கோழிகளுக்கு தீவனம் வைக்க ஆட்டோமேட்டிக் இயந்திரம்.

திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க உதவும் ஆட்டோமேட்டிக் இயந்திரம் ஒன்றை வைத்துள்ளார். இந்த இயந்திரத்தை இவருடைய தந்தையின் பண்ணையில் பயன்படுத்தி வருகிறார்.

இவரைப் பற்றியும் இவருடைய இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு திஸ்வந்த் அவர்களின் வாழ்க்கை

திரு திஸ்வந்த் அவர்கள் திருப்பூர் அருகில் உள்ள பெருந்தூர் கவுண்ட மலை என்னும் ஊரில் வசித்து வருகிறார். இங்கு திரு திஸ்வந்த் அவர்களின் தந்தை ஒரு கோழிப் பண்ணையை வைத்து நடத்தி வருகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் தற்போது படித்துக் கொண்டு வருவதாகவும் கூறுகிறார். இவர்களின் பண்ணையில் அதிக அளவில் வேலை ஆட்கள் தேவை உள்ளதால் திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க தானாகவே இயங்கும் ஒரு இயந்திரத்தை வைத்துள்ளதாக கூறுகிறார்.

இந்த இயந்திரத்தின் மூலம் பண்ணையில் வேலை செய்யும் வேலை ஆட்களுக்கு அளிக்கும் பணமானது குறையும் எனவும் கூறுகிறார். மேலும் திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க பயன்படும் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தைப் போல மேலும் சில இயந்திரங்களை வைத்துள்ளார்.

திரு திஸ்வந்த் அவர்கள் மிகவும் சிறப்பான வகையில் இந்த இயந்திரத்தை வைத்து அதன் மூலம் மிக சுலபமான வழியில் கோழிகளுக்கு தீவனங்களை அளித்துக் கொண்டு வருகிறார்.

இம்முறையில் கோழிகள் ஆனது நல்ல உடல் வளர்ச்சியுடனும், எந்த நோய்களும் தாக்காமல் வளரும் எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

ஆட்டோமேட்டிக் இயந்திரம்

பொதுவாக கோழிப் பண்ணை என்றாலே பண்ணையில் கோழிகளுக்கு தீவனம் வைக்கவும், அந்த கோழிகளை கவனித்துக் கொள்ளவும் வேலை செய்ய வேலை ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள். இதனால் அதிக அளவு பணம் செலவாகும்.

இந்த மொத்த வேலை ஆட்களின் வேலையை ஒரே ஒரு இயந்திரம் மட்டும் செய்தால் பணத்தின் தேவை ஆனது மிகவும் குறைந்து விடும். இதன் அடிப்படையிலேயே திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க உதவும் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வைத்துள்ளதாக கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்களின் தந்தை ஒரு பெரிய அளவிலான பிராய்லர் கோழிப் பண்ணையினை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

இதனால் இவர்களின் பண்ணைக்கு இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தின் தேவை இருந்ததால் இந்த இயந்திரத்தை இவர்களின் பண்ணையில் பயன்படுத்தி வருவதாகவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

சில பிராய்லர் கோழிகளின் பண்ணையில் கோழிகள் அதிக அளவில் விற்பனை ஆகாமல் இருப்பதற்கு காரணம் அந்தக் கோழிகளுக்கு முறையான உணவை அளிக்காமல் இருப்பது ஒரு காரணம் என திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

கோழிகளுக்கு நல்ல முறையில் உணவை அளித்தால் மட்டுமே அவைகள் நன்கு வளர்ந்து விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனம் வைக்க உதவும் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வைப்பதற்கு முன் இவருடைய நண்பரின் கோழி பண்ணைக்கு சென்று அங்குள்ள அனைத்தையும் அறிந்து கொண்ட பிறகு இந்த இயந்திரத்தை வைத்ததாக கூறுகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் மூலம் இந்த இயந்திரத்தை உருவாக்கும் முறையை பற்றி அறிந்து கொண்டு அதில் எந்த நிறுவனம் மிக சிறப்பாக உள்ளதோ அதனை பயன்படுத்தி வருவதாக திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் உள்ள மாவட்டத்திலேயே முதன் முதலாக இந்த கோழிகளுக்கு தீவனம் அளிக்க பயன்படும் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை இவரே பண்ணையில் வைத்துள்ளார்.

பொதுவாக இந்த முறையினை பெரிய அளவில் உள்ள நிறுவனங்களிலேயே உருவாக்குவதற்கு சிறிது தயக்கம் கொண்டு உள்ளனர். ஆனால் இதை திரு திஸ்வந்த் அவர்கள் மிகசிறப்பான வகையில் பண்ணையில் வைத்து அதனை பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.

இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பண்ணையில் வேலை செய்ய வேலையாட்களின் தேவை இல்லை எனவும், இதனால் பணம் வீண் ஆவதில்லை எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் திரு திஸ்வந்த் அவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை பண்ணையில் வைத்ததன் மூலம் கோழி தீவனத்தை கோழிகளுக்கு ஒரு அரை மணி நேரத்திலேயே முழுவதுமாக வைத்து விடுவதாக கூறுகிறார். இதுவே மனிதர்கள் இந்த வேலையை செய்தால் இரண்டு மணி நேரம் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த இயந்திரத்தில் உள்ள தீவனங்கள் விரைவில் கெட்டுப்போவதில்லை எனவும் கூறுகிறார். இதனால் கோழிகள் தீவனத்தை அதிக அளவு விரும்பி உண்ணும் எனவும் கூறுகிறார். எந்த அளவிற்கு தீவனங்கள் புதியதாக உள்ளதோ அந்த அளவிற்கு கோழிகள் அதிகளவு தீவனத்தை விரும்பி உண்ணும் எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் தீவனங்கள் வீண் ஆவதில்லை எனவும் கூறுகிறார்.

மின்சார அடைகாக்கும் பானை

திரு திஸ்வந்த் அவர்களின் பண்ணையில் மின்சார அடைகாக்கும் பானை முறையையும் பயன்படுத்தி வருகிறார். இந்த மின்சார அடைகாக்கும் பானை முறையினால் இவருக்கு அதிக அளவு நன்மை கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர்கள் வெளியில் செல்லும் போது கோழிகள் பண்ணைக்கு வந்தால் அவற்றிற்கு இந்த மின்சார அடைகாக்கும் பானை ஹீட்டர் முறையை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். இதில் பட்டனை போட்டு விட்டால் தானாகவே ஹீட் ஆகிவிடும் எனவும் கூறுகிறார். இதனை இவர்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தினால் பண்ணையின் உள்ளே வர மாட்டார்கள் எனவும், பண்ணையின் உள் வரவேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.

பண்ணையின் வெளியில் இருந்தே ஹீட்டர் சூடானதும் அதனை நிறுத்தி விடுவதாக கூறுகிறார். காலையில் பண்ணையில் உள்ள திரையினை அகற்றுவதற்கு மட்டுமே இவர்கள் பண்ணைக்குள் செல்வதாகவும்  கூறுகிறார்.

ஆனால் இதனை பாரம்பரிய முறையில் செய்தால் அதிக அளவில் வேலை செய்ய வேண்டும் எனவும் இதனால் அதிக அளவு சிரமம் ஏற்படும் எனவும் கூறுகிறார்.

பொதுவாக தொழில்நுட்ப முறையில் பண்ணையினை நடத்தும் எண்ணம் இருந்தால் முதலில் அதன் மூலம் எவ்வளவு உற்பத்தி வருகிறது என அறிந்து கொண்டு அதன் பிறகு இந்த முறையை பயன்படுத்துவது சிறந்தது எனவும் கூறுகிறார்.

மேலும் இதைப் பற்றி அறியாமலேயே இந்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்தினால் நஷ்டம் ஏற்படும் என்ற எண்ணத்தை கொண்டிருப்பது மிகவும் தவறானது எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

ஆட்டோமேட்டிக் இயந்திரத்தின் சிறப்பு

திரு திஸ்வந்த் அவர்களின் பண்ணையில் பெரிய அளவிலுள்ள பண்ணையை விட, குறைந்த அளவில் உள்ள ஒரு சிறிய பண்ணையும் உள்ளது எனவும் கூறுகிறார்.

இந்த சிறிய பண்ணையில் இரண்டு வேலை ஆட்களை வைத்து பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தீவனம் வைப்பதினால் அதிக அளவு நேரம் செலவாகும் எனவும், ஆனால் இதை தானாக செயல்படும் இயந்திரத்தின் மூலம் கோழிகளுக்கு தீவனத்தை அளிக்கும் போது குறைந்த அளவு மட்டுமே நேரம் செலவாகும் எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

பாரம்பரிய முறையில் தீவனங்களை கோழிகளுக்கு கைகளால் வைப்பதின் மூலம் பாதி தீவனங்கள் காற்றில் பறந்து விடும் இதனால் தீவனம் ஆனது வீணாகிவடும் எனவும் கூறுகிறார்.

ஆனால் இதை தொழில்நுட்ப முறையில் செய்தால் தீவனங்கள் வீணாவதற்கு வாய்ப்பு கிடையாது எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தில் உள்ள தீவனத்தின் புத்துணர்ச்சியும், தூய்மையும் பாரம்பரிய முறையில் அளிக்கும் தீவனங்களில் இருப்பதில்லை எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

பாரம்பரிய முறையில் கோழிகளுக்கு தீவனம் அளிப்பதற்கு அதிக அளவு ஆட்கள் தேவை உள்ளது எனவும் கூறுகிறார். ஆனால் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தின் மூலம் கோழிகளுக்கு தீவனம் அளிக்க ஒரே ஒரு நபர் மட்டும் இருந்தால் அனைத்து கோழிகளுக்கும் தீவனத்தை மிக விரைவாக அளித்து விடலாம் எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

இந்த இயந்திரம் செயல்பட அதன் பட்டனை மட்டும் ஆன் செய்தால் போதும் அதுவே அனைத்து கோழிகளுக்கும் தீவனத்தை அளித்து விடும் எனவும் கூறுகிறார்.

இந்த இயந்திரத்திலிருந்து  கோழிகளுக்கும் தீவனம் அளிக்கும் போது ஒரே சமமான அளவில் தீவனத்தை அளிக்கும்படி இந்த இயந்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை மூன்றரை வருடங்களாக உபயோகித்து வருவதாக கூறுகிறார். இந்த மூன்றரை வருடங்களில் இந்த இயந்திரத்தினால் இவருக்கு நன்மை மட்டுமே இருந்தது எனவும் இதனால் தீமை எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறுகிறார்.

திஸ்வந்த் அவர்களின் சிறப்பான பண்ணை

திரு திஸ்வந்த் அவர்கள் அவர்களுடைய பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் மிகவும் சிறப்பான வகையில் வளர்த்து வருகிறார்.

இவருடைய பண்ணையில் கோழிகளுக்கு தீவனம் வைக்க பயன்படும் பெட்டிகள் ஆனது கோழிகளை பிடிக்கும்போது அனைத்து பெட்டிகளும் மேலே செல்லும்படி ஒரு செயலினை உருவாக்கியுள்ளார்.

தேவைக்கேற்ற கோழிகளை பிடித்ததற்கு பிறகு அந்த பெட்டிகள் அனைத்தும் கீழே வந்துவிடும் எனவும் கூறுகிறார்.கோழிகளுக்கு தீவனம் வைக்க பயன்படும் பெட்டி ஆனது உடைந்து விட்டால் அவைகளே நாமே சரி செய்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

இவருடைய பண்ணையில் இதுவரையில் இந்த தீவனம் வைக்க பயன்படும் பெட்டியானது ஒன்றுகூட உடைந்தது இல்லை என கூறுகிறார்.

பொதுவாக சில பண்ணைகளில் மின்விசிறி ஆனது காலையிலிருந்து மாலை வரை இயங்குகிறது. அந்த முறையில் மின்விசிறி ஆனது இயங்கினால் கோழிகளுக்கு அது சங்கடமான நிலையை ஏற்படுத்தும் எனவும் இதனால் கோழிகள் தீவனம் உண்பது குறைய வாய்ப்புள்ளது எனவும் கூறுகிறார்.

எனவே இந்த முறையில் மின்விசிறியினை கோழி பண்ணையில் பயன்படுத்தக்கூடாது எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வைத்து செயல்படுத்தியதற்கு இவருக்கு மொத்தமாக ஐந்தரை லட்சத்திலிருந்து ஆறரை லட்சம் வரை செலவானதாக கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை வைத்து உள்ளதன் மூலம் கோழிகளின் இறப்பு விகிதம் மிக மிக குறைந்த அளவே உள்ளது எனவும் கூறுகிறார். இதனால் இவருக்கு இதில் இன்னும் லாபம் சேர்ந்து வருவதாக கூறுகிறார்.

இந்த ஆட்டோமேட்டிக் இயந்திரம் ஆனது எட்டு வருடங்களில் இருந்து பத்து வருடங்கள் வரை செயல்படும் தன்மையுடையது எனவும் திரு திஸ்வந்த் அவர்கள் கூறுகிறார்.

திரு திஸ்வந்த் அவர்கள் கோழிகளுக்கு தீவனத்தை அளிக்க பயன்படும் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தின் மூலம் அதிக அளவில் வருமானத்தையும், நன்மையையும் பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க: அத்தி தோட்ட வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி.

 

 

Leave a Reply