ஆடு வளர்த்தால் ஆடி கார்

ஆடு வளர்த்து ஆடி கார் வாங்கிய மயிலாடுதுறையை சேர்ந்த தினேஷ் அவர். அவர் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர் .அவற்றைப்பற்றி இத் தொகுப்பில் காணலாம்.

ஆடு பண்ணையின் உரிமையாளர்

திரு. தினேஷ் என்பவர் மயிலாடுதுறையில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத வருமானமாக மிகக்குறைந்த அளவிலே கிடைத்தது.

இதனால் இவர் தங்களுடைய வீட்டு செலவுகளையும் கடன் செலவுகளையும் சமாளிக்கவே கஷ்டப்பட்டு வந்தார். இதில் இவர் நாளொன்றில் பல மணி நேரம் அலைப்பேசியில் செலவழித்தார்.

இதனால் வீட்டில் பல்வேறு பிரச்சினையாகவே இருந்தது. இதில் அவர் பல சந்தோசங்களையும் இழந்து மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.

ஆட்டுப் பண்ணையின் தொடக்கம்

திரு தினேஷ் அவர்கள் ஒரு செய்தித்தாளின் வழியாக ஆட்டுப்பண்ணை வைத்தால் மாதம் 10 லட்சம் கோழிப்பண்ணை வைத்தால் மாதம் 5 லட்சம் என படிக்க இதை பற்றி தெரிந்து கொள்ள பல்வேறு வாயிலாக பார்க்கிறார்.

அதை யோசித்துக்கொண்டு முகநூல் மற்றும் யூட்டூப் மற்றும் பல்வேறு இடங்களில் இவற்றைப்பற்றி பார்க்கிறார். மேலும் இவற்றைப் பற்றி தகவல்களில் சேகரிக்கிறார். பின்பு அவரின் மனைவியிடம் இதை பற்றி கூறி தெளிவாக விளக்குகிறார்.

தினேஷ் வங்கியில் பணியாற்றியதால் அங்கு இதற்கான கடன் வாங்குகிறார். இதற்கு 25% முதலாகவும் 75% வங்கியில் கடன் வாங்கி இதனை தொடங்குகிறார். தினேஷ் புதிதாக திருமணமான தம்பதிகள் ஆவார். அதனால் அவர் அந்த 25% பணத்தை தனது மனைவியின் நகைகளை வைத்து ஏற்பாடு செய்கிறார். 75% பணம் வங்கி கடன் மூலம் பெறுகிறார்.

ஆடு வளர்ப்பின் அடிப்படை

ஆடு வளர்ப்பில் அடிப்படையானது மிக முக்கியமானதாகும். ஆட்சி தெரியாத தினேஷ் ஆரம்ப கட்டத்தில் வாங்கிய ஆடுகள் ஒரு மூடப்பட்ட தரமற்ற ஆடுகள் ஆகும். அவர் வாங்கி ஆடுகள் அதிகமான விலை உயர்வான ஆடுகள் ஆகும்.

அவற்றினை அவருக்கு குறைந்த விலையில் தருவதாக கூறி அதாவது தரம் குறைந்த ஆடுகளை வாங்கினார். அதாவது இரண்டு லட்சம் மிக்க ஆடுகள் அவருக்கு ஒரு லட்சத்திற்கு தந்தனர் . விலை குறைவாக கிடைக்கும் என்பதை நம்பி இவர் அதில் முதலீடு செய்தார். இவர் இங்கு மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து அதிகபட்சமாக 100 ஆடுகளிலிருந்து 200 ஆடுகள் வரை வாங்கினார். இதில் பல்வேறு ஆடுகள் தரமற்ற ஆடுகள் இருந்தது.

அதன் பின்பு அவர் வசிக்கும் பகுதியில் மழை மற்றும் கஜா புயல் போன்றவற்றில் பல்வேறு சேதங்கள் அடைந்தது. இதில் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் ஆடுகளுக்கு பல்வேறு விதமான நோய்களும் பிரச்சனைகளும் வந்தது. இதனை சரிசெய்ய பல்வேறு விதமான வழகளை மேற்கொண்டார்.

இவர் ஆடுகளை வாங்கிய பண்ணைகளில் இதற்கான தடுப்பு மருந்துகளை போட்டதாக கூறி இவர் விற்றுள்ளனர். ஆனால் இவர் வாங்கிய பண்ணைகளில் ஆடுகளுக்கு சரியான பராமரிப்பு மற்றும்  தீவனங்களும் நோய் தடுப்பு மருந்துகளும் தராமல் இருந்ததால் ஆடுகள் பல்வேறு பாதிப்புகளுக்கும் நோய்களுக்கும் தள்ளப்பட்டது.

ஆடுகளின் நோய்கள்

அப்போது மழைக்காலம் என்பதால் ஆடுகளுக்கு பி பி ஆர் என்ற என்ற நோயால் பாதிக்கப்பட்டு 40 ஆடுகள் இறந்தன.

இதுமட்டுமல்லாமல் பிபி ஆர் என்ற நோயால் மட்டுமல்லாமல் ஆடுகளுக்கு பல்வேறு நோய்களால் பாதிப்பு ஏற்பட்டது. மலட்டுத்தன்மை மற்றும் குட்டி இறப்பு மற்றும் வயிறு இழப்பு போன்ற நோய்களால் பல்வேறு ஆடுகள் இறந்தது.

  • தீவன மேலாண்மையில் குறைபாடு மற்றும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு தீவனம் குறைபாடு மற்றும் குட்டிகளுக்கு பால் குறைபாடு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளில் ஆடுகள் தள்ளப்பட்டது .

நிலமும் ஆடு வளர்ப்பும்

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 100 ஆடுகள் வளர்க்கலாம் என்று கூறினர். ஆனால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆடுகள் மட்டுமே வளர்க்க முடியும். அதற்கான தீவனங்களையும் வளர்ப்பு களையும் கட்டுப்படுத்த முடியாது.

ஒரு ஏக்கர் நிலத்தில் முழுவதும் அதற்கு தேவையான பயிரிடப்பட்ட சுமார் 365 நாட்களுக்கு மட்டுமே அந்த இருபது ஆடுகள் வளர்ப்பதற்கு சரியாக இருக்கும் .மேலும் ஆடுகளின் எண்ணிக்கை உயர்ந்தால் அதற்கு போதுமான நில வசதி தேவைப்படும். இதைப் பற்றி அறியாத தினேஷ் அவர் போட்ட முதலீட்டையும் எடுக்கவில்லை. மேலும் வங்கியின் மாதத் தவணையும் வந்துவிட்டது.

 வங்கி கடன்

ஆடு பண்ணை வைப்பதற்காக தினேஷ் வங்கியில் சுமார் 75% கடன் தொகையை பெற்றார். இதன் மூலம் வங்கி கடன் தொகையின் வட்டி மட்டும் பத்தில் ஒரு பங்காக இருந்தது. இதை கட்டுவதற்காக மீதி இருந்த ஆடுகளை விற்று தனது வங்கி கடன்களை காட்ட தொடங்கினார்.

இரண்டாவது முறையாக மீண்டும் முயற்சி செய்து ஆடுகளை வாங்குவதற்கு தனது மனைவியின் நகைகளை வங்கிகளில் வைக்கிறார். மீண்டும் கடன் தொகையை பெறுகிறார். மீண்டும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தினேஷ் தள்ளப்பட்டு மிகவும் அவதிப்பட்டார்.

இதனால் திரு தினேஷ் அவர்களுக்கு 20 லட்சம் வரை கடன் ஆனது. இதைப்பற்றி யோசித்த தினேஷ் பின்பு அவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள ஆரம்பித்தார்.

அடிப்படை தெரியாத வளர்ப்பு

ஆடு வளர்ப்பின் அடிப்படைகளை தெரியாத வளர்ப்பதன் மூலம் பல்வேறு நஷ்டங்கள் ஆகும். மேலும் பல்வேறு பிரச்சினைகளும் இருக்கும். இதில் தினேஷுக்கு சுமார் 20 லட்சம் வரை நஷ்டம் ஆனது ஏற்பட்டது. தினேஷ் பண்ணையை விற்பதற்கு முடிவு செய்தார்.

பின்பு அதை விற்க முடிவு செய்து பின்பு அதை மிகக் குறைந்த விலைக்கு கேட்டனர் அதாவது 5 லட்சம் முதலீடு செய்து பண்ணையை சுமார் 80000 மதிப்பிற்கு கேட்டனர். இதில் மேலும் தினேஷ் யோசிக்க தொடங்கினார்.

அவர் பண்ணையை ஆரம்பிக்கும் பொழுது சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொண்டு பண்ணையை உருவாக்கினார். பின் அப்பண்ணையை பிரித்து விற்க முடிவு செய்யும்போது பண்ணையின் பொருட்கள் பழைய இரும்புக் கடைக்கு மட்டுமே எடுத்துக்கள்ளப்படும் என கூறினார்கள்.

பண்ணையின் தேவையும் அமைவிடமும்

அக்காலங்களில் பண்ணைகள் இல்லாமல் ஆடுகள் பட்டி போன்றவற்றில் அடைக்கப்பட்டு நன்றாக வளர்க்கப்பட்டது. இப்பொழுது பண்ணை என்று அதற்கு தனியாக உருவாக்கி அவற்றில் ஆடுகளை போதிய இட வசதி இன்றி அடைப்பதால் அந்த ஆட்டிற்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆடுகளை பரண் வைத்து வளர்ப்பதால் ஆடுகளின் கழிவுகள் தங்காது என்று கூறுவார்கள் ஆனாலும் அவற்றில் கழிவுகளும் தேங்குகின்றன.

ஜனவரி மற்றும் மார்ச் காலங்கள் வரை செம்மறி ஆடுகளுக்கு சரியான காலமாகும் இவற்றில் கூட்டம் கூட்டமாக ஆடுகள் வைக்கப்படும் அவ்வாறு மேய்க்கும் ஆடுகள் எந்த பிரச்சினை இன்றியும் நன்றாக ஆரோக்கியமான முறையில் இருக்கும்.

இயற்கையில் மேயும் ஆடுகளுக்கும் பரண்களில் மேயும் ஆடுகளுக்கும் பல்வேறு விதமான வேறுபாடுகள் இருக்கின்றது. உதாரணமாக இயற்கையில் மேயும் ஆடுகள் தனக்குத் தேவையான இயற்கையான தீவனங்களை எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கும் எந்தத் தீமையும் இன்றி நன்கு சாப்பிடுகிறது.

ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தீவனம் ஆனது சூப்பர் மசால், வேலிமசால் குதிரை மசால் போன்ற தீவனங்கள் மட்டுமே அளிக்கப்படும் .இதனால் ஆடுகள் போதுமான ஊட்டச்சத்து இன்றி அடைந்து கிடப்பதால் பல்வேறு நோய்களுக்கு பாதிப்படைகிறது.

இதைவிட்டால் கடலைகளை மற்றும் கடலை புண்ணாக்கு ஆகிய இரண்டு ஆடுகளுக்கு வைக்கப்படும். ஆடுகளுக்கு ஒரே மாதிரியான தீவனங்களை தருவதால் அதற்கு உடல்நிலை மற்றும் மனநிலையை மாற்றமடையும் .இதனால் ஆடுகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

இப்படி செய்வதால் இது ஒரு சராசரி பண்ணை பிராய்லர் கோழிக்கு இணையாக வளர்க்கப்படும் ஆடுகள் ஆகும் .இவை பெரிதளவு லாபம் இல்லாத அளவு இருக்கும்.

இவ்வாறு செய்ததால் தினேஷ் அவர்களுக்கு பெரிதளவு நட்டம் ஏற்படுகிறது. இதன் பின்புஅவரைச் சுற்றியும் அக்கம்பக்கத்தினரும் அவரின் மனநிலையை ஆட்டத்தொடங்கினார் .இதனால் தினேஷ் அவர்கள் மேலும் கவலை அடைந்தார்.

இவ்வாறு மன உளைச்சல் அடைந்த தினேஷ் அவர்கள் ஒரு நாள் நான் பத்து நாள் வெளியே போகிறேன் என்று வீட்டில் சொன்னார். அதைக் கண்டு அவரது மனைவி மற்றும் பெற்றோர்கள் மிகவும் பயப்பட்டனர்.

பின்பு அவர் சென்ற இடமெல்லாம் பரண் வைத்து ஆடுகள் வளர்த்து கொண்டிருந்த ஊருக்கெல்லாம் சென்று அவற்றைப் பற்றி கேட்டு தெரிந்தார். அவர் கேட்டு தெரிந்து கொண்ட பக்கமெல்லாம் அதிர்ப்தி மட்டுமே கிடைத்தது.

அதன் பின்பு மீண்டும் ஒருமுறை தன்னம்பிக்கையாக மீண்டும் அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டே இருந்தார். பின்பு சந்தைக்கு ஒரு நாள் சென்று ஆடு இருப்பதையெல்லாம் மற்றும் ஆடு விற்பது எல்லாம் நன்கு கவனிக்க ஆரம்பித்தார் தினேஷ். ஆடு நுணுக்கங்களை தெரிந்து தினேஷ் பின்பு ஒவ்வொரு சந்தைக்கும் சென்று ஆடு வாங்கவே இல்லை என்றாலும் அவற்றின் விலையை கேட்டு அவற்றை நன்கு தெரிந்து கொண்டார்.

தினேஷ் அவர்களின் வெற்றி தொடக்கம்

தினேஷ் அவர்கள் பின்பு ஒவ்வொரு தொடக்கத்தையும் தெரிந்து கொண்டார். பின் அவற்றின் அடிப்படையில் ஆடுகளை வாங்க தொடங்கினார்.

பின்பு அவர் வெளியே சென்று கற்றுக்கொண்ட அனுபவங்களையும் மற்றும் அவர் அவற்றின் அடிப்படைகளையும் சந்தைக்குச் சென்று ஆடு விற்பது வாங்குவது போன்ற அடிப்படைகளையும் நன்கு ஆராய்ந்து செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் அவர் ஆடுகளுக்கு வரும் பிரச்சனைகள் மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றை அதிகாரப் பூர்வமாகவும் அனுபவப் பூர்வமாகவும் நன்கு தெரிந்து கொண்டார்.

இதன் வாயிலாக மீண்டும் அவர் ஒரு புதிய வழிப்பாதையில் தொடக்கத்தை தொடங்கினார்.

ஆடு வளர்ப்பில் ஆடி கார்

ஆடு வாங்கி விற்பது

அவர் தெரிந்து கொண்டதை வைத்து சந்தைக்கு சென்று முதலில் ஒரு ஆடு வாங்கினார். பின்பு அவற்றை ஒரு மணி நேரத்தில் 1000 லாபத்திற்கு விற்றார். பின்பு இதுபோன்றே நாளொன்றுக்கு 10 ஆடுகள் வாங்குவதும் விற்பதும் ஆகவே அவர் தொடங்கினார் .பின்பு அவர் ஒரு வருடத்தில் அவர் அடைந்த லாபத்தை சரி கட்ட தொடங்கினார்.

மீண்டும் பண்ணை தொடக்கம்

இதுபோன்று சரியாக செய்து கொண்டு இருந்ததால் அவருக்கு போதுமான அளவு வருமானம் கிடைக்க ஆரம்பித்தது. அவர் அடைந்த நஷ்டங்களையும் சரி செய்து முடித்தார். பின்பு அதில் இருந்து போதிய வருமானம் ஈட்டி அவற்றை வைத்து குறைந்த அளவு ஆடுகளை வாங்கி அவற்றை மேய்வுக்கு அனுப்பி அவற்றில் வருமானத்தை இருமடங்காக முயற்சிகளை ஈட்டினார்.

ஆடி கார் மற்றும் ஆடம்பரம்

இவ்வாறு லாபத்தை ஈட்ட ஈட்ட அவருக்கு பெரிதளவு லாபம் கிடைக்க ஆரம்பித்தது. பின்பு அவர் ஒவ்வொரு செயலையும் தொடங்கினார். சிறிய பண்ணையாக தொடர்ந்து இப்பொழுது மயிலாப்பூரில் மிகப்பெரிய ஆட்டு பண்ணை வைத்து பணியாளராக வாழ்ந்து வருகிறார். இப்பொழுது அவரிடம் 40 லட்சம் மதிப்பிலான வீடு மற்றும் ஒரு ஆடி கார் என்ற அளவில் மிகப் பெரிய ஆளாக வளர்ந்துள்ளார். இவ்வாறெல்லாம் அவரின் தன்னம்பிக்கையால் மட்டுமே முடிந்தது.

மேலும் படிக்க:100%கைபடாத சுத்தமான பால் வளாகம்

Leave a Reply