வெளிநாட்டில் இருந்துகொண்டே பண்ணையை சிறப்பாக நடத்தி வரும் கால்நடை மருத்துவர்.

டாக்டர் சர்தர் அவர்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டே மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே பண்ணைக்கு வந்து அந்த பண்ணையினை மிக சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார். அவரையும் அவர் பண்ணையை பற்றியும் பின்வரும் தொகுப்பில் விரிவாக காணலாம்.

டாக்டர் சர்தர் அவர்களின் வாழ்க்கை

டாக்டர் சர்தர் அவர்கள் அவரின் மருத்துவப் படிப்பை சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் முடிந்ததாக கூறுகிறார். கல்லூரிப் படிப்பினை முடித்ததற்கு பிறகு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் தமிழ்நாட்டில் பணியாற்றியதாக கூறுகிறார்.

அதன் பிறகு இவருக்கு ஓமான் செல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும், அங்கிருந்து துபாய் மற்றும் சவுதி அரேபியா சென்றதாகவும், தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றி வருவதாகவும், அங்கு அவர் CEO பாக பணியாற்றி வருவதாகவும் அங்குள்ள தரமான தயாரிப்புகளை பார்த்து நம் நாட்டில் உள்ள மக்களுக்கும் இவ்வாறு தரமானதை தர வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்ததாக டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

இவருடைய மைத்துனனின் ஆலோசனையின் மூலமே இந்த பண்ணையை உருவாக்கியதாகவும் இந்த பண்ணை உருவாக அவர் முக்கிய காரணம் எனவும் கூறுகிறார்.

ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பு

பொதுவாக வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் நம்முடைய நாட்டில் ஒரு பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவர் வெளிநாட்டில் இருந்து கொண்டே ஒரு சிறப்பான ஒருங்கிணைந்த பண்ணையினை நடத்திக் கொண்டு வருகிறார். பண்ணையின் அனைத்து இடங்களிலும் கேமராக்களை பொருத்தி உள்ளதாகவும் அதன்மூலம் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதாகவும் கூறுகிறார். கோழிகளை விற்பனை செய்வதும் மேலும் அவைகளை கவனிப்பதையும் கேமராக்களின் மூலமே கண்காணிப்பதும் கூறுகிறார்.

மேலும் இவர் பண்ணைகளில் இல்லாத நேரங்களில் ஒரு கால்நடை மருத்துவரை பண்ணையை கவனித்துக்கொள்ள நியமித்து உள்ளதாகவும் கூறுகிறார். கேமராக்களின் மூலம் பண்ணையினை நான்கு அல்லது ஐந்து  முறை கவனிப்பதாகவும் கூறுகிறார்.

பண்ணைக்கு தொழிலாளர்கள் வேலைக்கு வந்தாலும் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்த பிறகே வேலையை செய்வதால் எந்த பிரச்சனைகளும் வருவதில்லை என கூறுகிறார். இவருடைய பண்ணையில் நூறு கோழிகளில் இறப்பு விகிதம் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் என கூறுகிறார்.

கோழிகள் மற்றும் தீவனங்கள்

டாக்டர் சர்தர் அவர்களிடம் மொத்தமாக ஒன்பதாயிரம் கோழிகள் உள்ளது எனவும் புதியதாக 800 கோழிக்குஞ்சுகள் வாங்கி உள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த கோழிக்குஞ்சுகளை நாற்பத்து ஐந்து நாட்களுக்கு மட்டும் கூண்டுகளில் வைத்து வளர்ப்பதாகவும் அதன் பின் அவைகளை சுதந்திரமாக மேய்வதற்கு விட்டு விடுவதாகவும் கூறுகிறார். இவைகளுக்கு உணவாக மக்காச்சோளம், சோளம்,கடலைப் புண்ணாக்கு, மீன் தோல் மற்றும் மினரல் மிக்ஸ் ஆகியவற்றை அளிப்பதாக கூறுகிறார்.

மேலும் கருவாடுகளை அரைத்து அளிப்பதாகவும், சிறு கோழிகளுக்கு சிறிய அளவிலும் பெரிய கோழிகளுக்கு பெரிய அளவிலும் அளிப்பதாகவும் கூறுகிறார். மக்காச்சோளம், சோளம், கடலைப்புண்ணாக்கு, மீன் தோல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துள்ளார்.

மேலும் அரிசியையும், கோதுமையையும் அரைத்து வைத்துள்ளார். கோழிகளுக்கு சைபர்ரிலிருந்து பதிநைந்து நாட்களுக்கு ஒரு வகை உணவையும், பதிநைந்து நாட்களிலிருந்து முப்பது நாட்கள் வரை ஒரு வகை உணவையும், முப்பது நாட்களில் இருந்து நாற்பத்தைந்து நாட்கள் வரை ஒரு வகை உணவையும் அளிப்பதாகவும், நாற்பத்தைந்து நாட்களுக்கு பிறகு கோழிகள் மேய்ச்சலுக்கு செல்வதால் அவர்களுக்கு பசுமையான உணவுகளை அளிப்பதாகவும் கூறுகிறார்.முட்டையிடும் கோழிகளுக்கு களிஞ்சலை உணவுடன் சேர்த்து அளிப்பதாக கூறுகிறார்.

காடைகள் மற்றும் முயல்கள்

டாக்டர் சர்தர் அவர்களின் பண்ணையில் மொத்தமாக மூன்றாயிறம் கடைகள் உள்ளது எனவும் தற்பொழுது ஒரு தனித்துவமான காடை வகைகளை வாங்கி உள்ளதாகவும் அதனுடைய முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து காடைகளை உருவாக்குவதாகவும் கூறுகிறார்.

இந்த காடை வகைகள் சாதாரணக் காடைகளை விட விரைவில் வளரும் தன்மை உடையது என கூறுகிறார். சாதாரண காடைகளுக்கும் இந்த தனித்துவமான காடை வகைகளுக்கும் ஒரே மாதிரியான உணவு வகைகளையே அளிப்பதாக கூறுகிறார். இந்த காடை வகைகளை விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். மேலும் காடைகளின் இறைச்சி நல்ல சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

முயல்களுக்கு உணவு அளிக்கும் போது அந்த உணவினை கூண்டின் மேல் வைத்து விடுவதாகவும் முயலானது கூண்டிற்குள் இருந்தே அந்த உணவு வகைகளை உண்கின்றன எனவும் கூறுகிறார்.

கூண்டிற்குள்ளேயே உணவினை போடுவதால் முயல்கள் ஆனது உணவின் மேல் சிறுநீர் போன்றவற்றை விட்டு விடும் எனவும் அதனால் முயல்களுக்கு நோய் ஏற்படும் எனவும் கூறுகிறார். இந்த காரணத்திற்காகவே இவ்வாறான உணவு அளிக்கும் முறையை பின்பற்றியதாகவும் இந்த முறையை இந்தோனேசியா சென்றபோது அறிந்து கொண்டதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

முயல் வகைகளில் இவரிடம் 300 முயல்கள் உள்ளதாகவும் அந்த முயல் வகைகள் நியூசிலாந்து ஒயிட், ரெட் செயின்ட், ஒயிட் செயின்ட், சோவிட் சின்சில்லா மற்றும் அங்கோரா கிராஸ் வகைகளையும் வைத்துள்ளதாக கூறுகிறார்.

முயல்களுக்கு உணவாக வேலி மசாலா, சுபாபல், அகத்தி மற்றும் நாட்டுப்புல் மற்றும் அருகம்புல் வகைகளையும் அளிப்பதாக கூறுகிறார். முயல்களுக்கு நோய்கள் வரும் எனவும் அதனை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதாகவும் கூறுகிறார். முயல்களுக்கு  பாட்டில்கள் மூலம் நீர் அளிப்பதாக கூறுகிறார்.

நீரினை ஒரு பாத்திரத்தில் வைத்து அளித்தால் அவைகள் அதில் சிறுநீர் போன்றவைகளை விடுவதால் முயல்களுக்கு நோய்கள் ஏற்படும் எனவும் அதன் காரணமாகவே பாட்டில்களில் நீர் அளிப்பதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த முயல் வகைகளை வளர்ப்பதற்கும், இறைச்சிக்கும் அளிப்பதாக கூறுகிறார்.

வாத்துக்கள் மற்றும் ஆடுகள்

டாக்டர் சர்தர் அவர்கள் தற்போது புதியதாக நாலாயிரம் நாட்டு வாத்துக்களை வாங்கி உள்ளதாகவும் அவைகளுக்கு குளம் ஒன்றை அமைக்க உள்ளதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார். தற்போது இவரிடம் ஒயிட் பெக்கிங் என்ற வாத்து வகைகள் மொத்தமாக ஐநூற்று ஐம்பது வாத்துக்கள் உள்ளது எனவும் கூறுகிறார்.

இந்த வாத்துக்கள் இன்னும் இருபது நாட்களுக்குள் விற்பனைக்கு வந்து விடும் எனவும் கூறுகிறார். இந்த வாத்துக்கள் அறுபது நாட்களுக்குப் பிறகு இரண்டில் இருந்து இரண்டரை கிலோ வரை இருக்கும் என கூறுகிறார். ஒன்றரை கிலோவிற்கு மேல் வாத்துக்கள் இருந்தால் மட்டுமே அவைகளின் இறைச்சி சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

நாட்டு வாத்துக்கள் உண்பதற்கு சுவையாக இருந்தாலும் அவைகளின் இறைச்சி குறைந்த அளவே இருக்கும் எனவும் ஆனால் இந்த ஒயிட் பெக்கிங் வாத்து வகைகள் உண்பதற்கு சுவையாகவும் அதிக இறைச்சியை கொண்டிருக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த வாத்துக்களின் இறைச்சி மிக மெலிந்த இறைச்சி எனவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார். இந்த வாத்துக்களுக்கு முதல் மாதம் வெறும் தீவனங்களை மட்டும் அளிப்பதாகவும் ஒரு மாதத்திற்கு பிறகு எழுபத்து ஐந்து சதவீதம் அளவு தீவனத்தையும் இருபத்து ஐந்து சதவீதம் அளவு அரிசியையும் கலந்து அளிப்பதாக டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

வாத்துக்களுக்கு மருந்துகள் அளிக்கும் அவசியம் இல்லை எனவும் கூறுகிறார். இந்த வாத்துக்கள் ஒரு கிலோவிற்கு மேல் வந்த பிறகே விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். இந்த வாத்து இறைச்சிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதாகவும் இதனை அதிக அளவில் மக்கள் விரும்பி உண்பதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஆட்டு வகைகளில் அறுபது ஆடுகளுக்கு மேல் வைத்து உள்ளதாகவும், செம்மறி ஆட்டு வகைகளை ஏதாவது பண்டிகை காலங்களில் மட்டுமே வாங்குவதாகவும் கூறுகிறார். இந்த ஆடுகளை பனிரெண்டு அல்லது பதிமூன்று மாதங்களுக்குப் பிறகு நல்ல முறையில் வளர்த்து விற்பதாக கூறுகிறார்.

இந்த ஆட்டு வகைகள் காலையில் தீவனங்கள் உண்டுவிட்டு மேய்ச்சலுக்கு செல்வதாகவும் மீண்டும் மாலையில் மேய்ச்சலுக்கு சென்று வந்த பிறகு தீவனங்கள் உண்பதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார். இந்த ஆடு வகைகளுக்கு மருந்துகளை ஊசிகள் மூலம் அளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்த ஆடு வகைகள் அதிக ஆட்டு வகைகள் வளர்ந்த பிறகு விற்பனை செய்வதாகவும் கூறுகிறார். ஏனெனில் குறைந்த அளவு ஆடுகளை வைத்து விற்பனை செய்தால் அவை வியாபாரிகளை பாதிக்கும் எனவும் கூறுகிறார்.

இவர்களின் தேவைக்கு போக மீதம் உள்ள  ஆண் ஆடுகளை மட்டுமே விற்பனை செய்வதாகவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

 பரண் இல்லாத ஆட்டுப்பண்ணை

ஆடுகள் என்றால் ஓட வேண்டும் நடக்க வேண்டும் எனவும் இவ்வாறு செய்தால் தான் ஆடுகள் நல்ல முறையில் வளரும் எனவும் அதனுடைய இறைச்சி சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார். பரண் அமைத்தால் ஆடுகள் இவ்வாறு நல்ல முறையில் ஓடவோ நடக்கவோ முடியாது எனவும் கூறுகிறார்.

அவ்வாறு பரண் அமைத்தே தீர வேண்டுமென்றால் ஆடுகளை நல்ல முறையில் வளர்த்து அதில் வரும் லாபத்தை வைத்து  பரண் அமைக்கலாம் எனவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

இவருடைய ஆட்டுப்பண்ணையில் எந்த வகையிலும் துர்நாற்றம் வீசுவதில்லை எனவும் பரண் அமைக்கும் பணத்தில் ஐந்நூறு ஆடுகள் வாங்கினால் வாரத்திற்கு பத்து லட்சம் வரை வருமானத்தை பெறலாம் எனவும் கூறுகிறார்.

பரண் அமைக்கும் முறை சிறந்த முறை இல்லை எனவும் கூறுகிறார். பரண் இல்லாத முறையில் ஆடுகளை வளர்ப்பதால் ஆடுகள் சுதந்திரமாகவும் நல்ல காற்றோட்டமாகவும் வளரும் எனவும் கூறுகிறார். ஆடுகள் நன்றாக ஓட வேண்டும் நடக்க வேண்டும் எனவும் அவ்வாறு இருந்தால்தான் ஆடுகள் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் அவைகளின் இறைச்சி சுவையாக இருக்கும் எனவும் டாக்டர் சர்தர் அவர்கள் கூறுகிறார்.

அவ்வாறு பரண் அமைத்தே தீர வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே பரண் அமைக்காமல் ஆடுகளை வளர்த்து அதிக அளவு வருமானம் வந்தவுடன் அந்த வருமானத்தில் பரண் அமைப்பது சிறப்பான ஒன்று எனவும் கூறுகிறார். மேலும் பரண் அமைத்து அதன் மூலம் லாபம் பெற்றவர்கள் யாரும் இல்லை எனவும் கூறுகிறார்.

பரண் அமைத்து அதன் மூலம் ஏமாற்றம் அடைந்தவர்களே அதிக அளவு உள்ளனர் எனவும் கூறுகிறார். மேலும் பொய்யான முறையில் விளம்பரங்களை அளிப்பது தவறான முறை எனவும் கூறுகிறார்.

டாக்டர் சர்தர் அவர்களின் ஆட்டுப்பண்ணை மிக தூய்மையான முறையிலும் ஆடுகள் நல்ல சுதந்திரமான முறையிலும் வளர்ந்து வருகின்றனர். மேலும் இவரிடம் உள்ள வாத்துக்கள், கோழிகள், முயல்கள், காடைகள் ஆகியவற்றையும் நல்ல முறையில் வெளிநாட்டில் இருந்துகொண்டு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார்.

மேலும் படிக்க:அமேசானில் விற்பனையாகும் மரச்செக்கு எண்ணெய்.

Leave a Reply