திண்டுக்கல் மாவட்டம் ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் திரு ராஜ்குமார் அவர்கள் இவருடைய விவசாய நிலத்தில் கோதுமை புல்லை உற்பத்தி செய்து, அதனை பொடி செய்து அமேசானில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கோதுமை புல் வளர்ப்பு முறை மற்றும் பொடி தயாரிப்பு முறையை பற்றி பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு ராஜ்குமார் அவர்களின் வாழ்க்கை
திரு ராஜ்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்துப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய ஊர் முழுவதுமே விவசாய பூமி எனவும், இவருடைய விவசாய நிலத்தில் இவர் கோதுமை புல்களை விவசாயம் செய்து அந்தப் பொருள்களை வைத்து பொடி செய்து அமேசானில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
திரு ராஜ்குமார் அவர்கள் தோட்டக்கலை பட்டப் படிப்பினை பயின்று விட்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், இவ்வாறு தனியார் நிறுவனத்தில் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது இவருக்கும் விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றி இந்த கோதுமைப்புல் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் திரு ராஜ்குமார் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு வட இந்தியாவில் வேலை செய்து வந்ததாகவும், அங்கு வேலை செய்யும் போது அங்குள்ள மக்கள் அனைவரும் இந்த கோதுமை புல் பொடியை உணவு உண்பதற்கு முன் தேநீர் போல் அருந்தியதாகவும், அதனை இவர் அருந்தியதற்கு பிறகு இதை நாமும் உற்பத்தி செய்யலாம் என்ற எண்ணத்துடன் இந்த கோதுமைப்புல் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கோதுமைப்புல் உற்பத்தியை வெற்றிகரமாக கொண்டு வருவதற்கு ஒரு வருடம் தேவைப் பட்டதாகவும், இப்பொழுது இவர் இதனை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Wheat grass and their medicinal properties
கோதுமை புல் பொடி என்பது என்னவென்றால் கோதுமை புல்லை பொடியாக செய்வதே ஆகும் என திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமைப்புல் பொடியை அனைத்து நாடுகளிலும் உற்பத்தி செய்து வருவதாகவும், மேலும் இந்த கோதுமைப்புல் பொடி நன்மை தரும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது எனவும், மருத்துவர்கள் அனைவரும் பரிந்துரைக்கக் கூடிய ஒரு பொருள் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமைப்புல் பொடியை நாம் எடுத்துக் கொண்டால் நமது உடலுக்கு நன்மை கிடைக்கும் எனவும், இந்த கோதுமை புல் பொடியில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த கோதுமை புல் பொடியினை மக்கள் எடுத்துக் கொண்டால், அவர்களுக்குள்ள அதிக எடை பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய், செரிமான கோளாறு, தூக்கமின்மை போன்ற நோய்களை சரி ஆவதாகவும், இதில் அதிகமாக இது செரிமானக் கோளாறையும் மற்றும் தூக்கமின்மையும் விரைவில் சரி செய்துவிடும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமைப்புல் பொடியை முகக் கவசமாக உபயோகிப்பதாகவும், இது போன்று இந்த கோதுமை பொடி அதிக அளவில் நமக்கு பயன்படும் எனவும், நமது நோய்களையும் இது குணப்படுத்தும் எனவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
கோதுமைப்புல் வளர்ப்பு முறை மற்றும் அறுவடை செய்யும் முறை
கோதுமை புல்லை வளர்ப்பதற்கு முதலில் , சரியான அளவுகளில் உள்ள கோதுமை புல் விதைகளை வாங்க வேண்டும் எனவும், ஏனெனில் இந்த கோதுமை புல் வகைகளில் பல வகை கோதுமை புல் வகைகள் இருப்பதாகவும், அதில் மிக சிறப்பான மற்றும் தரமான கோதுமைப்புல் விதையை பார்த்து வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமை புல் விதையை விதைப்பதற்கு முன்பு, அதாவது காலையில் கோதுமைப்புல் விதையை விதைக்கிறோம் என்றால், இரவே அந்த விதையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் எனவும், இவ்வாறு தண்ணீரில் ஊற வைக்கும்போது கோதுமை உடைய முளை வெளியில் வந்து விடும் எனவும், இவ்வாறு வெளியில் வந்ததற்கு பிறகு அவற்றை விதைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
விதைப்பதற்கு முன்பு சிறுசிறு பாத்திகளாக படுக்கை போன்ற அமைப்பை முதலில் அமைத்துக் கொண்டு, அந்த ஒவ்வொரு அமைப்பில் உள்ள படுக்கையின் மேல் காய்ந்த மண்ணை லேசாக தூவி விடவேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு செய்ததற்குப் பிறகு அதன் மேல் விதையை போட்டு விதைத்து விட்டு, அந்த கோதுமை விதையின் மேல் உரங்களை, மண்புழு உரம் மற்றும் சாணம் ஆகியவற்றை போட்டு இணைத்து வைத்து கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கோதுமை புல் விதையை விதைத்ததற்கு பிறகு ஏழிலிருந்து எட்டு நாட்கள் வரை தொடர்ந்து நீரை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு நீரை அளிக்கும் போது சரியான அளவு முறையில் நீரை அளிக்க வேண்டும் எனவும், அதிக அளவில் நீரை அளிக்கக் கூடாது எனவும், அதிக அளவு நீரை அளித்தால் பூஞ்சைகள் தாக்கி விடும் எனவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு விளைச்சல் ஆன கோதுமை புல்லை ஒன்பதாவது நாளில் அறுவடை செய்து, கோதுமைப்புல் பொடியை செய்வதற்கு எடுத்து சென்று விடுவதாகவும், இவ்வாறு அறுவடை செய்த புல்களை மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமை புல்களை அறுவடை செய்யும் போது, இதற்கென்று அறுவடை செய்வதற்கு ஒரு கத்தி இருப்பதாகவும், அதனைக் கொண்டே அறுவடை செய்ய வேண்டும் எனவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
Method of wheat grass powder and baking method
விளைச்சல் செய்த கோதுமை புல்லை நன்கு காய வைத்ததற்குப் பிறகு, காய்ந்த புல்லை எடுத்து நன்றாக அரைக்க வேண்டும் எனவும், இவ்வாறு அரைத்ததற்கு பிறகு அவற்றை நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவேண்டும் என கூறுகிறார்.
இவ்வாறு அரைத்து வைத்த கோதுமை புல் பொடியிணை விற்பனை செய்ய வைத்துள்ள சிறிய பாட்டிலில் போட்டு பேக் செய்ய வேண்டும் எனவும், அந்த பாட்டிலில் கோதுமைப்புல் பொடியினை உபயோகிக்கும் முறையையும், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம் எனவும் எழுதி இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமைப்புல் பொடியினை காலையில் நடைபயிற்சி சென்று வந்ததற்குப் பிறகு குடித்தால் உடலில் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும் எனவும், இதனுடைய சுவையானது கோதுமையின் சுவையைப் போன்று இருக்கும் எனவும் கூறுகிறார்.
இதனை குடிப்பதற்கு முன்பு அதனுடன் தேனினை கலந்து கொள்ளலாம் எனவும், இந்தப்பொடி பாட்டிலை 30 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், இதனை முழுவதுமாக இயற்கையான முறையில் உற்பத்தி செய்வதால் ஒரு வருடம் வரை இது காலாவதி ஆகாமல் இருக்கும் எனவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
விற்பனை செய்யும் முறை மற்றும் லாபம்
திரு ராஜ்குமார் அவர்கள் இந்த கோதுமைப்புல் பொடி விற்பனை முறையை பற்றி இந்தியா முழுவதும் அறிந்து கொள்வதற்கு அமேசான் மூலம் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த கோதுமை புல் பொடியை இவரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களுக்கும் இதனை விற்பனை செய்து வருவதாகவும், அனைத்து நேரங்களிலும் இந்த கோதுமைப்புல் பொடியை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த கோதுமை புல் பொடி விற்பனையில் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும், குறைந்த முதலீட்டில் அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும் திரு ராஜ்குமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த கோதுமைப்புல் பொடியினை கர்ப்பமாக உள்ள பெண்களும் மற்றும் குழந்தைகளுக்கு பால் அளிக்கும் பெண்களும் குடிக்கக் கூடாது எனவும், மற்றபடி அனைவரும் இந்த கோதுமைப்புல் பொடியை தாராளமாக குடிக்கலாம் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் செரிமானத்திற்கு ஒரு ஊக்க பானத்தையும், மற்றும் குழந்தைகளுக்காக முழுவதும் கரிம முறையில் உற்பத்தி செய்யப்பட்ட குழந்தைகளின் உணவை உற்பத்தி செய்துள்ளதாகவும் கூறுகிறார்.
திரு ராஜ்குமார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான வழிமுறையில் கோதுமை புல் உற்பத்தியையும், கோதுமை புல் பொடி விற்பனையையும் செய்து வருகிறார்.
மேலும் படிக்க:பரண்மேல் நாய் வளர்ப்பு.