அனைத்து வகை இன்குபேட்டர்களும் ஒரே இடத்தில்.

சென்னையில் உள்ள ஆவடியில் வசித்து வரும் திரு ராஜ்கமல் அவர்கள் அனைத்து வகையிலான இன்குபேட்டர்களையும், தயாரித்து உள்ளார். இவரைப் பற்றியும் இவருடைய இன்குபேட்டர் பற்றியும் பின்வருமாறு  தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு ராஜ்கமல் அவர்களின் வாழ்க்கை

திரு ராஜ்கமல் அவர்கள் சென்னையில் உள்ள ஆவடியில் வசித்து வருகிறார். இவர் அனைத்து முட்டைகளையும் வைப்பதற்கு சரியான அளவுகளில் உள்ள இன்குபேட்டர்களை தயாரித்து உள்ளார்.

திரு ராஜ்கமல் அவர்கள் ஒரு கோழிப் பண்ணையும் வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

திரு ராஜ்கமல் அவர்கள் பண்ணை வைத்துள்ளதால் அவரின் தேவைக்காக மட்டும் உருவாக்கிய இந்த இன்குபேட்டர்களை இவருடைய நண்பரின் தேவைக்காக அளித்து, அந்த நண்பரின் மூலம் மற்றவர்களுக்கு இந்த இங்குபேட்டரை பற்றி தெரிந்து அனைவரும் இந்த இங்குபேட்டரை திரு ராஜ்கமல் அவர்களிடம் வாங்குவதற்கு வருவதாகவும் கூறுகிறார்.

இப்பொழுது திரு ராஜ்கமல் அவர்கள் இந்த இன்குபேட்டரை ஒரு தொழிலாக செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் இவர் இந்த தொழிலினை முழுமனதோடு தொடங்கியதாகவும் கூறுகிறார்.

மற்றும்இவர் தயாரிக்கும் அனைத்து இன்குபேட்டரும் மிகத் தரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார் .இன்குபேட்டர் தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டாலும் அதனை மிக தரமான முறையிலேயே தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பதாகவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

திரு ராஜ்கமல் அவர்கள் ஒரு தனி மனிதனாக 70 முட்டைகள், 200 முட்டைகள், 300 முட்டைகள், 500 முட்டைகள் வைப்பதற்கான இன்குபேட்டரை உருவாக்கி உள்ளார்.

இந்தமுறையில் ஒரு தனிமனிதனாக இத்தனை வகையிலான இன்குபேட்டரை இவர் உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் தேவைக்கான அளவுகளில் இன்குபேட்டரினை உருவாக்கி அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இன்குபேட்டர் தயாரிப்பின் தொடக்கம்

திரு ராஜ்கமல் அவர்கள் முதலில் சிறிய அளவில் மட்டும் இன்குபேட்டர் தயாரிக்கலாம் எனவும், இதில் அதிக லாபம் வந்தால் பெரிய அளவில் இங்குபேட்டர்களை தயாரிக்கலாம் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.

இவரின் தேவைக்காக தயாரித்த இன்குபேட்டர்களை போலவே வாடிக்கையாளர்களுக்கும் தரமான முறையில் இன்குபேட்டரை தயார் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மிக உறுதியாக கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இந்த எண்ணத்தின் மூலமே அனைத்து இன்குபேட்டர்களையும் மிகச் சிறப்பான மற்றும் தரமான முறையில் தயாரித்து வருவதாக திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இயந்திரம் தரமானதாக இருந்தால் மட்டுமே அதனின் வாழ்நாளும் அதிக நாட்கள் இருக்கும் எனவும் கூறுகிறார். மேலும் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் மிகச் சரியான முறையில் தீர்த்து வருவதாகவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

70 முட்டைகள் வைக்கும் இன்குபேட்டரின் அமைப்பு மற்றும் செயல்திறன்

திரு ராஜ்கமல் அவர்கள் இந்த இங்குபேட்டர்கள் அனைத்தையும் மிக சிறப்பான வகையில் உருவாக்கியுள்ளார்.

திரு ராஜ்கமல் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த 70 முட்டைகள் வைக்கும் இன்குபேட்டரை தயாரித்து உள்ளார். இப்பொழுது அதில் சில மாற்றங்களை செய்து பழைய இன்குபேட்டரை விட மிக சிறப்பான மற்றும் தரமான இன்குபேட்டரை உருவாக்கி உள்ளார்.

இன்குபேட்டரில் முட்டைகள் ஆனது ஒவ்வொரு முறையும் குஞ்சு பொரிக்கும் போது அதன் மூலம் அதிக அளவு குப்பைகள் ஏற்பட்டுவிடும் எனவும் இதனால் இன்குபேட்டரில் ஒரு மூடி போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

இந்த முறையினால் நீர் போன்ற எந்த வகைகளும் இன்குபேட்டரின் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார். மேலும் இந்த இன்குபேட்டரில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒரு கருவியையும் பொருத்தி உள்ளதாக திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இங்குபேட்டரில் முட்டைகள் எப்பொழுதெல்லாம் சுற்ற வேண்டும் என்பதற்காக ஒரு அலாரத்தையும் பொருத்தி உள்ளதாக கூறுகிறார். மேலும் இன்குபேட்டரில் முட்டைகள் சுற்றுகிறதா என்பதை அறிவதற்கு ஒரு பச்சை நிற லைட்டை பொருத்தி உள்ளார்.

இந்த இன்குபேட்டர் இயங்கும்போது அவற்றில் இருந்து எந்தவித சத்தமும் ஏற்படாது எனவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார். மற்றும் இந்த இன்குபேட்டரின் மூடியில் மின்விசிறி மற்றும் மின் விளக்கை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த மின் விசிறி மற்றும் மின் விளக்கில் பாதிப்பு அதிக அளவில் ஏற்படாது எனவும் கூறுகிறார். அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை ஒரு ஐம்பது ரூபாயிலேயே சரி செய்து விடலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மின்விசிறி வகைகள் ஆனது DC வகையைச் சேர்ந்த மின்விசிறி எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த DC மின்விசிறி வகைகள் தான் 24 மணி நேரமும் இயங்கினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.

ஆனால் AC மின்விசிறி வகையினை பயன்படுத்தினால் அவை 24 மணிநேரமும் செயல்பட்டால் பாதிப்பு நிச்சயமாக ஏற்படும் எனவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் மூடியின் நடுவில் ஒரு சென்சாரை பொருத்தியுள்ளார். இது வெப்பத்தின் அளவை அறிந்து சொல்வதற்கு உதவியாக இருப்பதாக கூறுகிறார். நாம் அளிக்கும் ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகிய அனைத்தும் முட்டைகளுக்கு அளிப்பதால் அந்த சென்சாரை முட்டையின் நடுவில் பொருத்தி இருப்பதாக திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் திரு ராஜ்கமல் அவர்கள் இந்த இன்குபேட்டரில் ஹீட்டரை பயன்படுத்தாமல் மின்சார விளக்கை பயன்படுத்தியதற்கு காரணம் இந்த இன்குபேட்டரை விவசாயிகளே அதிகமாக பயன்படுத்தி வருவதாகவும், இந்த மின்சார விளக்கு முறையை பொருத்தி உள்ளதால் அவர்களுக்கு இது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இவர் உருவாக்கிய இன்குபேட்டரில் இந்த மின்சார விளக்கு மற்றும் மின்விசிறி போன்றவற்றை கீழே அமைத்து இருந்ததாகவும் , இப்பொழுது இதை மேலே மூடியில் அமைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு அமைந்ததற்கு காரணம் இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மூடியை மட்டும் தனியாக எடுத்து சரி செய்து கொள்ளலாம் எனவும் திரு ராஜ்கமல் அவர்கள்கூறுகிறார்.மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் அதை திரு ராஜ்கமல் அவர்களே சரி செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார்.

மற்றும் இந்த மின்விசிறி மற்றும் மின்சார விளக்கானது மூடியில் அமைந்துள்ளதால் எந்தவித பாதிப்பும் சிறிதளவு கூட ஏற்படாது எனவும் கூறுகிறார். மற்றும் மின் விசிறிக்கு மட்டும் ஒரு அடாப்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இந்த இன்குபேட்டருக்கு ஒரு மின்சார இணைப்பை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார். இந்த இன்குபேட்டரில் வெப்பமானது 30 டிகிரி வரை மட்டுமே இருக்கும் எனவும், 30 டிகிரிக்கு மேல் சென்றால் தானாகவே இன்குபேட்டர் நின்று விடும் எனவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மின்சார விளக்கு ஆனது வெயில் காலங்களில் சிறிது நேரம் மட்டுமே எரியும் எனவும், குளிர் காலங்களில் அதிக நேரம் எரியும் எனவும் கூறுகிறார். ஏனெனில் வெயில் காலங்களில் சூரியனிடமிருந்தே அதிக அளவு வெப்பம் கிடைப்பதால் குறைந்த அளவு நேரம் மட்டுமே பயன்படுத்துவதாக திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

இந்த வெப்ப நிலையை ஒரு நாளைக்கு 8 முறை இன்குபேட்டருக்கு அளிப்பதாகவும் கூறுகிறார். மேலும் இவைகள் தானாகவே இயங்குவதற்கு ஒரு நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் இயங்கும்படி அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் முட்டைகள் சுழலும் போது அவைகள் உடையாமல் இருப்பதற்கு ஒரு கருவியையும் பொருத்தி உள்ளதாகவும் , இந்த கருவியின் மூலம் முட்டைகள் எந்த  திசையில் இருந்தாலும் அவைகள் உடையாமலேயே சுழலும் எனவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் முட்டைகள் வைக்கும் பெட்டியில் ஒரு பக்கம் மூன்று முட்டைகள் வைக்கும் அளவிற்கு வரிசையும், மற்றொரு பக்கத்தில் 4 முட்டைகள் வைக்கும் அளவிற்கு வரிசையும் இருப்பதாக கூறுகிறார். இந்த பெட்டியினை தனியாக எடுக்க வேண்டும் என்றாலும் சுலபமாக எடுத்து விடலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் அந்தப் பெட்டியின் அடியில் ஈரப்பதத்திற்கு என்று ஒரு ரப்பரால் ஆன பெட்டியை வைத்து உள்ளதாகவும் கூறுகிறார். மற்றும் இந்தப் பெட்டியில் நீரானது அதிக அளவில் நிரம்பி விட்டால் அவைகள் வெளியில் வருவதற்கு ஒரு குழாய் போன்ற அமைப்பையும் பொருத்தி உள்ளதாகவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இங்குபேட்டரின் உள்ளே நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அறிவதற்கு இன்குபேட்டரில் வெளியில் ஒரு கண்ணாடியை பொருத்தி உள்ளதாகவும் கூறுகிறார். அதன் வழியாக தண்ணீரின் அளவையும், மின்விசிறி சுற்றுகிறதா அல்லது மின்விளக்கு எரிகிறதா என்பதையும், முட்டைகள் சுழல்கிறதா அல்லது முட்டைகள் பொரிகிறதா என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் எனவும் திரு ராஜ்கமல் அவர்கள் கூறுகிறார்.

இந்த இன்குபேட்டரில் பெருவிடைக்கோழி முட்டைகளை வைத்தால் 65 முட்டைகளை மட்டுமே வைக்க முடியும் எனவும், சிறுவிடை கோழி முட்டைகளை வைத்தால் 70 முட்டைகளை வைக்கலாம் எனவும் கூறுகிறார்.

இன்குபேட்டரின் பராமரிப்பு முறை

திரு ராஜ்கமல் அவர்கள் இங்குபேட்டரை மிகப் பாதுகாப்புடன் பராமரித்து வரவேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் இன்குபேட்டர்யினை மூடும்போது மின்சார விளக்குகள் உடைவதற்கு வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாகவும் கூறுகிறார்.

அதனால் இதை மிகவும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் அனைத்து முட்டைகளும் பொரித்து விடும் என்று நாம் எண்ணம் கொண்டிருப்பது தவறான ஒன்று எனவும் கூறுகிறார். உயிரனு உள்ள முட்டைகள் மட்டுமே சைவ முட்டைகள் எனவும், உயிரனு இல்லாத முட்டைகள் அசைவ அட்டைகள் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இன்குபேட்டரினை தொடர்ந்து ஆறு மாதங்கள் உபயோகம் செய்யாமலும் வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

மின்சார விளக்கு மற்றும் அடாப்டருக்கு மட்டும் உத்திரவாதம் அளித்து வருவதாகவும் கூறுகிறார். இந்த இன்குபேட்டரின் விலையானது 7500 ரூபாய் எனவும் கூறுகிறார்.மேலும் இந்த இன்குபேட்டரை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

வாடிக்கையாளர்கள் இன்குபேட்டரை வாங்கியதற்கு பிறகு அதன் தேவை இல்லை என்று திருப்பி இவரிடமே அளித்தாலும் இவர் வாங்கி கொள்வதாகவும் கூறுகிறார். மற்றும் இந்த இன்குபேட்டரில் முட்டைகள் பொரிக்கும்போது மின்சார தடை ஏற்பட்டால் முட்டையின் கருவானது இறப்பதற்கு வாய்ப்பு குறைவு எனவும் கூறுகிறார்.

மேலும் திரு ராஜ்கமல் அவர்கள் இதுபோன்று அனைத்து எண்ணிக்கையில் உள்ள முட்டைகளை வைப்பதற்கும் இன்குபேட்டர்களை தயாரித்து உள்ளார். திரு ராஜ்கமல் அவர்கள் மிகவும் சிறப்பாக ஒரு தனிமனிதனாக இருந்து இந்த அனைத்து வகையிலான இன்குபேட்டர்களையும் தயாரித்து உள்ளார்.

இந்த முறையில் இவர் உருவாக்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாகவும், பாராட்டும் வகையிலும் இருக்கிறது. இதனை திரு ராஜ்கமல் அவர்கள் மிக சிறப்பான முறையில் நடத்திவருகிறார்.

மேலும் படிக்க:காடை வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply