திரு சத்தியநாராயணன் அவர்கள் சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை புறத்தில் வசித்து வருகிறார். அவர் அவரின் வீட்டு மாடியிலேயே ஒரு அழகான மாடி தோட்டத்தை உருவாக்கியுள்ளார். அந்த மாடி தோட்டத்தை பற்றி பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு சத்திய நாராயணனின் மாடித்தோட்ட யோசனை
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை புரத்தில் வசித்து வரும் திரு சத்திய நாராயணன் அவர்கள் அவர் வீட்டிலேயே ஒரு அழகிய மாடி தோட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த யோசனையானது அவருக்கு நீண்ட நாட்களாக இருந்ததாக கூறுகிறார்.
அதனால் மாடியிலேயே ஸ்ட்ராபெரி லிருந்து டிராகன் ஃப்ரூட்ஸ் வரை அனைத்து காய்கறிகளையும் உருவாக்கி உள்ளார். இது அவருக்கு மிகுந்த பயன் அளிப்பதாகவும் கூறுகிறார்.
இந்த மாடித் தோட்டத்தினால் திரு சத்திய நாராயணன் அவர்களுக்கு மாதம் காய்கறி செலவு மூன்றாயிரம் ரூபாய் குறைகிறது என கூறுகிறார்.
மாடி தோட்டத்தின் அமைப்பு
திரு சத்தியநாராயணன் அவர்களின் வீட்டின் மூன்றாவது மாடியில் இந்த மாடித் தோட்டம் அமைந்துள்ளது. மாடி தோட்டத்தின் நுழைவாயிலின் வலதுபுறத்தில் மரிக்கொழுந்து செடி வைத்துள்ளார்.
மரிக்கொழுந்தை மாலையில் வைத்து கட்டுவார்கள் என்றும் அதன் வாசனை நன்றாக இருக்கும் என்பதாலும் வைத்திருப்பதாக திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். அதன் அருகில் வெற்றிலை செடியையும் வைத்து உள்ளார். வெற்றிலையில் இரண்டு மிளகு வைத்து உண்டால் இருமல் குணமாகும் என கூறுகிறார்.
மேலும் அதன் அருகில் கருவேப்பிலை மரத்தையும் வைத்து உள்ளார். கருவேப்பிலை சட்னி செய்து உண்டால் கூந்தல் நன்கு நீளமாகவும், கருமையாகவும் வளரும். கரிசலாங்கண்ணி செடியையும் வைத்து உள்ளார். இதனாலும் கூந்தல் நல்ல கருமையுடன் இருக்கும் எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
காய்கறிகள் மற்றும் கீரை வகைகள்
திரு சத்திய நாராயணன் காலிஃப்ளவர் செடியையும் வளர்த்து வருகிறார். மேலும் கீரை வகைகளில் அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை போன்ற கீரை வகைகளையும் வளர்த்து வருகிறார்.
இந்த கீரை வகைகளை அதனுடைய பருவகாலத்தில் விதைத்தால் நன்றாக வளரும் என்றும் மழைக்காலங்களில் மட்டுமே அதன் வளர்ச்சி சிறிது பாதிப்படையும் எனவும் திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். சிவப்பு காராமணி செடியையும் வளர்த்து வருகிறார். இவ்வகை செடிகளை மாடி தோட்டத்தில் மட்டுமே காண முடியும் எனவும் கூறுகிறார்.
அதன் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் சித்தரத்தை செடியையும் வளர்க்கிறார் இச்செடி இலைகளை சமையலுக்கு உபயோக படுத்துவதாக கூறுகிறார். இஞ்சியை எவ்வாறு சமையலுக்கு பயன்படுத்துகிறோமோ அதே போல் இந்த சித்தரத்தை செடியின் இலைகளையும் பயன்படுத்துவதாக கூறுகிறார். இதனை அருமருந்து என்றும் கூறுகிறார். துளசி செடிகளையும், கொய்யா மரங்களையும் வைத்துள்ளார்.
மேலும் தண்டுக்கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகளையும் வளர்த்து வருகிறார். கீரைகள் மிகுந்த சுவையாக இருப்பதாகவும் கூறுகிறார். அதன் அருகில் முள்ளு கத்தரிக்காய் செடியையும் வளர்த்து வருகிறார். இந்த கத்திரிக்காய் மிகவும் சுவையாக இருக்கும் எனவும் சந்தைகளில் அதிகம் இந்த கத்திரிக்காய் வகைகள் காணப்படுவது இல்லை என்றும் திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். சாதாரண கத்தரிக்காய் வகைகளை விட இந்த முள்ளு கத்தரிக்காய் வகைகள் மிகவும் சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார். சுரைக்காய் மற்றும் பீர்க்கங்காய் போன்ற காய் வகைகளையும் வளர்த்து வருகிறார். உளுந்து செடியையும் வளர்க்கிறார்.
மாடியின் சுவரின் மீது சாமந்தி செடிகளையும் வளர்த்து வருகிறார். மேலும் பூசணி செடிகளையும் வளர்த்து வருகிறார் அதில் மூன்று வகையான பூசணிக்காய்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் சிவப்பு வெண்டைக்காய் செடியையும் வளர்த்து வருகிறார். இச்செடி ஆனது பத்து அடி உயரத்தை பெற்றிருக்கும் எனவும் கூறுகிறார். சிவப்பு வெண்டைக்காய் சந்தைகளில் காணப்படுவதில்லை எனவும் கூறுகிறார்.
இந்த வெண்டைக்காய் சமைத்ததற்கு பிறகு பச்சை நிறத்திற்கு மாறி விடுவதாக கூறுகிறார். இது உடல் நலத்திற்கு மிக நன்மை தரக்கூடிய ஒன்றாகும். மேலும் சிவப்பு கொய்யா மரத்தையும் வைத்துள்ளார். இது மிக சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார். இது சற்று பெரிதாக வளர்ந்தவுடன் இந்த கொய்யா மரத்தை அவரின் வீட்டு தோட்டத்தில் நட்டு விடுவதாக கூறுகிறார்.
மேலும் நுரை பீர்க்கங்காய் வகைகளையும் வளர்த்தி வருகிறார். இந்த பீர்க்கங்காய் கொத்துக்கொத்தாக காய்க்கும் எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார். வெங்கிரி கத்தரிக்காய் வகைகளையும் வளர்த்தி வருகிறார். இது கேரளாவின் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கத்தரிக்காய் ஒரு அடி நீளத்தை கொண்டிருக்கும். இந்த செடியானது ஐந்திலிருந்து ஆறு ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் தன்மையுடையது என திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் பேரிட்சை பழ மரத்தையும் வளர்க்கிறார். இந்த மரமானது திரு சத்தியநாராயணன் அவர்கள் உண்ட விதையிலிரந்து தானாகவே வளர்ந்தது எனவும் கூறுகிறார். பேரிச்சை பழம் உடல் நலத்திற்கு மிகுந்த நன்மையைத் தரும் எனவும் இதனுடைய சுவை மிக நன்றாக உள்ளது எனவும் திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் கத்தரி வகைகளில் மூன்று அல்லது நான்கு வகைகளில் கத்தரி செடிகளை வைத்து வளர்த்து வருகிறார். அதில் ஊதா கத்தரிக்காய், பச்சை கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய் போன்ற கத்தரி வகைகளை வைத்து வளர்த்தி வருகிறார். இந்த கத்தரி காய் வகைகள் மிகுந்த சுவையாக இருப்பதாகவும் வீட்டிற்கு உபயோகமாக இருப்பதாகவும் திரு சத்தியநாராயணன் அவர்கள் கூறுகிறார்.
அதன்பின் தூதுவளை செடியையும் திரு சத்யநாராயணன் அவர்கள் வளர்த்து வருகிறார். தூதுவளைச் செடியானது மருத்துவ குணமுள்ள செடியாகும். இருமல், சளி போன்ற நோய்களுக்கு தூதுவளை இலையினை பறித்து ரசம் வைத்து உண்டால் இந்நோய்கள் குணமாகிவிடும் எனவும் திரு சத்தியநாராயணன் அவர்கள் கூறுகிறார்.
இந்த தூதுவளை இலைகளை வைத்து வெவ்வேறு முறையில் உணவுகளை தயாரிக்கலாம் எனவும் இதனுடைய சுவை மிகுந்த நன்றாக இருக்கும் எனவும் திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார்.
திரு சத்யநாராயணன் அவர்களின் மாடித்தோட்டத்தில் ஸ்டாபெரி செடியும் வளர்ந்து இருப்பதாக கூறுகிறார். ஸ்டாபெர்ரி பழமானது மிகுந்த சுவையாக இருப்பதாகவும் திரு சத்தியநாராயணன் அவர்கள் கூறுகிறார்.மேலும் கேரட் வகைகளையும் விளைவித்து இருப்பதாகவும் அது நன்றாக வளர்ந்ததாகவும் கூறுகிறார்.
சௌவ் சௌவ் செடியானது வளர்வதற்கு மிக கடினமாக இருந்ததாகவும், இரட்டை பீன்ஸ் வகைகளும் அவ்வாறு வளர்வதற்கு கடினமாக இருந்ததாகவும் திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். ஒவ்வொரு செடிகளாக வளர்வதற்கு கடின முயற்சியை மேற்கொண்டு உள்ளதாகவும், சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை கடின முயற்சியினால் வளர செய்துள்ளதாக கூறுகிறார். திரு சத்யநாராயணன் அவரின் கடின உழைப்பினால் இந்த மாடி தோட்டத்தினை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். இந்த மாடி தோட்டத்தில் திரு சத்திய நாராயணன் அவர்கள் காலையில் ஒரு மணி நேரத்தையும் ,மாலையில் ஒரு மணி நேரத்தையும் செலவழிப்பதாக கூறுகிறார். திரு சத்திய நாராயணன் அவர்கள் மிகுந்த திறமையுடன் இந்த மாடி தோட்டத்தினை உருவாக்கி உள்ளார்.
தோட்டத்தின் நீர் பாசன முறை
இந்த மாடித் தோட்டம் இவ்வளவு சிறப்பாக இருக்க காரணம் அந்த செடிகளுக்கு அளிக்கும் நீராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் செடிகளுக்கு நீர் இல்லை என்றால் செடிகள் இவ்வாறு செழிப்பாக இருக்காது. மாடி தோட்டத்திலேயே ஒரு நீர் தொட்டியினை வைத்துள்ளார்.
அதிலிருக்கும் நீரானது மாடி தோட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், அதிலிருந்து வீட்டிற்கு நீர் எடுப்பதில்லை எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார். தொட்டியிலிருந்து ஒரு நீளமான ஓஸ் வழியாக நீரினை அனைத்து செடிகளுக்கும் அளிப்பதாக திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். மேலும் செடிகளுக்கு உரமாக பஞ்சகாவிய, ஜீவாமிர்தம், அமிர்த கரைசல், ஏஎம், மீன் அமினம் போன்ற உரங்களை செடிகளுக்கு அளிப்பதாகவும் கூறுகிறார்.
இந்த உரங்களை வென்ஜரி குழாய்களின் மூலம் செடிகளுக்கு அளிப்பதாகவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
திரு சத்தியநாராயணன் அவர்கள் இந்த மாடித் தோட்டத்தை அமைத்து உள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக கூறுகிறார்.
டிராகன் ஃப்ரூட்ஸ்
திரு சத்திய நாராயணன் அவர்களின் இரண்டாவது மாடியில் டிராகன் ஃப்ரூட்ஸ் செடியினை வளர்த்து வருகிறார். இந்த டிராகன் ஃப்ரூட்ஸ் இன் பழங்கள் ஆனது மிகுந்த சுவையாகவும், இனிப்பாகவும் உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடிய பழங்கள் எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
இந்த டிராகன் ஃப்ரூட்ஸ் மலேசியாவின் பூர்வீக பழம் எனவும் கூறுகிறார். இந்தப் பழமானது டிராகனின் தோலின் வடிவில் உள்ளதால் டிராகன் ஃப்ரூட்ஸ் என அழைக்கப்படுவதாக கூறுகிறார். இந்த பழமானது வருடத்திற்கு இரண்டு முறை காய்ப்பதாக திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார்.
முதலில் ஒரு செடியாக வைத்து பின்பு அதிக செடிகளை வளர்த்து உள்ளதாகவும் இதனை முதலில் சோதித்து பார்ப்பதற்காகவே வைத்ததாகவும் பின் இவ்வாறு அதிக அளவில் செடிகளையும், அதிக விளைச்சலையும் தந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், இதனால் அதிக பயன் பெற்றதாகவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
டிராகன் ஃப்ரூட் வகைகளில் திரு சத்யநாராயணன் அவர்களின் மாடித்தோட்டத்தில் இருக்கும் டிராகன் ஃப்ரூட் வெள்ளை நிற டிராகன் ஃப்ரூட் எனவும் இதில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற டிராகன் ஃப்ரூட் வகைகள் இருப்பதாகவும், திரு சத்யநாராயணன் அவர்கள் கூறுகிறார். இந்த டிராகன் ஃப்ரூட்யினை ஆக்சிஜனேற்ற பழம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த டிராகன் ஃப்ரூட் ஆனது புற்றுநோய் போன்ற நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார். இந்த டிராகன் ஃப்ரூட்டில் முட்கள் இருந்தாலும் அதனுடைய சுவையையும், குணத்தையும் வேறு எந்த பழங்களிலும் ஒப்பிட முடியாது எனவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார். மேலும் இவரிடம் மஞ்சள் நிற டிராகன் ஃப்ரூட் உள்ளது எனவும் கூறுகிறார். இந்த டிராகன் ஃப்ரூட் சந்தைகளில் அதிகளவு முன்னிலையில் இருப்பதாகவும் இதன் பழங்களை பழச்சாறு செய்து அருந்துவதாகவும் திரு சத்திய நாராயணன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் கோவை பழங்களையும் வளர்த்து வருகிறார். இதனுடைய சுவை மிக நன்றாக இருக்கும் எனவும் கூறுகிறார். சம்பங்கி பூச்செடியையும், பலவகையான பூச்செடியையும் வளர்த்து வருகிறார். புதினா, குண்டுமல்லி,மல்லி,பிரண்டை, மாமரத்தையும் வளர்த்து வருகிறார்.
இந்த மாடித் தோட்டத்தினால் திரு சத்யநாராயணன் அவர்களுக்கு மிகுந்த பலன் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:வெண்பன்றி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.