சிறப்பான கருப்பு செம்மறியாடுகள் வளர்ப்பு.

மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சைகட்டி என்னும் கிராமத்தில் திரு சுந்தர் அவர்கள் அழிந்து வரும் இனமான கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றிய இவருடைய கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




திரு சுந்தர் அவர்களின் வாழ்க்கை

திரு சுந்தர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சைகட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவர் இங்கு அழிந்து வரக்கூடிய இனமான கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார்.

மேலும் இவர்கள் இந்த கருப்பு செம்மறி ஆடுகளை கச்சைகட்டி ஆடுகள் என்று அழைத்து வருவதாகவும், இந்த ஆடுகள் இவர்களுடைய ஊரில் மிகவும் சிறப்பானது எனவும் திரு சுந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கருப்பு செம்மறி ஆடு வளர்ப்பை பூர்வீகமாக வளர்த்து வருவதாகவும், இவருடைய தாத்தா காலத்திலிருந்தே இந்த கருப்பு செம்மறி ஆடு வளர்ப்பை இவரது குடும்பம் செய்து வந்ததாக கூறுகிறார்.

இவருடைய சிறுவயதில் இருந்தே இவர் ஆடுகளுடன் வளர்ந்து வந்ததால் இவருக்கும் ஆடுகள் வளர்க்கலாம் என்ற எண்ணத்தில் இவர் இந்த கருப்பு செம்மறி ஆடு வளர்ப்பை வளர்த்து வருவதாகவும், இது இவருக்கு அதிக அளவு லாபம் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.




Black Sheep

கருப்பு செம்மறி ஆடுகள் எனப்படும் இந்த ஆடுகள் மிகவும் சிறப்பான ஒரு ஆட்டு வகை எனவும், இந்த ஆடுகளை கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகள் என இவர்கள் அழைத்து வருவதாகவும் இதற்கு காரணம் கருப்பு செம்மறி ஆடுகள் பூர்வீகமாக இவர்களுடைய கச்சைகட்டி ஊரில் மட்டுமே இருந்து வருவதால் இந்த ஆடுகளை கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகள் என்று அழைத்து வருவதாக கூறுகிறார்.

தமிழ்நாட்டிலேயே அரியவகை ஆடுகள் என அழைக்கப்படும் இந்த கருப்பு செம்மறி ஆடுகள் இவர்களுடைய ஊரில் மட்டுமே இருப்பதாகவும், இந்த கருப்பு செம்மறி ஆடுகள் வளர்ப்பை இவர்கள் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகளை மற்ற எந்த இடத்திலும் காண முடியாது எனவும், மேலும் இவர்களுடைய ஊரிலும் கருப்பு செம்மறி ஆடுகள் அழிந்து வரும் நிலையிலேயே இருப்பதாகவும், இதனை அழிய விடக்கூடாது என்று மிகவும் பாதுகாப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த கருப்பு செம்மறியாடுகள் முற்றிலும் கருப்பு நிறத்திலேயே இருக்கும் எனவும், இதனுடைய காதுகள் மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும் எனவும் திரு சுந்தர் அவர்கள் கூறுகிறார்.

கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகள் மிகவும் விலை உயர்ந்த ஆடுகள் எனவும்,இந்த கட்சைகட்டி செம்மறி ஆடுகளை வேறு எந்த இடத்திற்கும் சென்று இவர்கள் வளர்ப்பதில்லை எனவும் இவர்களுடைய ஊரில் மட்டுமே வைத்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் மற்ற ஆடுகளிலிருந்து இந்த ஆடுகளை கண்டறிவதற்கு இதனுடைய நிறத்தையும் மற்றும் காதினையும் வைத்து கண்டறிந்து கொள்ள முடியும் எனவும், இந்த கச்சைகட்டி கருப்பு ஆடுகளுடன் வேறு எந்த இன ஆடுகளையும் ஒன்றாக இணைப்பதில்லை எனவும் கூறுகிறார்.




கருப்பு செம்மறி ஆட்டின் சிறப்பு

கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகள் மிகவும் சிறப்பான ஒரு ஆடு வகை எனவும், இந்த ஆடு வகைகள் சண்டையிடுவதற்கு மிகவும் சிறப்பான ஒரு வகை எனவும், ஆடுகளை வைத்து பந்தயம் நடத்துபவர்கள் இந்த ஆட்டு வகைகளை வாங்கி பந்தயத்தில் சண்டையிட வைப்பார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த ஆடு வகைகள் ஆடுகளை வளர்த்தும் உரிமையாளரிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் எனவும், பிறந்த 10 நாள் ஆன குட்டிகள் மிகவும் வேகமாக ஓடும் எனவும் திரு சுந்தர் அவர்கள் கூறுகிறார்.

மற்ற ஆடு வகைகளை மிகவும் சுலபமான முறையில் பிடித்து விடலாம் எனவும் ஆனால் இந்த கருப்பு செம்மறியாடுகளை அவ்வளவு சுலபமாக கையில் பிடிக்க முடியாது எனவும், மான்களைப் போல் வேகமாக ஓடும் எனவும் கூறுகிறார்.

இது போன்று இந்த கருப்பு செம்மறி ஆடுகளில் பலவித சிறப்புக்கள் இருப்பதாகவும், இந்த கருப்பு செம்மறி ஆடுகளை இவர்கள் மட்டும் வளர்த்து வருவது இவருக்கு மிகவும் பெருமை எனவும் கூறுகிறார்.




Growing method and immunization method

திரு சுந்தர் அவர்கள் இவருடைய கருப்பு செம்மறி ஆடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும், இதனை காட்டில் ஒரு வலையை வைத்து பண்ணை போன்ற அமைப்பில் கட்டி அதனுள் ஆடுகளை விட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் இந்த கருப்பு செம்மறி ஆடுகளை மழையில் நனையாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியமான ஒன்று எனவும், மேய்ச்சல் முறையில் இவர் வளர்த்து வருவதால் இயற்கை உணவுகளை இந்த செம்மறி ஆடுகள் உண்டு வளர்ந்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த கச்சைகட்டி கருப்பு செம்மறியாடுகள் வருடத்திற்கு ஒரு குட்டியை மட்டுமே போடும் எனவும், இதனுடைய குட்டிகள் அதிக விலையில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த ஆடுகளுக்கு நோய்கள் அதிக அளவில் தாக்கி உள்ளதாகவும் அதனை இவர் மருந்துகளின் மூலம் சரி செய்து வந்ததாகவும், சிறிய அளவில் வரும் நோய்களின் மூலம் இந்த ஆடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறார்.

ஆனால் படுசாவு என அழைக்கப்படும் நோய் இந்த ஆடுகளை தாக்கி விட்டால் இறப்பு கண்டிப்பாக ஏற்பட்டு விடும் எனவும், இவற்றிலிருந்து ஆடுகளை பாதுகாப்பதற்கு ஈட்டிஊசி என்னும் தடுப்பூசிகளையும், ஆந்திரா ப்ளஸ் எனப்படும் மருந்தையும் ஆடுகளுக்கு அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இதனை கருப்பு செம்மறி ஆடுகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை நிச்சயமாக அளித்து வர வேண்டும் எனவும், இவ்வாறு தடுப்பூசி மற்றும் மருந்துகளை ஆடுகளுக்கு அளிக்கவில்லை எனில் ஆடுகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் விலை

திரு சுந்தர் அவர்கள் இந்த கச்சைகட்டி கருப்பு செம்மறி ஆடுகளை, ஆடுகளை சண்டையிடுவதற்கு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும், இவ்வாறு சண்டையிடும் ஆடுகள் அதிக விலையில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

இந்த கருப்பு செம்மறி ஆடுகளின் குட்டிகள் 7 ஆயிரம் ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் பெரிய கருப்பு செம்மறியாடுகளை இவர் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் திரு சுந்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் சண்டையிட்டு பந்தயத்தில் வென்ற கருப்பு செம்மறி கிடாய்கள் லட்சம் ரூபாய் வரையில் விற்பனையாகும் எனவும், மேலும் இந்த செம்மறி ஆடுகள் சண்டையிட்டு வெல்வதில் மிகவும் சிறப்பானது எனவும் கூறுகிறார்.

இந்த கருப்பு செம்மறி ஆடுகள் அதிக விலையில் விற்பனை ஆகி வருவதால் இதன் மூலம் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும், ஆனால் இந்த கருப்பு செம்மறி ஆடுகளின் இனத்தை அழிய விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

திரு சுந்தர் அவர்கள் இந்த கச்சைகட்டி கருப்பு செம்மறியாடுகளை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க:மாதுளை சாகுபடியில் அதிக வருமானம்.

 




(S)

Leave a Reply