திரு நித்தியானந்தன் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் கரும்பு விவசாயத்தை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கரும்பு விவசாயத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு நித்தியானந்தன் அவர்களின் வாழ்க்கை
ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ள பச்சமலை கோயில் அருகில் திரு நித்தியானந்தன் அவர்கள் வசித்து வருவதாகவும்,இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவர் இங்கு கரும்பு விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு நித்தியானந்தன் அவர்கள் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாகவும்,படிப்பை முடித்துவிட்டு இவர் விவசாயம் செய்து வருவதாகவும் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததால் இதனை செய்ய தொடங்கியதாகவும் கூறுகிறார்.
மேலும் சத்து நிறைந்த உணவுகளை உற்பத்தி செய்து அதனை நாம் உண்ணும் போது நமக்கு எந்தவித நோய்களும் ஏற்படாது என்பதற்காக இவர் இயற்கையான முறையில் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் கரும்பு விவசாயத்தை செய்து அதன் மூலம் சர்க்கரையை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் இதன் மூலம் இவருக்கு அதிகளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
Sugarcane cultivation in a Natural way
திரு நித்தியானந்தன் அவர்கள் கரும்பு விவசாயத்தை முற்றிலும் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும்,இயற்கை முறையில் விவசாயம் செய்து அதனை நாம் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு நன்மை எனவும் கூறுகிறார்.
மேலும் இன்றுள்ள நிலையில் அதிக அளவில் கரும்பு விவசாயத்தை யாரும் இயற்கை முறையில் செய்வதில்லை எனவும், வெள்ளை சர்க்கரையை உற்பத்தி செய்வதிலும் அதிகளவு மருந்துகளை கலந்து உற்பத்தி செய்வதாக கூறுகிறார்.
எனவே வெள்ளை சர்க்கரையை யாரும் அதிகளவில் பயன்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு பயன்படுத்தினால் அது உடலுக்கு மிகவும் தீமை எனவும்,எனவே இவர் இவருடைய கரும்பு விவசாயத்தை இயற்கை முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து,விவசாயம் செய்த கரும்புகளில் இருந்து சர்க்கரையை உற்பத்தி செய்வதாகவும் இவ்வாறு உற்பத்தி செய்யும் சர்க்கரையை இவர் இயற்கை முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது விளைச்சல் குறைந்த அளவில் இருந்தாலும் அதனுடைய சுவை மிகவும் நன்றாக இருக்கும் என திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
சர்க்கரை உற்பத்தி முறை மற்றும் விற்பனை
திரு நித்தியானந்தன் அவர்கள் இவருடைய கரும்பு விவசாயத்தின் மூலம் செய்து வரும் சர்க்கரை உற்பத்தியை இயற்கையான முறையில் எந்த மருந்துகளையும் சேர்க்காமல் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய கரும்பு தோட்டத்திற்கு அருகிலேயே சர்க்கரையை உற்பத்தி செய்யும் ஆலை இருப்பதாகவும் அவர்களிடம் கரும்புகளை கொடுத்து கெமிக்கல் சேர்க்காமல் சர்க்கரையை உற்பத்தி செய்து வாங்கிக் கொள்வதாக கூறுகிறார்.
மேலும் இவ்வாறு இவர் கரும்புகளை கொடுக்கும் போது அவர்கள் எந்த கெமிக்கலும் சேர்க்காமல் தேங்காய் எண்ணெய்யை மட்டுமே சேர்த்து மிக சிறப்பான நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்து அளிப்பார்கள் எனவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரையை இவர் விற்பனை செய்து வருவதாகவும், கடந்த வருடம் சர்க்கரை விற்பனை அதிகளவில் விற்பனையானதாகவும் கூறுகிறார்.
மேலும் கடந்த வருடம் அதிகளவு லாபம் வந்ததால் இந்த வருடம் அதிக பரப்பளவில் கரும்பு விவசாயத்தை செய்துள்ளதாகவும்,அறுவடை செய்ததும் சர்க்கரையை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்ய உள்ளதாகவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
சர்க்கரை விற்பனையை கொரியர் முறையில் விற்பனை செய்து வருவதாகவும்,வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப சர்க்கரையை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
Method of farming
திரு நித்தியானந்தன் அவர்கள் கரும்பு விவசாயம் செய்வதற்கு இவருடைய தோட்டத்தில் விளைந்த கரும்புகளை எடுத்து வைத்து அதனை விதை கரும்புகளாக வைத்துக் கொண்டு அதனையே விதைத்து வருவதாக கூறுகிறார்.
ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் வரை கருணைகள் தேவைப்படும் எனவும்,ஒவ்வொரு கருணைக்கு இடையிலும் 1 1/4 இடைவெளி விட்டு கரும்பினை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் கருணையை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் மாட்டு சாணத்தை போட்டு வைத்துக் கொள்ளலாம் எனவும்,நிலத்தில் மண்கள் கட்டியாக இருக்கக் கூடாது எனவும் கூறுகிறார்.
மேலும் கரும்பு நன்றாக விளைந்து அறுவடை செய்யும் வரையில் நிலத்தில் தண்ணீர் நிற்கக் கூடாது எனவும், இவ்வாறு தண்ணீர் நின்றால் கரும்புகள் அழுகி விடும் எனவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
கருணையை நடும்போது ஜீவாமிர்தத்தில் நனைத்து நடலாம் எனவும், இல்லையெனில் கருணையை நட்ட பிறகு இரண்டாவது தண்ணீரில் ஜீவாமிர்தத்தை கலந்து அளித்தால் எந்தவித நோய்களும் தாக்காது எனவும் கூறுகிறார்.
பஞ்ச காவியம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகிய இயற்கை உரங்களை செடிகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும், இதனை பயன்படுத்துவதன் மூலம் செடிகளுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை எனவும் கூறுகிறார்.
அறுவடை முறை
திரு நித்தியானந்தன் அவர்களுடைய கரும்பு விவசாயத்தில் அதிக அளவு விளைச்சல் இருப்பதாகவும்,எட்டு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்வது மிகவும் சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார்.
ஒன்பதாவது மாதத்தில் இருந்தே சர்க்கரை தயாரிப்பதற்கு இவர் கரும்பு அறுவடை செய்வதும், இவ்வாறு 12 மாதங்கள் வரை கரும்பை அறுவடை செய்து கொள்ளலாம் எனவும் காலம் அதிகரிக்க அதனுடைய சத்துக்களும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும் எனவும் கூறுகிறார்.
மற்றும் இவர் 212 என்ற கரும்பு ரகத்தை விவசாயம் செய்து வருவதாகவும் 12 மாதங்கள்வரை வைத்திருந்தால் இதில் சர்க்கரை சத்து அதிகளவில் இருக்கும் எனவும், இந்த வகை கரும்பு அதிக அளவு விளைச்சலை தரும் எனவும் ஒரு ஏக்கருக்கு 100 டன் அளவு கரும்பு விளைச்சல் ஆகும் எனவும் கூறுகிறார்.
மேலும் 353 என்ற கரும்பு வகையை விவசாயம் செய்தால் 8 மாதத்திலேயே அறுவடை செய்து விடலாம் எனவும், ஆனால் அதில் விளைச்சல் குறைந்த அளவே இருக்கும் எனவும் திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
Water supply system and profit
கரும்பு விவசாயத்தில் தண்ணீரின் தேவை அதிக அளவில் இருக்கும் எனவும், நான்கிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கரும்பு தோட்டத்திற்கு நீரினை அளிக்க வேண்டும் என திரு நித்தியானந்தன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் வெயில் காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேவை கரும்புகளுக்கு இருக்கும் எனவும், அதேசமயம் நிலத்தில் நீர் தேங்கி நிற்கக் கூடாது எனவும் கூறுகிறார்.
மேலும் இதற்கு நோய் தாக்குதல் என்று எதுவும் அதிக அளவில் வராது எனவும், வெள்ளைப் பூச்சி என்ற ஒரு நோய் தாக்கும் எனவும் அதற்கு தேமூர் கரைசலை பயன்படுத்தினால் நோய்கள் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் கரும்பு விவசாயத்தை இயற்கை முறையில் செய்து,நாட்டு சர்க்கரையை இயற்கை முறையில் எந்த கெமிக்கல் சேர்க்காமல் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதால் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
திரு நித்தியானந்தன் அவர்கள் மிக சிறப்பாக இயற்கையான முறையில் கரும்பு விவசாயத்தை செய்து வருகிறார்.
மேலும் படிக்க:மலைப்பூண்டு உற்பத்தியில் அசத்தும் இளைஞர்.