ஆட்டுப்புழுக்கை விற்பனையில் அமேசானில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

திரு அருண் ராஜ் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஜெயகுண்டம் அருகிலுள்ள கோடாலிகருப்பூர் என்னும் ஊரில் இருந்து இவருடைய பண்ணையில் வளர்க்கப்படும் ஆடுகளின் ஆட்டுப் புழுக்கையை அமேசானில் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய ஆட்டுப் புழுக்கை விற்பனை முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.




Mr. Arun Raj’s their life

அரியலூர் மாவட்டம், ஜெயகுண்டம் அருகிலுள்ள கோடாலிகருப்பூர் என்னும் கிராமத்தில் திரு அருண் ராஜ் அவர்கள் வசித்து வருவதாகவும், இவர் இங்கு சொந்தமாக ஒரு ஆட்டுப் பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும் அந்த ஆட்டுப் பண்ணையில் இருந்து கிடைக்கும் ஆட்டுப் புழுக்கையை அமேசானில் விற்பனை செய்து வருவதாகவும் கூறினார்.

மேலும் இவர் ஆட்டுப் புழுக்கை, வேப்பங்குச்சி, நெருஞ்சி முள் மற்றும் முட்டையின் ஓடு ஆகிய அனைத்தையும் அமேசானில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த அனைத்து பொருட்களும் கிராமத்திலிருந்து எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு அருண் ராஜ் அவர்கள் கடந்த வருடம் இவருடைய பட்டப்படிப்பை முடித்து இருப்பதாகவும், இவர் Bsc. Mathematics பட்டு படிப்பினை பயின்று இருப்பதாகவும், இவ்வாறு இந்த பட்டப்படிப்பை முடித்து விட்டு இவர் இந்த இயற்கைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலுக்கு வந்ததாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினாலும், வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த தொழிலை தொடங்கியதாக கூறுகிறார்.




அமேசானில் விற்பனையின் தொடக்கம்

திரு அருண் ராஜ் அவர்களின் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்து கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாக தந்தைக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இவ்வாறு இவர் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு இணையதளங்களின் மூலம் ஏதாவது வேலை செய்ய முடியுமா என்பதை தேடி கொண்டிருந்ததாகவும், அப்பொழுதுதான் அமேசானில் நாமும் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என்பதை பற்றி அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் இணையதளத்தில் ஒருவரின் வீடியோக்களை பார்த்து அவர் எந்த முறையில் விற்பனை செய்கிறார் என்பதை பற்றி ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்கள் வரை பார்த்து தெரிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு எந்த பொருளை நாம் விற்பனை செய்ய வேண்டும் என்ற குழப்பம் இருந்து வந்ததாகவும், இதையடுத்து இவருக்கு நம்முடைய கிராமத்தில் இருக்கின்ற இயற்கைப் பொருட்களையே விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.

இதன் அடிப்படையாக இவர் இவருடைய கிராமத்திலேயே இருக்கின்ற இயற்கை பொருட்களையும் மற்றும் இவருடைய ஆட்டுப் பண்ணையில் உள்ள ஆட்டுப் புழுக்கைகளையும் விற்பனை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.




Products for sale

திரு அருண் ராஜ் அவர்கள் அமேசானில் விற்பனை செய்யும் அனைத்து பொருட்களுமே இவருடைய கிராமத்திலிருந்து கிடைக்கும் இயற்கைப் பொருட்களை  எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், இதற்கென்று இவர் எந்த பொருளையும் செலவு செய்து அதனை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புவதில்லை எனவும் கூறுகிறார்.

இவருடைய வீட்டில் ஆட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருவதால் அந்த ஆட்டுப் பண்ணையில் இருக்கும் ஆட்டு புழுக்கைகள் அனைத்தும் வீணாகவே இருந்து வந்ததாகவும், இதனை விற்பனை செய்தால் இதன் மூலம் பணம் கிடைக்கும் என்பதாலும் இவர் இந்த ஆட்டுப்புழுக்கை விற்பனையை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் ஆட்டுப்புழுக்கையை சுத்தம் செய்து அதனை விற்பனை செய்யும்போது அதிக அளவில் இந்த ஆட்டுப்புழுக்கை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் எனவும், இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் உணவகங்களில் வீணாகக் குப்பையில் கொட்டும் முட்டை ஓடுகளை இவர் வாங்கி அதனை அரைத்து விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் இவருக்கு எந்த விதத்திலும் செலவு ஆவதில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் வேப்பங்குச்சிகளையும் அமேசானில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த வேப்பங்குச்சி  நம்முடைய கிராமத்தில் அதிக அளவில் கிடைக்கும் எனவும் ஆனால் நகரங்களில் இருக்கும் மக்களுக்கு இது கிடைக்காது என்ற காரணத்தாலும் இதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வேப்பங்குச்சி நகர்புறங்களில் வாழும் மக்களுக்கு கிடைக்காத காரணத்தால் அந்த மக்கள் அனைவரும் இதனை அதிக அளவில் விரும்பி வாங்குவதாகவும் திரு அருண் ராஜ் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவருடைய கிராமத்தில் அதிக அளவில் இருக்கக்கூடிய யானை நெருஞ்சி என்னும் செடியை இவர் விற்பனை செய்து வருவதாகவும், இந்தச் செடியில் அதிக அளவு மருத்துவ குணம் இருந்து வருவதால் இதனை அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வாங்குவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் பிரண்டை வகை செடியையும் அமேசானில் விற்பனை செய்து வருவதாகவும், இதனை உண்பதினால் பசியின்மை சரியாகும் எனவும் திரு அருண் ராஜ் அவர்கள் கூறுகிறார்.




ஆட்டுப் புழுக்கையின் பயன்கள்

திரு அருண் ராஜ் அவர்கள் இந்த ஆட்டு புழுக்கை விற்பனை முறையை இந்தியா முழுவதும் செய்து வருவதாகவும், இந்த ஆட்டுப்புழுக்கை யில் அதிக பயன்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த ஆட்டுப் புழுக்கை நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் வைத்து நடத்தி வரும் மக்களுக்கு அதிக அளவில் பயன்படுவதாகவும், இதனை உரமாக பயன்படுத்துவதன் மூலம் செடிகள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

மாட்டு சாணத்தில் இருக்கும் சத்தைவிட இந்த ஆட்டு புழுக்கையில் இரண்டு மடங்கு அதிக அளவு சத்துக்கள் இருப்பதாகவும், இதனால் இதனை பயன்படுத்துவதன் மூலம் அதிகளவு பயன்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

Sales method and packing method

திரு அருண்ராஜ் அவர்கள் ஆட்டுப்புழுக்கைகளை எடுத்து அதனை வெயிலில் நன்றாக காய வைப்பதாகவும் இவ்வாறு இது நன்றாக காய்ந்த பிறகு அதனை ஒரு பாலிதீன் கவரில் போட்டு பேக் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுவதாக கூறுகிறார்.

ஆட்டுப்புழுக்கையை அப்படியே போட்டு பேக் செய்து விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் அந்த ஆட்டுப்புழுக்கையை அரைத்து அதன்பிறகு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய வீட்டில் வளர்க்கக்கூடிய பெரிய வேப்ப மரத்திலிருந்து வேப்பங்குச்சிகளை உடைத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒன்றாக சேர்த்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு பேக் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

முட்டை ஓடுகளை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து அதனை தூளாக அரைத்து விற்பனை செய்து வருவதாகவும்,இது செடிகளுக்கு உரமாக பயன்படும் எனவும் கூறுகிறார்.

மேலும் கிராமத்தில் கிடைக்கின்ற அனைத்து வகை செடிகளின் விதைகளை விற்பனை செய்து வருவதாகவும்,மேலும் இவர் பிரண்டை செடிகளை எடுத்து வந்து அதனை சிறிது சிறிதாக உடைத்து பேக் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் யானை நெருஞ்சி செடியை பிடுங்கி வந்து அதனை வெயிலில் நன்றாக காயவைத்து அரைத்து பேக்கிங் செய்து விற்பனை செய்து வருவதாகவும்,இது அதிக அளவில் இவருடைய ஊரில் இருப்பதாகவும் கூறுகிறார்.

திரு அருண்ராஜ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து அதனை அமேசானில் விற்பனை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:கண்வல்லி கிழங்கு சாகுபடியில் நிறைந்த வருமானம்.




(G)

Leave a Reply