங்கி வந்து நட்டு வளர்த்ததாகவும், அதன் பின் இவரே மாதுளை செடிகளில் இருந்து உற்பத்தியை எடுத்து கன்று போட்டு செடிகளை நட்டு வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் வளர்க்கும் மாதுளை செடிகள் ஆனது ஒட்டு ரகம் எனவும், இவருடைய மாதுளை தோட்டத்திலிருந்து ஒட்டு எடுத்து சென்று ஊத்துப்பட்டியில் கன்று உருவாக்கி அதனை மக்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவர் தோட்டத்தில் நட்டு வருவதாகவும் கூறுகிறார்.
செடியை நடும்போது இரண்டு அடியில் குழிதோண்டி செடியை நட்டு அதில் மக்கிய குப்பைகளை போட்டு வளர்த்து வந்தால் செடிகள் விரைவில் வளர்ந்து விடும் எனவும் திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
மாதுளையின் வகை
மாதுளைப் பழங்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல வகைகள் இருப்பதாகவும், ஒவ்வொரு வகை மாதுளையும் ஒவ்வொரு சுவையில் இருக்கும் எனவும் திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
இவர் சாகுபடி செய்து வருகின்ற மாதுளையின் வகையானது பகவான் என அழைக்கப்படும் மாதுளை வகை எனவும், இந்த வகை மாதுளை நல்ல விளைச்சலை அளித்து வருவதாகவும், இதனுடைய சுவையும் நன்றாக இருக்கும் எனவும், சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் கூறுகிறார்.
எனவே இந்த ரக மாதுளை பல செடிகளை நாம் சாகுபடி செய்தால் அதன் மூலம் நமக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும், இதன் மூலம் நமக்கு நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாதுளை செடியை பெரிய அளவில் வளர விடாமல் சரியான அளவில் வைத்து வளர்த்து வந்தால் மாதுளைகள் அதிக அளவில் காய்க்கும் எனவும், செடிகள் வளரவளர அதனை நறுக்கி விட வேண்டுமென திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
Pomegranate specialty
மாதுளை பழங்களில் அதிக அளவு நன்மைகள் இருப்பதாகவும், இதனை நாம் தினமும் உண்ணும் போது நமக்கு இரத்தம் அதிகரிக்கும் எனவும், உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது எனவும் திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
மாதுளை செடிகள் அனைத்து வகை மண்களிலும் வளரக்கூடிய தன்மையுடையது எனவும், ஆனால் எந்த மண்ணில் வளர்த்தாலும் செடிகளுக்கு நீரினை சரியான முறையில் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுகிறார்.
அதிக அளவில் நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், சுமாரான முறையில் நீரினை அளித்தால் மட்டும் போதுமானது எனவும், இந்த முறையில் நீரினை அளித்துக் கொண்டு இருந்தால் மட்டுமே மாதுளை பழங்கள் நல்ல முறையில் காய்க்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் இந்த மாதுளை செடிகளுக்கு நீரினை அளிக்காமலேயே விட்டு விட்டால் செடிகள் இறக்காமல் நல்ல முறையில் இருக்கும் எனவும், நீரினை அளிக்காமல் இருந்தால் காய்கள் மட்டுமே காய்க்காமல் இருக்கும் என திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
மேலும் வறட்சி காலத்தில் கூட இந்த மாதுளை செடிகள் இறக்காமல் உயிருடன் இருப்பதால் மட்டுமே இவர் இந்த மாதுளை சாகுபடியை செய்து வருவதாகவும், இது இவருக்கு மிகவும் உதவியாக இருந்து வருவதாகவும் கூறுகிறார்.
மாதுளை செடியில் தற்போது 30 கிலோ வரை மாதுளைப் பழங்கள் காய்த்து வருவதாகவும்,நீர் அதிகளவில் இருந்து நல்லமுறையில் பராமரித்து வந்தால் 50 கிலோவில் இருந்து 60 கிலோ வரை பழங்கள் காய்க்கும் எனவும் திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
நீரினை அளிக்கும் முறை
திரு மச்சக்காளை அவர்கள் இவருடைய மாதுளை தோட்டத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளித்து வருவதாகவும், நீர் அதிக அளவில் இருக்கும் சமயங்களில் இவர் பாத்தி முறையில் செடிகளுக்கு நீரினை அளித்து வருவதாக கூறுகிறார்.
ஆனால் நீர் இல்லாத சமயங்களில் இவர் சொட்டு நீர் பாசன முறையில் செடிகளுக்கு நீரினை அளித்து வருவதாகவும், நீர் குறைவாக இருப்பதால் சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு நீரை செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் மூன்று ஏக்கர் நிலத்திற்கு சொட்டு நீர் பாசன முறையை அமைத்ததற்கு மூன்றரை லட்சம் வரை செலவு ஆனதாகவும், செலவு ஆனாலும் இதில் இவருக்கு நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாதுளை பழங்களில் நோய்கள் தாக்கும் எனவும் அவ்வாறு தாக்காமல் இருப்பதற்கு இவர் மருந்தினை செடிகளுக்கு அளித்து வருவதாகவும், மயில் போன்ற உயிரினங்கள் இந்த மாதுளை பழங்களை உண்ண இவரது தோட்டத்திற்கு வரும் எனவும் கூறுகிறார்.
மேலும் மயில்கள் மற்றும் பறவைகள் போன்றவற்றிடம் இருந்து மாதுளை பழங்களை பாதுகாப்பதற்கு இவர் மாதுளை தோட்டத்தில் கம்பி கட்டி அந்த கம்பியில் வாட்டர் பாட்டிலை கட்டி அந்த வாட்டர் பாட்டிலில் கற்களை போட்டு வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.
பறவைகள் மற்றும் மயில்கள் வரும் போது அந்த கம்பியை பிடித்து ஆட்டினால் வாட்டர் பாட்டிலில் உள்ள கற்களின் சத்தத்தை கேட்டு பறவைகள் மற்றும் மயில்கள் சென்று விடும் என திரு மச்சக்காளை அவர்கள் கூறுகிறார்.
Sales method and profit
திரு மச்சக்காளை அவர்கள் இவருடைய தோட்டத்தில் விளைந்த மாதுளை பழங்களை முறுவாறுபட்டி, மதுரை, சென்னை இதுபோன்று பல இடங்களுக்கு இவர் மாதுளை பழங்களை விற்பனை செய்து வருவதாகவும், மாதுளை பழங்களை வாங்குவதற்கு என்று தனி இடங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய தோட்டத்திற்கு வந்து மாதுளைப்பழங்களை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் மாதுளை பழங்களை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
மாதுளை பழங்களை ஒரு கிலோ ஐம்பதிலிருந்து நூறு ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும், மழைக்காலத்தில் மூன்று ஏக்கர் நிலத்தில் விளைந்த மாதுளை பழங்களை விற்பனை செய்யும் போது இவருக்கு 15 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் இப்பொழுது மழை அதிகளவில் இல்லாத காரணத்தால் இவர் 7 லட்சம் ரூபாய் வரை இந்த மாதுளை விவசாயத்திலிருந்து பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் மாதுளை செடியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் செடியை ஒட்டு போட்டு விற்பனை செய்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாதுளை செடிகளை ஒட்டு போட்டு அளித்து வருவதாக கூறுகிறார்.
மாதுளை செடி வேண்டும் என வாடிக்கையாளர்கள் கேட்கும் போது மட்டுமே இவர் செடியை ஒட்டு போட்டு அளித்து வருவதாகவும், அதற்கு முன் செடியை ஒட்டு போட்டு வைத்துக் கொள்வதில்லை எனவும் கூறுகிறார்.
திரு மச்சக்காளை அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய மாதுளை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:விதை நடுவதற்கு பயன்படும் இயந்திரம்.