வீட்டிற்குள் ஒரு சிறப்பான பூங்கா.

சென்னையில் உள்ள திருவேற்காடு என்னும் ஊரைச் சேர்ந்த திரு கார்த்திக் என்பவர் அவருடைய வீட்டிலேயே ஒரு பூங்காவை அமைத்து உள்ளார். அவரையும் அவர் பூங்காவையும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

கார்த்திக்கின் வாழ்க்கை

திரு கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள திருவேற்காடு என்னும் ஊரில் வசித்து வருகிறார். திரு கார்த்திக் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் அவரின் வேலை இல்லாத சமயங்களில் ஒரு பூங்கா உருவாக்கலாம் என எண்ணம் கொண்டு இந்த பூங்காவை திரு கார்த்திக் உருவாக்கி உள்ளார்.

பூங்காவின் அமைப்பு

திரு கார்த்திக்கின் பூங்காவின் மொத்த அமைப்பு நாலாயிரத்து எண்ணுறு சதுர அடியில் உள்ளதாக அவர் கூறுகிறார். அவரின் பூங்காவில் அதிக அளவில் செடிகளும் கொடிகளும் பழங்களும் அதிகமாக காணப்படுகிறது.

இந்தப் பூங்காவை திரு கார்த்திக் அவர்கள் சிறு சிறு செடிகளாக வளர்த்தி பின்பு அதை இவ்வளவு பெரிய பூங்காவாக அமைக்க சுமார் ஐந்து வருடங்கள் தேவைப்பட்டதாக அவர் கூறுகிறார். வீட்டிலேயே பூங்காவை அமைத்து உள்ள திரு கார்த்திக் அவர்கள் சரியான உடல் நலத்துடனும் சுத்தமான இயற்கை காற்றை சுவாசித்துக் கொண்டு மகிழ்ச்சியாக உள்ளதாக கூறுகிறார்.

பூங்காவில் அமர்ந்து கொள்ளும் அளவிற்கு இருக்கை போன்ற அமைப்புகளையும் அமைத்து உள்ளார்.

பூச்செடிகள், கீரைகள் மற்றும் அதனுடைய பயன்கள்

திரு கார்த்திக் அவர்கள் ஐந்நூறு சதுர அடியில் உள்ள அவருடைய ஓட்டு வீட்டின் வசித்து வருகிறார். வீட்டின் அருகில் உள்ள ஒரு முள் கம்பி வேலியில் வெற்றிலைக் கொடியினை அந்த முள் கம்பி வேலியின் மீது ஏற்றி உள்ளதாகவும் கூறுகிறார். அதன்பின் வெற்றிலைக் கொடிகளும் சில மருத்துவ குணம் கொண்டது எனக் கூறுகிறார். அந்த வெற்றிலைகளை பண்டிகை காலங்களிலும், நாம் அவ் வெற்றிலைகளை உண்ணலாம் எனவும் கூறுகிறார்.

அந்த வெற்றிலைகளை திரு கார்த்திக் அவர்களின் தாயார் உபயோகித்து வருவதாகவும் கூறுகிறார்.

அதன்பின் பிளோமேரியா என்னும் செடியினையும் வளர்த்து வருகிறார். இந்த பிளோமேரியா செடியானது பாலி மற்றும் தாய்லாந்து நாடுகளில் அதிக அளவு வளர்த்துவதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். இது சாலையோர மையப் பகுதிகளிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த பிளோமேரியா செடியானது பூக்கள் செடி எனவும் அழைக்கப்படுகிறது.

இதனுடைய பூக்கள் சிறிது சிறிதாக மிக அழகாக காணப்படுகிறது. இதனுடைய பூக்கள் பல நிறங்களில் பூக்கின்றதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். மேலும் அவர் டேபிள் ரோசஸ் என்னும் அழகு பூச்செடியையும் அழகுக்காக வைத்து உள்ளதாகவும் அதில் எப்பொழுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருப்பதால் அது தனக்கு மிகவும் பிடித்தது எனவும் கூறினார். அந்த டேபிள் ரோசஸ் செடிகளில் பல வித விதமான வண்ணங்களிலும் பூக்கள் பூப்பதாக கூறுகிறார்.

அதனுடன் பாரிஜாதம் என்னும் செடியையும் வைத்து உள்ளதாக கூறினார். இதில் பாரிஜாதம் என்னும் செடி மழை பெய்ததால் நன்கு வளர்ந்து உள்ளதாக கூறுகிறார். இதில் மேலும் பூச்செடிகள் ஆன அல்லி செடியையும், வாடாமல்லி, சங்குப்பூ, செம்பருத்தி போன்ற செடிகளையும் வளர்த்து வருகிறார். இதில் செம்பருத்தி செடியானது மருத்துவ குணமாகவும் பயன்படுகிறது.

அதனுடன் துத்திக்கீரை என்னும் மருத்துவ குணமுள்ள செடியையும் வளர்க்கிறார். துத்திக் கீரையின் மருத்துவ குணமானது செரிமான குறைபாட்டிற்கும், மலச்சிக்கலுக்கும், மூலவியாதி போன்ற நோய்களுக்கும் பயன்படுவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். அதிக மருத்துவகுணம் உள்ளதால் துத்திக் கீரை செடிகளை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் பூச்செடிகளுக்கு என்று தனியாக ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார். அதனுள் பூச்செடிகளை நன்றாக வளர்த்து வருவதாக கூறுகிறார். அதில் பூக்கும் பூக்களை பறித்து பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார். இதனால் தோட்டம் ஆனது மிகுந்த அழகான நிலையில் காணப்படுகிறது. தோட்டம் ஆனது ஒரு பூங்கா போன்ற அமைப்பில் உள்ளது இது பார்ப்பதற்கு மிகுந்த அழகாக காட்சியளிக்கிறது.

திரு கார்த்திக்கும் இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். மேலும் பூச்செடிகள் என்றாலே அழகு என்று பொருள் இதனால் பூச்செடிகளை வளர்த்துவதே ஒரு அழகான செயலாகும்.

காய்கறிகளும், பழங்களும்

திரு கார்த்திக் அவர்களின் தோட்டத்தில் இயற்கையிலேயே தானே முளைத்த செடிகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார். அந்த வகையில் முளைத்த ஒரு கொடியான பூசணி கொடிகளை நன்கு வளர்த்து வருகிறார். அதிலுள்ள காய்களும் நல்ல சுவையாக இருப்பதாகவும் அந்த காய்களை தாங்கள் பயன்படுத்தி வருவதாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். எப்பொழுதும் நாம் வாங்கி வளர்த்தும் செடிகளை விட தானே முளைத்து வளரும் செடிகள் நன்கு வளரும் சக்தி பெற்றது எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

அதன்பின் வாழை மரங்களையும் வைத்து வளர்த்துக் கொண்டு வருகிறார். வாழை மரங்களில் வெவ்வேறு வகையில் வாழை மரங்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அதில் மஞ்சள் வாழை மிகுந்த சுவையாக இருப்பதாகவும் கூறுகிறார். அந்த வாழை மரத்தில் இரண்டு முறை பழங்கள் காய்த்ததாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார்.

இதில் சீத்தாப் பழமும் அவர்கள் உண்ட விதையில் இருந்து முளைத்த செடி எனவும் அந்த சீதாப் பழங்கள் மிகுந்த சுவையுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். வாழை மரங்களுக்கு சுத்தமான நீரை ஊற்றும் அவசியமில்லை எனவும் அவருடைய வாழை மரங்களுக்கு குளியல் நீரையும், அலசல் நீரையும் சுற்றுவதாக கூறுகிறார்.

குப்பைமேனி போன்ற செடிகளையும் வளர்த்து வருகிறார். குப்பைமேனியின் மருத்துவ குணமானது தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுவதாக திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். மேலும் பழ வகைகளான கொய்யா மரங்களும், கொய்யா மரத்தில் ஒரு வகை மரம் தானாகவே முளைத்து வளர்ந்ததாக அதனுடைய சுவை மிகுந்த சுவையாக இருப்பதாகவும் திரு கார்த்திக் கூறுகிறார். மேலும் மாதுளைச் செடியும் தானே முளைத்து வளர்ந்ததாகவும் அதனுடைய பழங்களும் நன்கு சுவையுடன் உள்ளதாகவும் கூறுகிறார். இவ்வாறு பலவகை மரங்கள் தாமே வளர்ந்ததால் அதிலும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறுகிறார்.

பப்பாளி மரமும் திரு கார்த்திக் அவர்கள் பூங்காவில் தாமே முளைத்து வளர்ந்ததாகவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். அந்த பப்பாளி மரத்தில் காய்கள் இப்பொழுது காய்த்து உள்ளதாகவும், அது நன்கு பழுத்தவுடன் அந்தப் பழத்தை பரித்து எடுக்க வேண்டும் என்றும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். இந்தப் பப்பாளி மரங்களுக்கு இவர் மட்டும் தண்ணீர் ஊற்றாமல் அருகில் உள்ளவர்களும் தண்ணீர் ஊற்றுவதாகவும் கூறுகிறார்.

வாழை மரங்களில் அவர் பூங்காவில் உள்ள இன்னொரு ரக வாழைமரம் ஆனது இரண்டு தார் வாழைக் காய்கள் காய்த்து உள்ளதாகவும், அந்த வாழை மரங்கள் நன்கு வளர்வதாகவும் இவர் கூறுகிறார். வந்த வாழைப்பழங்கள் பழுத்தவுடன் அவர்களுடைய வீட்டுத் தேவைக்குப் போக மீதியை அருகில் உள்ளவர்களுக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் அளித்து விடுவதாக கூறுகிறார். ஏனெனில் அவ்வளவு வாழைப் பழங்களையும் எவ்வாறு பயன்படுத்த முடியும். அதனால் அருகில் உள்ளவர்களுக்கு அளித்து விடுவதாக அவர் கூறுகிறார்.

துளசிச் செடிகள் அவர் வைத்துள்ளதாகவும், அதிலிருந்து விதைகள் பரவி பிற பகுதிகளில் வளர்ந்து உள்ளதாகவும் கூறுகிறார். இவ்வாறு பரவி வளர்ந்த துளசிச் செடிகள் அதிக அளவில் வளர்ந்து உள்ளதாகவும் கூறுகிறார். மேலும் ஒரு துளசி செடி வைத்தாலே அதிக அளவில் துளசி செடிகள் வளரும் எனவும் கூறுகிறார்.

மீன் வளர்ப்பு

திரு கார்த்திக் அவர்கள் மீன் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் அவர் அவருடைய பூங்காவிலேயே சிறு தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டி அதில் பல வகை மீன்களான காப்பி, ஸ்மாலி, ஃபைட்டர், கோல்ட் பிஷ் போன்ற மீன் வகைகளை அவருடைய தொட்டியில் வளர்த்து வருகிறார். இந்த வகையிலான மீன்கள் திரு கார்த்திக் அவர்களின் சிறு வயது ஆசை எனவும் கூறுகிறார். இந்த மீன்கள் குட்டி போடுவதாகவும் கூறுகிறார்.

இந்த நீர் தொட்டியின் ஆழமானது நான்கு அடியில் உள்ளது. அதனுடைய நீளமானது ஆறு அடியாகவும், அதனுடைய அகலமானது மூன்று அடியாகவும் உள்ளதாகக் கூறுகிறார். தொட்டியில் உள்ள நீரை அவர் எப்பொழுதும் அகற்றியது இல்லை எனவும் ,தொட்டி நான்கு அடியில் உள்ளதால் முதல் ஒரு அடியிலேயே அசுத்தமாக இருக்கும் அழுக்குகள் அடங்கி விடுவதாகவும், மேலே உள்ள தண்ணீரில் எந்த வகை அசுத்தமும் வர வாய்ப்பில்லை எனவும், அதனால் சுத்தம் செய்யும் அவசியம் இல்லை எனவும் கூறுகிறார். இதனால் மீன்கள் நன்கு சுற்றித்திரிந்து விளையாடுகின்றன என கூறுகிறார்.

திரு கார்த்திக் அவர்கள் நீர் தொட்டியினுள் ஹைட்ரில்லா என்னும் செடியை வளர்த்து வருவதால் ,அந்த செடியில் இருந்து மீன்களுக்கு நல்ல முறையில் ஆக்சிசன் கிடைப்பதாகவும் கூறுகிறார். மீன்களுக்கு உணவு அளிக்க வில்லை என்றாலும், அந்த மீன்கள் ஹைட்ரில்லா என்னும் செடியை உணவாக எடுத்து கொள்ளும் எனவும் திரு கார்த்திக் அவர்கள் கூறுகிறார். மழைக் காலங்களிலும் தொட்டியில் இருந்து நீர் வெளியே போகாதவாறு நல்ல முறையில் அமைத்து உள்ளார்.

மேலும் நெல்லிச் செடிகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார். அதிலிருந்து பழச்சாறுகளை தயாரிப்பதாகவும் கூறுகிறார். அவை மிகுந்த சுவையை தருவதாகவும் கூறுகிறார். பூங்காவின் ஒரு ஓரத்தில் இயற்கையிலேயே உரம் தயாரிக்கிறார். இதனால் அவர் செடிகளுக்கு வெளியிலிருந்து உரம் வாங்கும் அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

சாத்துக்குடி செடியும் தானாகவே முளைத்து வளர்ந்ததாகவும் அதை தாங்கள் விதை போட்டு வளர்த்த வில்லை எனவும் கூறுகிறார். அதனுடைய பழங்களும் மிகுந்த இனிப்பாக உள்ளதாகவும் கூறுகிறார். சப்போட்டா செடியும் தானே வளர்ந்ததாகவும், அந்தச் செடி நன்கு வளர்ச்சி அடைவதாகவும், அதில் இப்பொழுது பழங்கள் காய்த்து உள்ளதாகவும் கூறுகிறார். இதனுடன் எலுமிச்சை மரமும் வளர்ந்து வருவதாகவும், அந்த மரத்தில் இன்னும் காய்கள் வரவில்லை எனவும் அதற்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

சீத்தாப்பழமும் கற்றாழை போன்ற செடிகள் வளர்த்து வருகிறார். மேலும் முருங்கை மரத்தையும்வளர்த்து வருகிறார். திரு கார்த்திக் அவர்கள் மாலை நேரத்தில் அமர்ந்து வேலை செய்ய இருக்கை போன்ற அமைப்பையும் அமைத்து உள்ளார். வீட்டிற்கு வெளியிலும் அதிக செடிகளையும், மரங்களையும் வளர்த்தி உள்ளார்.

கார்த்திக் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை

திரு கார்த்திக் அவர்கள் இவ்வாறு பூங்காவை சிறப்பாக உருவாகியுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:800 கோழிகளுடன் ஆன அகரம் கடக்நாத் பண்ணை.

 

 

 

Leave a Reply