தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ரோஜா பூ சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய ரோஜா பூ சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
ரோஜா பூ சாகுபடியின் தொடக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று உள்ளதாகவும், இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், விவசாயத்தின் மீது இவருக்கு ஆர்வம் இருந்த காரணத்தினால் இவர் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய குடும்பம் காலம்காலமாக பூக்கள் சாகுபடி செய்து விற்பனை செய்து வந்ததாகவும் இதன் காரணமாகவே இவரும் பூக்கள் சாகுபடி செய்ய தொடங்கலாம் என்ற எண்ணத்தில் ரோஜா பூ சாகுபடியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் பூக்கள் சாகுபடி செய்யும் முறையை பற்றி இவருக்கு மிகவும் சிறப்பாக தெரியும் என்ற காரணத்தினாலும் மற்றும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வத்தினாலும் இவர் இந்த ரோஜா பூ சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
Method of cultivating rose flower
ரோஜா பூ சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், ரோஜா செடிகளை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இரண்டு வகை ரோஜா பூக்களை இவர் சாகுபடி செய்து வருவதாகவும், அவை பட்டன் ரோஜா மற்றும் பன்னீர் ரோஜா என கூறுகிறார்.
இந்த ரோஜாப்பூ சாகுபடியை இவர் கடந்த 20 வருடங்களாக செய்து வருவதாகவும், நல்ல விளைச்சலை இந்த ரோஜா பூக்கள் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
ரோஜா பூ சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
ஏனெனில் இவ்வாறு இயற்கை உரங்களை மண்ணிற்கு அளித்து பதப்படுத்தி வைத்தால் செடி நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை தயார் செய்து வைத்த பிறகு அதில் விதைகளை விதைக்க தொடங்கிவிட வேண்டும் எனவும் ஒவ்வொரு விதைகளுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.
மேலும் இந்த ரோஜாப்பூ சாகுபடியை விதைகளின் மூலமும் சாகுபடி செய்யலாம் எனவும் மற்றும் நாற்றுகளின் மூலமும் சாகுபடி செய்யலாம் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு நாற்றுகளை நட்ட 15 நாட்களுக்கு தொடர்ந்து நீரினை இவர் அளிப்பதாகவும் இவ்வாறு 15 நாட்கள் நீரினை அளித்த பிறகு அதற்கு மருந்து அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு பாத்திகளுக்கு இடையிலும் ஐந்திலிருந்து ஆறு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் இந்த முறையில் செடிகளை நட்டு வளர்த்தால் தான் பூக்களை பறிப்பதற்கு சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த பன்னீர் ரோஜா பூக்கள் மாலை கட்டுவதற்கு பயன்படும் எனவும், கோயில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு இதனை அதிகம் பயன்படுத்துவார்கள் எனவும் கூறுகிறார்.
மற்றும் பட்டன் ரோஜாக்கள் மல்லிகைப் பூவில் வைத்து கட்டுவதற்கு பயன்படும் எனவும் மற்றும் தலையில் சூடுவதற்கு பயன்படும் எனவும், மற்றும் மாலையில் கட்டவும் இந்த பட்டன் ரோஜாக்கள் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.
செடிகளை சிறப்பாக வளர்த்து அவைகளுக்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை அளித்து வந்தால் செடி நன்றாக வளர்ந்து அதிக விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
உரம் மற்றும் பராமரிப்பு முறை
ரோஜாப்பூ சாகுபடியை இவர் மிகவும் பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாகவும், இந்த ரோஜா பூ சாகுபடி செய்வதற்கு இவர் இயற்கை உரம் மற்றும் செயற்கை உரங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டு சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை செடி நன்றாக வளர்வதற்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் பூக்கள் அதிக அளவில் பூப்பதற்கு இவர் செயற்கை உரம் மற்றும் மருந்துகளை அளித்து வருவதாகவும் கடைகளில் சென்று இந்த ரோஜா பூக்களுக்கு அளிக்கும் உரம் மற்றும் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.
இயற்கை உரங்களை இவர் இவருடைய பண்ணையில் உள்ள கால்நடைகளில் இருந்து எடுத்துக் கொள்வதாகவும், இது இவருக்கு மிகவும் பயனுள்ள முறையில் இருப்பதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு ரோஜா பூ சாகுபடி செய்வதற்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை சரியான முறையில் அளித்து வளர்த்தால் மட்டுமே அதிக அளவு விளைச்சலை இந்த ரோஜா பூக்கள் தரும் என கூறுகிறார்.
எனவே ரோஜா பூ சாகுபடி செய்தால் அதற்கு தேவையான உரம் மற்றும் மருந்துகளை சரியான முறையில் அளித்து பராமரிக்க வேண்டும் என கூறுகிறார்.
மேலும் ரோஜா தோட்டத்தில் உள்ள களைச் செடிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து விட வேண்டும் எனவும், இல்லையெனில் ரோஜா பூக்களின் சத்துகளை களைச்செடிகள் எடுத்து அதிகமாக வளர்ந்து விடும் எனக் கூறுகிறார்.
களைச் செடிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்து ரோஜா பூ செடிகளை பராமரித்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.
Harvesting and watering system
ரோஜா பூ சாகுபடி செய்வதற்கு நீர் தேவை அதிகமாக இருக்க வேண்டும் எனவும், நீர் அதிக அளவில் இருந்தால் மட்டுமே இந்த ரோஜா பூ சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
செடிகளின் வேரில் எப்பொழுதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு ஈரம் இருந்து கொண்டே இருந்தால் தான் செடி நன்றாக வளர்ந்து அதிக அளவு பூக்களை அளிக்கும் எனக் கூறுகிறார்.
மற்றும் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகவும் இந்த சொட்டு நீர் பாசனத்தில் நீர் அதிகமாக சேதாரம் ஆகாது என கூறுகிறார்.
ரோஜா பூக்கள் அறுவடைக்கு தயாரான உடனே அதனை அறுவடை செய்ய தொடங்கி விட வேண்டும் எனவும் ஒரு நாள் தாமதம் ஆனாலும் ரோஜா இதழ்கள் உதிர்ந்து விடும் என கூறுகிறார்.
மற்றும் ரோஜா பூக்களை இவர் வேலையாட்களின் உதவியுடன் அறுவடை செய்து வருவதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
ரோஜா பூக்களை இவர் மிகவும் சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை அறுவடை செய்து, இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய ரோஜாக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து ரோஜாக்களை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், மேலும் இவருடைய இந்த ரோஜா பூ சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:பாகற்காய் சாகுபடியில் நிறைந்த வருமானம்.