800 கோழிகளுடன் ஆன அகரம் கடக்நாத் பண்ணை.

கரூர் மாவட்டம் கள்ளமடைபுதூரில் வசிக்கும் திரு அசோக் என்பவர் கடக்நாத் பண்ணை வளர்த்தி வருகின்றார் அவரின் கோழி பண்ணையை பற்றியும் அவரின் கோழி வளர்ப்பு முறையும் கீழ்காணும் தொகுப்பில் ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு அசோக் அவரின் வாழ்கை

திரு அசோக் அவர்களின் தந்தை தாய் விவசாயம் செய்பவர்கள்,அதனால் திரு அசோக் அவர்களுக்கு கோழி வளர்ப்பில் ஆர்வம் மிக அதிகமாக ஏற்பட்டது என்கிறார். இதனால் கடக்நாத் கோழிகளை வைத்து பண்ணை அமைக்கலாம் என எண்ணம் கொண்டார்.

இப்பொழுது சாதாரணமாக ஆடு மாடு பண்ணை வளர்ப்பில் அதிகம் தண்ணீர் செலவு ஏற்படும் என்ற காரணத்தால் கோழிப் பண்ணை வைப்பதால் தண்ணீரின் அளவு அதிகம் தேவை இல்லை என்பதால் அவர் கடக்நாத் கோழி பண்ணையை சிறப்பாக உருவாக்கினார்.

கடக்நாத்தின் தனித்துவம்

சாதாரணமாக நம் நாட்டுக்கோழியில் புரோட்டின் அளவு பதினெட்டு சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் கடக்நாத் கோழி வகையில் இருபதில் இருந்து இருபத்தி நான்கு சதவீதம் வரையில் புரோட்டின் உள்ளது. இதனால் கடக்நாத் கோழிகள் மிகுந்த சத்து நிறைந்த உணவு ஆகும்.

நாட்டுக்கோழிகளில் இருநூற்று பதினெட்டு மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் கடக்நாத் கோழிகளில் ஐம்பத்து ஒன்பது மில்லி கிராம் கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது. இந்த வகையிலும் கடக்நாத் கோழி வகைகள் தனித்துவமாக உள்ளது.

கருநொச்சி, கருந்துளசி, கரு ஊமத்தை, கருஞ்சீரகம் ஆகியவற்றைப் போன்ற மருத்துவ குணம் உள்ள உணவுகளை போல கடக்நாத் கோழி வகைகளும் கரு நிறத்தில் உள்ளதால் மருத்துவம் சம்மந்தப்பட்டவற்றிற்கு பயன்படுவதாக திரு அசோக் அவர்கள் கூறுகிறார். சிலர் இந்த கடக்நாத் கோழிகளின் நிறத்தை பார்த்து அதை புறக்கணிக்கின்றனர்.

ஆனால் பலரோ அதன் நன்மை மற்றும் சிறப்பு அம்சங்களை அறிந்து அதனை அதிக அளவில் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கடக்நாத்தை அதிக மக்கள் விரும்பி உண்பதாகவும் திரு அசோக் அவர்கள் மிக மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் கூறுகிறார். கடக்நாத் கோழிகளின் மூலம் அவர் மிகுந்த பயனை பெற்றுள்ளார்.

கடக்நாத் பண்ணை

திரு அசோக் கடக்நாத் பண்ணையை மூன்று அறை வருடங்களாக பராமரித்து கொண்டு வருகின்றார். இக் கோழிகளை திரு அசோக் வளர்த்து வருவதால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மன உறுதியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

அவர் வளர்த்தும் கடக்நாத் கோழி வகைகளில் அவரிடம் மொத்தமாக எண்ணூற்று ஐம்பது கோழிகள் வளர்த்து வருவதாக கூறுகிறார். வெறும் ஐம்பது கோழிகளில் தொடங்கி இப்பொழுது எண்ணூற்று ஐம்பது கோழிகளை உருவாக்கியதால் அவர் மிகுந்த மன தைரியத்துடன் உள்ளார்.

கோழிகளின் தீவனங்கள்

திரு அசோக் கடக்நாத் கோழிகளுக்கு உணவுப் பொருட்களாக வேலி மசாலா,குதிரை மசாலா, முருங்கையும் முருங்கைக்கீரையும் அளித்து வருகிறார்.பின் கம்பு, ராகி, அரிசி போன்ற சத்து நிறைந்த தீவன வகைகளையும் அளித்து வருகிறார்.

இந்த வகையில் கடக்நாத் கோழிகளுக்கு  உணவு அளித்து கொண்டு வருவதால் கோழி தீவனங்களும் அதன்பின் கோழிகளும் மிகுந்த ஆரோக்கியமான நிலையிலும் உள்ளும் எனக் கூறுகிறார்.

கோழிகள் ஆரோக்கியமாக இருக்க அவற்றிற்கு நல்ல முறையில் உணவு அளித்தல் வேண்டும் என கூறுகிறார். கோழிகளை மிக பாதுகாப்புடனும் பராமரிக்க வேண்டும் என திரு அசோக் அவர்கள் கூறுகிறார். இவ்வகைகளை பின்பற்றினால் மட்டுமே கோழிகள் நல்ல தரமான நிலையில் இருக்கும்.

கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்தி

பொதுவாக நாட்டுக்கோழிகளில் பத்து நாட்களில் கோழிகளை தாக்குகின்ற நோய் கடக்நாத் கோழிகளுக்கு ஒரு மாதத்திலிருந்து  ஒன்று அறை மாதங்களுக்குப் பிறகே கோழிகளை தாக்குகின்றது. அதிலும் நாட்டுக்கோழிகளுக்கு நோய் தாக்குவதால் அக் கோழிகளை  பாதுகாப்பது மிக கடினமான ஒன்றாகும்.

ஆனால் கடக்நாத் கோழிகளை நோய்கள் தாக்குவதால் அக் கோழிகளை சுலபமாக முறையில் பாதுகாக்க முடியும் என கூறுகிறார்.அனைத்து மருந்துகளையும் ஏற்றுக்கொள்ளும் திறன் கடக்நாத் கோழிகளுக்கு உள்ள சிறப்பு ஆகும்.வெள்ளைக்கழிச்சல் போன்ற நோய் வந்தால் கூட கடக்நாத் கோழி வகைகள் மிக குறுகிய கால அளவில் குணமாகி விடுகின்றனர் என கூறுகிறார்.

இவற்றில் கோழிகள் பிறந்த நாளிலிருந்து ஏழாவது நாளில் FN, பதினாலாவது நாளில் IPD யும் இருபத்தி எட்டாவது நாளில் லசோ ட்டேவும் பின் மூன்று மாதங்களுக்கு பிறகு ராணிக்கட்டு, வெள்ளை கழிச்சல் போன்ற நோய்களுக்கு மருத்துவம் அளித்து  வரலாம் என கூறுகிறார். இதை தாங்கள் இயற்கை முறையில் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு இருந்தாள் சீரக தண்ணீரை நன்றாக கொதிக்கவைத்து அதனை கசாயம் போன்ற முறையில் மாற்றி கோழிகளுக்கு அளித்து வரலாம் என கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு துளசி, வேப்பங்கொழுந்து, மஞ்சள் ஆகிய அனைத்தையும் அரைத்து தீவனங்களில் சேர்த்து அளித்து வருவதால் கோழிகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும் என திரு அசோக் அவர்கள் கூறுகிறார். திரு அசோக் அவர்களின் கடக்நாத் கோழிகளுக்கு இம்முறையால் அதிகம் கோழிகள் நோய்களால் பாதிப்பு அடையவில்லை என கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு அவை பருகும் குடி நீரிலும் சீரக தண்ணீரை கலந்து உள்ளதாக கூறியுள்ளார். இதனால் கடக்நாத் கோழிகள் மிக பாதுகாப்பான நிலையில் வளர்ந்து வருகின்றதாகவும் அவர் கூறுகிறார்.

பண்ணையின் அமைப்பு

திரு அசோக் அவர்கள் அவரின் பண்ணையில் எந்த வகையிலும் தீய உயிரினங்களான பாம்பு, கிரி போன்ற உயிரினங்கள் நுழையாதவாறு அவரின் பண்ணையை மிகுந்த பாதுகாப்பான நிலையில் அமைத்து உள்ளதாக கூறுகிறார். பண்ணையின் மேற்புறத்திலும் பாதுகாப்பான வலைகளை அமைத்து உள்ளதாக கூறுகிறார்.

இதனால் எந்த தீய உயிரினங்களும் உள்ளே நுழையும் அபாயம் இல்லை. அவர் இவ்வாறு செய்ய முக்கிய காரணம் கோழிகளை எந்த உயிரினங்களும் அதாவது தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் ஏதும் தீண்டாத வகையில் கோழிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வகையில் பண்ணையை அமைத்து உள்ளார்.அவரின் பண்ணை சுமார் இரண்டு ஆயிரத்து ஐந்நூறு சதுர அடியில் அமைத்து உள்ளார்.

இதனால் கடக்நாத் கோழிகள் காற்றோட்டமாகவும், நல்ல நிலையினும் சுற்றி விளையாடி கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் சுதந்திரமாக உள்ளது என கூறுகிறார். கோழிகளுக்கு முதலில் அவை சுதந்திரமாக சுற்றிதிரிவதே மிக அவசியமான ஒன்றாகும்.

கடக்நாத்தின் முட்டைகளும் அவற்றின் வருமானமும்

திரு அசோக் அவர்களின் பண்ணையில் மொத்தமாக ஒரு நாளில் இருநூற்று ஐம்பதில் இருந்து மூண்ணுறு முட்டைகள் அளவில் கிடைப்பதாக கூறுகிறார். தினமும் கோழிகள் முட்டை போட்டவுடன் அவற்றை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் அந்த முட்டைகளை எடுத்து அதன் குளிர்ச்சியை போக்குகிறார்.

அதன்பின் முட்டைகளை அதன் குளிர்ச்சி போனதும் அதனை இன்க் பேட்டரில் தனியாக வைத்து இருபத்தி ஒன்று நாட்களுக்குப் பிறகு பார்த்தாள் முட்டைகள் பொரிந்து கோழி குஞ்சு வெளியில் வந்து விடுகின்றனர். இந்த முறையை அவர் பின்பற்றுவதாக கூறுகிறார்.

நாட்டுக் கோழிகளை விட கடக்நாத் கோழிகள் அதிக மருத்துவகுணம் உள்ளதால் அதிக அளவு கோழிகள் விற்பனை ஆவதாக இவர் கூறுகிறார். அருகில் உள்ளவர்களும் அதிக அளவில் கடக்நாத் கோழிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதில் சென்னை, ஜெய்ப்பூர், ஆந்திரா, விசாகப்பட்டினம் போன்ற பிற இடங்களில் இருந்தும் வந்து கடக்நாத் கோழிகளை வாங்கிச் செல்வதாகவும் அதனை அவர்களுக்கு தாமே சென்று அளிப்பதாகவும் திரு அசோக் அவர்கள் கூறுகிறார். கோழிகளின் விலை தோராயமாக நாற்பத்து ஐந்திலிரந்து ஐம்பது ஆயிரம் அளவில் அளிப்பதாகவும் இதேபோல் முட்டைகளின் விலை இருபத்து ஐந்திலிரந்து இருபத்து ஏழு ஆன அளவில் அளிப்பதாக கூறுகிறார்.

கோழிகளை புதியதாக வளர்ப்பவர் அவர்களின் நிலை சிறிது கடினமானது என கூறுகிறார். அவற்றை முறையாக பாதுகாப்பான மிகப் பாதுகாப்பான நிலையில் வளர்த்த வேண்டும் எனக் கூறுகிறார்.

நாட்டுக் கோழி முட்டைகளை விட கடக்நாத் கோழிகள் அதிக விலை கொண்டிருக்க காரணம் நாட்டுக்கோழிகளின் முட்டையில் புரோட்டீன் அளவு பதினெட்டில் இருந்து இருபது சதவீதம் அளவு மட்டுமே உள்ளது. ஆனால் கடக்நாத் கோழிகளின் முட்டைகளில் இருபத்து ஐந்து சதவீதம் புரோட்டின் உள்ளது.

இதன் காரணமாக தான் நாட்டுக் கோழிகளை விட கடக்நாத் கோழிகளும் அவற்றின் முட்டைகளும் விலை அதிகம் உள்ளதாக திரு அசோக் கூறுகிறார். மேலும் கடக்நாத் முட்டைகளிலும் கோழிகளிலும் p1, p2,p6,p12,c மற்றும் e மேலும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் அதிகம் உள்ளதாக கூறுகிறார். இதனை அதிக அளவு வைட்டமின் நிறைந்த உணவு என கூறுகிறார் திரு அசோக் அவர்கள்.

முட்டைகளை வாங்கிச் செல்பவர்கள் அவற்றினை மிக பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் முட்டையில் உள்ள மஞ்சள் கரு கலைந்து விடும் என கூறுகிறார். அவ்வாறு கலைந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க ஏற்ற முட்டை அல்ல அதனை உணவாக பயன்படுத்த உகந்தது என கூறுகிறார்.

திரு அசோக் அவர்கள் ஆரம்ப நிலையில் கிராமப்புறங்களில் கோழிகள் வளர்த்தும் வகையில் கோழிகளுக்கு கம்பு, சோளம் போன்ற தானிய வகைகளை மட்டுமே அளித்து வந்துள்ளார். அதனால் அவருக்கு முட்டைகளின் அளவு குறைவாகவே கிடைத்து உள்ளது. இதனால் அவர் ஒரு கால்நடை மருத்துவரின் அறிவுரையினால் கடக்நாத் கோழிகளுக்கு மக்காச்சோளம், கம்பு, அரிசி, முருங்கை மற்றும் முருங்கைக்கீரை மேலும் வேலி மசாலா ,குதிரை மசாலா ஆகிய உணவு பொருட்களை அளித்து வந்துள்ளார்.

இதனால் அவரின் கடக்நாத் கோழிகளிடம் இருந்து அதிக அளவு முட்டைகளின் அளவும் அவற்றின் தரமும் அதிகரித்து வந்ததாக கூறுகிறார். அவரின் கால்நடை மருத்துவரும் கோழிகளை மாதத்தில் ஒரு முறை திரு அசோக் அவரின் கோழிப் பண்ணைக்கு வருகை தந்து கோழிகளை பரிசோதித்து விட்டு செல்வதாக கூறுகிறார்.இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் உள்ளதாக கூறுகிறார்.

அசோக் அவர்களின் குறிக்கோள்

கடக்நாத் கோழிகளை வைத்து வளர்த்துகின்ற திரு அசோக் அவர்கள் ஆரம்ப காலத்தில் வெறும் ஐம்பது கோழிகளை மட்டுமே வளர்த்து வந்தார். ஆனால் இப்பொழுது எண்ணூற்று ஐம்பது கோழிகளை உருவாக்கி உள்ளார்.

இதனால் அவர் கூறியது கடக்நாத் கோழிகளையே இவ்வளவு சிறப்பாக வளர்த்த முடியுமென்றால் நம் நாட்டுக் கோழி வகைகளை இதைவிட சிறப்பாக வளர்த்தும் எண்ணம் உள்ளதாக கூறி உள்ளார்.

மேலும் காடை போன்றவற்றையும் வளர்த்து வதாகவும் கூறியுள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அதிக வருமானத்தையும் ஈட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க:ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானம்

Leave a Reply