தேனீக்கள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்னும் ஊரில் தேனீக்கள் வளர்ப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இந்த தேனீக்கள் வளர்ப்பின் மூலம் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவரின் தேனீ வளர்ப்பை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு ரஞ்சித் பாபு அவர்களின் வாழ்க்கை

திரு ரஞ்சித் பாபு அவர்கள் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் என்னும் ஊரில் வசித்து வருகிறார். இவர் இங்கு தேனீ பண்ணை வளர்ப்பினை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்தத் தேனீ பண்ணையை மூன்று வருடங்களாக நடத்தி வருவதாக கூறுகிறார். இவர் BSA IT துறையை பயின்று உள்ளதாக கூறுகிறார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு வேலை கிடைத்ததாகவும் கூறுகிறார். ஆனால் அவருக்கு அந்த வேலையில் விருப்பம் இல்லை எனவும் கூறுகிறார்.

இவருக்கு இந்த வேளையில் விருப்பம் இல்லாததற்கு காரணம் இவர் வேளாண்மை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததே காரணம் என திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார். இந்த எண்ணம் ஆனது இவருக்கு சிறு வயதில் இருந்தே இருந்து வந்ததாகவும் கூறுகிறார்.இதனால் இவர் இந்த தேனீ பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் கரிமயியல் தொடர்பான வேலையை செய்து வந்ததாகவும் கூறுகிறார். இந்த வேளையில் இவர் அதிக அளவு வருமானத்தை பெற்று வந்ததாகவும் கூறுகிறார். மற்றும் இவருடைய கடையில் 25 சதவீத லாபம் தேன் விற்பனையிலேயே கிடைத்ததாகக் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் தேனீக்கள் வளர்ப்பை அதிக அளவில் தொடங்கலாம் என எண்ணம் கொண்டு இந்த தேனீ பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்த தேனீ பண்ணை வளர்ப்பில் மாதம் 45 ஆயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

தேனீ பண்ணை

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்த தேனீ பண்ணையை தொடங்குவதற்கு முன்பு ஒரு கரிமயியில் தொடர்பான கடையை வைத்து இருந்ததால் இவருக்கு இந்த தேனீ வளர்ப்பை பற்றி சிறிது அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

இவர் தேனீ பெட்டிகளை ஒரு ஏக்கருக்கு 10 பெட்டிகளை வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் கம்பு, ராகி, மக்காச்சோளம் போன்று இந்த தேனும் அதிகளவு சத்து நிறைந்த உணவு என திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார். தேனீக்கள் உடைய தேனானது மருத்துவ குணமுடைய உணவு பொருள் எனவும் கூறுகிறார்.

அனைத்து நாட்டு மருந்துகளை உண்பதற்கு அனைவரும் தேனையே அதிக அளவு பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். பொதுவாக தேனுக்கு அதிக அளவு கோரிக்கை இருப்பதால் இவர் இந்த தேனீ வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் மக்கள் அனைவரும் தேனில் அதிக அளவு தரமும், தேனானது தூய்மையாக இருப்பதையுமே அதிக அளவில் எதிர்பார்க்கின்றனர். இதனால் திரு ரஞ்சித் பாபு அவர்களின் தேனீ பண்ணையிலும் இவர்ருடைய தேனானது நல்ல தரத்துடனும், தூய்மையாகவும் செய்து வருவதாக கூறுகிறார்.

தேனீ வளர்ப்புக்கு தேவையான பயிற்சிகள்

தேனீக்கள் வளர்ப்பதற்கு முதலில் பயிற்சி எடுப்பது மிக முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில் தேனீக்கள் நம்மை கொட்டிவிட்டால் மிகவும் ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. எனவே தேனீக்கள் வளர்ப்பதற்கு முன்பு அதனை வளர்க்கும் முறையினை பயிற்சி எடுத்து கொண்டு அதன் பிறகு பண்ணையை தொடங்குவது மிகவும் சிறப்பான ஒன்று என திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார்.

மேலும் திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்த தேனீ பண்ணையை தொடங்குவதற்கு முன்பு பயிற்சி எடுக்காமலேயே இந்த பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார். இதனால் இவர் தேனீக்களிடம் அதிக அளவு கொட்டுக்கள் வாங்கி உள்ளதாகவும் கூறுகிறார். அதன்பிறகு அவர் தேனீக்கள் வளர்ப்பிற்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்டதாக கூறுகிறார்.

திரு இரஞ்சித் பாபு அவர்கள் பயிற்சி செல்வதற்கு முன்பு செய்த தேனீ வளர்ப்பில் பத்து தேனீப் பெட்டிகள் வைத்ததாகவும் அதில் 6 தேனீப் பெட்டிகளில் உள்ள தேனீக்கள் பறந்து சென்று விட்டதாகவும் இதனால் இவருக்கு 12000 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்.

இவர் பயிற்சிக்கு சென்ற போது அங்கு பயிற்சி அளித்தவர் தேனீப் பெட்டிகளில் இருந்து தேனீக்கள் பறந்து சென்று விட்டாலும் மற்ற பெட்டியிலிருந்து தேனீக்களை எடுத்து இன்னொரு பெட்டியில் விட்டு ராணி தேனீயை உருவாக்கிக் கொள்ளலாம் என கூறியதாக திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவரும் இந்த முறையை பின்பற்றி ராணி தேனீயை உருவாக்கியதாக கூறுகிறார். இதில் இவருக்கு உடனே லாபம் கிடைக்கவில்லை எனவும், லாபம் கிடைப்பதற்கு இவருக்கு மூன்று மாத காலம் தேவை பட்டதாக கூறுகிறார்.

தேனீ பண்ணையை தொடங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்

திரு ரஞ்சித் பாபு அவர்கள் புதிய பண்ணையை தொடங்கும் போது பண்ணையை தொடங்குபவர் மற்றொருவரின் மீது குற்றம் சுமத்த கூடாது எனக் கூறுகிறார். திரு ரஞ்சித் பாபு அவர்களும் இந்த தவறை தேனீப் பெட்டி வாங்கியவரிடம் செய்ததாக கூறுகிறார். எனவே இந்த தவறை யாரும் செய்யாமல் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று என கூறுகிறார்.

மேலும் நமக்கு ஒரு தேவை என்றால் அதை நாம் தான் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார். இப்பொழுது இவர் 10 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்க்கிறார் என்றால் அதை முறையாக வளர்க்க முடியவில்லை எனில் அது இவருடைய தவறே ஆகும். இதற்கான பயிற்சியை எடுக்காமல் பண்ணையை தொடங்கியது இவருடைய தவறு என கூறுகிறார். இதுவே இவர் செய்த முதல் தவறு எனவும் இதனை யாரும் செய்ய வேண்டாம் என கூறுகிறார்.

இரண்டாவதாக பண்ணை சரியான பராமரிப்பு முறையில் இல்லையெனில் பண்ணை நடத்துவது மிகவும் சிரமம் எனவும் கூறுகிறார். இப்பொழுது புதிதாக பண்ணை வைப்பவர்கள் தேனீப் பெட்டியை இரண்டிலிருந்து ஐந்து பெட்டிக்குள்ளேயே வைக்க வேண்டும் என கூறுகிறார்.

ஏனெனில் முதலில் குறைந்த அளவு பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பை நன்றாக கற்றுக் கொண்ட பிறகு அதிக அளவு பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பை தொடங்குவது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை எனவும் திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார்.

அரசாங்க சலுகைகள்

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்த தேனீ பண்ணையை தொடங்கியதில் இருந்தே அரசாங்கமானது அதிக அளவு ஆதரவை அளித்து  வந்ததாகவும் கூறுகிறார்.

இப்பொழுது புதிதாக தேனீ வளர்ப்பை தொடங்கும் பண்ணையாளர்களுக்கு அரசாங்கமானது தேனீப் பெட்டியிலிருந்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக கூறுகிறார். மேலும்  இவ்வாறு அரசாங்கமானது தேனீ பெட்டிகளை அளித்து வருவது சிலருக்கு தெரிவதில்லை எனவும் கூறுகிறார்.

பண்ணை தொடங்குபவர்களின் ஊரில் உள்ள வேளாண்மை தொடர்பான அலுவலகத்தில் சென்று தேனீப் பெட்டிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தால் நிச்சயமாக அரசாங்கமானது தேனீ பெட்டிகளை இலவசமாக வழங்கும் என திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார்.

மேலும் அதிக அளவில் தேனீ வளர்ப்பில் உள்ளவர் NPP யில் உறுப்பினராக இருந்தால் அரசாங்கமானது ஊக்கத்தொகை வழங்கி வருவதாகவும் கூறுகிறார்.

திரு ரஞ்சித் பாபு அவர்களின் பண்ணையின் விற்பனை முறை மற்றும் லாபம்

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள தேனீக்களை தேனீ பெட்டிகளுடன் சேர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவர் தேன்களையும் அதிக அளவு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவரிடம் மாதத்திற்கு 100 லிருந்து 200 கிலோ வரை தேனீக்கள் உற்பத்தி ஆவதாக கூறுகிறார். இதனையே இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் இவர் ராணித் தேனீக்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் அரசாங்கம் கேட்கும் தேனீக்களையும் விற்பனை செய்து வருவதாகவும், தமிழ்நாடு மற்றும் பிற மாவட்டங்களில் இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். மேலும் இவர் பெட்டிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அவரின் பண்ணைக்கு சென்றே பெட்டிகளை அமைத்து தருவதாகவும் கூறுகிறார்.

எந்த இடங்களில் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் அந்த இடங்களுக்குச் சென்று இவர் தேன் பெட்டிகளை அமைத்து தருவதாக கூறுகிறார். திரு ரஞ்சித் பாபு அவர்களுக்கு இந்தத் தேனீ வளர்ப்பின் மூலம் மாதம் 45 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் தேனீக்கள் இந்த உலகில் இல்லை எனில் மனித இனமானது அழிந்துவிடும் எனவும் கூறுகிறார்.

தேனீக்களின் வகைகள்

இந்தியாவில் மொத்தமாக தேனீக்களின் வகைகள் மூன்று வகைகள் இருப்பதாக திரு ரஞ்சித் பாபு அவர்கள் கூறுகிறார். இதில் முதல் வகை மலைத் தேனீ என கூறுகிறார். இந்தத் தேனீ வகைகள் உயரமான இடங்களிலேயே அதிக அளவு தேன் கூட்டைக் கட்டும் எனவும் கூறுகிறார்.

இரண்டாவதாக கொம்புத் தேனீ வகை என கூறுகிறார். இந்த  தேனீ வகையானது கொம்பு போன்ற அமைப்பில் வட்டமாக தேன்கூட்டினை கட்டியிருக்கும் என கூறுகிறார். மூன்றாவதாக அடுக்குத் தேனீ வகை என கூறுகிறார். இந்த தேனீக்கள் ஆனது தேன்கூட்டினை அடுக்குகளாக கட்டியிருக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த மூன்றுவகை தேனீக்களில் அடுக்குத் தேனீ வகைகளே நாம் வளர்த்துவதற்கு உகந்த வகை என கூறுகிறார். ஏனெனில் இந்த தேனீக்கள் தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது என கூறுகிறார்.

இந்த அடுக்குத் தேனீ வகைகளிலேயே இரண்டு வகைகள் இருப்பதாகவும் அதில் ஒருவகை இந்திய தேனீ வகை எனவும் மற்றொரு வகை இத்தாலிய தேனீ வகை எனவும் கூறுகிறார். இவருடைய பண்ணையில் வாழை மரங்களை வைத்துள்ளதாக கூறுகிறார். ஏனெனில் அந்த வாழை மரத்திலிருந்து தேனீக்கள் தேனை எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.

மேலும் தேனீ வளர்ப்பில் தேனீ பெட்டிகளே மிகவும் முக்கியமானது எனக் கூறுகிறார்.ஏனெனில் அந்தப் பெட்டியிலிருந்து தான் நமக்கு தேன் கிடைக்கிறது எனவே அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

திரு ரஞ்சித் பாபு அவர்கள் இந்தத் தேனீ பண்ணை வளர்ப்பின் மூலம் அதிகளவு வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:பாலிலிருந்து நெய் எடுக்க பயன்படும் இயந்திரம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

One comment

Leave a Reply