மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கற்றாழை விவசாயம் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய கற்றாழை விவசாய முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
கற்றாழை விவசாயத்தின் தொடக்கம்
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கற்றாழை விவசாயம் செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் எனவும் இவருடைய சிறு வயதிலிருந்து இவர் விவசாய முறையை பற்றி நன்கு அறிந்த வளர்ந்து வந்ததாக கூறுகிறார்.
சிறுவயதில் இருந்தே இவர் விவசாயத்தை பார்த்தும் கற்றும் வளர்ந்து வந்ததால் இவருக்கு விவசாயத்தின் மீது அதிக அளவில் ஆர்வம் இருந்ததாக கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் இவருடைய குடும்பம் செய்து வந்த விவசாயத்தையே செய்ய தொடங்கியதாகவும், இப்பொழுது இவர் கற்றாழை விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
Method of cultivation of Cactus
கற்றாழை விவசாயத்தை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் இந்த கற்றாழை விவசாயத்தை செய்வது மிகவும் சுலபமான முறை எனவும் கூறுகிறார்.
கற்றாழை விவசாயம் செய்யும் போது அதிகம் நீர் தேங்காமல் இருக்கும் மண்ணினை தேர்ந்தெடுத்து அதில் விவசாயம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
நீர் தேங்காமல் இருக்கும் மண்ணான வண்டல் மண் மற்றும் செம்மண் போன்ற மண் வகைகளை தேர்ந்தெடுத்து அதில் கற்றாழை விவசாயம் செய்தால் மிகவும் சிறப்பாக விவசாயம் செய்ய முடியும் என கூறுகிறார்.
கற்றாழை விவசாயம் செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு கற்றாழை கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு கன்றுகளுக்கு இடையிலும் மூன்று அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் கூறுகிறார்.
இந்த அளவில் இடைவெளி விட்டு கற்றாழை கன்றுகளை நட்டால் தான் சிறப்பாக கற்றாழை வளரும் என கூறுகிறார்.
இந்த முறையில் இடைவெளி விட்டு கற்றாழை கன்றுகளை நட்டால் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரத்திலிருந்து 30000 கன்றுகள் வரை தேவைப்படும் எனக் கூறுகிறார்.
கற்றாழையின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்
கற்றாழை என்பது நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்று எனவும் இந்த கற்றாழையில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறுகிறார்.
தென்னை மரங்களுக்கு அருகில் இந்த கற்றாழையை சிலர் வளர்த்துவார்கள் எனவும், தென்னை மரங்களுக்கு நம்மால் நீரினை அளிக்க முடியாத இருக்கும் நிலையில் தென்னை மரம் கற்றாழையிடம் உள்ள நீர் சத்தினை எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.
நமது உடலில் அதிக அளவு சத்து கிடைக்க வேண்டும் என்றால் இயற்கையாக விளைந்த இந்த கற்றாழையை நாம் எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பான ஒன்று எனக் கூறுகிறார்.
மேலும் முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்குவதற்கும் மற்றும் முகம் பொலிவுடன் இருப்பதற்கும் இந்த கற்றாழையை பயன்படுத்தலாம் என கூறுகிறார்.
உடல் குளிர்ச்சியுடன் இருப்பதற்கும் இந்த கற்றாழையை உண்ணலாம் எனவும்,இதுபோல் அதிக அளவு பயன்கள் இந்த கற்றாழையில் இருப்பதாக இவர் கூறுகிறார்.
Maintenance method and water supply method
கற்றாழை விவசாயத்தை பொறுத்தவரையில் பராமரிப்பு முறை என்பது மிகவும் குறைவானது என கூறுகிறார்.
ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நிலத்தில் இந்த கற்றாழை விவசாயத்தை செய்ய கூடாது எனவும் கூறுகிறார்.
செம்மண் மற்றும் வண்டல் மண் போன்றவற்றில் இந்த கற்றாழை விவசாயத்தை சிறப்பாக செய்யலாம் எனவும் ஆனால் களிமண்ணில் இந்த கற்றாழை விவசாயத்தை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்.
கற்றாழை விவசாயம் செய்யும் மண்ணின் PH அளவை சரி செய்து பார்த்த பிறகு அதில் விவசாயம் செய்வது சிறப்பான ஒன்று எனவும் PH அளவு ஆறு இருக்க வேண்டும் என கூறுகிறார்.
கற்றாழை விவசாயத்தில் அதிக அளவில் நீர் தேவை இருக்காது எனவும், குறைந்த அளவில் மட்டுமே நீர் இதற்கு பயன்படும் எனவும் கூறுகிறார்.
எந்த நிலத்திலும் இந்த கற்றாழை சிறப்பாக வளரும் எனவும் ஆனால் குடிப்பதற்கு பயன்படுத்தும் நீரினை இந்த கற்றாழை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் கற்றாழை மிக சிறப்பாக வளரும் என கூறுகிறார்.
கற்றாழை கன்றுகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், கன்றுகளுக்கு நீர் தேவை படும் நேரத்தில் மட்டும் நீரினை இவர் கன்றுகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
குறைந்த செலவில் எந்தவித அதிக வேலையும் இன்றி நீரும் அதிக அளவில் செலவழிக்காமல் இந்த கற்றாழை விவசாயத்தை மிகச் சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.
உரம் மற்றும் அறுவடை செய்யும் முறை
கற்றாழை விவசாயத்தில் இவர் எந்தவித செயற்கை உரங்களையும் பயன்படுத்துவதில்லை எனவும், இயற்கை உரங்களை மட்டுமே இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளையும் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
கற்றாழை கன்றுகளுக்கு நோய் தாக்குதல் எதுவும் அதிகமாக ஏற்படாது எனவும் அவ்வாறு நோய் தாக்குதல் ஏற்பட்டாலும் இவர் இயற்கை மருந்துகளான பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்த கரைசல்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
கற்றாழை கன்றுகளை நட்டு 12 மாதம் கழித்து தான் அதனை அறுவடை செய்ய வேண்டும் எனவும், கற்றாழை கன்றுகளை நட்ட 12 வது மாதம் பூ வைக்க தொடங்கும் எனவும் இவ்வாறு பூ வைக்க தொடங்கும் சமயத்தில் அதனை அறுவடை செய்ய வேண்டும் என கூறுகிறார்.
கற்றாழையை அறுவடை செய்வதற்கு எந்தவித இயந்திரமும் இல்லை எனவும் இதனை இவர் கைகளின் மூலமே அறுவடை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
கற்றாழையில் பூ வைக்கும் சமயத்தில் தான் கற்றாழை நன்கு வளர்ந்து முதிர்ச்சி அடைந்து இருக்கும் எனவும் அந்த சமயத்தில் அதனை அறுவடை செய்ய வேண்டும் என கூறுகிறார்.
Sales methodology and profitability
கற்றாழையை சாகுபடி செய்து விற்பனை செய்து வருவதாகவும் வாடிக்கையாளர்கள் இவருடைய தோட்டத்திற்கே வந்து கற்றாழைகளை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
சிறிய கற்றாழை நாற்றுகளையும் இவர் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் விளைச்சலான கற்றாழையையும் இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
ஒரு கற்றாழை நாற்றை பத்து ரூபாய் என்ற விதத்தில் இவர் விற்பனை செய்து வருவதாகவும், இதேபோல் பெரிய கற்றாழையினை இவர் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
கற்றாழையில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதால் இது அதிகமாக விற்பனையாகும் எனவும், இவ்வாறு அதிகமாக விற்பனையாகும் போது அதில் இருந்து நமக்கு நிறைந்த லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.
கற்றாழை விவசாயத்தை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் பல தகவல்கள்:கடலை உருண்டை உற்பத்தியில் சிறந்த லாபம்.